Monday, December 24, 2007

The Butter Battle Blog: Now and here on whatever to whoever

இரவிசங்கரின் இடுகைகளின் பெரும்பான்மையான குதர்க்கவாதத்துக்குப் பின்னூட்டமோ பதில் இடுகையோ இட விரும்பாததற்கான முதன்மைக்காரணம், சுந்தரமூர்த்தி, சங்கரபாண்டி, செல்வராஜ், தமிழ்சசி போல தலையிலே சம்மட்டியாலே அடித்தாலும் தாங்கிக்கொண்டு நிதானமாகப் பேசும் தன்மை எனக்கு இல்லை என்பதே; துணைக்காரணமாக, தொழில்நுட்பம் சார்ந்து பேசுமளவுக்கு எனக்குப் புரிதல் போதாது என்பதைக் கொள்ளலாம். ஆனால், தமிழ்மணம் தொடர்பான இரவிசங்கரின் தொடர்ச்சியான ஒரு குற்றச்சாட்டிலேயிருக்கும் பொய்யினை எடுத்துச்சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு.

தமிழ்மணம் தனக்குப் பதிலே தருவதில்லையென்பதாகச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றார்; பகிரங்கமாகப் பதிவும் இடுகின்றார். இவை குறித்த தமிழ்மணத்துக்கான இவரது அஞ்சல்களும் தமிழ்மணம் தொழில்நுட்பக்குழுவுக்கும் முறையீட்டுப்பிரிவுக்குமான அஞ்சல்களுக்கான அவர்களது பதில்களும் சேமிப்பிலேயிருக்கின்றன. தமிழ்மணத்தின் நெறிக்கோவை காரணமாக இவற்றினை வெளியிலே ஆதாரமாக இட முடியாமலிருக்கின்றது. ஆனால், கருத்தளவிலே இவரின் மேலோட்டமான பொதுமைப்படுத்தும் குற்றச்சாட்டிற்கான பதிலினைத் தரவேண்டியிருக்கின்றது.

முதலிலே அவரின் அண்மைய அஞ்சல்களைப் பற்றிய சாரம்; நவம்பர் 24 இலிருந்து டிசம்பர் 16 வரை ஐநது அஞ்சல்கள் தமிழ்மணம்-முறையீட்டுக்கு அனுப்பியிருக்கின்றார். முதலாவது, அவருடைய வேர்ட்பிரஸிலான விமர்சனம் பதிவினைச் சேர்க்கமுடியவில்லை என்று கூறியிருக்கின்றார். வேர்ட்பிரஸ்.கொம்மிற்கும் தமிழ்மணம் தளத்திற்குமான ஊடல்நிலையை சாதாரண இணையப்பதிவர்களே அறிந்துகொண்டுள்ளபோது, இது பற்றி முன்னமே அறிந்துள்ள தமிழ்த்தொழில்நுட்பம் தெரிந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் இவர் புரிந்துகொள்ளாமலிருக்க நியாயமில்லை. வேர்ட்பிரஸ்.கொம் உடனான தமிழ்மணத்தின் ஒவ்வாமை பற்றி ஏற்கனவே ஜுலையிலே இன்னொரு இவரின் தொடர்ச்சி அஞ்சலுக்கான -பதிவரின் படத்தினைச் சேர்த்தல் தொடர்பான- தொடர்ச்சியான பதில்களிலே குறிப்பிட்டிருப்பதாக ஞாபகம். இப்போது தன்னஞ்சலுக்கு உடனடியே பதில் போடவில்லை என்று அவருக்கு வருத்தம்.

அடுத்த அஞ்சல் தமிழ்மணத்திலே தோன்றும் ஒரு வழுவினைக் குறித்து -தோன்றிய வழு பற்றிய விபரவரிகளை- அறியத் தரும் அஞ்சல். இதற்கு நன்றி என்று ஒரு பதில் போட்டிருக்கவேண்டுமென்று எதிர்பார்த்தாரோ தெரியவில்லை.

மூன்றாவது, தன் படத்தினை பதிவிலே மாற்றுதல் குறித்த அஞ்சல்; ஐந்தாவது டிசம்பர் 16 இன் அஞ்சலும் இதே படம் குறித்த அஞ்சலே - "எத்தனையோ தடவைகள் கேட்டுவிட்டேன்" என்பதைக் குறைசொல்லிச் சுட்டி. இதற்குப் பதில் அளிப்பதிலே எவ்விதமான வருத்தமுமிருந்திருக்காது. ஆனால், போன மே, ஜூன், ஜூலையிலே இதே மாதிரியாக படத்தினைச் சேர்ப்பது விலக்குவது குறித்து தன்னிடம் சேவியர் கேட்டார் என்று சொல்லி இவர் அனுப்பிய அஞ்சலுக்குத் தொழில்நுட்பக்குழு தமிழ்மணம் நிரலிலே எங்கே படம் குறித்து எழுதப்பட்டிருக்கிறதோ அங்கே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமென்று சொன்னதை அவருக்கு அனுப்பியிருக்கிறோம். அவர் நன்றி சொல்லிவிட்டு, வேர்ட்ப்ரஸ்.கொம்மிலே ஏன் தொழில் புரியாது என்று கேட்டிருந்தார். வேர்ட்ப்ரஸ்.கொம்மிற்கு தமிழ்மணத்துக்கும் தற்போது சில ஒவ்வாமை. தமிழ்மணத்தின் அடுத்த பதிப்பிலே இது கண்டுகொள்ளப்படலாம். ஒரே மாதிரியான கேள்வியினை இவ்வளவு விபரம் தெரிந்தவராகக் காட்டிக்கொள்கிறவர், திரும்ப ஐந்து மாதங்களிலே கேட்கிறார். திரும்பவும் அதே பதிலினைத்தான் இதே விதண்டாவாதமான கேள்விக்குக் கொடுக்கலாம்: "தமிழ்மணம் நிரலிலே பார்த்து படத்தினை மாற்றவும் & வேர்ட்ப்ரஸ்.கொம் என்றால் சில சிக்கல்கள் உண்டு."

