Broadcast
'07 மே 30 புதன்'07 மே 30 புதன்
not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Thursday, May 31, 2007
Wednesday, May 30, 2007
Tuesday, May 29, 2007
Monday, May 28, 2007
நிலைப்பு - 3
Toy Story
நித்திலனுக்கு
நித்திலனுக்கு
அடிப்படைப்படம்: '07 மே 28 திங்கள் 18:30 கிநிநே
'07 மே 28 திங்கள் 23:45 கிநிநே
Sunday, May 27, 2007
படிமம் - 194
Collage of Coexistence
61 photos of paintings taken at Coexistence Open Street Exhibition at Hartford on 26 May, 2007 were used to create this digital-collage.
61 photos of paintings taken at Coexistence Open Street Exhibition at Hartford on 26 May, 2007 were used to create this digital-collage.
'07 மே 27 ஞாயி 06:30 கிநிநே
Saturday, May 26, 2007
Friday, May 25, 2007
Thursday, May 24, 2007
Wednesday, May 23, 2007
Tuesday, May 22, 2007
Sunday, May 20, 2007
Saturday, May 19, 2007
Friday, May 18, 2007
Thursday, May 17, 2007
Monday, May 14, 2007
Sunday, May 13, 2007
Saturday, May 12, 2007
Thursday, May 10, 2007
சிதறல் - 122
Tuesday, May 08, 2007
Monday, May 07, 2007
Sunday, May 06, 2007
Friday, May 04, 2007
வரையம் - 7
Wednesday, May 02, 2007
கரைவு - 8
1. பிரேம்-ரமேஷின் கட்டுரையை "அடிமைப்பட்டவர்கள் பாக்கியவான்கள்" டிசே எடுத்துப் போட்டிருக்கிறார். இரண்டு தடவைகள் வாசிக்க, ஓரளவு புரிந்தது (என நினைக்கிறேன்). கருத்தளவிலே ஆண்மை-பெண்மை இரண்டு கருத்தாக்கங்களும்/களையும் அழிவது/அழிப்பது நன்றாகத்தான் இருக்கின்றது - ரயாகரனின் உலக அரசியல் & பொருளாதாரம் குறித்த கட்டுரைகள்மூலம் உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைத் தருவதுபோல. ஆனால், நடைமுறையிலே கருத்தாக்கிகளின் பிரச்சனைகளுக்கான கருத்தளவிலான தீர்வுகளும் தீர்ப்புகளும் நடைமுறைக்கு எப்படியாகப் பயனுள்ளதாகப் போகின்றன என்பது காலத்துக்குமான சிக்கல். தூயகணிதத்தினைப் பிரயோககணிதத்துக்குப் பயன்படுத்துவதுபோன்ற தொடர்பளவிலே இலகுவான நிலை சமூகப்பிரச்சனைகளுக்கில்லை. பிரேம்-ரமேஷின் கருத்தாக்கத்துக்கும் இந்த அவநிலைதானிருக்கின்றது. ஆண்மை-பெண்மை என்ற இரட்டைக்கருத்துகளும் அழியவேண்டுமென்பதிலே மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதெப்படி? பிக்குணி எரியும் திரியை எண்ணெய்க்குள்ளே அழுத்தி அணைப்பதினால் கிடைக்கும் "உள்ளார்ந்த முழுமை" எவ்வகையிலே இக்கருத்தழிப்புக்கான நடைமுறை? கருத்தளவிலே ஆண்-பெண் என்றில்லாது எல்லோருக்குள்ளும் உட்கார்ந்திருக்கும் சொற்களைக் கட்டுடைத்தலும் அழித்தலும் புதுக்கலும் உருவாக்குதலும் முன்னோக்கிய சிறுநடைக்கு உதவலாம். ஆனால், அடிப்படையிலேயே (எதிர்ப்)பால் அளவிலான சந்தேகத்தினை "பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல" என்று எடுகோளாக முன்வைக்க வற்புறுத்தும் இக்கட்டுரை எப்படியாக இந்த கருத்தமைப்பின் அழிப்பினைப் பால்வேறுபாடின்றிச் செய்ய உதவப்போகின்றது?
