Showing posts with label unbearable rants on tamil blogdom. Show all posts
Showing posts with label unbearable rants on tamil blogdom. Show all posts

Monday, December 24, 2007

The Butter Battle Blog: Now and here on whatever to whoever

இரவிசங்கரின் இடுகைகளின் பெரும்பான்மையான குதர்க்கவாதத்துக்குப் பின்னூட்டமோ பதில் இடுகையோ இட விரும்பாததற்கான முதன்மைக்காரணம், சுந்தரமூர்த்தி, சங்கரபாண்டி, செல்வராஜ், தமிழ்சசி போல தலையிலே சம்மட்டியாலே அடித்தாலும் தாங்கிக்கொண்டு நிதானமாகப் பேசும் தன்மை எனக்கு இல்லை என்பதே; துணைக்காரணமாக, தொழில்நுட்பம் சார்ந்து பேசுமளவுக்கு எனக்குப் புரிதல் போதாது என்பதைக் கொள்ளலாம். ஆனால், தமிழ்மணம் தொடர்பான இரவிசங்கரின் தொடர்ச்சியான ஒரு குற்றச்சாட்டிலேயிருக்கும் பொய்யினை எடுத்துச்சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு.

தமிழ்மணம் தனக்குப் பதிலே தருவதில்லையென்பதாகச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றார்; பகிரங்கமாகப் பதிவும் இடுகின்றார். இவை குறித்த தமிழ்மணத்துக்கான இவரது அஞ்சல்களும் தமிழ்மணம் தொழில்நுட்பக்குழுவுக்கும் முறையீட்டுப்பிரிவுக்குமான அஞ்சல்களுக்கான அவர்களது பதில்களும் சேமிப்பிலேயிருக்கின்றன. தமிழ்மணத்தின் நெறிக்கோவை காரணமாக இவற்றினை வெளியிலே ஆதாரமாக இட முடியாமலிருக்கின்றது. ஆனால், கருத்தளவிலே இவரின் மேலோட்டமான பொதுமைப்படுத்தும் குற்றச்சாட்டிற்கான பதிலினைத் தரவேண்டியிருக்கின்றது.

முதலிலே அவரின் அண்மைய அஞ்சல்களைப் பற்றிய சாரம்; நவம்பர் 24 இலிருந்து டிசம்பர் 16 வரை ஐநது அஞ்சல்கள் தமிழ்மணம்-முறையீட்டுக்கு அனுப்பியிருக்கின்றார். முதலாவது, அவருடைய வேர்ட்பிரஸிலான விமர்சனம் பதிவினைச் சேர்க்கமுடியவில்லை என்று கூறியிருக்கின்றார். வேர்ட்பிரஸ்.கொம்மிற்கும் தமிழ்மணம் தளத்திற்குமான ஊடல்நிலையை சாதாரண இணையப்பதிவர்களே அறிந்துகொண்டுள்ளபோது, இது பற்றி முன்னமே அறிந்துள்ள தமிழ்த்தொழில்நுட்பம் தெரிந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் இவர் புரிந்துகொள்ளாமலிருக்க நியாயமில்லை. வேர்ட்பிரஸ்.கொம் உடனான தமிழ்மணத்தின் ஒவ்வாமை பற்றி ஏற்கனவே ஜுலையிலே இன்னொரு இவரின் தொடர்ச்சி அஞ்சலுக்கான -பதிவரின் படத்தினைச் சேர்த்தல் தொடர்பான- தொடர்ச்சியான பதில்களிலே குறிப்பிட்டிருப்பதாக ஞாபகம். இப்போது தன்னஞ்சலுக்கு உடனடியே பதில் போடவில்லை என்று அவருக்கு வருத்தம்.

அடுத்த அஞ்சல் தமிழ்மணத்திலே தோன்றும் ஒரு வழுவினைக் குறித்து -தோன்றிய வழு பற்றிய விபரவரிகளை- அறியத் தரும் அஞ்சல். இதற்கு நன்றி என்று ஒரு பதில் போட்டிருக்கவேண்டுமென்று எதிர்பார்த்தாரோ தெரியவில்லை.

