Friday, January 28, 2005

புனைவு

கழியும் பழையது
நகுலேஸ்வரதாஸ்

நகுலேஸ்வரதாஸ் செத்துப்போனது துக்கமாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் பனிகொட்டும் அதிகாலையிலே ஓர் ஒற்றைவடச்சங்கிலியைத் திருட்டுக்கொடுக்க மறுத்துக் கத்தியாற் குத்தப்பட்டுச் செத்துப்போனான் என்று கோபால் சொன்னான். கனடாவிலே பனிபெய்யும் காலைவேளை வேலைக்குப் போகும்போது அகாலமாய் இறந்துபோகின்ற குடியேறிகளைப் பற்றிக் கேள்வியுறுவது எனக்கு இதுதான் முதற்றடவை இல்லை என்றாலும், ‘மச்சானின் மச்சாளுக்குத் தெரிந்த பெடியன் பெடிச்சி’ என்றில்லாமல் எனக்கு முகம் தெரிந்த ஒருவன் மரணித்துப்போனது இதுதான் முதல். எனக்குத் தெரிந்தவன் என்பது தெரிந்திருந்தால் கோபால் சொல்லியிருக்கமாட்டான் - ஏதோ நான்தான் இந்தத்துர்ச்சாவுக்குக் காரணம் என்பதுபோல என்னை எண்ணத்திலே வதக்கிக்கொண்டிருப்பேன் என்று அவனுக்குத் தெரியும்; அவன் ஏதோ எதேச்சையாகச் சொல்லப்போய்த்தான், இடது மணிக்கட்டுக்குக்கீழே அவயம் இல்லையென்ற ஆளடையாளம் தவறிவிழுந்து எனக்கு மிகுதிச்செய்தி விரிக்கப்படவேண்டி வந்தது.

No comments: