Sunday, July 08, 2007

விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்

மாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு.

மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்களின் பதிவுகளிலே பின்னூட்டமிடுவதை நான் விரும்பவில்லை - வேண்டுமானால், அச்செயற்பாட்டினை சித்தர் எஸ். பொ போன்று அடிக்கிறவன் காலிலேயே விழுந்து நக்கும் பேர்வழிகள் செய்துகொள்ளட்டும். நானென்ன கொம்பா என்பதல்ல காரணம். மாலனைப் போன்றவர்களின் பதிவுகளிலே பின்னூட்டமிடுவதைப் பெரிதாக எண்ணிக்கொள்ளும் அணுக்கத்தொண்டர்களின் தொலைத்தொடர்நாடகக்கண்ணீர்வடிப்புகளும் "போகாதே ராசா"க்களும் தொல்லை என்பதால். இதைப் பற்றி என் பதிவிலேயே எழுதிக்கொள்ளவே எண்ணம்.

வலைப்பதிவினை மாலனின் திசைகள் கட்டுரையைப் பார்த்துவிட்டே ஆரம்பித்தேன் என்பதைக் கூறி நன்றி தெரிவித்துவிட்டு அவரின் பதிவிலே இணையத்தமிழ் குறித்த வரலாற்றிலே இருக்கும் வழுக்களைச் சொல்லிவிடலாம். வலைப்பதிவுகள் குறித்த காலவழுக்களை மட்டும் விட்டுவிடலாம். (மாலன் திசைகளிலே ஒருவரை அந்தக்காலத்திலே வலைப்பதிவு குறித்து எழுதச்சொன்னார். பத்துப்பேர் இருபதுபேரே எழுதிக்கொண்டிருந்த காலத்திலே, சிலர் பெயரை அவர்விட்டும் சிலர் பெயரைச் சேர்த்தும் எழுதிய வலைப்பதிவுக்கட்டுரைகளையும் பார்த்துத்தானிருக்கிறோம். அது மாலனுக்கு ஆகின்றவர்கள் பெயர்களைச் சேர்க்கவேண்டுமென்பதாலே அப்படியாகவிருந்ததோ தெரியவில்லை. அப்படியான அப்பட்ட இணைய அரசி யல்வாதிக்கு, மாலன் மூன்று மாதம் வலைப்பதிவு தொடக்கியதிலே ப்ரமோசன் கொடுத்திருக்கின்றார். இந்தக்கூத்தைச் சுட்டிக்காட்ட, திசைகள். கொம்மினைத் தேடினால், அழகான பெண்கள் அவிழ்த்துப்போட்டிருக்கும் படங்களைக் காண அழைக்கின்றது. இணையத்தின் தமிழுலகிலே அரசியலும் வலைப்பின்னல்களும் அப்போதிருந்தேயிருக்கின்றன :-)

இனி மாலன் என்பவருக்கு,

1. கோவிந்தசாமிதான் முதலிலே இணையத்திலே தமிழேற்றியிருக்கின்றார் என்கின்றீர்கள். அதிலே எத்துணை உண்மையிருக்கின்றது? கணியன் இதழ் தமிழ்நெட் எழுத்துருவிலே தொடங்கமுன்னரே, மயிலையிலே இணையத்திலே வலைப்பக்கங்கள் இருந்தன கோவிந்தசாமிகூட, மயிலையின் வலைப்பக்க இருப்பினை ஒத்துக்கொண்டதாகவே அவரின் சிங்கப்பூர் மகாநாட்டுக்கட்டுரை சொல்கிறது கணியன் இதழ் வரத்தொடங்கியது இவற்றுக்குப் பின்னரேதான். கணியன் தொடங்கியதுமுதல் மடிந்தது வரை அத்தனை இதழ்ச்"செய்திகளை"யும் வாசித்திருக்கின்றேன் என்றளவிலே என் ஞாபகத்தினை நம்பிக்கையாக்கிச் சொல்வேன்.

2. ஆரம்பத்திலே தமிழினை இணையத்துக்கும் கணணிக்கும் கொண்டுவந்தவர்களிடையே ஏதோ அன்பும் பண்பும் பெருகியதான தோற்றத்தை இவரின் கட்டுரை ஏற்படுத்தியிருப்பதாக, அங்கே தோன்ன்றிய பின்னூட்டங்கள் சொல்கின்றன. நா. கோவிந்தசாமியின் தமிழ்வெப் மின்னஞ்சற்குழுவிலே முரசு-அஞ்சல் எழுத்துருவிலே ஓர் அஞ்சலை அனுப்பியதற்குக் கிடைத்த எதிர்வினை அனுப்பியவர்களுக்குத்தான் தெரியும். எதற்காக, அப்போதிருந்த அரசியல் போட்டி பொறாமைகளை மறைக்கவேண்டும்? குத்துவெட்டுகளை எதற்கு மறைக்கவேண்டும்? ஏதோ அன்புச்சகோதரர்கள் பாசம் பொங்கியதாக உங்கள் பதிவினை உணர்ந்துகொண்டு பின்னூட்டமிட்டவர்கள் நாளைக்கு உங்களை மேற்கோள் காட்டி எழுதப்போகும் இணைய வரலாற்றினை நாம் அறிவோம். சுதேசமித்திரனிலேதான் தமிழ்ப்பத்திரிகைப்பாரம்பரியமே எமக்கு ஆரம்பிக்கிறதே? (ரா. அ. பத்மநாபன்கூட அப்படி எழுதியிருக்கின்றாரா என்று சரி பார்த்துக்கொண்டால், நல்லது). பிரபலம் எதைச் சொன்னாலும், கண்ணை மூடிக்கொண்டு, அவரின் பதிவிலே பின்னூட்டமிட்டதையே resume இலே சேர்த்துக்கொள்கின்றவர்கள்தான் அதிகம்.

3. நீங்கள் எப்போது உத்தமத்திலே சேர்ந்துகொண்டீர்கள் என்பதையேனும் காலவரையறைப்படி சரியாக நீங்கள் சுட்டிக்காட்டவில்லை. உத்தமம் வருவதற்கு முன்னாலே அதற்கு முன்னான ஆரம்பக்குழுக்களும் வெப்மாஸ்ரர் மின்னஞ்சற்பட்டியல்விவாதங்களிலும் நீங்களிருந்தீர்களா? நீங்கள் சேர்ந்து கொண்டது மிக மிகப் பின்னான காலகட்டத்திலே. அனைத்தும் நடந்து முடிந்து உத்தமம் (அது இப்போது எத்துணை உயிப்போடு செயற்படுகின்றதென்பதைக்கூட விட்டுவிடலாம்). தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பத்திலிருந்தே செயலாற்றியவர் லிப்கோ வெங்கடரங்கன் என்றே சொல்லலாம். (நிச்சயமாக சென்னையிலே இரவோடிரவாக இரு குறிகள் தரப்படுத்தப்பட்ட அரசியலோடு தமிழ்க்கணிச்சங்கமும் சேர்ந்துகொண்டது)

4. கணிச்சொற்கள் குறித்தும் அதன் பங்களிப்பினைக் குறித்தும் நீங்கள் எழுதியிருப்பது. நீங்கள் மைக்ரோஃஸொப்ட்(டினைப்) பற்றிய பின்னாலேதான் இம்முயற்சியிலே மைக்ரோஃஸொப்டின் ஒருகூற்றினைத் தமிழ்ப்படுத்தும் நோக்குடன் இறங்கியபோது (இதைக்கூட தன்னார்வத்தொண்டெனச் சொல்லிவிடமுடியுமாவெனத் தெரியவில்லை; அதையும் நீங்கள் தெளிவுபடுத்தியிருக்கலாம்), அதன் காரணமாகத்தான் என்றே சொல்வேன். அதற்கான உங்கள் பக்கத்தினை ஆதாரத்துக்குத் தேடுகிறேன். இப்போது அகப்படவில்லை. ஆனால், அதற்கு முன்னரே கணிச்சொற்கள் தோற்றுவது ஆறேழாண்டுகளாக நடந்துகொண்டேதானிருந்தன (1 எதிர் 2). 1997 இலேயே ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கணையாழியிலே கணிச்சொற்கள் "தயாரிப்பதைக்" குடிசைக்கைத்தொழிலென்று எழுதிவிட்டுப்போய்விட்டார். நீங்கள் உத்தமத்திலே சேர்வதற்கு முன்னாலேயே அக்கூட்டிலே தமிழ்க்கலை/தொழில்நுட்பச்சொற்களைக் கவனித்துக்கொள்வதற்காக, மணி. மு. மணிவண்ணன் தலைமையிலே ஒரு குழுவினை வைத்திருந்தார்களே? இராம. கி போன்றவர்கள்கூட அப்படியான குழுக்களுக்கு வெளியேயிருந்து உதவும் யாஹூ குழுக்களிலே கருத்தினைச் சொன்னார்களே? இப்போதும் tscii குழுக்களைத் தேடுங்கள்; கிட்டும்.

5. தொலைபேசியிலே பேசும்போது, தவறுதலாக, டாக்டர் விழுந்துவிட்டதானால், அதைச் சுட்டியது என் தவறுதான். நானும் தொலைக்காட்சியினைப் பார்த்துக்கொண்டு எழுதுகையிலே தவறுதலாகச் சுட்டிவிட்டேன்

6. தமிழ்மணம் தொழில்நுட்பத்தினை முன்வைத்துக்கொண்டு, நெறியினை வலியுறுத்தவில்லை என்பதான ஒரு கருத்தும் விழுந்திருக்கின்றது. அப்போது தமிழ்மணத்தினை நடத்திய காசிதான் அது உண்மையா என்று சொல்லவேண்டும். காசி அப்போது, சில பதிவுகளை நீக்கியும் பின்னூட்டங்களை மட்டுறுத்தியதுக்குமாக எத்துணை ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தனவென்று பார்த்திருக்கின்றேன்.

கல்யாணசுந்தரம், முத்து நெடுமாறன், (வலையிடம் தந்த புரவலராய்) பாலா பிள்ளை தொடக்கம் டி. சிவராஜ், குமார் மல்லிகார்ஜுன், (நா. கண்ணனைவிட்டால் கோபித்துக்கொள்வார்.... ஜோர்ஜ் ஹார்டா தானா முதலிலே மக்கிலே தமிழ் எழுத்தினைப் போட்டதென அவரே ஒரு முடிவைச் சொல்லவேண்டும் :-)) பாலா பிள்ளையின் பிற்கால ஈ-எறும்புகள் யாஹூ குழுமத்திலேயிருந்து செயற்பட்ட முகுந்த்ராஜ், மா. சிவக்குமார் - லீனிக்ஸின் ஒரு தமிழ்ப்படுத்துதிட்டம், வெங்கட்ரமணன் - லீனிக்ஸின் இன்னொரு தமிழ்ப்படுத்துதிட்டம் போன்றோர் ஏதோ வகையிலே தமிழ் இணையத்துக்குத் தங்கள் பங்களிப்பினைத் தந்திருக்கின்றார்கள். இவற்றினையெல்லாம் வெறும் பார்வையாளர்களாகவும் பயனாளிகளாகவும் மட்டுமேயிருந்து எம்மைப் போன்ற பலர் கண்டிருக்கின்றோம். அவ்வகையிலே, பதிவுக்கேற்ப நறுக்கிக்கொடுக்கும் வரலாறுகள் எவ்வகையிலே தவறான கருத்துகளையும் திரிபுகளையும் ஏற்படுத்தும் என்பதற்கு, உங்களின் விட்டுப்போன எட்டுக்கான பின்னூட்டங்களே தெளிவாக்குகின்றன.

இன்னொன்றையும் கவனித்தீர்களா? ஈழத்தமிழரோ அவர்களிலிருந்து புலம்பெயர்ந்த தமிழரோ தமிழ்க்கணிமைக்குச் செய்ததைப் பற்றி ஒரு வார்த்தை நீங்கள் தவறியும் உதிர்க்கவில்லை. அந்தக்காலத்திலிருந்து சின்னத்துரை விஜயகுமார், நோர்வே தமிழ் சேக்கிள் ஜெயச்சந்திரன் போன்ற எழுத்துருக்காரர்கள் பலரிருந்திருக்கின்றார்கள். இவர்கள் குறித்தோ இவர்களைப் பற்றியோ எக்கருத்துமில்லை. ஒரு வேளை, அவர்களுக்கும் பட்டம் கொடுத்தாலும் நாங்களே கொடுக்கவேண்டும், கொடுக்க வேண்டிய நேரத்திலே கொடுக்கலாமென்றிருந்தீர்களோ அல்லது அத்தகவல்களைக்கூட "நூற்றிருபத்தைந்து ஆண்டுப்பாரம்பரியம் மிக்க ஹிண்டு சொல்வதையே விடுதலைப்புலிகள் சொல்வதையா உலகம் நம்பும்?" என்ற பாணியிலான எண்ணத்தோடு விட்டீர்களோ தெரியவில்லை. சக பத்திரிகையாளர்கள் நாயைப் போலக் கொல்லப்படும் கொழும்பு நகரிலே அதே காலகட்டத்திலே அரசுசார் தென்னாசியப்பத்திரிகையாளர் விருந்துகளிலே கலந்துகொண்டு, இவை பற்றி எங்குமே எழுதாத ஓர் ஊடகவியலாளரிடமிருந்து இப்படியான செயற்பாடுகளை எதிர்பார்ப்பது வீணோ?

பயங்கரவாதம் இணையத்துக்கும் வந்துவிட்டது என்றெல்லாம் "ஆவிக்கு உருக்கொடுத்து" அனுதாபம் தேடுகிற நீங்கள், ஐயா, இந்தத் தமிழ்க்குமுகாயத்தின் இன்னொரு நோய்க்கூற்றினை விட்டுவிட்டீர்களே? அதாவது, "பிரபலம்" ஒருவர் ஓலமிட்டால், என்னவென்று கேட்காமல் ,உடனே அணுக்கத்தொண்டர்கள் கூடிப் பேசுகின்றவனை அடிப்பது. இப்போது பாருங்கள், உங்களுடைய இவ்விடுகைக்கு வரக்கூடிய அனுதாபப்பின்னூட்டங்களையும் களம்சார்ந்த திட்டுதல்களையும். மனுஷ்யபுத்ரன் பதிவிலும் இதைத்தான் முன்னர் பார்த்தோமே?

கடைசியாக ஒன்று: இணையத்திலே இதிலேயிருக்கும் காயை அதிலே தூக்கிப்போட்டுவிட்டு பில்டப்புகள் கொடுத்துக்கொண்டு, தானே எல்லாவற்றையும் எங்கணும் நிறைந்து செய்வதாகக் காட்டும் பேர்வழிகளைக் கண்டிருக்கின்றேன்; கண்டிருக்கின்றோம். [உங்களைச் சொல்லவில்லை; குறைந்தபட்சம் அவ்வகையிலே உங்களை நான் ஒருபோதும் கருதவில்லை; வலைப்பதிவுகள் பற்றி ஏற்கனவே அறிந்திருப்பினுங்கூட, தமிழிலே வலைப்பதிவு தொடங்கப் பொறி தட்டியது உங்களது கட்டுரையாலேதான் என்பதை மீண்டும் சுட்டிவிடுகின்றேன். இங்கே பொதுவாகச் சொல்கிறேன்]. புதிதாகப் பதிபவர்களுக்கு, ஒவ்வொருவரின் மெய்யான (புறச்....மேலாக, அகச்) செயற்பாடுகளும் திறமைகளும் தெரியமுன்னால், அவர்களைப் பற்றிய பிம்பங்கள் செய்திகளைக் காவிவிடுகின்றன. இவ்வவலம் தீர்க்கமுடியாது. காலங்கூட சரியானதைக் காட்ட வாய்ப்பில்லை. வரலாறு என்பது அந்தந்தக்காலகட்டத்திலே யார் "நிகழ்வுகளை" எப்படியாகப் பதிந்துவைத்துக்கொண்டிருக்கின்றார்கள் எவரிடையே என்பதைப் பொறுத்ததே அமைகின்றது. காசி செய்த செயற்பாடுகளிலே எனக்கு மிகவும் பிடித்தது, தான் என்ன செய்தார் என்பதைத் தன் பார்வையிலேயே, அப்படியே எழுதிவைத்ததாகும். அதானால், காசிக்குக் காப்பி நான்தான் ஊற்றிக்கொடுத்தேன் என்பது போன்ற இடைச்செருகல்கள், கடைச்செருமல்கள் தோற்ற வாய்ப்புகள் குறைவு. அவர் அதை எழுதவில்லையென்றே வைத்துக்கொள்ளுங்களேன்; இரண்டாண்டுகளுக்குப் பின்னால், பிம்பங்கள் உருவாக்கும் வலைப்பதிவுகளே கீழ்க்கண்ட செய்தியை யாராவது ஒரு "மூத்த"பதிவர் ஒரு "புதுப்"பதிவருக்குச் சொல்வார்.
"காசி தமிழ்மணத்தினை நடத்திக்கொண்டிருந்தவருக்கு அவ்வப்போது உதவி செய்தார்."

பிகு 1ஃ.: இது பிரபலத்தோடு மோதிக்கொண்டதாலேயே தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள விரும்பும் பயங்கரவாதிகளின் பதிவு என்றெண்ணிப் பின்னூட்டமிடப்போகும் சாத்வீகவாதிகளுக்கு, "வணக்கம்! வாங்க, அடிங்க, தொடருங்க."
பிகு 2: பிரபலத்தினையும் பெயரையும் மட்டும் வைத்துக்கொண்டு ஆட்களினை எடைபோடுவது மிகவும் தவறு
பிகு 3: இத்தனை நாள் கண்டுகொள்ளாத எத்தனை பேர் இன்றைக்கு என் பதிவினைக் கண்டுகொள்ளப்போகின்றார்கள் என்று காண்க ..... இதுவும் தமிழ்ப்பதிவுலகின் ஒரு பண்பு :-)
பிகு 4: தொழில்நுட்பரீதியிலோ எவ்வகையிலோ தமிழிணையத்துக்கு நான் ஒன்றும் செய்ததில்லையென்பதால், தொழில்நுட்பவளவிலே சிறுபருக்கையை அவித்தவர்களின் முயற்சிகளுக்கும் (தன்னார்வமுயற்சி...செயற்பாட்டுக்கு ஊதியம் பெறுவதைச் சேவையாகச் சொல்வதையல்ல) நன்றியைத் தெரிவிக்க இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக்கொள்கிறேன்

உசாத்துணைகள்:
07/13/2007
1. தமிழெழுத்துருக்கள் பட்டியல் ஒன்று - கால்ட்டன் பல்கலைக்கழகம்
2. தமிழெழுத்துக்கள் பட்டியல் இரண்டு - இரா. பத்மகுமார் சேகரிப்பு
3. A pot-pourri of tamil-related Web pages - '90 களில் அதிகம் பயன்பட்ட தமிழ்வலைப்பக்கங்கள் இணைகளம் (2000 டிசம்பர் 7 இல்)-
அதே காவுகளம் 1998 ஓகஸ்ட் 8 இல் - கு. கல்யாணசுந்தரம்

120 comments:

-/பெயரிலி. said...

செல்வநாயகியின் இடுகையின் பின்னே - அவரைப் பிரசுரிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டி- இட்ட பின்னூட்டம்.
====

செல்வநாயகி

மாலன் என்பவரின் பதிவிலே உங்கள் பின்னூட்டத்தினைப் பார்த்தேன். உங்கள் பதிவிலே உங்களைத் தவறாக எண்ணும்படி நடந்ததற்கு நான் உங்களிடம் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன். மிகுதிப்படியாக, மாலன் என்பவரின் மீதான என் கருத்திலே எதுவிதமான மாற்றமுமில்லை. "125 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்துவை நம்புவார்களா? அல்லது விடுதலைப்புலிகளை நம்புவார்களா?" என்பதுபோல அவர் ஆசிரியராகவிருந்த திசைகள் சஞ்சிகைக்கு ஒரு நண்பர் எழுதிய ஆசிரியர்கடிதத்துக்கு அவர் கொடுத்த பதிலையும் பார்த்திருக்கின்றேன். அதிலில்லாத திமிர்த்தனமும் எள்ளலுமா நான் சொன்னதிலேயிருந்துவிட்டது? மேலும், என்னுடைய பின்னூட்டத்தினை அதன் காரணமாகத்தான் சிக்கலில்லாவிட்டால்மட்டுமே அனுமதிக்கும்படி கேட்டிருந்தேன். அதை நான் உங்களிடம் இன்னமும் தெளிவாகத் தெரிவித்திருந்திருக்கவேண்டும். அஃது என் தவறுதான். அதற்காக உங்களிடம் நான் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன். மாலன் வருந்துவதைப் பற்றியோ (அவ்வாறு காட்டிக்கொள்வதிலே அனுதாபம் தேடிக்கொள்வது பற்றியோ) எனக்கு எவ்விதமான வருத்தமுமில்லை. இதன் காரணமாக, அவர் எதிர்பார்க்குமிடங்களிலேயிருந்து அநியாயமாக அனுதாபம் பெற்றுக்கொள்கிறார் என்று எனக்குத் தோன்றும் வருத்தத்தினைத் தவிர. இப்பின்னூட்டம், உங்களுக்கான தனிப்பட்ட செய்திமட்டுமே. உங்கள் மின்னஞ்சலை உடனடியே கண்டுகொள்ளமுடியாதவிடத்திலே, இங்கேயிடுகின்றேன். நீங்கள் அனுமதிக்கத்தேவையில்லை. என் பதிவிலும் இதனையிடுவேன்.

மகிந்த ராஜபக்க்ஷவிடம் எச்சரிக்கையாகவிருப்பதைவிட மாலன், ராம், சோ போன்றவர்களிடம் ஈழத்தமிழர்கள் எச்சரிக்கையாகவிருக்கவேண்டுமென்பது எவ்விதத்திலும் மாற்றமுடியாத எனது கருத்து.

-/இரமணிதரன்.

இளங்கோ-டிசே said...

/மகிந்த ராஜபக்க்ஷவிடம் எச்சரிக்கையாகவிருப்பதைவிட மாலன், ராம், சோ போன்றவர்களிடம் ஈழத்தமிழர்கள் எச்சரிக்கையாகவிருக்கவேண்டுமென்பது எவ்விதத்திலும் மாற்றமுடியாத எனது கருத்து./

இரமணி, இது எப்போதோ புரிந்த உண்மை. அதனாற்றான் செல்வநாயகியின் பின்னூட்டத்தில் சில 'பின்னூட்டிகளை' பார்த்தபோது, 'பூஜ்ஜியத்திலிருந்து (மீண்டும்) ஆட்டங்களை மீண்டும் தொடரவேண்டும்' என்று உங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகச் சொன்னேன். இராஜீவ் காந்தியின் கொலைக்குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து தூக்குமேடையின் லீவர் சத்தம் கேட்கவேண்டும் என்றெழுதியவர்கள் எல்லாம், உண்மையான அக்கறையோடு மனித உரிமைகள் பேசுகின்றவர்களை (சுகுமாரன்) நோக்கி கேள்விகள் எழுப்பி தங்களை மனிதநேயவாதிகளாக்கும் வரலாறுதான் எத்தகை அழகானது; அல்லது வலைப்பதிவை விட்டு நம்மெல்லோரினதும் 'நண்பரின்' விவாதங்களின்போது தப்பியோடிவிட்டு இப்போது வந்து வலைப்பதிவர்களுக்கு இப்படி இப்படி இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதிலாகட்டும்.... ஆஹா! பேஷ் பேஷ்!
.....
கண்மூடி பால் குடிப்போம்; உலகம் இருட்டாய் இருப்பதுதானே நம் அனைவருக்கும் நிம்மதியானது :-).

-/பெயரிலி. said...

செல்வநாயகியின் பதிவிலே மதியம் இட்ட பின்னூட்டம் (அப்படியே சொல்லுக்குச் சொல் அல்லவெனினுங்கூட, கருத்து அதுவே):

மாலன் என்பவர் தலைப்புக்குச் சம்பந்தமில்லாமற் பேசுவதாக எழுதியிருக்கின்றார். சிங்களதேசியவாதம் = தமிழ்த்தேசியவாதம் என்று பயங்கரவாதச்சமநிலை பேசும் அவரது குறிப்பு எப்படியாகத் தலைப்புக்குச் சம்பந்தப்பட்டிருந்தது? "நாராயணன் மாலன் என்பவருக்கு சென்னையின் இலங்கைத்தூதரக அதிகாரியைப் பற்றிப் பேசும்போது, இவ்வளவு கோபம் பொத்துக்கொண்டு வருவதற்கு என்ன காரணம்? ஏற்கனவே பாலச்சந்திரர் புன்னகைமன்னனிலேதான் சென்னை இலங்கைத்தூதரகத்திலே பாசமும் ஈழத்துத்தமிழகதிகளிலே காழ்ப்பும் கொண்டதைக் காட்டிவிட்டதைப் பற்றியும் சொல்லாமல் விட்டதோ?" என்று திருப்பிக் கேட்க எனக்கும் பல நிமிடங்கள் எடுக்கா.

இப்பின்னூட்டத்தினை அனுமதிப்பதும் விடுவதும் உங்கள் விருப்பம். இதிலே எனக்கேதும் மாறுபாடில்லை

-/பெயரிலி. said...

டிசே
தொப்புட்கொடி உறவு முதற்கொண்டு சசியின் பதிவிலே வந்த பின்னூட்டங்களைப் பற்றி உங்களுக்கு நேற்றிரவே செல்வநாயகியின் பதிவிலேயிட எழுதிய பின்னூட்டத்தினை நான் குளறுபடியாகிவிடுமென்று போடவில்லை. இரண்டு சிக்கல்கள் உறுத்துகின்றன.

1. எல்லாமே ராமானுஜர், சுப்பையா, வாவேசு, வரா, பிச்சைமூர்த்தி, சாமிநாதர், வாசன், நகுலன், மௌனி, நாகார்ஜுன், நாகராஜன், இந்திரா பார்த்தசாரதி, கஸ்தூரிரங்கன், (கருணாநிதியின் நண்பராயிருந்தும்....) சா. விஸ்வநாதன் (குரு எவ்வழி..), சுஜாதா, கல்கி, வீணை பாலச்சந்தர், சுப்பிரமணியம், பத்மா சுப்பிரமணியம், ராம்ஜி சுப்பிரமணியம், ஸ்ரீரங்கம் ரங்கராஜன், மணிரத்தினம் இப்படியாகவே தமிழுலகைச் சூழ்ந்த கலை இலக்கியம் வரலாற்றினைப் படியவைக்கும் முயற்சிகளின் சுதேசமித்திரன் பாரம்பரியத்தின் நீட்சியாகவே இணையத்து வரலாற்றினையும் (கோவிந்தசாமியைக் குறிப்பிட்டாலுங்கூட) எழுதிப்போக விடமுடியாது. அயோத்திதாசர், வள்ளலார், அவரின் எதிரியாயிருந்தும் சாதித்திமிர்பிடித்தவராகவிருந்தும் நல்லூர் ஆறுமுகம், சி வை தாமோதரம், சாதித்திமிர் எழுத்திலே ஆங்காங்கே ஓடினாலும், புதுமைப்பித்தன் இப்படியாகப் பலரின் பங்களிப்புகளை இச்சுதேசமித்திரன் பாரம்பரியும் இலகுவாக வெட்டித்தள்ளிவிடும். இதனைச் சுட்ட்டவேண்டிய தருணத்திலே சுட்டவேண்டும்.. வலைப்பதிவிலே அன்பான வலைப்பதிவர், அரவணைத்துப்போகும் வலைப்பதிவர் போன்ற tamil blog idols இற்குப் போட்டியிடும் ஆட்களுக்கு இது முக்கியமில்லாதிருக்கலாம். ஆனால், பிரபலங்களுடனும் பிரபலங்கள் தாமென்று எண்ணிக்கொள்கின்வர்களோடும் சண்டை பிடிப்பதே தொழிலான எம்மைப் போன்ற அரைப்பைத்தியங்களுக்கு இது வெக்கை காலத்திலே நுங்கு குடிப்பதுபோல :-)

அட அதுதான் கிடக்கட்டும்; எஸ். பொ போன்ற பத்திரிகைக்குப் பேட்டிக்குத் துடிக்கும் இலக்கியக்கிழவர்கள் சித்தர்கள் முத்தர்கள் அக்காலத்திலே "புலம்பெயர் இலக்கியங்கள்தான் தமிழைக் கொண்டு போகப்போகின்றன்" என்று என்ன உளறினாலுங்கூட, அவருக்குப் பதில், சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் பட்டம் நாம்தான் கொடுத்தோமென்றால், யார் ஏதாவது லேனா கானா செட்டியாரும் பூச்சிய ஜீயருமா கொடுத்தார்கள் என்பதைக் கொஞ்சம் திமிரிலே உளறமுதல் யோசிக்கவேண்டாம்? புதுமைப்பித்தனையே அமுக்கின அஞ்சுபேரென்று சும்மாவா சிதம்பரரகுநாதன் பட்டியல் போட்டார்? இவர்களா தம்வட்டத்தை விட்டுக் கொடுப்பார்கள் நாவலரும் காவலரும்?? கேட்டால், அதுக்குத்தான் பரிகாரமாக திசைகளிலே எஸ்.பொவையே சரணடையச்செய்துவிட்டோமென்று பதில் வரும்.

2. நாயைப் போலச் சக பத்திரிகையாளர்கள் வீதியிலே கொலை செய்யப்படும் நகரிலேயே, செய்தியூடங்கள் தடுக்கப்படும் நாட்டிலேயே பெருவிடுதிகளிலே தென்னாசிய ஊடகவியலாளர்மகாநாடுகளிலே கலந்துகொண்டோ அல்லது லங்காரத்னா பெற்றுக்கொண்டே, இவை பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல், தமிழ்ப்பயங்கரவாத்தினைப் பிடிப்பதிலேமட்டும் குறியாகவிருக்கின்றவர்களும் அப்படியான நிலையிலும் "125 ஆண்டுப் பாரம்பரியமுள்ள இந்துவையா, விடுதலைப்புலிகளையா உலகம் நம்பும்?" என்று திரும்பக்கேட்கும் பத்திரிகையாசிரியர்களுமா teletainment இற்கு அப்பால், கட்டுரை எழுதும் தலைவட்டச்சுழிக்கப்பால் நியாயமான மனிதவுரிமைக்கரிசனையும் எழுத்துரிமையும் கொண்டிருக்கின்றார்களென்று நினைக்கின்றீர்கள்? இவற்றைக்கூட எண்ணிப்பார்க்காமல், நீங்களெல்லாம் எட்டுப்போட்டிருக்கின்றீர்கள் என்ற வகையிலே உருகிக்கொண்டு பின்னூட்டம் போடுகின்றவர்கள் வாசிக்கின்றதை வைத்து தாமே சுதேசமித்திரன் பாரம்பரியத்தைத்தான் காவிக்கொண்டு போவார்கள்.

இதை வைத்துக்கொண்டு சுலபமாக ஜாதியோ சாதியோ சுட்டி உருவேற்றுகின்றான் என்று எண்ணிக்கொள்கின்றவர்கள் குறித்து கவலைப்பட எனக்கு எதுவுமில்லை. என்னைப் பொறுத்தமட்டிலே அன்றும் இன்றும் ஒரே கருத்துதான்; ஸ்ரீலங்கா அரசு, இராணுவத்துக்குப் பயந்து நாராயணன் மாலன், சோ ராமசாமி, நரசிம்மன் ராம், பி. கே. சிவக்குமார், திருஞானசம்பந்தன் போன்றோர் சம்பந்தப்பட்ட தமிழ்நாட்டுக்கு என் தம்பிகளோ தங்கையோ, தாயோ, உறவினரோ அகதியாக ஓடுவதிலும் தஞ்சம் புகுவதிலும்விட, திருகோணமலைத்தெருவிலே அநாதைநாய்களாகச் செத்துப்போய்ப் புழுவாகிப்போய்க்கிடப்பது மேலானதென நம்புகிறேன்.

Kasi Arumugam said...

நிறைய செய்திகள் தெரிந்துகொண்டேன். நன்றி.

Anonymous said...

அகதி நாயே தெரு பொறுக்கி பண்ணிகளா உண்ட வந்த பிடாரையே ஈழ தமிழர்களாம் போங்கடா போய் பிரபாகரனுக்கு ஜால்ரா அடிங்கடா. வந்துட்டானுங்க.அல்லையும் மூஞ்சியையும் பாரு தூ நாயே. போய் கக்கூசு கழிவிற நாயி எல்லாம் பெரிய புண்டை மாதிரி பேசுது.

-/பெயரிலி. said...

தலீவா அதிரல்லையே :-(
ஐபி பாத்துக்கிட்டேருக்கேனே. மூஞ்சிய மறைச்சுட்டு வந்து அட்சிருக்கக்கூடாதா என்ன?

-/பெயரிலி. said...

தல
நீங்க செம முட்டாள் தல. இந்த மாதிரியா எனக்கு லெக்சர் குடுக்குறாபல ஒரு சான்ஸு தர்றிங்க பாருங்க. இது நியாயமாவா இருக்குதுங்குறேன்? மத்தவங்களும் நாலு வாட்டி வர்றாங்க. இன்னாடா கசமுசா காசாமூசான்னு பெருசாச்சான்னு பாக்குறாங்க. போறாங்க. நீங்க என்னான்னா, எனக்கு "பேசு ப்ரதர் பேசு! ஒன்னோட ஒப்பாரிய கேக்கவந்த என்ன ஏமாத்திடாதே"ன்னு டாய்லட்டாக்கு எடுத்துவிடுறீங்க... நான் சொல்றேங்க கேளுங்க..

அதாவது ஆதன கீர்த்தனாரம்பத்துலருந்து அலைஞ்சு திரிஞ்சவன் அல்லாருமே அகதிதான். மனுஷன் கதையே அகதியாத்தான் ஆரம்பிக்குது. அன்னிக்கு பழைய டெஸ்டுமெண்டுலே எழுதினா என்ன, பிறகு Leon Uris Exodus எழுதினால் என்ன, இஸ்ரேலுக்கு இப்போ வந்து பாலஸ்தீனரை விரட்டியடிச்சா என்ன, ராமரும் பொண்டாட்டியும் பாண்டவரும் பொண்டாட்டியும் (அட ஒண்ணுதாங்க) பதினான்கு வருசம் அலைஞ்சா என்ன, புத்தரு பிச்சை எடுத்தா என்ன, முகமது மக்கா மதீனான்னு ஓடினா என்ன, Mayflower இலே வந்து இறங்கினால் என்ன, இன்னிக்கு காலித்து kite runner & A thousand Splendid Suns எழுதினால் என்ன Beasts of No Nation & A long way Gone எழுதினால் என்ன, எல்லாரோட கதையுமே (அய்யனாரு சொன்ற ஓடுகாலிகள் கதையா இல்லாங்காட்டியும்) காலியாக ஓட்டப்பட்டவர்கள் கதையாகத்தான் இருக்கு. அதனாலே, அகதியாக ஆகுதல் என்பது ஆகியவர்கள் வெட்கப்படறதுக்கான விசயமில்லை; அகதியாக ஆக்கியவர்களும் அவர்களின் அரசும் அத்துமீறும் இராணுவமும் வெட்கப்படுவதற்கான விசயம். [விதயம் என்று சொல்றதும் இதே விசயத்தைத்தான்; இராமகி ஐயா புண்ணியத்துல சிலரு விதயம் உஜ்ஜாலாவுக்கு மதம் மாற்றிட்டாங்க; அவ்ளோதான் ;-) ]

அஞ்சு நூத்தாண்டுக்கு முன்னாடி குஜராத்து சூரத்திலருந்தும் பத்து நூத்தாண்டுக்கு முன்னாடி மஹாராஷ்டாவுலருந்தும் மதுரைக்கும் தஞ்சைக்கும் பிழைக்க ஓடியாந்தவுங்களும் பிறகு பஞ்சுப்பஞ்சம் அது இதுன்னு எல்லைகளுக்கு அப்பாலும் இப்பாலும் நகந்தவுங்களும் இங்கேருந்து கோயிலை உடைக்குறான்னு செலையைத் தூக்கிட்டு ஓன்னு வடக்கே வடகிழக்கேன்னு ஓடியவனும் எதுக்கு போன பத்து இருபது முப்பது வருஷத்துக்குள்ளே பொட்டி தட்ட பிளேன்ல ஏறினவனும் ... அட அதத்தான் விடுங்க... இன்னிக்குத்தான் பர்த் சர்டிப்பிக்கட்டு எடுக்கிற அரசியல்வாதியும் பாக்கிஸ்தான்லருந்து ஓடியாந்த லால்கிருஷ்ண அத்வானி, (ராம்ஜெத்மலானி), செத்துப்போன சயிண்டிஸ்டு சந்திரசேகர் இவுங்க எல்லாருமே அகதிதானுங்க.. இதுல வெட்கப்படவேண்டிய விசயமென்னென்னா, ..... இந்த டைப்பு காட்டகரியல ஆப்புக்குரங்கா குந்திக்கொண்டிருந்து, ஈழத்திலருந்து ஓடிப்போறவனை அகதின்னு சொல்றீங்க பாருங்க... அதுதான்.

