"உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி!" என்ற லீனா மணிமேகலையைத் தவிர்த்து வேறெவருக்குமே உளநோவினைத் தரமுடியாத தலைப்பிலே கனவுப்புரட்சிக்கவிப்பதிவினைத் தந்திருக்கின்றார் தமிழிலே சிபிஎம் கட்சியை வளர்க்கும் டோலர் டோலாக்கு.
இதே பாடலை, திபெத்திய, இலங்கைத்தமிழ்ப்பெண்ணொருத்தி பாடியிருந்தால், சிபிஎம் நிறைவேற்றுக்குழு கூட்டம் போட்டு "புலி த்ரஸ்தவாதி கண்டாயம + தலாய்லாமா சி ஐ ஏ ஏஜண்ட் & சைனா ஹென் ஹௌ + ஸ்ரீலங்கா பகூத் அச்சா!" என்றிருக்கும்; சென்னை சிபிஎம் ஆங்கிலப்பத்திரிகை நடத்தும் இரண்டாம் ஸ்ரீலங்காவின் தூதரகத்திலிருந்து, அச்சுப்பிச்சுன்னு ஐகிளாசு ஆங்கிலத்திலே அவா-ரியிருந்திப்பா.
அடுத்தவள் வார்த்தைகளாலேயே உங்கள் உலைக்குத் தீமூட்டி செம்புரட்சி வளர்க்கும் டோலக்குகள் நீங்கள்.
சொந்தக்கட்சி சார்பாக ஸ்ரீலங்கா அரசு இலங்கைத்தமிழரைக் கொல்வதற்குத் தாளம் நேரடியாகவோ பின்பெஞ்சிலிருந்தோ தட்டின டோலர்க்கு சபாக்களெல்லாம் உலகப்புரட்சி பற்றி, உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி பாடப்போற்றுதாம்; "போற்றிப் பாடடி பெண்ணே! விண்ணர் டோலக்குகள் புரட்சி முன்னே!"
உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஊரான் பாடல் உங்களுக்குச் சொந்தக்கருத்தெடுத்து நிலைப்பாட்டிலே நிற்க அங்குசம் துருத்தி முனைக்காதவரைக்கும் நோகாத உலகின் மிக அழகிய பெண்களின் பின்னாலே நின்று புரட்சிப்பாட்டுக்குத் தாளம் புடுங்குவதுதான்; நீங்கள் திட்டும் உலக காப்பரேட்டுகளும் உலகின் மிக அழகிய பெண்மாடல்களின் பின்னாலே நின்றுதான் விளம்பரம் ஆண்டுக்கொருமுறையேனும் பண்ணுமென்பதையும் டோலர்க்குகளின் மார்க்ஷிட் சந்நிதானத்திலே ஞாபகப்படுத்துகிறேன்.
கடைசியாக இப்பதிவிலே காரணம் கேட்டு ஆண்டொன்று போனதால், மீண்டும் என் முயற்சியில் மனந்தளராமல் தோளிலே டோலாக்கு புரட்சிமா உம்மை எடுத்துப் போட்டுக்கொண்டு கேட்கிறேன். இம்முறையேனும் கிள்ளி வாயிலே போட்டு மென்றுவிடமுடியாத நேர்மையான புரட்சிக்கொழுந்தென்றால் தப்பித்தோ தவிர்த்தோ நழுவியோ வழுவியோ ஓடாமல் பதிலைச் சொல்லும்.
"சருகூரும் சிபிஎம் வேதாளமே!
1.சிபிஎம் கட்சி ராஜபக்ச அரசு கண்மூடித்தனமான தமிழர்கள் கொலைக்காக உலக நீதிமன்றத்திலே நிறுத்தப்படவேண்டுமென்பதைப் பற்றி என்ன கருத்தினைக் கொண்டிருக்கின்றது?
2. சிபிஎம் கட்சியின் அங்கத்தவர் நரசிம்மன் ராம் முழுதாக ஸ்ரீலங்கா அரசினை ஆதரிக்கும்விதத்திலே நடந்துகொள்வது பற்றி சிபிஎம் கட்சியின் தமிழ் பேசத்தெரிந்த டோலர்க்குகளின் கருத்து என்ன? கட்சியின் நிலைப்பாடு என்ன? (தனிப்பட்ட பெண்தொடர்பு என்று மத்தியகுழு உறுப்பினரை ஆற்றிலே தற்கொலை செய்யத் தள்ளிய நிறைவேற்றுக்குழு, தான் தோன்றித்தனமாக கட்சிக்கொள்கைக்கு அப்பால் இயங்கக்கூடாதென்று சீனாக்காரர்களை விசாரிப்பதில்லையா? அல்லது, கட்சியின் கொள்கையைத்தான் சீனாக்காரர்கள் பதிக்கின்றார்களா?
3. தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா அரச எந்திரங்களாலே கொல்லப்படுவதையும் வதைபடுவதையும் பற்றி சிபிஎம் தமிழ் பேசத்தெரிந்த சாதா டோலர்க்குகளின் கருத்தென்ன? கட்சி இது தொடர்பாக ஸ்ரீலங்கா அரசினை எப்படியாகப் பார்க்கின்றது? இந்திய அரசு என்ன செய்யவேண்டுமென்று எண்ணுகின்றது?
4. கட்சியின் மத்தியகுழுவின் பிருஷ்டத்தைக் கழுவித்தழுவிக் கேட்காமல், என்றைக்காவது தமிழ் டோலர்க்குகள் மார்க்சிற் கக்கூஸுக்குக் கள்ளமாகவேனும் போயிருக்கின்றீர்களா?"
அடச்சே! கட்சி சார்பாக ஒரு பருப்பையும் உரித்து வறுக்கவேண்டாம். சாதாரண சக பதிவராகவாவது சுத்தியலையும் சம்மட்டியையும் ஓரமாக வைத்துவிட்டு உம் சொந்தப்புரட்சிவிரல்களை உமது சொந்தக்கணணியிலே சொந்தமாகத் தட்டி சொந்தச்சிந்தனையிலே (இதுக்கெல்லாம் சிந்தனை, சித்தாந்தம் எந்தக்கருமாதியுமே வேணாம்; சும்மா தோன்றியதையே சொல்லித் தொலைக்கலாம்) சொந்தப்பதிலைச் சொல்லலாமே, புரட்சிநுங்கே!
# இதிலே பெரும்பகுதி அவரின் இடுகையிலும் பின்னூட்டமாகப் போடப்பட்டிருக்கின்றது; முன்னார் மாட்டுக்கருத்துகளுக்கு மதிப்பளித்து அனுமதிக்கமாட்டார். பின்னால், இதெல்லாம் என் பதிவிலும் வருமென்று ஒரு கருத்தோடு போட்டால், அனுமதிப்பார்; ஆனால், வழக்கம்போல, எப்பதிலுமிராது; அடுத்த கொட்டைப்பாக்குக்கு வெத்திலை மென்று இரத்தச்சிவப்பாகத் துப்பும் திண்ணைச்சிப்பாய்ப்புரட்சிப்பதிவுக்குப் போய்விடுவார். இம்முறையும் அதுவே நடக்கலாம்.