அவரது நான்காவது அஞ்சல், 2000 ஓடைகளைத் திறந்து விடும்படியாக; (அதற்கு கணிமை, மாற்று எல்லாம் ஆதாரம் காட்டுவார். எல்லாவற்றுக்கும் "தனது" தமிழ்விக்கிபீடியா, கணிமை, மாற்று, வேர்ட்ப்ரஸ் இவற்றிலிருந்தே புள்ளிவிபரங்களும் வாக்கெடுப்புமுடிவுகளும் பொதுமக்கள்போராட்டக்களநிலையாகவும் வருவது சோர்வினையும் சிரிப்பினையும் தருவது ஒரு புறமிருக்கட்டும்) இதே அஞ்சலைத் தமிழ்மணம் தலைவர், தொழில்நுட்பக்குழுவுக்கும் அனுப்பியிருந்தார். தமிழ்மணம் சார்பிலே தமிழ்மணம் தலைவர் பதிலினைத் தந்திருந்தார். 2000 ஓடைகளைத் திறந்துவிடக்கேட்டதற்கும் டிசம்பர் முடிவுக்குள்ளே மாற்று இணைப்பியிலே 2000 பதிவுகளைச் சேர்க்கும் இவரது நோக்கத்துக்கும் ஏதாவது சம்பந்தமிருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை.

தமிழ்மணத்துக்கு வரும் எல்லா அஞ்சல்களுக்கும் பதிலளித்த காலம் உண்டு. ஆனால், சில அஞ்சல்கள், மீண்டும் மீண்டும் தமிழ்மணத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட பதிவுகளின் செயற்பாடுகளிலே தமிழ்மணத்தினை ஏதாவது செய்யும்படி (நீக்கும்படி) கேட்பதும் தமிழ்மணம் செயற்படுத்தற்பட்டியலிலே வழிமுறை சொல்லப்பட்டவற்றுக்கு மீண்டும் வழி சொல்லும்படி கேட்கும்போதும் எப்போதும் பதிலளிக்கமுடிவதில்லை. அப்படியான பல சந்தர்ப்பங்களிலே பதிலளிக்கும் தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையிலே இரவிசங்கர் -தனக்கான பதிலினைத் தருவதில்லை என்ற - அவரது குற்றச்சாட்டினை, குறைந்த பட்சம், மேலே சொல்ல நிலையிலும் கடந்த காலங்களிலே எத்தனை தடவைகள் அவரது அஞ்சல்களுக்குப் பதில்கள் சளைக்காது தரப்பட்டிருக்கின்றன என்பதைக் கணக்கிலெடுத்தும் பார்த்துவிட்டு எழுதியிருக்கவேண்டும் - நியாயமானவரென்றால்.

மேலும் விருதுகள் தொடர்பான தமிழ்மணம் இடுகையின் பின்னே அவர் போட்டிருக்கும் பின்னூட்டம் அப்படியே அநாமதேயமாக மோகன்தாஸின் பதிவிலே இடைச்செருகிப் போடப்பட்டிருக்கின்றதைப் பார்க்கும்போது, வெறுப்புத்தான் மிஞ்சுகிறது. இவர் தன்னை ஒரு தமிழிணைய டேவிட்டாகக் கருதிக் கொண்டு, தமிழ்மணத்தினை கோலியாத்தாக எண்ணித் தாக்குகையிலே, இவர் தாங்கிப்பிடிக்கும் கூகுல்ரீடர், வேர்ட்ப்ரஸ் போன்றவை உலகம் பரந்த பலமான நிறுவனங்களென்பதை உணரவில்லையோ?

Deletion & Addition on 3rd, Jan 2007:
அண்மையிலே வேர்ட்ப்ரஸ்.கொம்மிலே தமிழ்ப்பதிவிட்ட மூன்று நண்பர்களின் இரண்டரை ஆண்டு காலப்பதிவுகள் அப்படியே விழுங்கப்பட்டன; இதற்கான காரணம், என்ன அல்லது எவர் என்பதை இங்கே விட்டுவிடலாம். ஆனால், குறைந்தபட்சம் வேர்ட்ப்ரஸ்.கொம் அவற்றினைப் பணம் தந்து செய்து இட்டவர்கள் பாதுகாத்து மீட்டெடுக்கக்கூட உரிமை தரவில்லை.


