
'03 ஜூன், 12 fotolog படப்பதிவிலிருந்து
சந்திப்பு செல்வப்பெருமாள் இலங்கைப்பிரச்சனை பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அநாநிகள் பலர் பேசியபின்னால், மேலுமோர் அநாநியாகப் பதில் சொன்னதால், பெருங்காயடப்பாவை திறந்திருக்கின்றார். இன்றைய நாள்வரைக்கும் கம்யூனிசம் இந்திய கம்யூனிசக்காரரின் தனிச்சொத்துடமை என்பது தெரியாமலிருந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அவருக்கு பதில் ஓரிரு நாட்களிலே தந்துவிடுவேன் என்பதைச் சொல்லவே இந்தப்பதிவு. (அவருக்கு இட்டபின்னூட்டம் நாள் அரை ஆகியும் வெளிவரவில்லை என்பதாலேயே இங்கே இதைச் சுட்ட வேண்டியதாக இருக்கிறது) .
No comments:
Post a Comment