அட அதத்தான் விடுங்க. என்னை அகதின்னு சொல்லி உண்மையா பாதிக்கப்பட்டு எத்தனையோ உயிர், உடமைகளை இழந்து உலகம் பூராகப் பரவியிருக்கிற ஈழத்தமிழர்களை அவமதிக்காதீங்க. நிலம் சார் உடமைகள் ஓரளவுக்கு இழந்துபோயிருந்தாலும், உயிர் சார்ந்த பயத்திலே உறவினர்கள் வாழ்ந்திருந்தாலும், அகதி என்று மெய்யாகவே பாதிக்கப்பட்டவர்களின் பெயரை வைத்துக்கொண்டு நான் ஓடவரவில்லை. ஐஐடி மெட்ராஸிலிருந்தோ ஐஐஎஸ்சி பங்களூரிலிருந்தோ அமெரிக்காவுக்கு மேற்குக்கோ வந்தடைந்தவர்கள் வந்த பாதையிலேதான் நானும் வந்தடைந்தேன். அப்படியாக "சொகுசாக" வந்த நான் கைப்பிடியிலே உயிரை வைத்துக்கொண்டு எத்தனை கஷ்டங்களூடாக ஒரு நாட்டிலே தஞ்சமடையும் ஈழத்தமிழர்களின் காற்றூசின் அவலத்துக்கும் ஈடாக அந்த, "அகதி" என்ற பதம் தரும் துயர், பிரிவு, துன்பம், உளநிலைக்கு எட்டமாட்டேன். [இதனாலேதான், இவ்வாண்டுத்தொடக்கத்திலே Little Magazine - Favoritte Fiction II - 25 Stories from South Asia இலே exile in USA என்று ஆசிரியர் குறிப்பினைப் போட்டு, கதையை அவர்கள் சேர்த்திருக்கும்போது, நிறைந்து வெட்கமும் சிறிது கோபமும் ஏற்பட்டது]. அகதி குறித்து சயந்தன் எழுதிய பதிவைப் போய்ப் பாருங்கள். இதையெல்லாம் புரிந்துகொள்ளக்கூடிய சக்தி இல்லையென்றால், வாஜி வாஜி என்று போய் வானரம் போல inferiority complex இலே கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு வெள்ளைத்தோல் அப்பிவிட்டு டண்டணக்கா ஆடுவதை ரசித்துவிட்டு, கல்கியிலே கதை வந்ததைப் பதிவிட்டுவிட்டு, பூனைக்குட்டி செத்தததற்கு ஒப்பாரி வையுங்கள். நன்றி வணக்கம்

மாலன் said...

அன்புள்ள பெயரிலி,

பதிவிற்கு நன்றி.

அலுவலகம் தொடர்பான பணி ஒன்றில் முனைப்பாக இருக்கிறேன். இரண்டொரு நாளில் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.

அன்புடன்
மாலன்

-/பெயரிலி. said...

நன்றி.
சுதேசமித்திரன் பாரம்பரியம் & இணையக்கணிமை குறித்த கருத்துகளைக் காண விரும்புகிறேன்.
இலங்கை குறித்த கருத்துகள் எப்போதோ முடிந்த காரியம். பட்டறிவு நிறைய விளக்கம் கொடுத்திருக்கின்றது. அதனால், எனக்கு ஏதேனும் விளக்கமிருப்பதாகத் தெரியவில்லை - பதிவர்கள் & வாசகர்கள் உங்கள் "பகைவனுக்கருளும்" திறந்த மனதினைச் சிலாகிக்க உதவுவதைத் தவிர. பதிவர்களும் வாசகர்களும் புரிந்து கொள்ள உதவுமென்று நம்புகிறேன்.
மீண்டும் நன்றி.

Mookku Sundar said...

பெயரிலி அண்ணாச்சி,

** சர்ச்சையை கிளப்பி இன்னமும் குட்டையை குழப்பும் எனில் பிரசுரிக்க வேண்டாம் ****

//இலங்கை குறித்த கருத்துகள் எப்போதோ முடிந்த காரியம். பட்டறிவு நிறைய விளக்கம் கொடுத்திருக்கின்றது. அதனால், எனக்கு ஏதேனும் விளக்கமிருப்பதாகத் தெரியவில்லை - பதிவர்கள் & வாசகர்கள் உங்கள் "பகைவனுக்கருளும்" திறந்த மனதினைச் சிலாகிக்க உதவுவதைத் தவிர//

அடேயப்பா...ஏகப்பட்ட எள்ளல்..!!
சமயம் கிடைத்தால் உங்களை நேரிலே சந்தித்து இதுபற்றி பேச ஆசை.

இலங்கை/இந்திய அரசாங்கம் சார்பாக பேசுகின்றவர்களும் சரி, வி.பு சார்பாக பேசுகிறவர்களும் சரி. ஒருவிதமான உணர்ச்சிபூர்வமான பக்கச்சாய்வினைத்தான் கொண்டிருக்கிறீகள். என்னைபோல சுயகொள்கை, மறைமுக வேலைத்திட்டம் ( hidden agenda) ஏதும் இல்லாத சுள்ளான்களே இதை திறந்த மனதுடன் அணுக முடியும் போலிருக்கிறது.

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும், எல்லா இந்தியர்களுக்கும் எல்லா தமிழர்களுக்கும் இலங்கை இனப்பிரச்சினை என்ற ஒன்றைத்தாண்டி வேறு ஏதும் பிரச்சினையே இல்லாததை போல நடந்து கொள்ள வேணும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

ஏன் நீங்களே கூட சதா சர்வகாலமும் தாய்நாட்டினை மட்டும் எண்ணிக் கொண்டு கண்ணீர் உகுத்துக் கொண்டா இருக்கிறீர்கள்.( இன்னமும் பலபேர் சிலோன் பிரச்சினை காரணமாக அவர்களுக்கு பொலிடிகல் அசைலம் கேட்கும் தகுதி வந்ததால்தான் பல மேற்கத்திய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வளம் கொழிக்கிறார்கள். இப்போது பிரச்சினை ஓய்ந்தால் எவ்வளவு பேர் ஆசையுடன் தாயகம் திரும்புவார்கள்" என்று கேட்கிரார்கள்.
ஆக அகதியாக இருப்பதும் ஒரு பயன் அல்லவா..??!!! )

-/பெயரிலி. said...

அடடா வாங்கோ பசுபதிராயரே,

நீங்ககூட கப்டன். பரமேஸ்வரனை உடுவிலிலே குண்டு கிளப்பியதற்குப் பிறகுதான் இந்திய இராணுவம் பற்றிக் கவலை கொண்டீர்களோ, அல்லது அதற்கு முதலிலோ? :-)

/இலங்கை/இந்திய அரசாங்கம் சார்பாக பேசுகின்றவர்களும் சரி, வி.பு சார்பாக பேசுகிறவர்களும் சரி. ஒருவிதமான உணர்ச்சிபூர்வமான பக்கச்சாய்வினைத்தான் கொண்டிருக்கிறீகள்./
வேண்டுமானால், இதையே நானும் உங்களிடம் திருப்பிக் கேட்கலாம்.

இதையே நான் முன்னாலே எத்தனை தடவைகள் சொல்லியிருக்கின்றேன் என்று கணக்குப் பாத்திருக்கலாமே?

ஆனால், விசா எடுத்துப் பொருளாதாரம் மேம்பண்ண வந்தால் அதிதி; ஒழி/ளிந்து மறைந்து உயிரைக் காப்பாற்ற ஓடிவந்தால் அகதி... பாருங்கள் நும், எம் வாழ்வுகளின் க.....தி என்ன மாதிரி மாறுகதிகளிலே விளையாடுகின்றது!! :-)

நிச்சயமாக, ஈழம் கிடைத்தாலும் ஊருக்குப்போக பெரும்பான்மையாக அகதியாகப் பெயர்ந்தவர்கள் பொருளாதாரக்காரணம் குறித்தும் விரும்பப்போவதில்லை என்பதே எனது கருத்தும். ஆனால், இஃது அவர்கள் உயிரபாயத்தினாலே உள்ளதை இழந்து ஓடிவராதவர்கள் என்று ஆக்கிவிடுமா? இழந்து ஓடிவந்த அகதிகளிலும் விடப் பொருளாதார அகதிகள் ஒரு படி மேலானவர்களாகிவிடுகின்றார்களா? இந்தியாவிலேயிருந்து பொருளாதாரத்தினை நோக்கிப் பெயர்ந்துவிட்டு, எந்நாளும் ஊர்திரும்பலாமென்ற நிலையிலேயும் "இந்நாட்டினைத் தவிர வேறெந்த நாட்டுக்கும் விசுவாசமாகவிருக்கமாட்டேன்" என்று சத்தியப்பிரமாணம் எடுத்து அமெரிக்கக்குடியுரிமை பெற்றபின்னும், இந்திய அரசியலிலேயும் இந்தியாவின் களத்திலேயும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படவேண்டுமென்று அபிப்பிராயம் தெரிவித்து இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தச் சண்டைகள் பிடிப்பவர்களைவிட, போக்ரான் குண்டுக்கு ஜேன்னு அமெரிக்க அலுவலகத்திலேயே உசார்க்கூட்டல் போடுகிறவர்களைவிட, ஈழத்திலிருந்து உயிருக்குப் பயந்து ஓடிவரும் அகதிகள், உயிரபாயம் நீங்கியபின்னால், பொருளாதாரத்திலே நிலைப்பட தாம் பெயர்ந்த மேற்கிலே வாழ நினைப்பதிலே, எவ்விதத்திலே மனிதர்கள் என்றளவிலே வித்தியாசப்படுகின்றார்கள்?

நான் ஒவ்வொரு நாளும் நாட்டினை எண்ணிக் கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கவில்லைத்தான். ஆனால், என்னைத் தவிர என் குடும்பத்திலே எவரும் எரிகிற இலங்கைக்கு வெளியிலேயில்லை; என்னுடைய சொந்த ஊருக்கு நான் போய் சென்றவாண்டோடு பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஒவ்வொரு கோடைக்கும் ஊருக்குப் போயோ, அமெரிக்காவிலே கட்டிய புதுவீட்டுக்குப் பெற்றோரை வரவழைத்துப்பார்க்கவோ வசதிப்பட்ட உங்களைப் போன்றோரைவிட, என் நிலை எண்ணிப்பார்த்தால் உறவுகள், ஊர் தொடர்பாக எல்லாவிதத்திலும் கவலைக்கிடமேதான்.... ஆனாலும், கண்ணீர் உகுக்கவில்லை. இன்றைக்குவரை ஒன்றும் ஆகவில்லை என்பதே மகிழ்ச்சி. நாய் மாதிரி எவரால் எதற்கென்றில்லாமல் உங்கள் அப்பாவோ அம்மாவோ தம்பியோ தங்கையோ எப்போது கொல்லப்படுவார்கள் என்ற திடீரச்சம் பின்னிரவுத்தூக்கத்திலே உங்களுக்கு எப்போதாவது வந்திருந்து கட்டிலே உட்காரவும் முடியாமல், பரக்கப்பரக்க மேலும் கீழும் நடந்திருக்கின்ற அனுபவமுண்டா? கண்ணீர் உகுக்காவிடினும், இப்படியான பயம் ஏதோவிதத்திலே எம்மிலே பலருக்கு ஒட்டிக்கொண்டுதானிருக்கின்றது. சுரதா தன் பதிவிலே அண்மையிலே ஒரு நண்பர் அழுததுகுறித்து எழுதினாரே, "எல்லாரும்தானே ஈழம் கேட்டினம்? ஆனால், ஏன் என்ரை வீட்டிலை மட்டும் குண்டு விழுந்தது?" இதுதான் அநேகமான ஈழத்தவரின் மனநிலை.... அவருக்கான தினம் வந்தால்.

வேண்டுமானால், கோவையிலே குண்டு வெடித்தபோதோ நாகையிலே சுனாமி வந்தபோதோ, ஊருக்குத் தொலைபேசி போட்டுக்கேட்டவர்களுக்குள்ளும் மாயாவரத்துக்காரரான நீங்கள் அடங்காவிட்டால், அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அச்செய்தி கேள்விப்பட்ட நாட்களிலே என்ன செய்தார்களென்று.

/உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும், எல்லா இந்தியர்களுக்கும் எல்லா தமிழர்களுக்கும் இலங்கை இனப்பிரச்சினை என்ற ஒன்றைத்தாண்டி வேறு ஏதும் பிரச்சினையே இல்லாததை போல நடந்து கொள்ள வேணும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை./

அப்படியாக யார் எதிர்பார்த்தார்கள்? பலஸ்தீனமும் இஸ்ரேலும் என்ற பேச்சு வந்தால், யார் எங்கே எப்போது என்பது முதல் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதோடு Lemon Tree புத்தகம் மட்டும் பேச்சு வந்துதான் ஆகும். அதுதான், இங்கேயும் இம்முறை நிகழ்ந்தது. மாலன் சசியின் பதிவிலும் அதற்குமுன்னரும் இலங்கை பற்றி / அது குறித்த இந்திய நிலை பற்றி அவர் கூறிய கருத்துகளின் அடிப்படையிலேதான் அவருடனான என் பிணக்கு. இம்முறையும் செல்வநாயகியின் பதிவிலே அவர்தான் முதலிலே சிங்களத்தேசியவாதம் = தமிழ்த்தேசியவாதம் தொடங்கினார்... அதன் பின்னரே, ஜின்னியைச் சீசாவுக்கு வெளியிலே விடவேண்டியதானது... சந்திப்புடனான பிரச்சனை அவரின் அரைவேக்காட்டுத்தனமான ஜேவிபி ஆதரவும் இலங்கைப்பிரச்சனைக்கு வர்க்கத்தீர்வும்மட்டுமே என்ற நடைமுறையே தெரியாதவாதமுமே.

மற்றது, சுதேசமித்திரன் பாரம்பரியம்... அது வேறே லைன். சங்கீதம் படிக்கப்போகையிலே உங்களை என்னவென நினைத்துக்கொண்டு கேட்டார்கள் என்று நீங்கள் எழுதிய பதிவினை இப்போது நினைத்துக்கொண்டீர்களென்றால், சுதேசமித்திரன் பாரம்பரியம் என்று பொதுவாக்கிச் சொல்வதிலேயுள்ள விபரீதம் உங்களுக்குப் புரியாதுபோகாது. நீங்கள் அந்த விவகாரத்துக்கு என்னோடு முரண்படுகின்றவரில்லை என்பது எனக்குத் தெரியும். :-)

நேரிலே சந்திப்பதானால், சந்திப்போமே... இலங்கையிலே பல்கலைக்கழகத்திலே ஒன்றாகப்படித்த இரு நண்பர்கள் சாகரமண்டோவிலேதான் இருக்கின்றார்கள். வருடக்கடைசியிலே வந்து அவர்கள் தலையிலே மிளகாய் அரைத்துப் போகலாம் என்று எண்ணமுண்டு. அப்போது, அமர்ந்து பேசுவோம்.

Thangamani said...

1. ஈழப்பிரச்சனையை அணுகும் விதத்தில் ஒரு ஈழத்தமிழருக்கும், பிற தமிழருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கமுடியும். அதை பெயரிலி குறிப்பிட்டிருப்பது போல அந்தச் செருப்பை அணிந்து பார்த்தால் கூட அதை நெருக்கமாக புரிந்துகொள்ள முடியலாம். என்னைப்போன்ற இந்திய/ மற்ற தமிழர்களுக்கு இது இன உணர்வு, அரசியல், பக்கத்துச்சோதர்ன் துன்பத்துச் சாதற் கண்டு ஏற்படும் வேதனை, தமிமிழனத்தைக் கருவருக்கும், இலங்கை/இந்திய அரசியல் புலனங்கள் பற்றிய கொதிப்பு இவைகள் கலந்து அடங்கியது. பிஜித்தீவில் செத்தொழியும் தமிழ்ப் பெண்களுக்குக் கண்ணீர் விட்ட பாரதியின் கன்ணீர்ப்பைகளுக்கு இணையாக ஒருசோடி இருந்தால் போதும். அல்லது இந்த தமிழரைக் கருவருக்க எந்த எல்லைக்கும் போகத்துணிந்த அரசியலை விளங்கிகொள்ள முடிந்தால் போதும்.

2. ஒவ்வொருமுறையும் தாங்கிப்பிடிக்க ஒவ்வொருகாரணத்தை வகைப்படுத்த கொஞ்சம் நினைவாற்றல் போதும். ஒருமுறை, எல்லா நாடுகளும், அரசுகளும் தான் வி.புயை எதிர்க்கின்றன, இந்து மட்டும் எதிர்க்கவில்லை என்பார்; அடுத்தது, மனித உரிமை மீறல் என்றார்; அடுத்தது மொழிவழி தேசியத்தை எல்லோரும் ஆதரிக்க வேண்டுமா என்ன! இந்துக்கு அந்த வகை தேசியத்தில் நம்பிக்கை இல்லை என்பார்(அதற்கு ஆர்.எஸ்.எஸ்க்கு இணையான) கலாச்சார தேசியத்தில் (அப்படிச் சொல்லிக்கொள்ளாவிட்டாலும்) நம்பிக்கை இருப்பது ஆச்சர்யமாய் எனக்கு எல்லை (இணைகோடுகள்!). இப்போது மனித உரிமையும் தேசியவாதமும் முரண்படுகின்றன என்கிறார்.


பத்திரிக்கை அதிபரின் கருத்துதான் செய்தியையும் முடக்கும், குலைக்கும், நறுக்கும், உருமாற்றும் என்ற நடைமுறை இந்துவை கொஞ்சகாலம் கவனிக்க முடிந்தாலே புரிந்துபோகிற விதயம். அப்படி வலைப்பதிவுகளில் எனக்குத் தெரிந்தே புரிந்துகொண்ட நடுநிலையாளர்கள்(?)/ சுள்ளான்கள் உண்டு.

