நாலு நண்பர்கள், ஓர் அறை, அதிலே நாயகர்களைத் தாங்கிப்பிடிக்கும் வயதான பாத்திரம், திரைப்படக்கனவு, ஒரு நாயகி, வில்லனில்லாத ஆனால், நாயகியைக் கல்யாணம் பண்ண வரும் பக்கநாயகன். போன இருபது ஆண்டுகள் தமிழ்ப்படம் பார்த்த அனுபவத்திலே மீதியை நீங்களே கற்பனை செய்துகொள்க. தயாரிப்பாளரும் பக்கநாயகனுமான பிரகாஷ்ராஜ் தனியே தெரிகிறார். பௌதீகவிதிகளுக்குப் பயங்காட்டும் சண்டைக்காட்சி (நகைச்சுவையான ஒருநிமிடம் தவிர்த்து) ஏதுமில்லாதது ஆறுதல். என்னை மாதிரி இது பார்க்க முன்னாலோ, பின்னாலோ "கண்களாலே கைது செய்" பார்த்திருந்தீர்களானால், இது மிகவும் நல்ல படமாகத் தெரியும். எப்போதுதான் நட்பு, காதல், பாடல் விட்டு நல்லபாம்புப்படம் எடுக்கப்போகிறார்களோ?!
No comments:
Post a Comment