2. டிசேயின் பிரேம்-ரமேஷின் இடுகைக்கு வந்திருக்கும் கறுப்பியின் பின்னூட்டம், "என்ன செய்வது இது ஆண் அதிகார உலகம். எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகின்றது. சின்ன விடையங்களுக்குக் கூட போராட வேண்டிய நிலையில்தான் இன்றும் என்றும் பெண்கள் இருக்கப் போகின்றார்கள்." பின்னூட்டம் இடமுன்னால், டிசே போட்ட இடுகையை வாசித்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். ஆண்மை-பெண்மை கருத்தமைப்பினை முழுதாய் அழித்தல் என்பது குறித்ததான இடுகை இது - இதிலே வந்து 'ஆண் அதிகாரம் & கெடுதல்' பற்றி ஒரு முத்திரை; முடிந்தது காரியம். எந்த நோய்க்கும் ஒரே மருந்து போலவும் ஐன்ஸ்டைன் கண்டுபிடிக்க முக்கின முழுமைக்குமான விதியைப் போலவும் தத்துவவாதியின் கல் போலவும் "அனைத்துக்கெடுதலுக்கும் ஆணதிகாரம்" என்பதான ஒரு தட்டையான கோஷம். அதற்கப்பால், இத்தனை நாள் ஆண் அதிகார உலகினைக் கெல்லவும் கிழிக்கவும் எத்தனையோ செய்கிறாரே, எதுவுமேதான் இதுவரை நாள் பயன்தரவில்லையா, அல்லது அவர் அப்படியான அதிகார உலகமாகவிருப்பது அவரைப் பெண்ணிலைவாதியாக முன்னெடுக்க வசதி செய்துகொடுப்பதுமட்டுமே போதுமென்றிருக்கிறாரா? எப்போதுமே இப்படித்தான் இருக்கப்போகிறதையிட்டு கவலைப்படுகின்றாரா அல்லது அப்படியே அது இருப்பதுதான் அவரைப் பெண்ணிலைக்காகப் பேசவைக்க வசதியென்றிருக்கின்றாரா? அவர் சொல்லப்போவதில்லையென்றே நினைக்கிறேன்; இன்னும், இருபது ஆண்டுகள் கழித்து வந்து பதிவுகளை இதே தலைப்பின்கீழேயிட்டாலும் அவர் வந்து போடப்போகும் முதலாவது பின்னூட்டம், "இது ஆண் அதிகார உலகம். எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகின்றது. சின்ன விடையங்களுக்குக் கூட போராட வேண்டிய நிலையில்தான் இன்றும் என்றும் பெண்கள் இருக்கப் போகின்றார்கள்." இதற்கு அப்பால், அவர் சிந்தனை நகரப்போவதில்லை, முன்னால் இருப்பவன் ஆணென்றால், "நீ ஆணாதிக்கவாதி; உன் மனைவிக்காகப் பரிதாபப்படுகிறேன்." என்ற வரிகள் தொடர்ந்தாலல்லால். பக்கத்துவீட்டிலே பத்தாண்டுகளிருந்து அவனும் அவளும் வாழ்ந்ததைப் பார்த்ததுபோல ஒரு கருத்து. பெண் தான் என்பதை முன்னிலைப்படுத்தி ஒருவர் சொன்னால், ஓர் ஆண் பரிதாபப்படும் நிலையிலிருக்கும் மனைவியைக் கொண்ட ஓர் ஆணாதிக்கவாதியாக மட்டுமேயிருக்கமுடியும்.