நாட்டின் தேசியப்பத்திரிக்கையில் நடக்கும் அயோக்கியத்தனங்களை விடவா இந்தத்திரட்டிகளில் தப்பும் தவறுமாகம், உணர்ச்சி வயப்பட்டும், அழுகுனிஆடுகிறவர்கள், போலியாய் வருகிறவர்கள், செய்துவிட்டார்கள். இவர்களால் தமிழ் இலக்கியத்துக்கும், கருத்துச்சுதந்திரத்துக்கும், கண்ணியத்துக்கும், சேதாரத்துக்கும் பயந்து தனித்திரட்டி வேண்டுமாம்;
ஆனால் ஈழத்தமிழ் இனத்தையே கருவருக்க, எல்லா முனைப்புகளையும் வெகுகலாமாய் செயல்பட்டு வருகிற பத்திரிக்கை பற்றி மட்டும் யாரும் முனுமுனுக்க முடியாதாம்!

3. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்பது மேலுக்கு நாகரீகமாகத் தோன்றுகின்ற மிக அபாயமான ஒரு கூற்று. அதை யார் சொல்லுகிறார்கள்/ யாருடைய ந்ன்மையின் பொருட்டு சொல்லுகிறார்கள் என்று பார்க்கவேண்டும். கிட்டத்தட்ட இலட்சக்கணக்கான பேர்களை (அதுவும் ஆங்கிலத்தில் முடிவெடுத்து நாட்டின் முடிவாக அறிவிக்கும் அதிகார பலம் வாய்ந்தவர்களை) தினமும் காலையில் நெருங்கிக் காதில் சொல்லும் பொய்யை (அதுவும் 150 வருட பாரம்பரியத்தை நினைவுபடுத்திக்கொண்டே வந்து சொல்லும் பொய்யை) 4 பேர் படிக்க தமிழில் பதிவெழுதும் ஒருவர் தூய்மையான கருத்தால் மட்டும் எதிர்கொள்ள வேண்டுமாம்!

150 வருடபாரம்பரியம் என்கிறார்களே அது கருத்தல்ல! அது அடையாளம்! மொழிவழி தேசியத்தை (அது ஈழமாய் இருந்தாலும்) என்று சட்டமாய் இருந்த ஏசி அறையில் லங்கா இரத்னா பதக்கத்தைத் தடவிக்கொண்டே வானில் இருந்து பொழியும் குண்டுகளோடு இதைப்பற்றி அறிந்தே இராத மக்களின் தலையில் போடுகிறார்களே அது வெறும் கருத்தல்ல; அது அடையாளம் மட்டுமல்ல, அழித்தொழிப்பும் கூட.

suratha yarlvanan said...

ஒரு சில கேள்விக்கான விடை தெரிந்தது.நன்றி

-/பெயரிலி. said...

தங்கமணி உங்களின் பின்னூட்டத்துக்கு ஒன்றுமே சொல்லப்போவதில்லை. நான் நன்றாயிருக்கின்றதென்று சொல்லப்போக, அதனாலேயே தங்கமணியின் கருத்தும் பிழையென்று வாதாடக்கூடிய அளவுக்கு வலையிலே வண்டியோட்டுகிறேன் :-) வேண்டுமானால், நீங்களும் விதயம் உஜ்ஜாலாவுக்கு மதம் மாறியவர் என்பதைச் சுட்டிக் காட்டலாம் ;-)

சுரதா, வாருங்கள் வலை எம்ஜிஆர். ஏன் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்ததா? மிகவும் நல்லது. சும்மா இப்படியாகப் பின்னூட்டங்கள் ஒற்றை வரியிலேயிட்டுவதற்குப் பதிலாக, தமிழ் இணையத்துக்கு இனியாவது ஏதாவது பயனுள்ள செயல் புரியலாமே? யாரோ உருவாக்கி வளர்த்துவிட்ட தமிழ் இணையத்திலே, வலைப்பதிவுகளிலே பொழுதுபோக்காகப் பயனைப் பெற்றால்மட்டும் போதுமா? போங்கள். போய் ஏதாவது உருப்படியாகச் செய்யும் வகையைப் பாருங்கள். மகுடமாகாவிட்டாலுங்கூட மண்குடமாகவேனும் ஆகும் வழியைப் பாருங்கள் (அதற்காக, குரங்குக்குட்டிக்கு ப்ளொக் திறந்து ஒவ்வொரு புளொக்கையும் வாசிச்சமா இல்லையா என்றில்லாமல், ஒரு பின்னூட்டப்புழுக்கை போடுறதில்லை. சரியோ?) வந்துவிட்டீர்கள் நேரத்தைவிட்டுப் பின்னூட்ட...
உங்களையெல்லாம்...
அநாமதேயம் நானும் :)

Boston Bala said...

முதல் மரியாதை வீராச்சாமி மாதிரி எனக்கும் ஒரு சந்தேகம் :)

'இணையத் தமிழின் முதல் வலை இதழ்' பூங்கா-தானா ;)

Thangamani said...

//'இணையத் தமிழின் முதல் வலை இதழ்' பூங்கா-தானா ;)//

இல்லை!


இணையத்தமிழின் முதல் வலைப்பதிவிதழ்

அப்படித்தான் பூங்கா சொல்கிறது! :)

-/பெயரிலி. said...

இது உங்களுக்கு அடிக்கடி வரும் சந்தேகமாச்சே :-)

அதற்கு நான் அடிக்கடி தரும் பதிலையே சொல்லிவிட்டு மீதி....
"இதை இன்னமும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பூங்கா முகவரிக்கே அனுப்பிக் கேட்டிருந்தால், அவர்கள் தமது விளக்கத்தைத் தந்திருப்பார்களே!"

ஆனால், இங்கே பார்வையாளனாகப் பதிவைச் சொல்லலாம். அதற்கான காரணமென்னவென்றால், எனக்கு அது தெரியும், நானே அதிலே 'அத்தாரிட்டி' என்று புதுப்பதிவர்கள் புரிந்துகொள்ளவேண்டாமா?

இதற்கும் ஒரு முன்கதைச்சுருக்கமிருக்கின்றது; அதாவது, தமிழ்வலை தோன்றி தான்தோன்றித்திரட்டிகள் தோன்றாக்காலத்தே மாலனின் திசைகள் வலையிதழிலே மூன்று ஆண்டுகளூக்கு முன்னே பத்துப்பன்னிரண்டு பேர் எழுதிக்கொண்டிருக்கும்போது, திசைகள் ஆசிரியர் கோபித்துக்கொள்ளாமலிருக்கவோஒ என்னவோ, எழுதும் பதிவர்கள் இவர்கள்தான் என்று "பத்ரி, சந்திரவதனா, வெங்கட்" உள்ளிட்ட பெயர்களை மட்டுமே சேர்த்துக்கொண்டு கட்டுரை எழுதியவர் அந்நேரத்திலே (இப்போதும்) அவ்வப்போது என் பதிவினையும் பார்த்து வந்தவர்தான்; கருத்துரை தந்தவர்தான். திசைகளுக்குக் கட்டுரை எழுதும்போதுமட்டும் என் பெயர் மறந்துவிட்டது. (அட என்னைச் சொல்லவில்லை என்றுதான் அழுகிறேன் அடாவடித்தனம் பண்ணுகிறேன் என்று யோசித்துக்கொள்ளாதீர்கள். நான்தான் வெற்றுப்புகழைத் தேடிப் போய்ப் பதிவு போடுகிற ஆளில்லாதவன் என்று நீங்களே ஜெகத்தோடு சேர்த்துச் சொல்லியிருக்கின்றீர்களே :-))

ஆனால், இதே பழம் பதிவருக்கு, இரவிசங்கருக்கு, பின்னூட்டமாக, "வலைப்பதிவு என்ற பெயரைத் தமிழிலே இன்னார்தான் அவரது முதலாவது இடுகையிலே ஆதனவலைப்பதிவாரம்பத்திலே இட்டார்" என்று அரையாண்டுக்கு முன்னால் என் பெயரைச் சுட்டிச் சொல்ல அறிதலிருந்ததற்கு என்ன காரணமென்று யோசித்துப் பார்த்தேன். வலைப்பதிவு சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்குமே நான்தான் 'அதாரிட்டி" என்ற பிம்பத்தினை எல்லோருக்கும் நல்லவரான இரவிசங்கரிடத்திலும் ஏற்படுத்தலாமேயென்ற வழக்கமான திட்டமிட்ட காலடிதான் என்பது தெளிவு. அதனாலேதான், இரவுக்கழுகைக் கொண்டு இனியும் அடித்துக்கிழித்தாலும், நானே இணைய வரலாற்றுக்கு இன்றுமுதல் அத்தாரிட்டி ஆகிவிடுவதாகத் தீர்மானித்துக்கொண்டிறங்கியிருக்கின்றேன். நாமறிந்து நமக்கு முன்னே இணையத்திலே காலடி வைத்து தமிழிணையத்துக்குசேவை செய்யும் என்னிக்குமே அலட்டிக்காத ஜெண்டில்மென்னு கல்யாணசுந்தரம், ஸ்ரீனிவாசன், முத்து நெடுமாறன், கோவிந்தசாமி, மணி. மு. மணிவண்ணன், பாலா பிள்ளை, ரவீந்திரன், சிவகுருநாதன், வாசுதேவன், சுரதா, குமார் மல்லிகார்ஜுன், டி. சிவராஜ், குமார் குமரப்பன், இன்னும் பெஞ்சிலே குந்தியிருந்தவுங்களைச் சேர்த்துக்கொண்டால், நா. கணேசன், நா. கண்ணன் போன்ற இன்னோரன்ன பழசுகளெல்லாம் இந்தப் பிச்சைக்கார "நானே கூஜா! நானே மந்தி!" ம்யூசிக்கல் சேர் விளையாட்டுக்கு வந்து சேறடிச்சுக்கமாட்டாங்கின்னு ஆச்சா, தொப்பியை நானே வெச்சுக்குவேன்; தரமாட்டேன். (சுஜாதாவுக்குக்கூட இணையத்தமிழ்ச்சேவை - ஒன்றிலே இல்லாத பில்டப்பு குடுத்திருக்காங்க. ஆயாளு ஏதோ ரூ த்ரி ஈமெயிலு வெப்மாஸ்டர் லிஸ்டுக்கு அனுப்பிருக்காரு. அப்புறம் குமுதம் குற்றாலம் பில்டப்பு நெட்டுக்குச் சரிப்படாதுன்னு, வுட்டுட்டு, கணனியை... இல்லையில்லை கணிப்பொறியை (கல்குலேட்டரான்னு கேக்கப்பிடாது, ஆமா!), இண்டர்நெட்டைத் திட்டப் போயிட்டாரே). soc.culture.tamil usernet காலத்துலருந்த சீனியர் பத்ரி, செல்வராஜ், சங்கரபாண்டி, சுந்தரமூர்த்தி, சி. ஆர். செல்வகுமார் இப்புடிப்பட்டவுங்க வந்தா, சலூட்டை மட்டும் அடிச்சிட்டு, "ஒதுங்கிக்க ராசா; இது கூசா விளையாட்டு" அப்டீன்னு ஆடிட்டிருப்பனாம்.... அப்பப்ப, ஆங்காங்கே வலைப்பதிவுமாநாடு நடத்துறவுங்களுக்கு நா எல்லாம் எம்மாம் பெரிய சாமர வீசி, பங்கா இயுத்திருக்கோம், வெறுமனே முற்போக்கு பேசி, பொண்ணுங்களோட சூர்யப்ரகாஷத்தமட்டும் குடையால மூடிவெக்குறவன்னு தெரியவேணாமா? நாமே சூரியனாயுமிருந்தோம்; சூனியமாயிருந்தோம்; சூக்குமமாகி பிக்பாங் த்யரிக்குத் தயிரும் கடைந்தோம். ஆமா!! அட! ப்ராஜக்ட் மதுரைக்கே முதலாவது ஏடெடுத்துத் திருத்தினரு நானுதானுங்களே. கண்டுக்குங்க.. அத மாஞ்சு மாஞ்சு தட்டினவரு கல்யாயணசுந்தரமும் இராம். இரவீந்திரனும் என்கிறத சொல்லிக்கமாட்டேன். ம்!ஹூம்! அப்புறம் என்னோட பேரு, வீறு, கீரு, பம்பரம், பன்னாடை, பழஞ்சோறு, பட்டுவேட்டி எல்லாம் என்னாவுறது?

தமிழ் எழுத்துல கிரந்தம் சேக்கலாமா இல்லையானு வெட்டிக்கிட்டது தொட்டு சென்னையில ராவோட ராவா வெச்ச இரட்டை தம்ளர் தகுதரம்/தராதரம் தொடக்கம் தடாலடியா "செல்வாக்கோட" யூனிக்கோடு தள்ளிக் கொண்டாந்து இடவொதுக்கீடு குட்து உள்ளாறபூந்ததுவரைக்கும் ஆயிரம் சங்கதி இருக்குங்கோ சாமி (அயித்தான், ஒண்ட வந்த பிடாரிக்கு எடம் குட்கிறதானு, பழச தகுதர திஸ்கியிலேயே வெச்சுக்கிட்டிருந்தேனாக்கும்). ஓங்காரத்துக்குக்கூட ஒண்ணுரெண்டு பிட்டு குட்க ஸொல்லி அட்சுக்கிட்டாங்க ஸாமி. அப்பாலிக்கு பாக்குறேன்.



எனக்குச் சொல்ல வேண்டியத உங்க சாட்டுல சொல்லியாச்சா, இனி உங்களுக்கு வேண்டியத... :-)

சரியா பாத்தீங்களா அண்ணாச்சி.... அது, "'இணையத் தமிழின் முதல் வலை இதழ்' பூங்கா"-தானா? :-)
'இணையத் தமிழின் முதல் வலைப்பதிவிதழ்' பூங்கா- என்பதில்லையா? இது ப்ராய்டின் வழுக்கலா? வழுக்கியே பிசகாமல் எழுதினதா? :-)
என்ன பண்றது, தமிழோவியம், திண்ணை, திசைகள், பதிவுகள், இந்தாம் இதழ்கள், கணியன் சஞ்சிகை, (டிஸ்கிலருந்து ப்ராபரைட்டரி பாண்டுக்கு ராவோட ராவா மாத்திக்கிட்ட) விகடன், ஆரம்பத்துல ஒட்டியோடியிருந்த குமுதம், நக்கீரன், கணையாழி, தினபூமி ஒண்ணுமே முழுக்கமுழுக்க வலைப்பதிவை நம்பியே வச்சு வந்த இதழ் இல்லையே சாமி? :-(

-/பெயரிலி. said...

டாக்டர் தங்கமணி (வெச்சுக்குங்க ராசா. நெசமாலுமே கஷ்டப்பட்டு வுழுந்து வுழுந்து படிச்சு எடுத்து வெச்சிருக்கீங்க. போட்டுக்குங்க. இல்லை, அதுகூட விளக்கெண்ணெயோட விழுங்கின வாழப்பழமா போனமா போய்டமான்னு போயே போய்டும்)

======
இல்லை!


இணையத்தமிழின் முதல் வலைப்பதிவிதழ்

அப்படித்தான் பூங்கா சொல்கிறது! :)

Tue Jul 10, 02:56:00 PM 2007
....


அய்யா, பந்தை நான் தட்ட முன்னர் நீங்களே கோல் போஸ்ட் உள்ளாற தட்டினா எப்படி?

நாளைக்கு வலைப்பதிவு சரித்திரத்திலே என் பெயருக்கு முன்னாலே நீங்கள்தான் இதைச் சோல்லிச் சாதித்தீர்களென்று எழுதிக்கொள்ளும் தந்திரமா?
இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், கனம் வலைக்கோட்டார், கோட்டான்கள் தமது குறிப்பிலிருந்து விலக்கிக்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

கொழுவி said...

பெயரிலி சொன்ன எந்த லிஸ்டிலுமே என் பெயர் இல்லையே.. ஏன்..

Boston Bala said...

---ஒண்ட வந்த பிடாரிக்கு எடம் குட்கிறதானு, பழச தகுதர திஸ்கியிலேயே வெச்சுக்கிட்டிருந்தேனாக்கும---

ரொம்ப காலமா, பெயரில்லாம நீங்கதானே ப்ளாகை ட்ரைவ் செஞ்ச ஆளு :)

-/பெயரிலி. said...

/ரொம்ப காலமா, பெயரில்லாம நீங்கதானே ப்ளாகை ட்ரைவ் செஞ்ச ஆளு :) /

வன்மையாகக் கண்டிக்கிறேன். கண்டக் பண்ணி ஆளுன்னு கரெக்டா சொல்லுக்கண்ணா.

அப்புடி கண்டக் பண்றதுக்கு ட்ரைவ் பண்ணினவுங்க அல்லாம் மாலன் சார், ட்ராயர்கிளப் கணேசன் & பரமசிவம்பிள்ளை போன்ற பெரிய ஆட்களாகும்.

என்ன இருந்தாலும் சாதா கண்டக்டர் கண் டக்கர்தான்
ட்ரைவரு குரூட் ட்ரைவர்தான்
:-)

Boston Bala said...

---வழுக்கலா? வழுக்கியே பிசகாமல் எழுதினதா? :-)---

காபி/பேஸ்ட் சறுக்கல்தான் :))

திசைகள்.காம் கூட பதிவுகளில் இருந்து தேர்ந்தெடுத்து இதழ் நடத்துவதை சில காலம் (வாரம்/மாதம்?) செய்து வந்தார்கள். அவர்கள்தான் ஃபர்ஸ்ட்டா என்று தெரியவில்லை.

முழுக்க காபி/பேஸ்ட் ஆரம்பித்த போது, காபிரைட் பிரச்சினை வருமே என்று நட்புடன் தனிமடலில் சிலரும், கீபோர்டில் கத்தி வைத்து பொதுவில் சிலரும் மிரட்டினதாக சில கர்ண பரம்பரைக் கதைகள் காற்றுவாக்கில் fable ஆகிப் போனது :P

---பார்வையாளனாகப் பதிவைச் சொல்லலாம்.---

பதிலுக்கு நன்றி!

---அடிக்கடி வரும் சந்தேகமாச்சே :-)---

இந்த முதன் முதலாக என்பது, தினகரன் 'தமிழகத்தின் No. 1 காலை நாளிதழ்' போல் தொடர்ந்து உறுத்தி்கிறது இடறுகிறது :)

-/பெயரிலி. said...

