Tuesday, July 25, 2006

கணம் - 484



தான் தோன்றி
நெடுக்கப் போடுகிறேன் கிடைக்கோடு
குறுக்காய்
செங்குத்தி உன் நிலைக்கோடு
அடி இரண்டு பக்கம் நகர்ந்து
போடுகிறேன் இன்னோர் நெடுங்கிடை
உயர்ந்து நிலை இரண்டடியாய்
கிளைக்கிறது உன் குறுக்குநிலை.
அடுத்து எழுந்து உயர்ந்து நான்
அடி போடும் கோடு,
எனக்குக் குறுக்கு, உனக்கு இணை
என்ற பின்னால், சடக்கென
எதுக்குச் சரிகிறது கிடையில்
உன் நெடுக்கு?

'06 ஜூலை 25 செவ். 09:44 கிநிநே.

6 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

son paints
based on that dad writes a poem
what a combination.

இளங்கோ-டிசே said...

புதிதாய் -பரணிலிருந்து தூசு தட்டாது- ஒரு கவிதை :-).
.....
90 டிகிரியைவிட 180 டிகிரி பெரிதல்லவா? அதனாற்றான் கிடையில் சரிகிறதாம் நெடுக்கு :-)

SnackDragon said...

குழந்தை சுவற்றில் கோடு போட்டால் அதற்காக வருந்தி கவிதை எழுதாமல் நாமும் பக்கத்திலே இன்னொரு பெரிய கோடு போட்டால் குழந்தை செய்தது பிரச்சினையாகவே தெரியாது என்பதுதான் இங்கே கவிதை சொல்லவந்த கருத்து ;)

-/பெயரிலி. said...

ரவி ஸ்ரீனிவாஸ், மகன் தூரிகை எடுப்பதும் நல்ல யோசனைதான். அடுத்த முறைக்குப் பயன்படுத்திக்கொள்கிறேன் ;-)

டிஜே, 90 டிகிரியிலே இங்கே இரண்டு கிழமைகளாகப் படுவதைப் பார்த்தால், 180 என்ன 100 டிகிரியே வேண்டாம் ராசா

கார்த்திக் ராமாசு, நீர் போட்டிருப்பது இரண்டையும்விடப் பெரிய கோடு.. சேச்சே ரோடு ;-))

arulselvan said...

அரூப ஆட்டம் மட்டும்தானா, பொருளோடு கிறுக்குதலும் உண்டா :-)
அருள்

Thangamani said...

கவிதை எனக்குப் புரியவில்லை; நல்லவேளை கார்த்திக்கின் பொழிப்புரை இருந்தது. :)

ரவி சொல்வதும் கவனிக்கத்தக்கது.