This is from a friend commenting on wordpress.com, wordpress software. My apologies for the technical incorrectness.

When we maintain a separate website with " wordpress software" such as one your friends did, it is fully in our control. we have to take care of it. Wordpress group can't help us there. Since the person, who took care of it let it go, the mistake is squarely on individuals and not on wordpress.

At the same time when we maintain a website in "wordpress.com" as a subdomain such as www.snapjudge.wordpress.com, then wordpress will give support. Mostly in wordpress.com you wont encounter any issues.

So, there is some difference between "wordpress software" and " wordpress.com"

In any case, even in blogger we need to keep a backup of what we write...

You should have a backup of all your articles, as you have written many things over the years.


இப்படியான வேர்ட்ப்ரஸ்.கொம் இற்கு இலவசமாகத் தமிழ்ப்படுத்துவதும், மைக்ரோஸொப்ட்டுக்கு இலவசமாகத் தமிழ்ப்படுத்துவதும் கோலியாத்துகளுக்குக் குடைபிடிக்கும் செயல்களே. இவற்றினைப் போன்றவற்றினைத் தாங்கிக்கொண்டும் தங்கிக்கொண்டும், தமிழ்மணத்திலும் இருக்கும் திரட்டிகளிலும் இவர் எதற்குத் தன் மேதாவிசாலவிலாசத்தைக் காட்டுகின்றார் என்று தெரியவில்லை.

என்னைக் கேட்டால், தமிழ்மணத்திலே இணைந்திருக்கும்வேளையிலும் தம் பதிவுகளிலே வேறு திரட்டிகளுக்கு இணைப்பினைக் கொடுப்பதுபோல, தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினைக்கூடக் கொடுக்காத பதிவர்களின் பதிவுகளையும் சேர்த்துக்கொண்டு போவதுதான் தமிழ்மணத்தின் நல்ல பண்புகளிலே மிக நல்ல பண்பென்பேன் :-) ஆனால், அதற்காக, தமிழ்மணத்திலே தோன்றும் இரவிசங்கரின் மாயையை விதைக்கும் எல்லாக்கருத்துகளையும் பதிலன்றி விட்டுவிட்டுப் போகத்தேவையில்லை.

related old post

26 comments:

Anonymous said...

hi
read tamil blogs open opml group to see who are behind ravishankar. nine member group with some prominent bloggers.

http://groups.google.com/group/tamil-blogs-open-opml

http://groups.google.com/group/tamil-blogs-open-opml

read this one too for its subtitles.
http://snapjudge.blogspot.com/2007/12/google-reader-vs-thamizmanam-toolbar.html

opml is a good intention, though egoist ravishanker has become a pawn and puppet for few behind-the-scene-people's own sinister motives.

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த ஆண்டேனும் திருந்துன்கள்
உங்கள் எல்லோருக்குமாக ஒரு பாட்டு

Anonymous said...

"Be careful Grandpa,
Be careful! Oh gee!
Who will drop it, will you or will he?"

"I don't know," Grandpa replied,
"We'll see.
We shall see."

Anonymous said...

OPML postugala vetti pottu kindal subtitles kuduta post
http://snapjudge.wordpress.com/2007/12/26/blogs_opml_opinions_tamil/
bala sarrota poison keyboardtota effecttukku intha postota subtitlesthaan paakkanum. nach!

Boston Bala said...

---அண்மையிலே வேர்ட்ப்ரஸ்.கொம்மிலே தமிழ்ப்பதிவிட்ட மூன்று நண்பர்களின் இரண்டரை ஆண்டு காலப்பதிவுகள் அப்படியே விழுங்கப்பட்டன; இதற்கான காரணம், என்ன அல்லது எவர் என்பதை இங்கே விட்டுவிடலாம். ஆனால், குறைந்தபட்சம் வேர்ட்ப்ரஸ்.கொம் அவற்றினைப் பணம் தந்து செய்து இட்டவர்கள் பாதுகாத்து மீட்டெடுக்கக்கூட உரிமை தரவில்லை---

ஏன்?? இழந்த பதிவுகளை மீட்க முடியவில்லையா? வொர்ட்ப்ரெஸ்.காம் வேண்டுமென்றே நீக்கியதா?

(நானும் வொர்ட்ப்ரெசில் பதிவதால்; இந்த மாதிரி நேரலாம் என்பதால்; நிஜமாகவே நிகழ்ந்ததா?? எவருக்கு?? என்பதை அறியும் நோக்குதான்)

-/பெயரிலி. said...

பாலாஜி,
எனக்கு உதை வாங்கித்தரும் திட்டமா? ;-) பதிவினை இழந்த நண்பர்களுக்கு இதை ஒரு விடயமாகச் சொல்லும் விருப்பம் இருக்கோ தெரியவில்லை. அதனாலேதான் ஆட்கள் பெயர்களைச் சொல்லவில்லை. விட்டுவிடுங்கள் அண்ணே ;-)

ஒரு வழங்கியிலே wordpress.com இலே வைத்திருந்தார்கள் என்று எண்ணுகிறேன். அவர்களின் கையிலே வழங்கி நிர்வாகம் இருக்கவில்லை. அதனாலே, எல்லாம் போனபின்னாலேதான் தெரியவந்தது என்று எண்ணுகிறேன். வழங்கியினை நிர்வகித்தவருக்குத் தெரியக்கூடும் :-(

ஆனால், எனக்குத் தோன்றும் பிரச்சனை இழந்ததை wordpress உடன் கேட்டு எடுக்கமுடியாமல் போனதுக்கு, நிர்வகித்தவர்தான் கேட்கவேண்டும் என்பதிருக்கட்டும் என்பதல்ல, தடாலென்று போனால், அதைத்தேடிப் பார்க்க வழிவேண்டாமா?

