பரிக்ஷித்துக்குப் பழத்துள்ளே வந்துபின்
என் நினைப்புள்ளே நெளிகிறது
~~
முறிந்து கிடக்கிற வானவில்மேலாய்
நடந்து போகிறவன் பாதம்
நோகக் குத்தும் மேகம்.
~~
ஆண்டுக்கொரு முறை அயர் உரித்துப்
பார்க்கவும் நீங்காது கிடக்கிறது
ஓரிரு பழநேரம்.
~~
---> வந்த தடங்களை மூடத் திரும்பிச்
செல்ல வந்த தடங்களை மூடத்
திரும்பிச் செல்ல வந்த தடங்களை
மூடத் திரும்பிச் செல்ல வந்த
தடங்களை மூடத் திரும்பிச் செல்ல --->
~~
வட்டத்தைக் கீறினோம்; அதைத் தொடச்
சிறு உள்வட்டங்கள் கீறினோம்; உள்
விட்டங்கள் நிரப்ப, சின்னஞ்சிறு ஆழ்
வட்டங்கள் கீறினோம்; ஆழ்வட்டங்களை
நிரப்பிக் குவிக்கும் நுண்வட்டப்புள்ளி
ஒன்று நான்; மற்றவை மற்றோரெல்லாம்.
'06 ஜூலை 25 செவ். 11:26 கிநிநே.
கணம்~