தோழர் கொழுவி,
நீர் சரியான சாப்பாட்டுக்கடையில சாப்பிடாமலோ அல்லது கொழுவித் தழுவி கழுவி நழுவி பில்டப் எழுப்ப பவுண்டேசன் போட்டுக்கொள்ளாமல் விட்டுப்போட்டோ, சுப்பர் ஹைவே பஸ்ஸில போற பிகரையெல்லாம் கரை சேர்க்கிற ஆள்போல பெண்ணியத்தோழமை பில்டப்பு குடுத்து நிண்டுபோட்டு இண்டைக்கு வந்து உந்த விசர்க்கேள்வி கேட்டால் உமக்குச் சொல்லக்கூடியதெல்லாம், "பட்டுவேட்டி கிடைக்குமெண்டு கனவு கண்டால், கொழுவி, கட்டியிருக்கிர கோவணத்தையும் தாம் அவிழ்த்துக்கட்டிப்போடும் வலைச்சனம்"
வலைப்பதிவு வஞ்சிக்கப்பட்டோர் சங்கம் தொடங்கிப் போராடிப் பாரும் போம்; வழிபிறக்கிறதா பாப்பம்.

-/பெயரிலி. said...

திசைகள்.காம் கூட பதிவுகளில் இருந்து தேர்ந்தெடுத்து இதழ் நடத்துவதை சில காலம் (வாரம்/மாதம்?) செய்து வந்தார்கள். அவர்கள்தான் ஃபர்ஸ்ட்டா என்று தெரியவில்லை.

நினைச்சேன். சுதேசமித்திரன் பாரம்பரியத்திலே அப்படியாக இருந்துதான் அரம்பித்திருக்கவேண்டுமேயென...
எப்படி விட்டுப்போச்சென்று?

திசைகள் இதழ்களை எடுத்து வைத்துப் பார்த்தால் ஆச்சு... நீங்கள் திசைகள் இதழின் பழையவற்றின் உள்ளடக்கங்கள் ஒரு பதிவிலே கொண்டிருக்கின்றீர்களென நினைக்கிறேன்.

பதிவுகளிலிருந்து ... என்று ஒரு பகுதியிருந்தது ஞாபகம் இருக்கின்றது.


/முழுக்க காபி/பேஸ்ட் ஆரம்பித்த போது, காபிரைட் பிரச்சினை வருமே என்று நட்புடன் தனிமடலில் சிலரும், கீபோர்டில் கத்தி வைத்து பொதுவில் சிலரும் மிரட்டினதாக சில கர்ண பரம்பரைக் கதைகள் காற்றுவாக்கில் fable ஆகிப் போனது :P/

"அட அட அது என்ன கதை? பிராணநாதா அதை யாமறிய விரித்துத் தாங்கள் கூறத்தான் வேண்டும்".... என்று பாவை கேட்டுக்கொண்டபோது, பொழுதுவிடிந்து சத்திரத்தின் முன்னே கோழி கூவியது.

-/பெயரிலி. said...

---அடிக்கடி வரும் சந்தேகமாச்சே :-)---

இந்த முதன் முதலாக என்பது, தினகரன் 'தமிழகத்தின் No. 1 காலை நாளிதழ்' போல் தொடர்ந்து உறுத்தி்கிறது இடறுகிறது :)
====

அய்யோ விட்டுப்போச்சுங்கண்ணா!!
கண்டுக்காதீங்க... தினகரன் மாதிரியென்ன ட கிண்டு மாதிரியே Internet's International Blogbuster ரேஞ்சுக்குப் போடாமவிட்டாங்கன்னு சந்தோஷப்படுவீங்களா, அத வுட்டுட்டு இந்த மாதிரி தினகரன் தினமலம் ரேஞ்சுக்கு வலைப்பதிவர்கள் எழுத்த தொகுத்ததை இழுத்து அவமானப்படுத்துவீங்களா? யாராவது சூடு சொரணை இருக்கிற வீரசிவாஜிபதிவருங்க வாசிச்சானுங்க, மேலே நமக்கு வந்திருக்குறதுமாதிரி, புண்தமிழிலேயே இலட்சார்ச்சனை ப்ரீயா ஈமயில் தூது வுட்டுறுவானுங்க. :-)

Mookku Sundar said...

மறுபடி எழுத உட்காருவதற்குள் ஏகப்பட்ட லட்சார்சனை ஆகி விட்டது போல. மன்னாப்பு...மாப்பு :-(

சாக்ரமெண்டோக்கு மிளகாய் அரைக்க வரும்போது அவசியம் சொல்லுங்கள். என் பங்குக்கு கொஞ்சம் "தண்ணீர்" விட்டு மசாலா அரைக்கிறேன். ;-)

உங்களிடம் எழுதித் தீர்க்கிற விவாதமில்லை இது என்றாலும் மூக்கினடியில் ஞொண ஞொண வென்றதால் கேட்டேன். என் ஆதங்கம் எல்லாம் இந்தியதேச அபிமானத்துக்கும் / பக்திக்கும்/ வெறிக்கும் உங்களுக்காவது வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதுதான். எல்லாரையும் ஒரே மூட்டையில் போட்டுக் கட்டுவது எங்கும் வேலைக்காகாது.

மற்றபடி நாளை தமிழீழம் மலர்ந்தால், நாடு என்கிற வகையில் அவர்கள் தங்கள் நலனுக்காகவும், கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்த்தால், உங்களுக்கு இந்தியாவின் இப்போதைய சில நிலைப்பாடுகள் அப்போது புரியுமோ ..என்னவோ..!!

சுதேசமித்திரன் பாரம்பரியம் கூட ஒவ்வொரு ஆளையும் பொறுத்தது என்று எனக்கு(ம்) தெரியும். :-) :-)

Anonymous said...

காபி/பேஸ்ட் சறுக்கல்தான் :))

copy/paste slip? I hear it first time. copy/paste does not slip anything. As a matter of fact, this process should not.
Guns do not kill, but people do :P

Thangamani said...

ரமணீ:

மன்னிச்சுங்குங்க! நீங்க சொல்லவேண்டிய பதிலுக்கு நான் பதில் சொல்லிட்டேன். :)

சுந்தர் கிட்டயும் ஒரு மன்னிப்பு கேட்கனும். ஒரு பதிவு எழுத அழைப்பு விட்டிருந்தார். நம்ம பதிவு நலம் நாடும் நண்பர்களால் இப்ப கராஜ்ல நிக்குது! அதுனால உங்க அழைப்புக்கு பதிவிட முடியல. அதான். :)

-/பெயரிலி. said...

/சாக்ரமெண்டோக்கு மிளகாய் அரைக்க வரும்போது அவசியம் சொல்லுங்கள். என் பங்குக்கு கொஞ்சம் "தண்ணீர்" விட்டு மசாலா அரைக்கிறேன். ;-) /

ஞான் வெறுவெள்ளம் பார்ட்டியாக்கும் :-)

/என் ஆதங்கம் எல்லாம் இந்தியதேச அபிமானத்துக்கும் / பக்திக்கும்/ வெறிக்கும் உங்களுக்காவது வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதுதான். எல்லாரையும் ஒரே மூட்டையில் போட்டுக் கட்டுவது எங்கும் வேலைக்காகாது./
அண்ணே இதைத்தான் நானும் சொல்கிறேன்; செய்கிறேன். (செல்வநாயகியின் பதிவிலேயிட்ட பின்னூட்டம் தொடக்கம், என் பதிவிலே இட்ட பின்னூட்டம் வரைக்கும் பாருங்கள்). சொல்லப்போனால், அப்படியாக ஆளைப் பிரித்து இவர்கள்தான் என்று சொல்லப்போகத்தான், தனிமனிதத்தாக்குதல் என்பதாக பூமராங்காகி வருகின்றது. இரண்டு நிலைவேண்டும். இறைவனிடம் கேட்டேன்.தடவி வாழ ஒன்று, தழுவி வாழ ஒன்று என்று பாடலாமென்றால், நானே ஒரு God Delusionist. நான் என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்!! :-)

அவ்வப்போதாவது இப்படியான சண்டைகள் வரும்போதாவது, என் பதிவுகளை (!!) வாசித்திருப்பீர்களென்ற நம்பிக்கையிலே... நான் ஈழம்-இந்தியா சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எழும்போது, எப்பகுதியினரையும் கறுப்புவெளுப்பாகப் பிரித்துச்சொல்லவில்லையென்று கண்டிருப்பீர்கள். ஆனால், இந்திய இராணுவம் குறித்த அனுபவமும் கண்டவையும் சொல்லவைத்தவற்றை அப்படியான நிலைப்பாட்டினைத் தருகின்றது. எல்லாவற்றுக்கும்மேலாக, The Hindu குறித்த என் நிலைப்பாடு மிகவும் வெளிப்படை. இல்லாவிட்டால், RamWatch என்று நெடுநாட்கள் மினக்கட்டிருக்கமாட்டேன். தொடர்ச்சியாக, ஆயாளின் திரிப்பைக் கவனித்துப் பதியமுடியவில்லையென்ற கவலைமட்டுமே உண்டு. மிகுதிப்படி, ஈழம் தொடர்பாக, இயக்கங்கள் தொடர்பாக நான் நம்புவதைத் தெளிவாக எழுதியிருக்கின்றேன் என்றே நம்புகிறேன். இந்தியா என்ற பொதுநாட்டுக்கெதிராகவோ உள்ளூர் அரசியலிலோ பொதுவாக எக்கருத்தினையும் நான் தெரிவிக்கவில்லை; ஈழப்பிரச்சனை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டினை இந்தியமக்களிடையே The Hindu போன்ற பத்திரிகைகளும் அதன் ஆதரவாளர்களும் இந்திய நலன் என்றபெயரிலே திரித்துத்தருவதை இணையத்தின் விரிவிலேனும் உடைத்துக்காட்டுவதை என் கடமை என்றே கொள்கிறேன். அதன்படியே என் செயற்பாடு.


/சுதேசமித்திரன் பாரம்பரியம் கூட ஒவ்வொரு ஆளையும் பொறுத்தது என்று எனக்கு(ம்) தெரியும். :-) :-)/
இதைக்கூட நான் சாதியை மையப்படுத்தி எழுதியிருப்பதாக மிக இலகுவிலே எளிமைப்படுத்திவிட்டுப்போகலாம். ஆனால், நான் சொல்லவந்தது, அன்றைக்கு முதல் இன்றைக்கு வரை ஒவ்வொருவரும் மொழிக்காற்றிய பங்குகள் அதற்காக சரியான விகிதத்திலே காட்டப்படவேண்டுமென்பது. ஆனால், பதிக்கின்றவர்கள் அதை எத்துணை கருத்திலே கொண்டிருக்கின்றார்கள் என்பதையே கேள்விக்குள்ளாக்கவேண்டும்.

வாழும் காலத்திலேயே தன் சமூகத்தினாலே புறக்கணிக்கப்பட்ட பாரதி பிற்காலத்திலே பெருமிதப்படுத்தப்படுகின்றான். எளிய சந்தங்களுக்காகவும் அவனின் கிளிக்கண்ணி, கும்மி போன்ற பாடுவகையமைப்புக்காகவும் தேசியத்தினைக் கலந்ததற்காகவும் விதந்தோதப்படுகின்றான். ஆனால், அவன் பெற்றுக்கொண்ட கிளிக்கண்ணி, கும்மியிலே குஜிலிப்பாடல்கள் அவன் காலத்திலே தேசியவிடுதலை குறித்தும் சமூகநிலை குறித்தும் வந்து சந்தி சந்தியாக விற்கப்பட்டுக்கொண்டுதானே இருந்தன (சொல்லப்போனால், கண்டியின் தேயிலைத்தோட்டங்கள்வரை, ஆங்கிலேய அரசு இந்நூல்களை வாங்குகின்றவர்களைக் கண்காணிப்பிலே வைத்திருக்கும்வரை). ஆனால், பாரதியே புதுக்கவிதையின் முதல்வன் என்று இந்த "சுதேசமித்திரன் பாரம்பரியத்திலே" அமுக்கிவிட்டுப்போய்விடலாம். இப்படியானவர்கள் அடையாளமில்லாமலே, போஒய்விடுகின்றார்கள். சரி அதைத்தான் விடுவோம். பாரதிக்குக் காலத்திலே முந்திய வடலூர்வள்ளலார் பாடல்களிலே இல்லாத எளிமையா? சமூக அக்கறையா? இப்போது, அந்த வடலூர் வள்ளலாரினையே புத்தரை உள்ளிழுத்த "பாரம்பரியங்களின் உள்ளே இழுத்துவிடத் துடிக்கின்றதைப் பார்க்கின்றோம்.

சுதேசமித்திரனுக்கு முன்னால், தமிழிலே தோன்ற பத்திரிகைகளையும் உவேசாமிநாதய்யருக்கு ஒப்ப அவருக்குக் காலத்திலே முந்திய பழம்நூல்திரட்டிப்பதிப்பித்தவர்களையும் இந்த சுதேசமித்திரன் பாரம்பரியம் வரலாற்றிலே ஒளி/ழித்துக்கட்டிவிடுகின்றது. ஆனால், இப்படியாகப் பாரம்பரியப்பாய் முடைகின்றவர்களுக்கு உவேசாவே ஓரளவுக்குத் தன்னூலிலே வேட்டு வைத்திருக்கின்றார் - ஐன்ஸ்ரீனைக் கடவுள் நம்பிக்கையாளரென்று நிரூபிக்கமுயல்கின்றவர்களுக்க்கு ஐன்ஸ்ரீனே ஆங்காங்கு தெளிவாக மேலிருக்கும் கடவுளைமறுத்தெழுதியதுபோல. வஉசா எவரிடம் எவர்துணையுடன் நூல்களைச் சேர்த்தார் என்று பாருங்கள். அச்சகப்பொறி வாங்க 1840 களிலே ஆறுமுகம்(பிள்ளை) சதாசிவம்(பிள்ளை)யுடன் தமிழகம் வந்தபோதுதான் திருப்பனந்தாள் மடம் (நாட்டுக்கோட்டைச்செட்டியாரோ ஸ்ரீரங்கம் பூச்சிய ஜீயரோ அல்ல - மடங்களின் வேளாளசாதிமேட்டிமைத்தனம் எதுவாகவிருந்தபோதுங்கூட) நாவலர் என்று பட்டம் தந்ததென்பதாக நினைவு. "சீர்திருத்த(sic)சைவம்" காக்கவேண்டித் தொடங்கிய நாவலரின் அச்சகம் அழிந்துபோன நூல்களையும் புதுக்கி அச்சேற்றியது. இன்னொரு சமகாலத்தவர் சி.வை. தாமோதரம். இக்காலத்திலே தமிழ்நாட்டிலும் ஈடுபட்டவர்கள் குறித்த விவாதம் ஃபோரம் ஹப் இலே எங்கோ புதைந்திருக்கின்றது. தேடிப்பார்க்கவேண்டும்.

அழிந்துபோன யாழ் குறித்து ஆராய்ந்து முழுவடிவு கொடுத்துப்பார்த்தவர், அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலே விபுலானந்தர்.இவர்களெல்லாம் இல்லாமல் எல்லாவற்றையும் சுதேசமித்திரன் பாரம்பரியத்துள்ளே போட்டு அமுக்கினால், என்ன செய்வது?

இணையத்தின் வரலாறும் (எனக்கு 8 பிட்டுக்கும் 16 பிட்டுக்கும் எட்டின வித்தியாசம் என்பதற்குமேலே எவ்வித்தியாசமே தெரியாதென்றபோதும்) இப்படியாக சுதேசமித்திரனின் நீட்சியாகிவிடக்கூடாதென்பதே என் கருத்து. இன்று தமிழ் இணையத்திலே நிறையச் செய்த ஒரு நண்பர் சொன்ன தகவலின்படி பார்த்தால், Tamilnet 99 விசைப்பலகையே அடிப்படையிலே கோவிந்தசாமியினது அல்ல. இவையெல்லாம் பதியப்படாமல், இந்த விசைப்பலகை குறித்த வரலாறு எழுதப்பட்டால், என்னவாகும்? (விசைப்பலகையைத் தரப்படுத்துவதிலும் அரசியலிருந்தது. ஆனால், அதைக் குறித்த பின்னூட்டம் இரவிசங்கரின் பதிவிலே அநாமதேயம் ஓருவர் இட்டுக்கிடந்தது. மேலே விபரமாக எழுதினால், அடுத்தவன் போலவே பின்னூட்டும் ஆற்றல்கள் வாழ்க :-))

சரி, தமிழின் முதற்றட்டச்சை நெறிப்படுத்தியவர் முத்தையா என்று சந்திரவதனா சில ஆண்டுகளின் முன்னே ஒரு பதிவிட்டிருந்தார். தமிழின் அகராதியினை முதலிலே தயாரிக்க முயன்றதிலே (தமிழ்நாட்டிலே வாழ்ந்த) யாழ்ப்பாணம் கதிரவேற்பிள்ளையின் பங்கு எவ்வளவு.. சரி எவ்வளவுதான் எம் அரசியல் முறைத்துக்கொண்டாலும், வையாபுரி(பிள்ளை) தானே விரும்பினாற்கூட, ஜெயக்காந்தன்போல, சுதேசமித்திரன் பாரம்பரியத்துள்ளே வரமுடியாது. வி. கல்யாணசுந்தரம்(முதலியார்) உம் வரமுடியாது.

இப்படியான நிலையிலே, இணைய வரலாற்றினையும் சுதேசமித்திரன் பாரம்பரியத்துள்ளே அமுக்க முயன்றால்,
1. நாம் பரமார்த்தகுருவின் சீடர்கள் அல்லர்
2. இணைய ஆறு மிக மிக முழிப்பாகவேயிருக்கின்றது.

Anonymous said...

--"இதை இன்னமும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பூங்கா முகவரிக்கே அனுப்பிக் கேட்டிருந்தால், அவர்கள் தமது விளக்கத்தைத் தந்திருப்பார்களே!" --

பூங்காவின் பொறுப்பாளரிடம் கேட்காமல் வேறு யாரிடம் அய்யா கேட்பது?

தமிழ்மணத்தின் நிர்வாகியும் நீங்கள்தான் என்பது, அறிவிப்புப் பகுதியிலேயே தெரிந்துகொண்டோம்.

தமிழிணைய வரலாறெல்லாம் சொல்லுறீங்கோ. நீங்கதான் தமிழ்மணத்தின் ஆல்-இன்-ஆல். அதைச் சொல்ல வெட்கப்பட்டுக்கிட்டு இருந்தா கவைக்காகுமா?

-/பெயரிலி. said...