இவரின் இச்செய்கை என்னை அம்பை என்ற சி.எஸ். லக்ஷ்மியின் ஒரு செய்கையை ஞாபகப்படுத்துகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால், நா. கண்ணன் நடத்தும் ஈ-சுவடியிலே நடந்தது. தமிழிலே முதலிலே எழுதிய முஸ்லீம் பெண் எழுத்தாளர், சித்தி ஜுனைதா பேகம் குறித்த விபரங்கள் குறிப்புகளை நாகூர் ரூமி மூலம் நா. கண்ணன் தன்னுடைய முதுசம் திட்டத்துக்குப் பெற்றுக் கொண்டதை ஈ-சுவடி யாஹூ குழுவிலே அறிவிக்கின்றார். அம்பையிடமிருந்து ஓர் அஞ்சல்; அக்குறிப்புகள் தன்னுடைய SPARROW குழுவுக்கே நியாயப்படி சேரவேண்டுமென்கிறார். அதற்காக அவர் சொல்லும் காரணம்,"சித்தி ஜுனைதா பேகம் ஒரு பெண்." அவர் தமிழ் எழுத்தாளர் என்று தமிழிலக்கியக்களஞ்சியத்திலே தேடிக்கண்டுபிடித்தவர் சேர்க்கமுடியாது; அவர் பெண் என்பதுதான் முன்னிலையாகவேண்டும். இந்த "வந்தால் என் வழி; இல்லாவிட்டால், Disclosure Demi Moore Declaration" வகை வாதம் தனியாள் ஒளிவட்டத்துக்கு ஆட்சேர்க்க உதவலாம். அதற்குமேலே பொதுவாக, -பெண்களுக்கோ ஆண்களுக்கோ- சமூகத்துக்கோ என்ன பயனைத் தரப்போகிறது?
3. பாலபாரதியின் பழைய பதிவிடுகை ஒன்று, "இது அன்னையர் தேசமா..." இஃது இன்னொரு வகையான வேலியிலே போகும் ஓணானைத் தன் மடியிலே போடும் பதிவு. பின்னூட்டங்கள் வருவது தொடர்பான அவருடைய கருத்துகளோடு ஒத்துக்கொள்ளமுடிகின்றது. ஆனால், "எனது "ஆதலினால்..." இடுகையில் ஏமாறாதவன் என்பவர் பெண்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்ற ரீதியில் கருத்து சொல்லி விட்டுப்போனார். ஆனால்.. ஆண்களின் உலகம் தான் சூழ்ச்சிகள் நிறைந்ததாக இருக்கிறது என்பதை வேதனையோடு இங்கு பதிவு செய்ய கடமை பட்டிருக்கிறேன்" என்பது ஒன்று அவர் தமிழ்மணத்தினைச் சரியாகக் கவனிப்பதில்லையா அல்லது கவனித்தும் கவனிக்காததுபோல இருக்கின்றாரா என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது. ஏமாறாதவன் என்பவர் 'இயிங்க்' என்றால், இவர் 'இயாங்' என்ற விதத்திலே பதில் எழுதியிருக்கின்றார். "ஏனெனில் ஆண்களின் சிந்தனை போலில்லாமல்.. பெண்களின் சிந்தனை பல புதிய கோணங்களை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது" என்றவர் சொல்கிறதிலே இன்னும் அறியாத இச்சூழ்ச்சிகள் பற்றிய கோணங்களும் இவருக்கு இருக்கின்றதோ தெரியவில்லை. இக்கோணங்களும் உத்திகளும் சொல்லப்பட்டிருந்தால், தமிழ்மணத்தினைக் கொஞ்சம் கவனித்திருந்தால், இந்த ஆண்சூழ்ச்சி - பெண்சூழ்ச்சி நிகழ்த்தப்படும் நுண்ணிய தளங்களும் நூலூடிப்பாவும் நுண்வழிமுறைகளும் இவருக்குப் பிடிபட்டிருக்கும்.