மூன்றாவது, தன் படத்தினை பதிவிலே மாற்றுதல் குறித்த அஞ்சல்; ஐந்தாவது டிசம்பர் 16 இன் அஞ்சலும் இதே படம் குறித்த அஞ்சலே - "எத்தனையோ தடவைகள் கேட்டுவிட்டேன்" என்பதைக் குறைசொல்லிச் சுட்டி. இதற்குப் பதில் அளிப்பதிலே எவ்விதமான வருத்தமுமிருந்திருக்காது. ஆனால், போன மே, ஜூன், ஜூலையிலே இதே மாதிரியாக படத்தினைச் சேர்ப்பது விலக்குவது குறித்து தன்னிடம் சேவியர் கேட்டார் என்று சொல்லி இவர் அனுப்பிய அஞ்சலுக்குத் தொழில்நுட்பக்குழு தமிழ்மணம் நிரலிலே எங்கே படம் குறித்து எழுதப்பட்டிருக்கிறதோ அங்கே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமென்று சொன்னதை அவருக்கு அனுப்பியிருக்கிறோம். அவர் நன்றி சொல்லிவிட்டு, வேர்ட்ப்ரஸ்.கொம்மிலே ஏன் தொழில் புரியாது என்று கேட்டிருந்தார். வேர்ட்ப்ரஸ்.கொம்மிற்கு தமிழ்மணத்துக்கும் தற்போது சில ஒவ்வாமை. தமிழ்மணத்தின் அடுத்த பதிப்பிலே இது கண்டுகொள்ளப்படலாம். ஒரே மாதிரியான கேள்வியினை இவ்வளவு விபரம் தெரிந்தவராகக் காட்டிக்கொள்கிறவர், திரும்ப ஐந்து மாதங்களிலே கேட்கிறார். திரும்பவும் அதே பதிலினைத்தான் இதே விதண்டாவாதமான கேள்விக்குக் கொடுக்கலாம்: "தமிழ்மணம் நிரலிலே பார்த்து படத்தினை மாற்றவும் & வேர்ட்ப்ரஸ்.கொம் என்றால் சில சிக்கல்கள் உண்டு."

அவரது நான்காவது அஞ்சல், 2000 ஓடைகளைத் திறந்து விடும்படியாக; (அதற்கு கணிமை, மாற்று எல்லாம் ஆதாரம் காட்டுவார். எல்லாவற்றுக்கும் "தனது" தமிழ்விக்கிபீடியா, கணிமை, மாற்று, வேர்ட்ப்ரஸ் இவற்றிலிருந்தே புள்ளிவிபரங்களும் வாக்கெடுப்புமுடிவுகளும் பொதுமக்கள்போராட்டக்களநிலையாகவும் வருவது சோர்வினையும் சிரிப்பினையும் தருவது ஒரு புறமிருக்கட்டும்) இதே அஞ்சலைத் தமிழ்மணம் தலைவர், தொழில்நுட்பக்குழுவுக்கும் அனுப்பியிருந்தார். தமிழ்மணம் சார்பிலே தமிழ்மணம் தலைவர் பதிலினைத் தந்திருந்தார். 2000 ஓடைகளைத் திறந்துவிடக்கேட்டதற்கும் டிசம்பர் முடிவுக்குள்ளே மாற்று இணைப்பியிலே 2000 பதிவுகளைச் சேர்க்கும் இவரது நோக்கத்துக்கும் ஏதாவது சம்பந்தமிருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை.

தமிழ்மணத்துக்கு வரும் எல்லா அஞ்சல்களுக்கும் பதிலளித்த காலம் உண்டு. ஆனால், சில அஞ்சல்கள், மீண்டும் மீண்டும் தமிழ்மணத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட பதிவுகளின் செயற்பாடுகளிலே தமிழ்மணத்தினை ஏதாவது செய்யும்படி (நீக்கும்படி) கேட்பதும் தமிழ்மணம் செயற்படுத்தற்பட்டியலிலே வழிமுறை சொல்லப்பட்டவற்றுக்கு மீண்டும் வழி சொல்லும்படி கேட்கும்போதும் எப்போதும் பதிலளிக்கமுடிவதில்லை. அப்படியான பல சந்தர்ப்பங்களிலே பதிலளிக்கும் தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையிலே இரவிசங்கர் -தனக்கான பதிலினைத் தருவதில்லை என்ற - அவரது குற்றச்சாட்டினை, குறைந்த பட்சம், மேலே சொல்ல நிலையிலும் கடந்த காலங்களிலே எத்தனை தடவைகள் அவரது அஞ்சல்களுக்குப் பதில்கள் சளைக்காது தரப்பட்டிருக்கின்றன என்பதைக் கணக்கிலெடுத்தும் பார்த்துவிட்டு எழுதியிருக்கவேண்டும் - நியாயமானவரென்றால்.