தம்பி, அண்ணா, தங்காய், அக்கா


வசதியாக பூங்காவுக்கு அஞ்சல் என்று இரண்டு முகவரிகளிருக்க, அதையெல்லாம் விட்டுவிட்டு வந்து இங்கே கேள்வி கேட்கிறீர்களே? எப்போதாவது சன் டீவியின் செய்தியைப் பற்றி, அதன் செய்தியாசிரியரின் சொந்தவீட்டுக்கோ, ஈராக்கின் அமெரிக்க இராணுவத்தளபதியின் செயற்பாடுகள் பற்றி அவரின் அமெரிக்க வீட்டுக்கோ, கல்கி நடத்துவது பற்றி ராஜேந்திரன் வீட்டுக்கோ மூன்று அஞ்சல்கள் என்றாவது அனுப்ப எண்ணியிருக்கின்றீர்களா? உங்கள் அலுவலத்து மேலதிகாரி (சொந்தமாகத் தொழில் செய்தால் மன்னிக்கவேண்டும்) உங்கள் வீட்டுக்கா வந்து வேலை செய்வது பற்றிய உரையாடலோ சம்பாஷணையோ நடத்துகின்றார். எதுக்கு சாம்பாரிலே அல்வாவைத் தோய்த்துச் சாப்பிட்டே தீருவேன் என்று இடதுகாலைத் தூக்கி நின்றாடுகின்றீர்கள்?

தமிழ்மணம் - நான் என்பதிலான ஒன்று: ஒன்று, ஒன்று: பல, பல: ஒன்று, பல: பல சம்பந்தங்களை விட்டுவிடுவோம் - குறைந்தபட்சம் தமிழ்மணத்திலே நான் ஏதாவது செய்கின்றேன் என்று பலரறியச் சொன்னதற்கு நன்றி. இதுவரை நாள் மொழியாலும் செயலாலும் ஆட்களைத் துரத்தவே நான், தொழிலெல்லாம் அவரவர்க்கு வேண்டப்பட்டோரென்று என்றுதான் திட்டிக்கொண்டிருந்தீர்கள். அவ்வகையிலே முன்னேற்றம்; நன்றி. சரி அதை விடுவோம். இப்போது என்ன செய்யவேண்டும்? தமிழ்மணத்திலே ஆல் -இன் - ஆல் ஆகவிருக்காமல், ஆள் - இன் - ஆள் என்றோ அரசு - இன் - அரசு என்றோ என்று செயற்படவேண்டுமா? யோசிப்போமுங்க :-)
தேவைப்பட்டால், குறை ஏதும் சொல்லித் திட்டவேண்டுமென்றால், நாயே என்று நேரடியாகத் திட்டிவிட்டே போங்களேன்; அந்த நோக்கம் உங்களுக்கும் நிறைவேறி, நிம்மதியாகத் தூங்குவீர்கள் :-)

Anonymous said...

http://wandererwaves.blogspot.com/2006/03/blog-post.html

Anonymous said...

மாலனை எட்டுபோடசொல்லி தெரியாத்தனமா கேட்டுட்டாங்கப்பா. அவரும்தான் சம்பந்தப்பட்ட எட்டைப் போட்டாரு. அதை பூங்காலயும் போட்டுக்கிட்டாச்சு. தான் செஞ்சதைத் தானேய்யா சொன்னாரு. இணைய வரலாறா எழுதிட்டாரு. ஏற்கனவே ஒரு தடவை அவரைத் தொரத்திவிட்டுட்டீங்க. இப்ப மறுபடியும் வந்து புதுத்திரட்டி வேணும்னு சொல்லிட்டாரேன்னு இப்படி குதறி எடுக்கிறது நல்லாயில்லைங்க.

-பெயர் தேவையா-

-/பெயரிலி. said...

/ஏற்கனவே ஒரு தடவை அவரைத் தொரத்திவிட்டுட்டீங்க./

யாரு... இப்போ தொரத்திவிட்டவுங்க(!) தூரத்து இடிமுழக்கமா பின்னியெடுப்பாங்க ஒங்களை. நீங்காச்சு அவங்காச்சு.

நிற்க (இருந்தாலும் சரிதான்; அனந்தசயன போஸ்டுல கிடந்தாலும் சரிதான்) வலைப்பதிவுதான் தளையறு சுதந்திர ஊடகமாச்சே. வா என்று இழுக்கவும் போ என்று தடுக்கவும் குழந்தைப்பிள்ளைகளின் கையிலா மவுசும் (இது வேற மவுசு) மடிக்கணனியும் இருக்கிறது? இத்தனை ஆண்டுகள் எத்தனை ஊடகங்களிலே பயிற்சியும் பட்டறிவும் சொல்லடியும் விமர்சனமும் பெற்ற மாலன் ஒரு பெயரிலாதவனின் பின்னூட்டத்தைக் கண்டு ஓடுவாரென்று நான் நம்பவில்லை. சும்மா அடுத்தவன் வீட்டிலே நெருப்பைக் கிண்டி குளிர்காயாதீர்கள். அணைத்துவிட்டு (நெருப்பை) ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

-/பெயரிலி. said...

இணைப்பு anonymous
இணைப்பினைத் தந்து என்ன சொல்லவருகின்றீர்கள்?

கொலைவெறியரசே,
திட்டுங்க, கேட்டுக்கீறோம்
குத்துங்க, வாங்கிக்கீறோம்
தட்டுங்க, குனிஞ்சுக்கிறோம்

இந்த ஆனந்தக்கும்மி மட்டும் அடிச்சுக்காதீங்க.... அரே பாபா, ஒரே டெலீட்டு. இம்சை

-/பெயரிலி. said...

ஏன் அநாமதேயம்,
சுயத்திலே பரசுராமனும் இல்லாமல், சொன்னவேலைக்குக் கர்ணனும் கிடைக்காவிட்டால், இவ்வளவுதான் வீரமாகப் பண்ணமுடியுமா? :-)

அப்படியே தமிழ்மணத்தின் பின்னூட்டமேல்மூலையிலே இந்த இடுகையை வைத்துக்கொள்ளுங்கள். பின்னாடி வந்து பார்த்துக்கொள்கிறேன்.
நன்றி

கானா பிரபா said...

"இன்னா நாற்பது தாண்டியாச்சா, இனி அவை அறுபது ;-)

நிறையத் தெரிந்துகொண்டேன், கண்டுகொண்டேன் கண்டறியாதனைக் கண்டு கொண்டேன்

-/பெயரிலி. said...

நாற்பது தாண்டுவது முக்கியமல்ல; அதன் பிறகும் (கவரிங்கில்லாத மெய்யான பல்) நகையோடிருப்பதே முக்கியம்.

கண்டறியாதன கண்டுகொண்டாற் சரி; கண்டேன் அவர் திருப்பாதம் என்ற மாதிரி விழுந்தாலேதான் இழுத்துவிடுகிற பிளான் என்று ஐமிச்சமாகி ஓடிப்போவேன் ;-)

பூனைக்குட்டி said...

//சுப்பர் ஹைவே பஸ்ஸில போற பிகரையெல்லாம் கரை சேர்க்கிற ஆள்போல பெண்ணியத்தோழமை பில்டப்பு குடுத்து நிண்டுபோட்டு இண்டைக்கு வந்து உந்த விசர்க்கேள்வி கேட்டால் உமக்குச் சொல்லக்கூடியதெல்லாம், "பட்டுவேட்டி கிடைக்குமெண்டு கனவு கண்டால், கொழுவி, கட்டியிருக்கிர கோவணத்தையும் தாம் அவிழ்த்துக்கட்டிப்போடும் வலைச்சனம்"
வலைப்பதிவு வஞ்சிக்கப்பட்டோர் சங்கம் தொடங்கிப் போராடிப் பாரும் போம்; வழிபிறக்கிறதா பாப்பம்.//

:)

லக்கிலுக் said...

பதிவையும், பின்னூட்டங்களையும் வாசித்தால் சத்தியமாக தாவு தீருகிறது என்று நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் :-(

-/பெயரிலி. said...

பார்த்து... பார்த்து... ஓவார நிமிர்த்தீடாங்க உடன்பிறப்பே!
கவிழ்ந்த தலையிலே இடிச்சுக்கப்போவுது :0)

அப்படியாக உங்களுக்குத் தாவு தீர வைத்ததிலே நெடுங்கால வஞ்சம் ஏதோ தீர்த்த குரூர சந்தோஷம் எனக்கு :-)
சக தோழர்களுக்கும் "யாம் பெற்ற தாவு தாவுக இவ்வையமெல்லாம்" என்று இவ்விடுகை பற்றி எடுத்துரைத்து என் மகிழ்ச்சியை கந்து வட்டிக்கடன் போட்ட குட்டியாக பன்மடங்கு பெருப்பியுங்கள் :-))

கிடக்குது விடுங்க... ஏதோ என்னாலான வெறும் தமிழ்ப்பிணி.. அடச்சே! 'வெரித்தாஸ்' தமிழ்ப்பணி

-/பெயரிலி. said...

some interesting links found....on the net:

1.
விபுலானந்தர்

2.
Book on history of Eelam newspaper journalism released

3.
The beginning of Tamil journalism on Swadesamitran on The Hindu by S. Muthiah... Interestingly, "Madras Mushing" Muthiah is NOT from chennai... not even from India :-) but now in addition to Randor Guy (Rangathurai), he may be the other 'authoritative person' on speaking Madras... சரி சரி அந்தப் பாதிக்கப்பட்ட ஹைத்ராபாத் exodus ஆன யூதரையும் சேத்துக்கலாம் :-)

இதிலிருந்து:

/Rajavritti Bodhini and Dina Varthamani in 1855 and Salem Pagadala Narasimhalu Naidu's fornightlies, Salem Desabhimini in 1878 and Coimbatore Kalanidhi in 1880, were the earliest Tamil journals. But in 1882 there arrived on the Tamil publishing scene a journal that would transform Tamil Journalism. It was started by G. Subramania Aiyer, the Founder-Editor of The Hindu, while he was still with the paper he had founded. He was more familiar with English, but he was to hone his Tamil with the Swadesamitran; in the event he was never to become a great Tamil writer, but he created a whole new Tamil political vocabulary./

இக்கட்டுரை 'சுதேசமித்திரன் பாரம்பரியத்துக்கு' "மாற்றாக" 1916 இலே தோன்றிய ஜஸ்டிஸ் கட்சிசார்பு 'திராவிடன் பாரம்பரியம்' பற்றியும் பேசவில்லை. அக்கட்டுரையின் நோக்கு முன்னர் பின்னர் எது வந்தது என்பது பற்றிப் பேசுவதல்ல. கிறீஸ்துவையும் இராஜீவ் இறப்பினையும் வைத்தே உலக வரலாறும் இந்தியாவின் இலங்கை குறித்த வரலாறும் காலங்குறிப்பிடப்படுவதுபோலத்தான்; மையம் அதே..... (இலங்கையிலே உதயதாரகை, உதயபானு எப்போது தோன்றியதென்று பார்க்கவேண்டும்... அப்படியே, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, வட அமெரிக்காவிலேதான் ஆரம்பக்காலகட்டத்திலே அதீதவளர்ச்சி இணையத்தமிழ் வளர்ந்ததும் எப்படியாக சுதேசமித்திரன் பாரம்பரியத்துக்குள்ளே அமுக்கப்படலாமென்பதும்)

4.
Arumuga Navalar by eelaventhan. [according to the hearsay, eelaventhan has been expelled from India (who overstayed for sometime) on the very next day confronting one Mount Road National English Daily Editor on eelam issue on stage)

On navalar:
In his short life covering 57 years he published around 75 books. They covered his original writings and his commentaries on ancient classics. C.V.Thamotharampillai and later U.V.Swaminatha Iyer followed the footsteps of Navalar in this field of publishing ancient classics. One eminent Tamil scholar Thiru Vi. Ka said "In the field of editing, and publishing old manuscripts Navalar laid the foundation, C.V.Thamotharampillai built the walls and U.V.Swaminatha Iyer beautifully roofed it".

Also see
Arumuga Navalar and the Hindu Renaissance Among the Tamils
D. Dennis Hudson

-/பெயரிலி. said...

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்
ஆசிரியர்கள்:
சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நு·மான்


http://www.tamil.net/projectmadurai/pub/pm0117/elatamil.pdf

".....19ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் பகுதிகளில் உருவாகிய பத்திரிகைச் சூழல் சமய அடித்தளம் கொண்டது. கிறிஸ்தவ மிசனரிமாரே மதம் பரப்புவதற்கெனப் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை 1841இல் அமெரிக்க மிசனரி சார்பில் வெளிவந்தது. கத்தோலிக்கபாதுகாவலன், இலங்காபிமானி ஆகியனவும் 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் கிறிஸ்தவ சமயச்சார்புடன் வெளிவந்த பத்திரிகைகளாகும்.

எனினும் இப்பத்திரிகைகள் சமய எல்லையுள் மட்டும் நின்றுவிடாது பல்வேறு விடயங்கள்பற்றியும் எழுதின. உதயதாரகை தனது முதலாம் இதழ் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு கூறியிருந்தது.

".......உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவானகல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சிமாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்படும்."

சமயசம்பந்தமாகத் தோன்றிய பத்திரிகைகளாயினும் இவை தமது கோட்பாட்டெல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டமை குறிப்பிடத் தக்கது. கிறிஸ்தவர் பத்திரிகைகளை ஆரம்பித்தது போன்று சைவர்களும் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இலங்கைநேசன், சைவாபிமானி, சைவ உதயபானு, இந்துசாதனம் ஆகியவை சைவர்களால் வெளியிடப்பட்டவை. இவற்றுடன் இஸ்லாமிய மறுமலர்ச்சி நோக்கில் முஸ்லிம் நேசன், சைபுல் இஸ்லாம் ஆகிய பத்திரிகைகளும் கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளிலிருந்து வெளியிடப்பட்டன. பொதுத் தகவற் சாதனமாகிய பத்திரிகையின் பரவலான தோற்றம் தமிழ் வசன நடையின் துரிதமான பன்முகப்பட்ட வளர்ச்சிக்கு வழிகோலிற்று. இலக்கண இலக்கிய தத்துவ நூல்களில் உரை வடிவங்களிலே கட்டுண்டு கிடந்த தமிழ் வசனநடை தனது பண்பாட்டெல்லைகளை விரிவுபடுத்தி, புதிய வனப்பும் வளர்ச்சியும் பெற்றமைக்குரிய பிரதான காரணிகளுள் பத்திரிகைத் துறையும் ஒன்றாய் அமைந்தது....."

----------------
(பிகு: உதயதாரகை ஆசிரியர்கள் ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை & கரோல் விசுவநாதபிள்ளை)


ஆகையினால், இத்தால், இப்போதைக்கு, தமிழ்வலைப்பதிவுப்பரப்பலினை "உதயதாரகை பாரம்பரிய"த்தின் நீட்சி என்று அறைகூவி நிறுவி, குழறியடித்து, நானே கைதட்டி, இனிவரும் அத்தனை வலைப்பதிவுகளும் தம் அடியிலே "உதயதாரகை_பாரம்பரியத்தின் தொடர்ச்சி" என்று இட்டுக்கொள்ளவேண்டுமென்று சங்கிலி மகாராசாவின் விந்து தங்கிப்போன சந்ததியின் கொடுமையிலும் கொடுங்கோன்மையான வலைப்பக்கம் சார்பாக ஆணையிடுகிறேன்.

Anonymous said...

அதுசரி சுதேச மித்திரன் எப்போது தொடங்கியது?
அதைத் தெரிந்தால்தானே எது முதல்வந்தது என்று நாங்கள் அறிய முடியும்?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்த உரையாடலைத் தொடர்ந்து கணிணியில் தமிழ் என்ற தமிழ் விக்கிபீடியா கட்டுரையை தகுந்த ஆதாரங்கள், வெளி இணைப்புகளுடன் மேம்படுத்தித் தந்தால் நன்றாக இருக்கும். நன்றி.

முத்துகுமரன் said...

நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன். பதிவில் கொடுத்திருக்கும் லிங்குகளைப் பார்த்தால் இன்னும் அதிகம் அறீந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
ஒரு சந்தேகம் உங்க கடிகாரத்தில் மட்டில் 40மணிநேரமா :-)

-/பெயரிலி. said...

சுதேசமித்திரன்தான் 1882 இல் என்று முத்தையா தன் கட்டுரையிலே குறிப்பிட்டிருக்கின்றாரே? (மேலே காண்க).

இதைவிட, அலையோசை என்றொரு பத்திரிகையும் சுதேசமித்திரனுடன் இருந்ததாக, அசோகமித்திரன் குறிப்பிடுவதாக Lazy Geek (vote the for best indian blog :-)) டமில் ப்ளாக்கரின் இணைப்பு ஒன்று சுட்டுகின்றது. இது சுதேமித்திரன் மறையும் காலத்திலே என்று நினைக்கிறேன் சரியாகத் தெரியவில்லை. ரா. அ. பத்மநாபன் தனது (இந்தியத்)"தமிழ் இதழ்கள் 1915 - 1966" நூலிலே இது பற்றியேதும் குறித்ததாகத் தெரியவில்லை.

