பழையன கழிதல்
நானூற்றைம்பது தொட்டிக்குப்பைகளையும் கிடங்கு கிண்டிக் கவிழ்த்துக்கொட்டி, நிலநிரப்பி (Landfill) எழுப்பி மூடியிருக்கின்றேன். சென்றாண்டுடனேயே செய்துமுடித்துப் புதியன புக எண்ணியிருந்ததும் காலத்துடன் நான் கூடிவரமுடியாதுபோய்விட்டது. கணத்திலே இடப்பட்ட நான் எழுதிய எல்லாவற்றையும் வெறும் வலையடக்கம் என்ற பெயரிலே குப்பை என்று சொல்ல வேண்டுமா என்ற உணர்வும் எழாமலில்லை. தன்னடக்கத்துக்கும் தற்பெருமைக்குமிடையேயான சரியான மயிரிழை பிரித்துச் சொல்லுவது ஒவ்வொருவனும் தன்னைப் பற்றித்தான் எந்தளவு சரியாக எடைபோட்டு வைத்திருக்கின்றான் என்பதைப் பொறுத்ததென்பது என் துணிபு. அந்தளவிலே இங்கே உள்ளவற்றிலே தேறக்கூடியவையும் உள்ளன என்றறிவேன். எனக்குத் தேறவே தேறாதென்று அன்றைக்கும் இன்றைக்கும் உணர்ந்தவற்றிலே உள்ளவற்றையும் அவற்றின் பிள்ளைக்கணக்கும் காலப்படிமுறைமாற்றக்காட்டித்தன்மையும் எண்ணி அகற்றவில்லை. ஆனாலும், எந்நிலையிலும் எண்ணிக்கையைக் கணக்கு வைத்து இலக்கடிக்கடித்தவை அல்லன எவையும். வாசிப்பாருக்குப் பொருந்தா வடிவுற்ற காலத்தாலே புரியாதுபோகின்றவையும் நிறையன உள. அது வாசிப்பார் தவறல்ல; வடித்தானதுங்கூட அல்ல. இந்தக்கணத்திலே, எண்பதுகளின் பின்னரையிலும் தொண்ணூறின் முன்னரையிலும் நான் எழுதி, சந்தர்ப்பவசமாக மழைக்காலக்கறையான்களுக்கு நண்பன் உணவளித்த கிறுக்கல்களையும் எண்ணிக்கொள்கிறேன்.
இனி, புதியன மெல்லப் புகும்.

1 comment:
இதுவரை எழுதியுள்ளதை இனிமேல்தான் வாசிப்பேன் என்றாலுங்கூட புதியன புகு(த்)தல்
மிக சந்தோடம் வரவழைக்கிறதாம். எழுதுக! எழுதுக! தயவு செய்து எழுதுக
Post a Comment