சங்கே முழங்கு!
இலங்கையிலும்
சரி, தமிழ்நாட்டிலுஞ் சரி, தென்கிழக்காசியாவிலுஞ் சரி, பெயர்ந்த
புலத்திலுஞ்சரி, தமிழ்த்தேசியம் என்பது, தமிழ்ப்பேசும்மக்கள் நலனை
மொழிபேசுவதாலான ஒடுக்குமுறையாகமட்டுமே பாராது, தனக்குள்ளிருக்கும்
உட்பிரச்சனைகளையும் வெளியாகப் பேசி, தனது |சரியான| நிலைப்பாட்டினை உறுதியாக
வெளிப்படுத்தாதவரைக்கும் தமிழ்த்தேசியத்தை தொழிலாளர், சாதிய, பெண், மத,
பிற இன ஒடுக்குமுறைகளுக்குத் துணை போகின்றதாகமட்டுமே வெளியிட்டுக்கொண்டு
கம்யூனிச, தலித்திய, பெண்ணிய, பெருந்தேசிய அரசியல் செய்யும்
விற்பனையாளர்களை வெல்லுதல் சாத்தியமில்லை.
தமிழ்த்தேசியம் என்பது
எவ்வொடுக்குமுறைக்கும் முற்றாக எதிரானதென்பதைத் தேசியத்தினை முன்வைக்கும்
அதேசமயத்திலேயே ஆணித்தரமாகச் சொல்லிவைக்கவேண்டும். தமிழ்த்தேசியம்
பொதுவுடமையின் கூறுகளைக் கொண்டிருக்கலாம் என்பதும் சாதி, பெண், பிற இன
ஒடுக்குமுறைகளுக்கு முற்றாகவே எதிரானதாகவே இருக்கமுடியும் என்பதும்
தமிழ்த்தேசியம் பேசும் ஆரம்பப்புள்ளிகளிலேயே வரையறுத்து, அதன்
அடிப்படையலகுவிதிகளாக எழுதப்படவேண்டும்.
தற்காலிக
அரசியற்கூட்டுகளுக்கும் ஆதாயங்களுக்கும் அப்பாலான தொலைநோக்குப்பார்வை
தீர்க்கமாகவிருக்கவேண்டும். அறுத்துறுத்துச்சொல்லப்படவேண்டும். இதுவொன்றே,
கம்யூனிச, தலித்திய, பெண்ணிய, பெருந்தேசிய அரசியல்
அரிதாரப்பூச்சாளர்களையும் கழுதைப்புலிகளையும் மேடையிலும் சந்தையிலுமிருந்து
முற்றாக அப்புறப்படுத்தும்
No comments:
Post a Comment