மேலும், ஏற்றுக்கொள்ளமுடியாத சொற்களோடு அநாமதேய பின்னூட்டங்களும் பெண்பதிவர்களுக்கு மட்டுமல்ல, ஆண்பதிவர்களுக்குமேதான் வருகின்றது. பெண் என்பதைத் தவிர, சாதி, மதம், மொழி எல்லாவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதலோடுதான் எல்லாத்திசைகளிருந்தும் வருகின்றன. "பள்ளனோடு உங்கம்மா படுத்தாளா?" என்றும் வருகின்றது; "பார்ப்பானோடு உங்கக்கா படுத்தாளா?" என்றும் வருகிறது; 'தீரா'விட'ன்' என்றும் வருகின்றது; 'ஆரியன்' என்றும் திட்டி வருகின்றது. அவற்றையெல்லாம், 'அம்மா' & 'அக்கா' என்று பார்ப்பான் வீட்டுப்பெண்களையோ பள்ளன்வீட்டுப்பெண்களையோ திட்டுகின்றபோதிலுங்கூட, நாம் பெண்களெனக் கவனிப்பதில்லை. திட்டும் திசை நமதா எதிரியினதா என்றுமட்டும் பார்த்துவிட்டு, ஒதுங்கிக்கொள்கிறோம். ஆனால், அறிந்த பெண்பதிவர்களிலே தாக்கும்போதுமட்டும் எல்லாப்பதிவர்களும் அக்கறை கொள்கிறோம். நம் நண்பர்களைத் தாக்கும்போது, எதிர்வினை செய்வது வழக்கமே. அவசியமானதும் கட்டாயமானதுமானதுமே. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், எந்தவொரு பதிவரும் ஆண்-பெண் என்பதாக மட்டுமே அடையாளப்படுவதில்லை. வலைப்பதிவிலே சாதி, இனம், நாடு, மொழி, மதம் சேரவுமேதான் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். இவை எல்லாக்கூறுகளையும் முன்னிறுத்தியே தாக்குதல்கள் நிகழ்கின்றன. ஆண் பதிவர்கள் பெயர்களிலே எழுதிய அத்தனை வக்கரிப்புகளையுமேதான் பெண்களின் பெயர்களிலும் எல்லாப்பக்கத்து கோடாலிப்பாம்புகளும் போட்டுத்தள்ளுகின்றன. பிரபு ராஜதுரையின் "சுஜாதா, சுப்பிரமணியசுவாமி, சூத்திரர்... " இடுகையிலே சுட்டியதன்படி நாம் கொஞ்சம் இப்படியான நிலைமையைப் பார்த்தால், இழிவு படுத்துதல் என்பது எல்லாவகைகளிலுமேதான் நடந்திருக்கின்றன. ஆனால், பெண்களின் பெயர்களிலே வரும்போதுமட்டும் பெண்களை இழிவு செய்துவிட்டார்கள் என்ற பாவனை வருகின்றது. இஃது எதனால்? [நான் சொல்லவருவதை முழுவதும் தவறாகவே புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கின்றது. என்றாலும், முயற்சிக்கின்றேன்] ஆனால், இது பெண் என்பதாலே தாக்கப்பட்டுவிட்டார் என்பதாகவும் பெண்களைப் பாதுகாப்பது ஆண்களின் கடமை என்பது போன்ற (ஒரு தனியுடைமைச்சொத்தினை, வீடு, வங்கிநிலுவை, வாகனம் இவற்றைக்) காக்கும் போக்கோடுதான் இருப்பதாக எனக்குப் படுகின்றது. "பெண்களும் குழந்தைகளும் முன்னே" என்று தாழும் டைட்டானிக்கிலேயிருந்து படகுகளிலே குதித்துத் தப்பிக்கமுன்னால், அறிவிப்பு விட்டதுபோலவல்லோ இருக்கின்றது? இதுதான் பெண்களைச் சரிநிகராகக் கருதுவதா?
4. நிவேதாவின் கட்டுரை, "காலனித்துவ இலங்கை அரசியல் சமூகத்தில் தமிழ்ப் பெண்களும் பெண்களின் அரசியலும்" இலே ஒரு பகுதி;
"இது மிக விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமெனினும, சுருக்கமாகக் கூறுவதாயின்..., சமீபத்தில் நண்பரொருவருடனான உரையாடலின்போது, 'ஆண்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும்போது சாடுகிறீர்களே.. சிறிமாவோ, சந்திரிக்கா, ஜெயலலிதா, ஏன் இந்திரா காந்தியென பெண்கள் பலரதும் ஆட்சியைப் பார்த்தவர்கள் நாம் .. இவர்கள் அதிகாரத்திலிருந்தபோது மட்டும் நிலைமை முன்னேற்றமடைந்திருந்ததா..?' எனக் கேட்டார்.
