எழுபதுகளிலே விடலைப்பருவத்திலே, வானொலி, ஒலிபெருக்கி, நூல்நிலையங்கள் இவற்றூடாக வீட்டுள்ளே நுழைந்த கமலினி செல்வராஜன், நாகூர் ஹனீபா, ஜெயகாந்தன் மூவரும் அடுத்தடுத்து மறைந்திருக்கின்றார்கள். அறிந்த ஒருவர் இல்லாது போகும்போது, அவர்களை நாமறிய வந்த காலங்களும் ஞாபகத்துக்கு வந்து அக்காலகட்டங்களும் நமக்கு இல்லாதுபோன துக்கக்கனத்தை உள்ளே பொத்தென்று அழிந்ததின் சிதறு எச்சங்களாய்ப் போடுகின்றன.
இத்துக்கக்கனம் உள்ளே விழ, இவர்கள் எல்லோரினதும் எல்லாச்செயற்பாடுகள், காலத்தோடு மாறிய கருத்துகள் இவற்றோடு நாம் ஒப்புதல் கொண்டிருக்கவேண்டியதில்லை என்பது அதிசயமாகத் தெரியவில்லை; எமக்கான கணங்களில் சிலவற்றிலே இவர்களும் கூடப்பயணிகளாயிருந்திருக்கின்றார்கள் என்பதே அறுதியிலே மிஞ்சித்தொங்குகின்றது துயர் சொட்டச்சொட்ட.... நம்மை அறியாத அவர்களை நாம் அறிந்த காலத்திலே எம்மை அறிந்து எம்மோடு கூட இவர்களை அறிந்த எத்தனை பேரை, ஊரை இழந்திருக்கின்றோம் என்ற துயரும் அதற்குள்ளே காலமலைப்பாம்பாய் அயர்ந்து கிடக்கின்றது.
No comments:
Post a Comment