Anonymous said...

NOT RELATED TO THIS POST BUT FYKI
http://epw.org.in/uploads/articles/11370.pdf

-/பெயரிலி. said...

Hello,

for the second time, I allowed your irrelevant link here.

if you have any problem with LTTE, go and post in your own blog or send a mail to The Hindu. Please do not dump in my blog. I will not allow if it is not related to my post content.

Thank you for understanding.

Boston Bala said...

நன்றி பெயரிலி.

இரண்டு மூன்று முறை என் பதிவுகளுக்கு பிரச்சினை வந்தபோது தொடர்பு கொண்டவுடன் பதில் இட்டிருந்தார்கள். அது நம்பிக்கை அளித்தது. ஆனால், சமீபத்திய category & tag பரிமாற்றத்தில் 'உடனடி'யாக பதில் சொல்லாமல், நுட்பத்தையும் முடக்கி இருந்ததால், 'வேறு எங்காவது சேமித்து வைத்தால் நலம்' என்று தோன்றியிருந்தது.

இப்பொழுது இப்படி கேள்விப்பட்டவுடன் ஆச்சரியமாக இருந்தது.

ILA (a) இளா said...

//wellwisher //
I strongly defend your words Mr.WellWisher. We are not at all behind ravi shanker. we worked together with him and yes we did the opml for the tamil bloggers, WHICH IS NOT AGAINST THAMIZMANAM(upto my knowledge).

இந்தக் குழுவில் இருக்கும் நான் தமிழ்மணத்தை எந்த விதத்திலும் குறை சொன்னதில்லை.காரணம் தமிழ்மணத்தில் இருக்கும் வசதிகள்/limitations-(you fill the word as per your wish) தெரிந்தேதான் நாம் அங்கே இணைந்து இருக்கிறோம்,offcourse ME..

Anonymous said...

hi ILA(a)
you confuse me. are you responding to my comment or to somebodyelse? what does tamilmanam have to do with my comment on opml group? I still scratch my bold head. can you explain your statement?

Anonymous said...

அந்தக் கருத்து கழுதையின் கருத்தல்ல. கழுதையை மேய்த்தவர்களில் ஒருவரின் சொந்த கருத்து. கழுதைக்கும் அந்த கருத்துக்கும் முடிச்சுப்போடும் அளவுக்கு தட்டையான சிந்தனையை இளாடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

Anonymous said...

Anandavikatan quiz time

Fill in the blanks

1. zha kanani project was done by ------

2. opml project will be done by -------

(hint 1--ma. sivakumar and ravishankar are not the correct answers

hint 2--blogs are important for AV only because people like ravi srinivas and nagarjun rarely write intelligent noteworthy comments)

ILA (a) இளா said...

//கழுதைக்கும் அந்த கருத்துக்கும் முடிச்சுப்போடும் அளவுக்கு தட்டையான சிந்தனையை இளாடமிருந்து எதிர்பார்க்கவில்லை.//
கண்டிப்பாக இது முடிச்சு போடும் விஷயமில்லைங்க. Snapjudgeன்னு ஒரு இடுகை இருக்கே அங்கே முடிச்சு போட்டு இருக்காங்க. அங்கேயும் ஒரு கருத்து சொல்லிட்டுத்தாங்க வந்து இருக்கேன்.

//read this one too for its subtitles. //
Subtitleல தப்பு இருக்குன்னு சொல்ல வந்தேன் சாமிகளா. இதுக்காகவாயா குடலை உருவுவீங்க? அந்த குழுமத்துல நானும் இருக்கேன்னு சொல்லிக்கிறேன். அதோட சில விஷயங்கள்ல என்னோட பதிவுலேயும் எதிர்பாருங்க. OPML Projectம் நோக்கம் சரியா இப்போதைக்கு சரியா நிறைவேறாதுன்னு நான் நினைக்கிறேன்(அப்புறம் என்ன...... அங்கே இருந்தேன்?னு கேட்டா கிழிக்க முடியுமான்னு கிழிச்சு பார்த்தாதானே தெரியும். அது கிழிய கொஞ்ச காலம் ஆகலாம். இதுக்கும் மேல பதில் சொல்ல எனக்குத்தெரியலைங்க. என்னாத்த வேணுமின்னாலும் உருவிக்கோங்க, டவுசரைத் தவிர.. :)

Anonymous said...

Give more hints. Any media connection for the persons in the answers?

Anonymous said...

1 சுஜாதா??

-/பெயரிலி. said...