பெண்களின் அரசியலென்ற கருத்தாக்கம் இவ்விடத்தே தான் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தக் குறிப்பிட்ட பெண் தலைவர்களனைவரும் ஆண்களின் பிரதிநிதிகளாய், ஆண் மேலாதிக்க சமூகம் உருவாக்கி வைத்திருந்த சமூக, அரசியல் சூழ்நிலைகளுக்குள் நின்றுகொண்டு ஆட்சி புரிந்தார்களேயொழிய எவரும் பெண்ணென்ற தமது சுய அடையாளத்தினை வலியுறுத்த முயன்றனரெனக் கூறமுடியாது. ஒருவகையில் தமது அத்தகைய அடையாளங் குறித்து வெட்கி ஆண் தலைவர்களை அப்படியே பிரதியெடுக்க முனைந்ததன் விளைவுதான் இதெனலாம். "
சோவியத்து உடைப்பின்பின்னால், நஷனல் ஜியோக்ரபிக் பத்திரிகையாளரொருவர் ஜோர்ஜியாவிலே செவ்வி கண்டுகொண்டிருக்கின்றார். ஜோர்ஜியர் பலர் ரஷிய, மற்றும் சோவியத்தின் பொதுவுடமைக்கட்சிக்கெதிராகக் கருத்துக் கூறுகின்றார்கள். ஆனால், எவருமே ஸ்டாலினைக் குறைத்துச் சொல்ல விரும்பவில்லை. பத்திரிகையாளர் இதனை மிகவும் அழகாகச் சொல்கிறார், "ஜோர்ஜிய மக்களின் கருத்தானது, 'ஸ்டாலின் ஒரு பயங்கரனாகவிருக்கலாம்; ஆனால், எங்களது பயங்கரன்" என்பதாகவே தோன்றுகின்றது." நிவேதாவின் சிறிமாவோ, சந்திரிகா, ஜெயலலிதா போன்றோரது நடத்தைகளுக்கான உள்ளார்ந்தநிலைவிளக்கமும் இதனை ஒப்பவேயிருக்கின்றது. இந்த வாதத்தின்படி பார்த்தால், சமூகத்தின் எந்த நிலையிலேயும் எந்தப்பெண்ணின் செயற்பாட்டினையும் ஆண்சமுதாயத்தின் அமைப்பின் விளைவென்றே சுட்டிவிட்டுத் தப்பித்துக்கொள்ளலாம். இந்த "சமுதாயம் அவளை வாழவிடவில்லை" வசனத்தை Aileen Wuornos இற்குமட்டுமல்ல, சந்திரிகா, ஜெயலலிதாவுக்கும் சொல்லலாம். இது ஒன்றில் சிறுபிள்ளைவாதம் அல்லது மிகவும் சாதுரியமான தப்பிப்புவாதம்.
சந்திரிகாவின் காலத்திலேதான் (சிறிமா அம்மையார் அந்நேரப்பகுதியிலே தலைமையமைச்சராகவும் இருந்தார்) கிருஷாந்தி, கோணேஸ்வரி, சாரதாம்பாள், ஹேமலதா இவர்கள் வன்புணரப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். சந்திரிகா நிச்சயமாக தானறிந்து இவற்றினைச் செய்யவில்லை. ஆனால், இப்படியான செயற்பாடுகளுக்குப் பின்னான வேளையிலே, அவரது படையினரைத் தண்டிப்பிலிருந்து தப்பிக்க வைக்கும் செயற்பாடுகளை அறிந்தும் நடந்துகொண்டாரென்பதுதான் நடைமுறை. ஸ்ரீமாவின் காலத்திலேதான் மன்னம்பேரி வன்புணர்தலும் சேகுவேரா - 72 வன்னடக்குமுறையும் இந்திராகாந்தி ஆட்சியின் உதவியோடு நிகழ்ந்தன; இந்திராகாந்திதான் முன்னெப்போதுமில்லாதவாறு, இந்தியாவிலே மிஸா அரசியலடக்குமுறையைக் கொணர்ந்தார்; ஜெயலலிதா