இரவிசங்கர், இவை குறித்து இன்னும் விரிவாகவும் துண்டம் துண்டமாகவில்லாது முழுக்கட்டுரையாக எழுதும் எண்ணம் இருக்கின்றது. இன்னும் சில உறுதியான ஆதாரங்கள் சொல்வவற்றுக்கு உசாத்துணைகளாகச் சேர்க்கவேண்டும். சிங்கப்பூரின் நான்யாங் பல்கலைக்கழகப் பரிமாறியீலிருந்து 'வெப்மாஸ்ரர் லிஸ்ட்' இற்கு முன்னைய இணையத்தமிழ் பற்றிய தொழில்நுட்ப உரையாடல்கள் மாற்றப்பட்டன. ஆனால், எத்துணையோ ஈடுபாட்டுனிருந்த பாலா பிள்ளை, கடைசியிலே தமிழ்.நெற், வெப்மாஸ்ரர் லிஸ்ற், மலேசியா நெற் ஆகியவற்றின் பழையசுவடிகளையெல்லாம் அவற்றின் காலம்சார்ந்த முக்கியத்துவத்தினை மறந்துவிட்டு, அழியவிட்டுவிட்டதாகவே தேடியபோது தெரிகின்றது. தற்போது தமிழ்.நெற்றினைப் பதிவர் அமலாசிங் பதிகளமாகவும் திரட்டியாகவும் வைத்திருக்கின்றாரென்று நினைக்கிறேன். எதற்கும் பாலாபிள்ளையிடம் இச்சுவடிகளை இருப்பின் பெற்றெங்கும் ஏற்றினால்,நல்லது. tscii.org ஊடாகப் போனால், வெப்மாஸ்ரர்ஸ் லிஸ்ற் பட்டியல் கிட்டுகின்றது (தமிழ்நெற் கால நண்பர் அலெக்ஸ் பாண்டியனும் மாலனின் பதிவிலே பின்னூட்டமாக இதைச் சுட்டியிருந்தார்). ஆனால், உள்ளே பேசப்பட்டவையிருப்பதாகத் தெரியவில்லை. உத்தமம் பெற்று எங்கேனும் வைத்திருக்கின்றதாவென்று உத்தமர்களே சொல்லவேண்டும்.
தமிழ்நெற்றின் குறிப்பிட்ட காலப்பகுதியை யாஹுகுழுமங்களிலே ஆடிப்பதிவுகளாக (ஹிஹி mirror image) ஒரு காலத்திலே நான் ஏற்றமுயன்றதுமுண்டு. ஆனால், அதன் தொகையும் கடைசிக்காலங்களிலே தமிழ்நெற்றின் மெய்கண்டார் கழித்தபதிவுகளும் அவ்வீடுபாட்டினைத் தவிர்த்துவிட்டது. வெப்மாஸ்ரர்ஸ் லிஸ்ரிலே அப்படியான சேகரிக்கும் தொழில்நுட்பம்சார் ஈடுபாடு எனக்கிருக்கவில்லை. ஆனால், கொஞ்சக்காலமாக உறுத்திக்கொண்டிருந்த, தற்போது உறுதிப்பட்ட விரிவாக இவை பற்றித் தேடியெழுத வேண்டியதன் அவசியம் - சம்பந்தப்பட்ட பலரினையும் கலந்து பேசி - இத்தேடலை முடுக்குகின்றது.

முத்துக்குமரன், நாளுக்கு 4 மணிநேரமா 40 மணி நேரமா என்பது கண்காணிப்பாளர் வீட்டிலே உள்ளாரா இல்லையா என்பதைப் பொறுத்தது.

Boston Bala said...

சமீபத்திய 'புதிய பார்வை'யில் தமிழ் இதழியல் குறித்த கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. (படித்து விட்டீர்களா?)

தட்டச்சிப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

-/பெயரிலி. said...

இதற்கு முன்னர் எழுதிய என் பின்னூட்டங்கள் மூன்று தவறான கோணத்திலும் புரிந்துகொள்ளப்படலாமென்பதாலும் தரப்பட்ட சுட்டியின் தகவல் சம்பந்தமாக திருத்தம் வேண்டியதாலும் விலக்கப்பட்டு மீண்டும் அதன் பகுதியின் சாரத்தை இங்கே தந்திருக்கின்றேன்
---
பாலாஜி, வாசிக்கவில்லை. முடிந்தால், இடுங்கள். பயனாகவிருக்கும்.

தமிழ்க்கணிவரலாறு பற்றிக் காலச்சுவட்டிலும் அங்குமிங்கும் கட்டு உரைகள் காணப்படுகின்றன. ஆனால் இவற்றிலான சிக்கலென்னவென்றால், எழுதுகின்றவர்களின் பக்கச்சார்பின் வெளிப்பாடு வரலாற்றுக்கு வர்ணம் தீட்டிவிடுகின்றது. (இணையத்திலே தேடினாலும் சில கட்டுரைகள் கிட்டுகின்றன - எழுதியவர் எச்சார்பு என்பதைக் கட்டுரையே வெளிப்படுத்திவிடும் :-))

Boston Bala said...

---முடிந்தால், இடுங்கள்.---

இங்கே இட்டிருக்கிறேன்... நன்றி.

History of Tamil Print Magazines & Tamil Nadu Press - Chronology: Savithri Kannan (Puthiya Parvai) « Snap Judgment

-/பெயரிலி. said...

பாலாஜி, நீங்கள் திசைகளை இதிலே "இணையத்தமிழின் முதல் வலைப்பதிவிதழ்" என்பதற்காக வலைப்பதிவுகளோடு சேர்த்துச் சொன்னதற்கு இதுவா காரணம்?
இந்த இணைப்பினைக் காண்க

இனி, பொதுவாக சில பந்திகள்:

(இப்போதைய மாலனின் வலைப்பதிவு வரலாற்றுமேம்படுத்துகையிலே சுரதா யாழ்வாணன் ஓரம்கட்டுப்பட்டுவிட்டதையும் காண்க :-) சுரதா அண்ணே, கீப் த ரிலேஷன்ஸிப் கெண்டினியூட்டி அன்லெஸ் யூ காவ் யூவர் ஓன் மீடியா:-). நான்கூட, இணையத்தமிழ் முன்னோடிகளிலே ஊர் பெயரை வைத்துப் பதிந்த ஆவரங்கால் ஸ்ரீர்வாஸை விட்டுவிட்டேன் பாருங்கள். எழில்நிலா மகேன்கூட 1997 இலிருந்தே தொடர்ச்சியாக வலையிதழ் தொடர்ந்து நடத்துகின்றவர். அவரைக்கூட இணையவிதழ்களைப் பற்றி மேலே என் பின்னூட்டங்களிலே மறந்துவிட்டேன். கனடாவுக்குப் போனால், ஏன் விட்டாய் என்று உதைக்கமாட்டாரோ? உதைக்கமாட்டார். நான்தான் 1997 இலிருந்து என்று வரலாற்றை அவர் எழுதி நான் பார்த்ததில்லை........ அட என்னைக்கூடி எனக்குப் பார்க்க இன்றைக்கு பயங்கர ஆத்திரம் வந்தது. இணையக்குழுக்களிலே வந்த அஞ்சல்களைச் சேகரித்து முதலாவது இணைய இதழ் நடத்தியது நானாக்கும் :-) தமிழ்நெற்றின் ஒரு வார அஞ்சல்களிலே தேர்ந்தெடுத்து இன்றைய பூங்காவின் பார்வையிலே tamil iNaiyam digest என்று முதல் இதழைப் போட்டவன் நானாக்கும். அட நான் சொல்வதை நம்பாவிட்டால், லாஸ் ஏஞ்சல்ஸ் ராம், நா. கண்ணன், ஜெயபாரதி போன்றோரின் படைப்புகளும் அதனுள்ளே சேர்க்கப்பட்டிருந்தன என்றும் சுட்டிக்காட்டுகிறேன். அதனாலே நம்பக்கூடியதாகவிருக்கலாம். [. (நிற்க: ஆனால், சத்தியமாக, பூங்கா என்பதோடு தற்போது ஏதோ விதத்திலே நான் சம்பந்தப்பட்டதாயினுங்கூட என்னுடைய எண்ணத்திலே பிறந்தது அல்லவே அல்ல; அதன் தேவையையும் நிரப்புவெளியினையும் TMI என்பது தோன்ற முன்னரே முன்வைத்தவர்கள் சில நண்பர்கள்). ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான சரியான பங்கினைப் பிரித்துக்கொடுத்துவிடவேண்டும்]

அதைப்போலவே, பசுவையா கவிதைகள், ஞானக்கூத்தன் கவிதைகள், ஆத்மாநாம் கவிதைகள் என்று பெங்களூர் மகாலிங்கம் 1997 மேயிலேயே அடிவைத்தார். இன்னமும் அப்பக்கங்கள் பிழைத்திருப்பது, Thamiz Poem of the Day என்று தினமும் ஒரு கவிதை மயிலையிலே geocities இலே அதற்கு முன்னமேயிருந்து போட்டுக்கொண்டிருந்த நான் இப்படியான வரலாறுகள் எழுதப்படுமென்றால், வைத்திருக்கலாமே என்ற பொறாமையை (;-)) ஏற்படுத்துகின்றது :-) ஆனாலும், 1999 இலே ஏற்படுத்திய வடிவமைதி, கலையமைதி இல்லாத பக்கங்கள் பிழைத்திருப்பதிலே ஓரளவுக்கு மகிழ்ச்சி. இதுபோலவே, ஆசிப் மீரான் ஆகியோர் அக்காலத்திலேயே தமிழ்நெற், உலகத்தமிழிணையம் குழுக்களிலே இருப்பவற்றிலேயிருந்து படைப்புகள் எடுத்து நடத்திய கானல் சஞ்சிகையும் இருந்தது. (வெகுகாலம் பிறகு, sify.com உடன் கூட்டுச் சேர்ந்தார்களா.... அமீரகவோவிந்தா! போயேந்தா!! :-)) தனிப்பட, ஒரு தொடர்ச்சியான இயங்குதலின் வரலாறு என்பதிலே எவரெவர் என்னென்ன செய்திருக்கின்றார்கள் என்பதெல்லாம் முக்கியமில்லாதவை என்ற 'பாரம்பரிய'த்திலே வந்தவர்கள் நாம் :-).... சீனாவுக்கும் சிங்களவர்களுக்கும் மேற்கிற்கும் காலவழிப்பட்ட வரலாறு இருக்கையிலே நாம் பழைய இலக்கியங்களிலிருந்து ஊகிக்கும் உய்த்தறியும் விளையாட்டுகளை நடத்திக்கொண்டிருக்கவேண்டிய துரதிர்ஷ்டம் இதனாலே நேர்ந்ததுதான். அதுகூடப் பரவாயில்லை. ஆனால், இன்றைய அத்தாரிட்டிகள் புதுப்பதிவர்களிடத்திலே ஏற்படுத்தியிருக்கும் பிம்பங்களை வைத்துக்கொண்டு, அடியாட்கள் "ஆரடா ம*ர் நீ; எம்மாம் பெர்ய ஆளு அவுங்க. நீ எப்படி ...." என்று இடுகைகளாலும் பின்னூட்டங்களாலும் ஆட்களின் பண்புகளையே திரித்துக்கொண்டு சட்டையைப் பிடிக்கும்போதுதான், வரலாற்றினை வடிவாக எழுதிவைக்காமல், இன்றைய வரலாற்றாசிரியர்களின் முன்னோடிவிளையாட்டுக்கும் 'அத்தாரிட்டி'க்கும் தலையைச் சுற்றித் தாமே சுழற்றும் ஒளிப்பிம்பத்துக்கும் நாம் பலி கொடுப்பது எத்துணை என்று தெரிகின்றது . இந்த கணிச்சொற்களுக்குத் தமிழ் தேடும் விளையாட்டுகளையும் 1997 இலே தமிழ்நெற்றிலே முற்போடுதலும் பின் கருத்துகளுடன் திருத்தி இறுதிவடிவம் தருதலுமாக நடத்தியிருக்கின்றோமென்பதை விளக்கமாக இன்னொரு முறை... (கவனிக்க... முதற்படிவிளையாட்டுத்தான்... அதனாலே சொற்களே வசனங்கள்போலத் தோன்றும் விசனமுண்டு) இப்போதைக்கு 2004 இற்கு முன்னமே, கணிச்சொல் பற்றிய விளையாட்டுகளின் தேவை பற்றி எழுதிய இரண்டு அஞ்சல்களின் இணைப்புகள் இங்கே
http://www.tamil.net/list/2000-03/frm01359.html
http://www.tamil.net/list/2000-03/frm01360.html


இன்றைக்கு இணைய ரவுடியாகி முற்போக்குடன் அருமைத்தம்பிகளின் அக்காமார் கைகளைப் பிடித்து இழுப்பதாக அலறும் வலைக்கழுகுகளுடன் பிராண்டுப்படும் கேவலநிலை வருகையிலே, சுதேசமித்திரன் பாரம்பரியங்களைக் கேட்கையிலேதான், சுயபிம்பமாக்கலையும் சேர்த்துப் பிசைந்து வரலாற்றினைப் பதிந்து வைத்திருந்தால், "பெற்ற தந்தை தாயிருந்தால் உமக்கிந்த நிலையெல்லாம் வருமோ ஐயா! கல்லால் ஒருவன் அடிக்க, காண்டீபம் எனும் வில்லால் ஒருவன்... பித்தா பேயா என..." என்று இழுத்திழுத்துப் பாட வேண்டிய தேவையிருந்திருக்காது..... அந்தச் சொந்தக்கதையை விடுவோம். அட! அருணா ஸ்ரீனிவாசன், "கோவிந்தசாமியா இணையபிதாவாச்சே" என்கிறாரே. எனக்கு அருணா ஸ்ரீனிவாஸன் கோவிந்தசாமி பற்றி மாலனைப் பற்றி ஒன்பது வசனங்களும் பத்தாவது வசனமாக "இப்படியான பனைமரத்தோடுதான் பசுமாட்டைக் கட்டினார்கள்" என்றில்லாமல் முழுமையாகப் பத்து வசனங்கள் கோவிந்தசாமி பற்றியும் இணையத்தமிழ் வரலாற்றினையும் பற்றி அருணா அவர்களைச் சுடச் சுட முன்னாலே போய்த் திடீரென நின்று கூகுலாண்டவர் கிளறுதுணை, மாலன் சாருக்கு போன் இல்லாமல் எழுதக் கேட்க ஒரு சின்னச் சின்ன சிறகடிக்கும் ஆசை... ஹூம்! இப்படியான ஆசைகளெல்லாம் நிறைவேறுவதெங்கே! :-(

எல்லாவற்றையும்விட, முழுக்க முழுக்க சுதேசமித்திரன் பாரம்பரியத்தை எதிர்த்தபடி பல சஞ்சிகைகளையும் கொண்டு பதிப்பாளர் நூலகப்பட்டியலையும் கொண்டு வந்த intamm.com இப்படியான சுதேசமித்திரன் பாரம்பரியம் வைத்து வரலாறு எழுதப்படும் என்ற நிலையிலே தக்கித்திருந்திருக்கவேண்டும். இந்தாம் இணையத்திலே இல்லாமலே போனபோது, வாசன் இந்தாம் நடத்திய பெரியவர்-இந்தாம் மூடியது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார். அதை வாசன் தந்தால், இங்கே இணைக்க விரும்புகிறேன்.

இங்கே என்னைப் பற்றியே இங்கே அதிகம் விழுந்திருக்கின்றதுபோலத் தோன்றினால், மன்னிக்கவேண்டும். எனக்கு - ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, ஏழு பிட்டுக்கும் எட்டுப்பிட்டுக்குமான வித்தியாசம் குழற்புட்டா என்று கேட்கிர அளவிலேதான் தொழில்நுட்பஞானம்; ஆக, தமிழ்த்தொழில்நுட்பத்திலே நோண்டிய மாபெரும் தமிழ்த்தொழில்நுட்பச்சேவை என்னவென்றால், 1998-1999 இலே மணி. மு. மணிவண்ணன் தயாரித்த tsc convertor (தகுதர எழுத்துருமாற்றி)இலே இப்படியான எழுத்துரு, இயங்குரு எதிலுமே சேர்ந்தியங்காதிரு ஈழத்தவரின் பாமினி வகை 'ஒற்றைநாடி' எழுத்துருக்களை நண்பர் யமுனா ராஜேந்திரன், பத்மநாப ஐயர் ஆகியோருக்காக, திண்ணை, காலச்சுவடு ஆகியவற்றுக்கு தாப்/தாம் தப்புக்கட்டுக்கு மாற்றும் நோக்குடன் மாற்றித்தாயம் தயாரித்ததுமட்டுமே. சிக்காக்கோவிலிருந்து வந்த சுவடி மாற்றியும் அடிக்கடி மீயுருச்சுட்டிகளை இட்டால், தமிழ்ப்பந்திகளைத் தின்றுவிடுவதால், அதையும் பயன்படுத்தமுடியாதிருந்தது. இந்த ஒற்றைநாடி எழுத்துருக்களை இரட்டைநாடி எழுத்துருகளாக மாற்றுவதிலே இருந்த நகைச்சுவை இன்னொரு முறைக்கு.... கடைசியாக, இந்த சுரதா என்ர பேர்வழி வந்து என்னுடைய தன்னார்வத்தொழிலுக்கும் மண்ணைப்போட்டதோடு என் தொழில்நுட்பத்தின் சேவையோ தேவையோ எவருக்கும் வேண்டப்படாது போயேபோய்விட்டது :-) இப்படியான தமிழ்த்தொழில்நுட்ப அறிவோடு இத்தனையையும் இங்கே குறிப்பிடும் காரணம் என்னவென்றால், என்னைச் சுற்றி நடந்தவற்றைத்தான் நான் உறுதியாக..... ஆனால், ஆதாரத்துடன் பேசமுடியும்.