அநாநியமாகத்தேஞ்சதுகளே,

போதும். இந்த காக்கா பிடிக்கிறது, குருவி சுடுகிறது போல விளையாட்டுகளை வேறெங்கையும் வச்சுக்கொள்ளுங்கோ. இங்கை, இந்தப்பதிவில வேணாம். இனி இப்பிடி பின்னூட்டினால், பால்போச்சியை உடைச்சுப்போடுவன். அவ்வளவுதான். வேணுமெண்டால், அட்ரசைத் தந்துபோட்டுப்போங்கோ. எப்பவாச்சும் மொக்கை, மோடி, முசுப்பாத்தி காட்டினால், பின்னூட்டத்துக்கு ஆள் சேர்க்கச் சொல்லி அனுப்புறன்.

நன்றி வணக்கம்.

Anonymous said...

hi peyarili
i respect your decision on anonymous comments. however i have played by rules to this moment. if you also believe so, please allow this reply to ILA.

hi ILA
i did not see any reply for my question. it looks like you addressed me and then responded to anonymous. please read before making quick response. i did not write anything about tamilmanam. my comment is on nine people opml group that is restricted to few selective members. Now ten people are there.

-/பெயரிலி. said...

comment-option closed for this post expect for ila(a) - if he wants to respond to wellwisher.

Most of the comments are not related to my original post. Anonymous people may find some other venues for continuing their "disgustion." ;-)

Thanks for the well engaged "digression" in this post :-(

-/பெயரிலி. said...

This is from a friend commenting on wordpress.com, wordpress software. My apologies for the technical incorrectness

"When we maintain a separate website with "wordpress software" such as one your friends did, it is fully in our control. we have to take care of it. Wordpress group can't help us there. Since the person, who took care of it let it go, the mistake is squarely on individuals and not on wordpress.
At the same time when we maintain a website in "wordpress.com" as a subdomain such as www.snapjudge.wordpress.com , then wordpress will give support. Mostly in wordpress.com you wont encounter any issues.

So, there is some difference between "wordpress software" and " wordpress.com"

In any case, even in blogger we need to keep a backup of what we write...

You should have a backup of all your articles, as you have written many things over the years.
"

மு. மயூரன் said...

பெயரிலி,

நண்பரொருவர் அனுப்பிவைத்த தொடுப்பினைப்பிடித்துக்கொண்டு இப்பதிவினை வந்தடைந்தேன்.

//இப்படியான வேர்ட்ப்ரஸ்.கொம் இற்கு இலவசமாகத் தமிழ்ப்படுத்துவதும், மைக்ரோஸொப்ட்டுக்கு இலவசமாகத் தமிழ்ப்படுத்துவதும் கோலியாத்துகளுக்குக் குடைபிடிக்கும் செயல்களே. இவற்றினைப் போன்றவற்றினைத் தாங்கிக்கொண்டும் தங்கிக்கொண்டும், தமிழ்மணத்திலும் இருக்கும் திரட்டிகளிலும் இவர் எதற்குத் தன் மேதாவிசாலவிலாசத்தைக் காட்டுகின்றார் என்று தெரியவில்லை.//

இப்படிச்சொல்வது வாசகரை தவறாக வழிநடத்தக்கூடும்.

1. ரவிசங்கர் மொழிபெயர்ப்பில் உதவியது வேர்ட்ப்ரஸ் டொட் கொம் இற்கல்ல. வேர்ட்பிரஸ் மென்பொருளுக்கேயாகும். அம்மொழிபெயர்ப்பு முழுதும் திறந்த நிலையில் க்னூ பொதுமக்கள் உரிமத்தினடிப்படையில் இணையத்தில் இலவசமாகப்பகிரப்பட்டுள்ளது. வேர்ட்ப்ரஸ் மென்பொருளும் அவ்வாறே.
ஆகவே அங்கே ரவிசங்கரின் உழைப்பென்பது விழலுக்கோ, கோலியாத்துக்கோ இறைத்ததாக கொள்ளமுடியாது.

2. மைக்ரோசொஃப்ட் போன்ற நிறுவனங்களின் மூடிய, வியாபார நோக்கத்தை மட்டும் கொண்ட திட்டங்கள் எதிலும் ரவிசங்கர் இணைந்து உழைத்திருப்பதாக நான் அறியவில்லை. அப்படிப் பிரித்துப்பார்த்து எங்கே உழைக்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் வல்லமை அவரிடம் இருப்பதாகவே கருதுகிறேன்.


மற்றபடி, இந்த பதிவின் பின்னால் உள்ள தமிழ் மணம் தொடர்பான கருத்தாடல்களை நான் முழுமையாக வாசித்திருக்கவில்லை. எனவே அதுபற்றி கருத்தெதுவும் கூறும் வல்லமை தற்போது எனக்கில்லை.

மேற்கண்டவிதமாக எழுதுவது. உண்மையில் உங்கள் பதிவினை வாசிப்போரை, ஒரு பொய்யினை சூட்சுமமாக கூரிய விமர்சனங்களோடு கலந்து கொடுத்துத் தவறாக வழிநடத்துவது போன்றதே.

இப்படி எழுந்தமானமாக தனிமனிதர் ஒருவர் மீதான கருத்துருவாக்கம், இவ்வாறான நெருக்கடியான பின்புலமுள்ள உரையாடல்களில் மிகவும் விரும்பத்தகாதது.

-/பெயரிலி. said...