காலத்துக்கு முன்னால், வீட்டுக்கு முச்சில்லுவண்டி விட்டு காலையுடைக்கும் 'பண்பாடு' தமிழக அரசியலிலேயிருந்ததாகத் தெரியவில்லை. இவை எதுவுமே இங்கே "ஆண்மேலாதிக்க சமூகம், சூழல்" என்ற வாதத்தினைக் கொண்டு இப்பெண்ணாட்சியாளர்களை ஆண்சமூகச்சூழ்நிலைக்கைதியாக்கித் தப்பிக்கச் செய்யும் முடக்குவாதமொழிய வேறெதுவுமாகவிருக்கமுடியாது. இதன் மோசமான விளைவு என்னவென்றால், இப்படியான ஆண்கள் உருவாக்கிய சமூக, அரசியல் சூழ்நிலையைச் சுட்டிக்கொண்டு தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறையைக்கூட பெண் ஆட்சியாளர்கள் அதிகாரத்தின் பேரிலே அனுமதித்துக்கொண்டுபோவதாகவிருக்கும். இந்நிலையிலே சொல்லப்போனால், ஆண் ஆட்சியாளர்களைவிடப் பெண்ணாட்சியாளர்களுக்குப் பெண்ணியலை முன்னெடுக்கும் ஒரு பகுதியினர் வன்முறைக்கு வாய்ப்பும் தப்பிக்கும் வழியும் ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள் என்றே சொல்லலாம். ஒரு Countess Erzsébet Báthory இன் செயற்பாடுகளை Count Vlad Drăculea மீது போடுவதுபோலத்தான் ஆகும். அதிகாரத்துக்கு, பால், சாதி, மொழி, இனம், மதம் என்று ஐம்பொறிகளில்லை. அதிகாரம் தன் வசமானது; தன்னை நிறுத்திக்கொள்ள அத்தனை உத்திகளையும் பயன்படுத்தும். சந்திரிகா பெண் என்பதும் இவ்வகையிலே ஓருத்திதான். இப்படியான உத்திகளை அறிந்தும் அவர் பெண்ணென்பதாலே அவரை நியாயப்படுத்துகின்றவர்கள், இவ்வதிகாரத்தின் கீற்றுகளைத் தாமும் கவர்ந்துகொள்கின்றவர்களேயாவார்.
பெண்களைப் புனிதப்பாலிலே நீராட்டி வைத்துக்கொண்டு, ஆண்களைப் பீயுழலும் பன்றிகளாக நிறுத்தி வைத்துக்கொண்டுதான் பேரம் பேசுதலும் வாதம் பேசுதலும் நிகழ்கின்றதாகத் தோன்றுகின்றது. பெண்களின் செயற்பாடுகள் குறித்த விமர்சனத்தினை எழுப்ப எவருக்கும் விருப்பமிருப்பதில்லை; ஆண்களானால், முத்திரை குத்தப்படுவோமோ என்ற தயக்கமிருக்கின்றது. இதே விமர்சனத்தயக்கங்கள், ஈழவிடுதலைப்போர் குறித்தும் இந்தியத்தேசியம் குறித்தும் பலருக்கும் இருக்கின்றன. தர்க்கத்துட்பட விமர்சனத்தினை முன்வைக்காத எந்தக்கொள்கையுமே நடைமுறையிலே வெற்றி பெற்றதாகவோ நிலைத்து முன்னோக்கி நகர்ந்ததாகவோ வரலாற்றுநிகழ்வுகள் காட்டவில்லை. ஒருவரைப் பற்றிய கருத்தினைத் தெரிவிக்கும்போது, அவரின் பொது அடையாளங்களுக்கான குணங்கள் (பால், மொழி, இனம், மதம், சாதி), தனியடையாளங்களுக்கான குணங்கள் (ஒவ்வொரு குழுவுள்ளும் தனித்தன்மை) இவற்றினைச் சேர்த்துப் பார்க்க ஏன் எம்மால் முடிவதில்லை?