மேலும் விருதுகள் தொடர்பான தமிழ்மணம் இடுகையின் பின்னே அவர் போட்டிருக்கும் பின்னூட்டம் அப்படியே அநாமதேயமாக மோகன்தாஸின் பதிவிலே இடைச்செருகிப் போடப்பட்டிருக்கின்றதைப் பார்க்கும்போது, வெறுப்புத்தான் மிஞ்சுகிறது. இவர் தன்னை ஒரு தமிழிணைய டேவிட்டாகக் கருதிக் கொண்டு, தமிழ்மணத்தினை கோலியாத்தாக எண்ணித் தாக்குகையிலே, இவர் தாங்கிப்பிடிக்கும் கூகுல்ரீடர், வேர்ட்ப்ரஸ் போன்றவை உலகம் பரந்த பலமான நிறுவனங்களென்பதை உணரவில்லையோ?

Deletion & Addition on 3rd, Jan 2007:
அண்மையிலே வேர்ட்ப்ரஸ்.கொம்மிலே தமிழ்ப்பதிவிட்ட மூன்று நண்பர்களின் இரண்டரை ஆண்டு காலப்பதிவுகள் அப்படியே விழுங்கப்பட்டன; இதற்கான காரணம், என்ன அல்லது எவர் என்பதை இங்கே விட்டுவிடலாம். ஆனால், குறைந்தபட்சம் வேர்ட்ப்ரஸ்.கொம் அவற்றினைப் பணம் தந்து செய்து இட்டவர்கள் பாதுகாத்து மீட்டெடுக்கக்கூட உரிமை தரவில்லை.


This is from a friend commenting on wordpress.com, wordpress software. My apologies for the technical incorrectness.

When we maintain a separate website with " wordpress software" such as one your friends did, it is fully in our control. we have to take care of it. Wordpress group can't help us there. Since the person, who took care of it let it go, the mistake is squarely on individuals and not on wordpress.

At the same time when we maintain a website in "wordpress.com" as a subdomain such as www.snapjudge.wordpress.com, then wordpress will give support. Mostly in wordpress.com you wont encounter any issues.

So, there is some difference between "wordpress software" and " wordpress.com"

In any case, even in blogger we need to keep a backup of what we write...

You should have a backup of all your articles, as you have written many things over the years.


இப்படியான வேர்ட்ப்ரஸ்.கொம் இற்கு இலவசமாகத் தமிழ்ப்படுத்துவதும், மைக்ரோஸொப்ட்டுக்கு இலவசமாகத் தமிழ்ப்படுத்துவதும் கோலியாத்துகளுக்குக் குடைபிடிக்கும் செயல்களே. இவற்றினைப் போன்றவற்றினைத் தாங்கிக்கொண்டும் தங்கிக்கொண்டும், தமிழ்மணத்திலும் இருக்கும் திரட்டிகளிலும் இவர் எதற்குத் தன் மேதாவிசாலவிலாசத்தைக் காட்டுகின்றார் என்று தெரியவில்லை.

என்னைக் கேட்டால், தமிழ்மணத்திலே இணைந்திருக்கும்வேளையிலும் தம் பதிவுகளிலே வேறு திரட்டிகளுக்கு இணைப்பினைக் கொடுப்பதுபோல, தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினைக்கூடக் கொடுக்காத பதிவர்களின் பதிவுகளையும் சேர்த்துக்கொண்டு போவதுதான் தமிழ்மணத்தின் நல்ல பண்புகளிலே மிக நல்ல பண்பென்பேன் :-) ஆனால், அதற்காக, தமிழ்மணத்திலே தோன்றும் இரவிசங்கரின் மாயையை விதைக்கும் எல்லாக்கருத்துகளையும் பதிலன்றி விட்டுவிட்டுப் போகத்தேவையில்லை.

related old post