மயூரன்,
wandererwaves.blogspot.com/2007_12_01_archive.html இனை உங்கள் நெதர்லாந்து நண்பர் பார்த்து உடனேயே நீங்களும் பார்த்ததைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன் :-)

நிற்க.
1. இன்று நீங்கள் வாசித்திருப்பதால், எனது சில நாட்களின் முன்னான திருத்திய உள்ளீடு போட்டபின்னரே வாசித்தீர்கள் என்று எண்ணுகிறேன். வேர்ப்பிரஸ் பற்றிய என்னுடைய திருத்திக்கொள்தலைப் பார்த்திருப்பீர்கள்.

இரவிசங்கர் மைக்ரோசொப்டுக்கு உழைத்தார் என்று சொல்லியிருக்கிறேனா?

/மற்றபடி, இந்த பதிவின் பின்னால் உள்ள தமிழ் மணம் தொடர்பான கருத்தாடல்களை நான் முழுமையாக வாசித்திருக்கவில்லை. எனவே அதுபற்றி கருத்தெதுவும் கூறும் வல்லமை தற்போது எனக்கில்லை./ என்று கூறுகிறவர் இரவிசங்கரின்

/மேற்கண்டவிதமாக எழுதுவது. உண்மையில் உங்கள் பதிவினை வாசிப்போரை, ஒரு பொய்யினை சூட்சுமமாக கூரிய விமர்சனங்களோடு கலந்து கொடுத்துத் தவறாக வழிநடத்துவது போன்றதே.

இப்படி எழுந்தமானமாக தனிமனிதர் ஒருவர் மீதான கருத்துருவாக்கம், இவ்வாறான நெருக்கடியான பின்புலமுள்ள உரையாடல்களில் மிகவும் விரும்பத்தகாதது./

1. இரவிசங்கர் மீதான என் கருத்தாக்கம் அவருடைய பின்னூட்டங்

I will come and talk later

-/பெயரிலி. said...

மயூரன்

///இப்படியான வேர்ட்ப்ரஸ்.கொம் இற்கு இலவசமாகத் தமிழ்ப்படுத்துவதும், மைக்ரோஸொப்ட்டுக்கு இலவசமாகத் தமிழ்ப்படுத்துவதும் கோலியாத்துகளுக்குக் குடைபிடிக்கும் செயல்களே. இவற்றினைப் போன்றவற்றினைத் தாங்கிக்கொண்டும் தங்கிக்கொண்டும், தமிழ்மணத்திலும் இருக்கும் திரட்டிகளிலும் இவர் எதற்குத் தன் மேதாவிசாலவிலாசத்தைக் காட்டுகின்றார் என்று தெரியவில்லை.//

இப்படிச்சொல்வது வாசகரை தவறாக வழிநடத்தக்கூடும்.

1. ரவிசங்கர் மொழிபெயர்ப்பில் உதவியது வேர்ட்ப்ரஸ் டொட் கொம் இற்கல்ல. வேர்ட்பிரஸ் மென்பொருளுக்கேயாகும். அம்மொழிபெயர்ப்பு முழுதும் திறந்த நிலையில் க்னூ பொதுமக்கள் உரிமத்தினடிப்படையில் இணையத்தில் இலவசமாகப்பகிரப்பட்டுள்ளது. வேர்ட்ப்ரஸ் மென்பொருளும் அவ்வாறே.
ஆகவே அங்கே ரவிசங்கரின் உழைப்பென்பது விழலுக்கோ, கோலியாத்துக்கோ இறைத்ததாக கொள்ளமுடியாது.//

வேர்ட்பிரஸ்


/2. மைக்ரோசொஃப்ட் போன்ற நிறுவனங்களின் மூடிய, வியாபார நோக்கத்தை மட்டும் கொண்ட திட்டங்கள் எதிலும் ரவிசங்கர் இணைந்து உழைத்திருப்பதாக நான் அறியவில்லை. அப்படிப் பிரித்துப்பார்த்து எங்கே உழைக்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் வல்லமை அவரிடம் இருப்பதாகவே கருதுகிறேன்./

அப்படியான அர்த்தத்திலே நான் சொல்லியிருப்பதாகத் தோன்றினால், மன்னிக்கவேண்டும். சூழ்ச்சியாகச் சொல்லவிரும்பினாலுங்கூட, இப்படியாக இரவிசங்கரோடு தொடர்பாக ஆதாரமற்ற ஒன்றை வெளிப்படையாகச் சொல்லி, வாசிப்போர் என்னைப் பொய்யன் என்று கண்டுகொள்ளுமளவுக்கு நான் இல்லை. நான் மைக்ரோசொப்ட் தமிழ்ப்படுத்தல் பற்றிச் சொன்னது ("இவற்றினைப் போன்றவற்றினைத்"), இரவிசங்கரைக் குறித்ததல்ல என்று என் பதிவினைத் தொடர்ந்து அண்மையிலே வாசித்தவர்கள் பலருக்கும் தெரியும். உண்மையிலே உங்களுக்குப் புரியாதிருப்பின், இணையத்திலே தேடிப்பாருங்கள். OPML + திரட்டி என்று பேசுகின்றவர்கள் எல்லோருக்குமே "திறந்த திட்டங்கள்" பின்னாலே இல்லை என்பதை உணர்வீர்கள். (இங்கு நான் இரவிசங்கரைச் சொல்லவில்லை; இதையும் அப்படியாகப் புரிந்து கொள்ளாதீர்கள்).