இப்படியான ஆணாதிக்கசமூகத்தின் சூழ்நிலைக்கைதித்தனமும் பிரேம்-ரமேஷ் கூறும் ஆண்மை-பெண்மை இரட்டைமொழி அழியும் நிலையும் எப்போது ஏற்படுகின்றதென ஒரு முடிவான நிலைக்கு எவருமே ஒருபோதும் வரப்போவதில்லை. இந்நிலையிலே, அவரவர் அவரவர் வசதிக்கும் தேவைக்குமேற்ப, தூக்குதலும் தூற்றுதலும் செய்துகொண்டிருக்கப்போவதுதான் நடக்கும்.பாலுக்கு எதிர்ப்பால் குறைந்தளவேனும் புரிதலும் நம்பிக்கையும் கொள்ளாதவரையிலே எல்லாம் சூழ்ச்சியாகவும் பெண்ணாட்சியிலே வன்முறை நிகழும்போது, ஆணாதிக்கசமுதாயத்திலே பழியைப் போடுவதும் எந்த இலக்கைக் கொண்டு ஒரு சமுதாயத்தை நடக்கவைக்குமென்று என்னால், சொல்லமுடியவில்லை.
கடைசியாக, விக்கிரமாதித்தனை வேதாளம் கேட்டதுபோல, தலைசுக்குநூறாகிப் போக ஒரு கேள்வி.
'யாரோ ஓர் ஔவை "தையல் சொல் கேளேல்" என்று சொல்லிவிட்டுப்போய்விட்டாள்.'
இவ்வரியை எப்படியாக விடுவித்துக் கருத்தைக் கொள்வது?
1. ஔவை சொன்னால் சரியாகத்தான் இருக்கும்; பெண்கள் சொல்வதைக் கேட்காதே.
2. ஔவையே ஒரு பெண்; அவரே பெண்கள் சொல்வதைக் கேட்காதே என்று சொன்னால், அது கேளென்று அர்த்தப்படும். ஔவை பெண்களுக்குப் பூடகமாகத் தன் செய்தியை உணர்த்தியிருக்கின்றாள்
3. ஔவை என்பது முதிர்ந்த பருவம்; தையல் என்பது அல்ல; ஆகவே, தையல்_பருவத்திலேயிருக்கும் பெண் சொல்வதைக் கேளாதே.
4. ஔவை வாழ்ந்த காலம் ஆணாதிக்கம் பெண்களின் கழுத்தை இறுக்கிய காலம்; ஔவை அப்படியாகத்தான் சொல்ல வாய்ப்புண்டு.
5. ஔவை சொன்னாளா? தெரியாது. யாராவது ஓர் ஆண் இடையிலே எழுதிச் செருகியதாகவும் இருக்கலாம்.
6. இக்கேள்வியைக் கேட்டதால், நீ ஆணாதிக்கவாதி - உன் மனைவியைக் காலைச்சாப்பாட்டுக்கு முன்னால் இரண்டு தரமும் மாலைச்சாப்பாடுக்குப்பின்னால், நான்கு தரமும் கன்னத்தைப் பொத்தி அறைகின்றவன்
[இவ்விடுகையைக்கூட, ஓர் ஆணாதிக்கத்திசைதிருப்பலாகவோ கலைந்துளறும் கருத்துகளாகவோ எவரும் எடுத்துக்கொண்டு போகலாம். அதைப் பற்றி "நீ ஆண் - நான் பெண்" என்ற "ஆயுதமற்ற நீ - கேடயத்துடன் நான்" என்பதற்கு மேலே ஒழுங்கான வாதமென்று எதுவுமில்லையென்றால், எனக்கும் சொல்ல எதுவுமில்லை.
ஆனால், இங்கே தூக்கிப்பிடித்த எத்தனை பேர் இங்கே தூக்கியடிக்கிறார்கள் என்று ஒரு கணக்கை மட்டும் வைத்துக்கொள்வேன் :-)]
[நன்றி: அடியாள் (I mean, அடியான், What I mean is, அடியார்) இரவுக்கழுகுக்கு, என் வலைப்போதிக்கும் பூரணநிலவுக்குமாய்] :-)
Tuesday, May 01, 2007
Subscribe to:
Posts (Atom)