1975-1980 காலகட்டத்திலே திருகோணமலையின் திருமுருகானந்த சங்க வாசிகசாலையிலே எடுக்கப்பட்ட இந்தியச்சஞ்சிகைகளிலே அகலமாகத் தமிழிலே வந்தவை, தினமணிகதிர் (சுருங்கமுன்னால்), அலிபாபா, ராணி, பொம்மை (மங்கையர்மலர் அந்த அளவிலேதான் வந்ததா என்ற ஞாபகமில்லை). ஆங்கிலத்திலே The Illustrated Weekly, Filmfare, Sportstar. ஆங்கிலத்திலே வந்தவற்றை வாசிக்குமளவுக்கு ஆங்கிலமோ ஆர்வமோ இருந்ததில்லை. ஆனால், சும்மா படங்களைப் புரட்டி, The Illustrated Weekly இலே ஆர். கே. லக்ஷ்மணின் கேலிச்சித்திரங்களைப் பார்த்துவிட்டுப்போவேன்.
ஆனால், குஷ்வந்த் சிங்கின் முகம் அவர் ஆசிரியராகவிருந்தபோது, கேலிச்சித்திரமான படத்தோடு பத்தியிருந்தாகவிருக்கும். நடிகை மே வெஸ்ற் இறந்த சமயம், காந்தி கொல்லப்பட்ட சமயம் தான் மே வெஸ்றின் நாடகத்தை இலண்டனிலே பார்த்துக்கொண்டிருந்த சம்பவத்தைக் குறித்தெழுதியது ஞாபகமிருக்கின்றது அவருடைய ஓரிரு சிறுகதைகளைப் பின்னாலே வாசித்திருக்கின்றேன். ஆனால், அவருடைய பேசப்பட்ட நூல்களை வாசித்ததில்லை. அவருடைய நிறங்கொண்ட வாழ்க்கைக்குறிப்புகளை ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். ஆனால், கேலிச்சித்திரமாகக் கண்ட அவரின் படம் எப்போதுமே அவரினை ஏனோ வெறுமனே நகைச்சுவை நடிகரைப் போன்ற பிம்பத்தினையே இன்றும் என்னுள்ளே பதியவைத்திருக்கின்றது.
Thank God he's dead, the son of a gun!
Source: Khushwant Singh's Journalism |
Thank God he's dead, the son of a gun!
No comments:
Post a Comment