/மற்றபடி, இந்த பதிவின் பின்னால் உள்ள தமிழ் மணம் தொடர்பான கருத்தாடல்களை நான் முழுமையாக வாசித்திருக்கவில்லை. எனவே அதுபற்றி கருத்தெதுவும் கூறும் வல்லமை தற்போது எனக்கில்லை./

அந்நிலையிலே, நீங்கள் இங்கே பாதிக்கடலிலே குதித்து நீந்திக் கரையேதி போதிக்கும் மூவிளையாட்டுப்பந்தயத்திலே ஈடுபடாமலிருந்தீர்களென்றால், மகிழ்ச்சியடைந்திருப்பேன் :-)

/மேற்கண்டவிதமாக எழுதுவது. உண்மையில் உங்கள் பதிவினை வாசிப்போரை, ஒரு பொய்யினை சூட்சுமமாக கூரிய விமர்சனங்களோடு கலந்து கொடுத்துத் தவறாக வழிநடத்துவது போன்றதே./

உங்கள் நண்பர் இரவிசங்கர்,
1. தனக்குத் தமிழ்மணம் பதில் தருவதில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிப்பதிவிட்டது
2. தமிழ்மணம் பற்றி 24 மணிநேரத்திலே விளக்கம் தரச் சொல்லி ஒரு பதிவரைக் கேட்டதை, முற்றிலும் மாறான பார்வையைப் புதுவாசகர்களுக்குத் தரமுயற்சித்தது
3. தமிழ்மணம்_பட்டை பதிவுகளை முடக்குகிறது என்று எழுதியது
இவற்றிலும்விட ஒரு திரிபையும் நான் செய்யவில்லை என்பது தமிழ்மணம் பற்றிய அவரது அண்மைய பதிவுகளை வாசித்திருக்காத உங்களுக்குத் தெரிந்திருக்காது என்பதாலே விட்டுவிடுவோம்.

ஆனால், இங்கே என்ன பொய்யினை நான் சொல்லியிருக்கின்றேன் என்று தெரியவில்லை. வேர்ட்பிரஸ் தொடர்பாக அவரின் தமிழ்ப்படுத்தும் கருத்தினைச் சுட்டியிருக்கிறேன். அவ்விடத்திலே வேர்ட்ப்ரஸ் மென்பொருள், வேர்ட்பிரஸ்.கொம் இடையேயான வேறுபாடுகள் பற்றித் தவறான புரிதலோடு எழுதியிருந்தாலுங்கூட, வேர்ட்பிரஸ் மென்பொருளை அவர் தமிழ்ப்படுத்துவது பற்றிய என் கருத்தும் அதுவே. மற்றப்படி, மைக்ரோஸொப்டுக்கு இரவிசங்கர் தமிழ்ப்படுத்தினார் என்று எழுதியிருக்கின்றேனா? மைக்ரோஸொப்டுக்குத் தமிழ்ப்படுத்துகின்றவர்களைத் தேடினால், இணையத்திலே கிடைப்பார்கள். தேடுங்கள். அப்படியானவர்களெல்லாம், இரவிசங்கரைத் திரட்டி எவரையும் சாராதிருக்க உற்சாகப்படுத்துவது, டேவிட்தனத்திலே அல்ல; தமிழ்மணத்திலே உள்ள காழ்ப்புணர்விலே என்பதிலே எனக்கேதும் மாற்றுக்கருத்தில்லை.

இரவிசங்கர் குறித்த எ

/இப்படி எழுந்தமானமாக தனிமனிதர் ஒருவர் மீதான கருத்துருவாக்கம், இவ்வாறான நெருக்கடியான பின்புலமுள்ள உரையாடல்களில் மிகவும் விரும்பத்தகாதது./
இப்படியான கருத்தாக்கம் நீங்கள் என் மீது கொள்வதும் விரும்பத்தகாதது. அடுத்த தடவை முழுதாக வாசித்துவிட்டு வந்து பேசினால், புரிதல் மேம்படும். இரவிசங்கர் பற்றி நான் சொல்ல வந்தவை இரண்டே.
1. தமிழ்மணத்திடமிருந்து அவருக்குப் பதிலே வருவதில்லை என்பதுபோல, ஒரு தோற்றதை அவரது அண்மைப்பதிவுகளிலே அவர் ஏற்படுத்தினார் என்பதாக உணர்ந்ததாலே கொடுக்கவேண்டிய விளக்கமே என் பதிவின் முக்கிய நோக்கம்

2. தமிழ்மணமும் அதுபோன்ற தமிழ்நுட்பம் தாங்கிய திரட்டிகளுமே இவருக்கு நந்திகள் என்று தோன்றி, ஓடைகளைத் திறந்துவிடு என்று சொல்கின்றவர், கூகுல், வேர்ட்பிரஸ் நுட்பங்களைச் சிக்கெனப் பற்றிப் பிடித்து அவற்றினைத் தாங்குவது தவறான கோலியாத்தினைத் தாக்குவதே. திறந்த ஓடைகளை அள்ளி விகடன் திரட்டி செய்தால், என்ன செய்வார் என்று அவர் சொல்லாதிருக்கட்டும்; நீங்களேனும் எழுதவேண்டும்.

இரவிசங்கர் உங்களுக்கு நண்பராக இருப்பதாலே ஏற்பட்ட உங்கள் கருத்து இதுவானால், எனக்குச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

பிகு:
மயூரன்,
1. தமிழ்மணம் பற்றி எனக்குக் கவலையில்லை; ஆயிரம் திரட்டிகள் குடிசைக்கைத்தொழிலாக உருவாக்கப்படுமென்று எனக்கு எப்போதோ நுட்பம் தெரியாமலே பட்டது; பதிவிலும் குறித்திருக்கின்றேன். இலவசமான ஈ-கலப்பை போன்றவை திட்டமிட்டே அழிக்கப்படும்; உத்தமம் (infitt) குழு திட்டமிட்டே ஊடுருவல் நிகழ்ந்து இணைய & கணித்தொழில்நுட்பக் கட்டுப்பாடு மாறும். டெக்னோக்ரட்டியிலே தேடினீர்களென்றால், ஸ்ரீலங்கா அரசு சார்பான ஈழத்தமிழர் எதிர்ப்புச்செய்திகளே தொடர்ச்சியாகச் சேகரித்து ஆவணப்படுத்தப்படுவதைக் காண்பீர்கள். இவை பற்றியெல்லாம், இந்த டேவிட்டுகளோ, மஞ்சட்துண்டு கும்மிப்பதிவர்களோ பேசப்போவதில்லை. மஞ்சட்துண்டு கும்மிகளுக்குத் தேவை ஒன்று கூஜா, அல்லது, ஆஹா மொக்கை போட இன்னொரு தீம் என்ற நிலை; இல்லாவிட்டால், டேவிட்டுகளுக்குத் தேவை ஆளுக்கொரு பெயர் சொல்லும் தனிப்பட்ட அளவிலே, ஒரு செல்லத்திட்டம்.

எனது / என்னைச் சார்ந்த சுயநலம் தொடர்பாகவே எனது செயற்பாடுகள் எதிலும் எப்போதுமிருக்கும். தமிழ் தொடர்பான இணைய & கணித்தொழில்நுட்பம் குறித்து எனக்கேதும் கவலையில்லை. ஆனால், தமிழ் தொடர்பான இணைய & கணியரசியல் குறித்து எனக்கு ஒரு நிலைப்பாடுண்டு & பார்வையுண்டு. உங்கள் திறந்தமூலம்.எதிர்.மூடியகுஞ்சு "பேச்சுப்போராளித்தனம்" எல்லாம் பதினைந்து இருபதாண்டுகளுக்கு முன்னால் கணனி & இணையம் இருந்திருந்தால், எனக்கும் இருந்திருக்குமோ தெரியாது; ஆனால், இன்றைக்கு ஈழத்தமிழருக்கு எதிரான இணைய & கணியரசியலாளர்கள் அதற்காக இந்நுட்பங்களைப் பாவிப்பார்கள் என்று தோன்றும்போது, திறந்த மூலமென்றாலும் எதிர்க்கவே செய்வேன். இலாபம் சார் தொழில்நுட்பநிறுவனமாக இயங்காதவரை தமிழ்மணமோ, தமிழ்வெளியோ எந்த நிறுவனமோ எக்காலத்திலும் தாக்குப்பிடிக்கமுடியாது. விகடன், துக்ளக், இந்தியா ருடே போன்றவற்றினைக் கொண்டு இயக்கும் குமுகம் இணையத்தமிழினையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர வெகுநாளாகாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். அந்த நாளிலே நீங்கள் சிவத்தம்பியையும் சிவசேகரத்தினையும் கொண்டு வந்து பேசுங்கள். நடுவிரலை நீட்டியபடியே உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் - லக்கி லுக்குக்கும் செந்தழல் ரவிக்கும் இரவிசங்கருக்கும் அனுப்பி வைத்தபின்னாலே :-)

இரவிசங்கருக்கும் இந்தப் பின்குறிப்புக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை; ஆனால், அதனை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளத்தேவையில்லை.

2. இவ்விடுகையிலே தொடர்ந்து பின்னூட்டங்களை அனுமதிக்க முடியாது. ஊரிலே இருக்கமாட்டேன்.

ILA (a) இளா said...

//though egoist ravishanker has become a pawn and puppet for few behind-the-scene-people's//
Wellwisher- naan intha karuthai ethirkirein. kaaranam naan onrum thalaiyaati bommai illai. athe pol ravisanker'n munaippai vida ennakkum velai irunthathu. pathivu ezutha neram illathan karathaal OPML patri ezutha mudiya villai.

Anonymous said...

Hi ILA
when I wrote in the beginning of this year these were the numbers of posts in ravishankar's then 9 member OPML group


19 ரவிசங்கர்
7 ila
5 Bala Boston
3 மயூரேசன்
2 masivakumar
1 மாலன்

i did not mean you, at least prominently. what counts is not the number of mails, but who wrote what.

cheers!

Anonymous said...

புத்தக சந்தையை விழுங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்: நீலகண்டன்