ஆனால், ஒரு பதிவைத் திறந்த காலத்தை வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு முன்னோடிகள், கடலோடிகள் என்று வரலாறு எழுதும் உயர்வுநவிற்சிகள் ஒழிந்து நிகழ்வுகளைப் புனைகதையாக்குதலுக்கும் வரலாறாகப் பதிதலுக்குமான வேறுபாட்டினை நாம் உணரவேண்டும். சோழர் வரலாற்றைக் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி எழுதுவதற்கும் நீலகண்டசாஸ்திரி எழுதுவதற்குமான வித்தியாசம் இணைய வரலாற்றினை எழுதுவதிலும் வரவேண்டும்) இதனாலேதான், இரவிசங்கர், "மாலனின் பதிவின் பின்னூட்டமாக, இப்படியாகவெல்லாம் பேசுவார்கள், இதைக் கண்டுகொள்ளாமலே போகவேண்டும்" என்று எழுதும்போது, சிறிது கோபமும் நிறையப் பரிதாபமும் ஏற்படுகின்றது; கோபம், இதன் பின்னாலான அரசியல்களைப் புரிந்துகொள்ளாமல், பலரின் செயற்பாடுகளினாலான தொடர்ச்சியின் பயன்களைச் சிலர் எட்டில் ஒன்றாக எழுதிவிட்டும் அதனைப்படிக்கும் வாசகர்கள் எழுதியவரின் ஏனைய துறைகள் தந்த பிரபலத்திலே "அறியத்தந்ததற்கு நன்றி" என்றும் எழுதிப் போவதன் வினை இப்போது தெரியாது...... அ. முத்துலிங்கம் விக்கிபீடியா பற்றி காலச்சுவட்டிலே இப்போது எழுதியிருக்கின்றாரென மகிழ்கிறாரே, இதன் எதிர்வினையும் விக்கிபிடியாவின் வரலாற்றாக்கமும் விக்கிபீடியாவிலே எவரின் பங்களிப்பு எவ்வளவு என அதிகம் வேண்டாம்....இரண்டாண்டுகளிலே தமிழகச்சஞ்சிகைகளும் இணையச்செவிவழிச்செய்திகளும் சொல்லும்போது இரவிசங்கர் படக்கூடிய சிறிது கோபத்திலும் நிறைந்த சுயபரிதாபத்திலும் தெரியும். நிச்சயமாக முத்துலிங்கம் மிக நல்ல எழுத்தாளர்; அதிலும், ஈழத்து எழுத்தாளர்களிலே அவரும் சேரனும்... ஓரளவுக்கு ஜெயபாலனும்மட்டுமே (எஸ்பொகூட இல்லை) தமிழகத்திலே தெரிந்தவர்கள். தமிழக வாசகர்களுக்குப் புரியும்படி கதை புனையும் ஓரிரு ஈழத்து எழுத்தாளர்களிலே அவரும் ஒருவர் என்று வலைப்பதிவுகளிலே வாசித்திருக்கின்றேன்.. இதைப் அவர் கதைகள் புரிந்துகொள்ளப்படும் பொறாமையின் காரணமாக மட்டும் சொல்லவில்லையென்பதையும் சுட்டவிழைகிறேன் :-) )


சந்திரவதனா போன்றவர்கள் திசைகளைப் பார்த்து வலைப்பதிவுகளுக்கு வந்தார்களா, அல்லது யாழ்.கொம் தளத்திலே ஏற்கனவே பிரபலப்படுத்தப்பட்ட வலைப்பதிவு என்ற பதிகளமுறையைப் பார்த்து வந்தார்களா என்பதையும் அவரைப் போன்றவர்களே சொல்வது வரலாற்றினை ஒழுங்குபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவும். யாழ்.கொம் இலே சந்திரவதனாவின் பதிவுகள் ஆரம்பிக்கும் நாட்கள் 01/01/2003 என்று காட்டுகின்றன. ஆனால், பல பதிவுகள் அப்படியாகக் காட்டுவதால், அது களப்பதிவு நிர்வாக வசதிக்காக ஆரம்பப்பதிவு நாட்களை நிர்ணயித்துக்கொண்டு எதேச்சை நாளாகவுமிருக்கலாம். ஒரு பதிவு தொடங்கப்பட்ட காலம் 31/12/2002 என்று காட்டுகின்றது: கல்லட்டியல் (கார்த்திக்கு, தம்பீரீரீரீ.. நவனிடம் பறித்த வலைப்பதிவு முன்னோடிகளிலே முதலோடியிருக்கையைச் சந்திரவதனா பறித்துவிட்டாரோ? :-)). இந்த 01/01/2003 பதிவுகளிலே பல ஈழவிடுதலை ஆதரவான இடுகைகள்; உ+ம்: திலீபன் சிறப்புக்கவிதாஞ்சலி .
"......நாட்கள் கடந்தன்
காந்தீயப் போர்வைகள் கிழிந்தன,
மகாத்மா என்ற மாபெரும் வார்த்தையை
தனக்கே உரித்தான
தனியான அணிகலனாக
தானே தனக்குச் சூடிக்கொண்ட பாரதம்
வேஷம் கலைந்து
விவஸ்தை கெட்டு-வெறும்
கோதாரியாக குறிகெட்டு நின்றது
காந்தீயமென்று போற்றிப் பூஜிக்கும்
குவலயத்து மக்களெல்லாம்
குருடர்களாய்ப் போயினரோ! ....." என்ற வரிகளை உள்ளடக்கிய இக்கவிதையைச் 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' உள்ளடக்கி ஏற்றுக்கொள்ளுமா என்பதை அப்பாரம்பரிதை முன்வைத்தவரையே தீர்மானித்துக்கொள்ளவிட்டுவிடுகின்றேன். (ஆனாலும், 'பேயென்றாலும் அதன் சரியான பங்கைக் கொடு' என்ற சொற்றொடருக்கேற்ப, சந்திரவதனாவின் இப்பதிவுகள் யாழ்.கொம் இன் வலைப்பதிவுத்தரவுத்தள மேலாண்மையின் வசதிக்காக இப்படியாக நிகழ்ந்ததா என்பதை ஒன்று சந்திரவதனா சொல்லவேண்டும் அல்லது யாழ்.இணையம் ஆட்கள் சொல்லவேண்டும். அதுவரைக்கும் சுதேசமித்திரன் பாரம்பரியம் - உதயதாரகை பாரம்பரியம் தரும் நீட்சிகள் பேசாமல், நாங்கள் இணையவரலாற்றினை மட்டுமே பார்க்கவேண்டும்.

திசைகள் - பூங்கா பற்றிய பாலாஜியின் கருத்துக்கு மேலேயிருக்கும் திசைகள் பக்க அறிவிப்பு, முதல் பூங்கா ஆசிரியர் தலையங்கம் வைத்தே மிகவும் இலகுவாகப் பதில் சொல்லிவிடலாம். எதுக்கும் வீட்டிலே யாராவது என்னை மண்டையிலே போட்டாலுமென்பதால், [அகாலவேளையிலே அகாலமானார் என்று கவித்தூ வமாக மரண அற்றிவித்தல் தூவ வசதிப்பட்டாலுங்கூட] பிறிதொரு நேரத்தில்.....
:-)

-/பெயரிலி. said...

பாபாலாஜி மிக்க நன்றி.
மிகவும் அவசியமான கட்டுரையாகத் தெரிகின்றது... இதழ்களைப் காலநிலைப்பட்டியல் படுத்தும் வகையிலே இது மிக மிக அவசியம்.

-/பெயரிலி. said...

திருத்தம்:
/Thamiz Poem of the Day என்று தினமும் ஒரு கவிதை மயிலையிலே geocities இலே அதற்கு முன்னமேயிருந்து போட்டுக்கொண்டிருந்த/

angelfire என்று வாசிக்கவும்

Aruna Srinivasan said...

//..."இப்படியான பனைமரத்தோடுதான் பசுமாட்டைக் கட்டினார்கள்" என்றில்லாமல் முழுமையாகப் பத்து வசனங்கள் கோவிந்தசாமி பற்றியும் இணையத்தமிழ் வரலாற்றினையும் பற்றி அருணா அவர்களைச் சுடச் சுட முன்னாலே போய்த் திடீரென நின்று கூகுலாண்டவர் கிளறுதுணை,...//

ரமணீதரன்,

அப்படியெல்லாம் ரொம்பக் கஷ்டப்படாதீர்கள். தமிழ் கணினி, மற்றும் தமிழ் இணைய அரசியலில் நுழைய எனக்கு விருப்பமில்லை. ஆனால், நா. கோவிந்தசாமி எப்படி முதன் முதலில் தட்டச்சு செய்த தமிழை வலையேற்றினார் என்பதற்கும், இணையத் தமிழின் பிதா என்று நான் கூறியதற்கும் ஆதாரம், இங்கே -

http://arunasarchive.blogspot.com/2007_07_01_archive.html

என் மற்றொரு வலைப்பதிவில் கொடுத்துள்ளேன். ஏழு கடல் தாண்டி அருணா ஸ்ரீனிவாசனைக் கேள்வி கேட்கும் சிரமம் உங்களுக்கு வேண்டாமே என்று எனக்கு நேரடியாக தெரிந்த ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன். எள்ளல், நக்கல் இவற்றுக்கு செலவழித்தது போக நேரம் பாக்கி இருந்தால், சிரமம் பார்க்காமல் இங்கேயும் எட்டிப் பாருங்கள்.

அதிலிருந்து ஒரு பகுதி:

"Today if you want to read Tamil messages on the Internet, they are transported in graphic mode. The Tamil letters are converted into graphic mode, called Graphic Interchange Format and you get the graphic images or the letters. But to communicate in the long run, this would be too troublesome and time consuming. The images take a lot of time in the conversion process. Text mode is the only solution"

என்று எகனாமிக் டைம்ஸிற்காக என் பேட்டியில் அவர் சொல்லியபோது, உலகின் இதர பகுதிகளிலும் இவ்வாறு தமிழ் எழுத்தை வலையேற்றும் முயற்சிகள் நடந்துவருவதையும் கூறினார். அதுவரையில் இணையத்தில் ஏற்றப்பட்ட தமிழ் எழுத்துக்கள் அப்படி GIF முறையில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. தட்டச்சு செய்து நேரடியாக ஏற்ற பல முயற்சிகள் ஒரே சமயத்தில் நடந்து வந்தாலும் 1995ல் முதன் முதலில் "தட்டச்சு செய்து" நேரடியாக ஏற்றப்பட்ட தமிழ் கோவிந்தசாமியுடையது என்ற வகையில் அவர் தமிழ் இணையத்தின் பிதா என்று நான் குறிப்பிட்டதில் தவறேதும் இல்லை.

மனமிரூந்தால் இதையும் படியுங்கள்.
http://www.tamilnation.org/digital/tamilnet99/govindasamy.htm

ஒருவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்ட பதிவில் அவருடைய நினைவுகளைப் பற்றி நாமறிந்த சிறு குறிப்பைப் பகிர்ந்து கொள்வது மனித இயல்பு. ஒரு வேளை நான் இணையத் தமிழ் ஆர்வலர்கள் என்று கட்டுரை எழுத நேர்ந்தால் நிச்சயம் பலரின் பங்காற்றல்கள் பற்றியக் குறிப்புகள் அதில் இருக்கும்.

இருந்தாலும், இன்று நீங்கள். நாளை இன்னும் வேறு யாருக்காவது இணையத் தமிழ் வரலாறு பற்றியோ அதில் பங்காற்றியவர்களைப் பற்றியோ சந்தேகம் எழலாம். அவர்களைப் போன்றவர்களுக்காக திரு கல்யாணசுந்தரம், மற்றும் முரசு நெடுமாறன், போன்ற நான் சந்தித்த ஆர்வலர்களின் அனுபவங்களையும், செய்திக் கட்டுரைகளையும் - என் கையில் கிடைத்தவரையிலும் - மேலே ஆரம்பத்தில் கொடுத்த சுட்டியில் கொடுத்துள்ளேன். மற்றவர்களைப் பற்றி அறிந்ததுண்டு - சிலருடன் கருத்து பரிமாற்றமும் உண்டு - ஆனால் சந்தித்ததில்லை.

நன்றி.

Anonymous said...

saw your name listed in thisaigal

Anonymous said...

அண்ணே பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்ணேன். உங்க தம்ப்ப்ப்ப்ப்ரீ முதல் வலைப்பதிவராமா? எப்போ 2002ல வலைப்பதிவு தொடங்கினாராமா? சுட்டியெல்லாம் போட்டு அமர்க்களப்படுத்தினீங்களே அண்ணனும் தம்பியும். முழுப்பூசணியைச் சோத்துல போட்டு முழுங்குறவங்களாச்சே ரெண்டுபேரும். நீங்க ரெண்டு பேரும் என்னமாதிரி முடிச்சவிக்கிங்கன்னு இந்த லிங்கைப் பார்த்தா தெரியுதே.

2004 வருசம் மார்ச் மாசம் நாலாந்தேதி வலைப்பதிவு தொடங்கிட்டு இப்ப வந்து அண்ணனும் தம்பியும் காதுல பூ சுத்திட்டிருக்கீங்களே.

நீங்க இப்படி பொய் சொல்லுற ஆளுன்னு தெரியாமப்போயிருச்சுப்பா.

http://web.archive.org/web/*/http://karthikramas.blogdrive.com

http://www.web.archive.org பொய் சொல்லுறாங்களோ? இருக்கும். இருக்கும். இராம இலக்குமணர்களைப் போய் இப்படி பொய்யர்களாக்கிட்டாங்களே. அவனுங்கதான் பொய்பித்தலாட்டம் போடும் கும்பல். சொல்லுங்கண்ணே. சொல்லுங்க.

-/பெயரிலி. said...

அருணா ஸ்ரீனிவாசன், உங்களைப் போன்ற முன்னோடிகள் எல்லாம் வந்து பதில் சொல்லவேண்டும் என்பதற்காகத்தானே தூண்டிலே போடுகிறேன் :-)
அரசியல் இல்லாமலிருப்பதுதான் நல்லது. நம்புகிறேன்.
உங்களிடம் கேள்வி வைக்கமுன்னால், நான் என் பின்னூட்டத்திலே http://akazh.blogspot.com/2005/04/blog-post.html என்றொரு இணைப்பினைத் தந்திருக்கின்றேன் (கணிச்சொற்களுக்குத் தமிழ் தேடும் விளையாட்டுகளையும் 1997 இலே தமிழ்நெற்றிலே முற்போடுதலும் பின் கருத்துகளுடன் திருத்தி இறுதிவடிவம் தருதலுமாக நடத்தியிருக்கின்றோமென்பதை) என்பதைப் பார்த்தீர்களோ தெரியவில்லை. பார்த்திருந்தால், அதிலே உங்கள் 2000 கட்டுரை (தமிழ்நெற் 2000 பற்றியது) ஒன்றுக்கும் இணைப்பினைக் கொடுத்திருக்கின்றேன் என்பதையும் பார்த்திருக்கக்கூடும். அதனால், உங்களைச் சும்மா எள்ளல், நக்கலுக்கு மட்டும் கேள்வி கேட்கவில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும்.

இணையபிதா என்று சொல்லி 1995 இலே முதன்முதலிலே இணையத்திலேஎ /"தட்டச்சு செய்து" நேரடியாக ஏற்றப்பட்ட தமிழ் கோவிந்தசாமியுடையது/ என்று 'தமிழ் இணையத்தின் பிதா' சொல்கின்றீர்களே? அது எப்படி? [சரி திமுக ஆதரவாளர் கோவிந்தசாமி, சுதேசமித்திரன் பாரம்பரியத்துள்ளேயே அல்லது திராவிடன் பாரம்பரியத்துள்ளேயே வருவார் என்பது உங்களுக்கான கேள்வியில்லை.... சொல்லப்போனால், சிங்கப்பூர் கோவிந்தசாமியை எதற்கு இந்த இரண்டு பாரம்பரியத்துள்ளேயும் அடக்கவேண்டும்?] கல்யாணசுந்தரத்தின் tamil electronic library எப்போது வந்தது? முத்துநெடுமாறன், கல்யாணசுந்தரம் இவர்கள் எப்போது செயற்படத்தொடங்கினார்கள் என்பதையேனும் பார்க்கலாமே? கோவிந்தசாமி இணையப்பிதா என்றால், அவரோடு இதிலே ஈடுபட்ட அந்த நான்யாங் சிங்கப்பூர் சீனத்தொழில்நுட்பக்காரர்தான் தமிழிணையமாதாவாகவேண்டும்.

நீங்கள் வாசித்திராவிட்டால், கோவிந்தசாமியின் tamilnet 99 கட்டுரை - TamilNation இலே இருப்பதை நான் ஏற்கனவே இப்பதிவிலே இணைத்திருக்கின்றேன் :-) [தவிர, tamilnation சத்தியேந்திரா திம்பு பேச்சுவார்த்தையிலே கலந்துகொண்டவர்.... சுதேசமித்திரன் பாரம்பரியத்துள்ளே வருவாரோ தெரியவில்லை.... The Hindu எங்காவது archives vernacular language and regional activities இலே இக்கட்டுரையை வைத்திருக்கின்றதா என்று தேடித்தான் பார்க்கவேண்டும்.

அன்புள்ள அநாமதேயம்,
மாலன் என் பதிவு பெயரைச் சேர்க்கவில்லை என்பதைச் சொல்லி இவ்விடுகையின் நோக்கம்? மாலனுடனான தகராறு .சுதேசமித்திரன் பாரம்பரியம்.'

நான் வசதியாக மறந்து போனவர் என்று சொன்னது இன்னொரு 'முன்னோடி'யின் அரசியல்விளையாட்டு என்பதையல்லவா? இந்த அரசியல்விளையாட்டுத்தானே கழுகையும் கோட்டானையும் விட்டு அடிக்கும்வரை நீள்கிறது. அவர் தம்மைப் பற்றி என்ன இழவை எண்ணிக்கொண்டாலும் சரி, இவரது இணைய அரசியலைக் கண்டுகொண்ட காலகட்டத்தின்பின்னாலே எச்சரிக்கையுடனேயிருந்தேன். ஆனாலும், என்னையே தெரியாத கழுகும் கௌதாரியும் இந்தளவுக்கு தூற்றலிலும் தூற்றலாகப் பொய்யைக் கக்கும்வண்ணம் இவரது அரசியல் பேட்டை அரசியலாகுமென்றால், இந்த மகுடங்களின் உள்ளே என்ன நெளிகின்றதென்பதை பூனைக்குட்டி தானாக வெளியே வரும்வரை சுட்டிக்கொண்டேயிருப்பேன். நமக்கு இழப்பதற்கு எதுவுமில்லை :-)

நேற்றைக்கு webarchives இணைப்புத்தர தேடியவர் நான் சொல்கின்ற அரசியல் உள்ள திசைக்கட்டுரையையும் அதையும் தேடிக்கண்டுகொள்ளக்கூடாதா? ;-)
ம்ம்ம்ம்..... ஒருவேளை நல்ல தெளிவான பதிவுகளைமட்டுமே கட்டுரையிலே சேர்த்தாரோ? அப்படியானால், என் பதிவு விட்டுப்போக வாய்ப்புள்ளதுதான் - கட்டுரைக்கு வெளியே அவர் பதிவுகளைப் பற்றிக் குறிப்பிட்ட கருத்துகளைப் பொய்யென்று கொள்வோம் ;-)
இங்கும் திசைகள் கட்டுரை எனக்கு முக்கியமில்லை... இதுவரை தொடர்ந்து நான் எழுதுவதை வாசிப்பவரானால், திசைகள் சஞ்சிகையை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்களே :-) எனது கருத்தெல்லாம் - ஈகோ என்று வைத்துக்கொள்ளுங்கள் பொறாமை என்று வைத்துக்கொள்ளுங்கள், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை - இணைய அரசியலையும் கொஞ்சம் பதிந்து சுடுதண்ணீரிலே உயிர்க்கோழியை அமுக்கித் தோலை உரிப்பதுமாதிரி உரித்துவைப்போம் என்பதே.

Anonymous said...

இதில் பேசப்படும் விடயங்கள் பற்றி நமக்கு போதிய அறிவு இல்லை. ஆனால் பல விடயங்களை அறிய முடிந்தது.


//அண்ணே பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்ணேன். உங்க தம்ப்ப்ப்ப்ப்ரீ முதல் வலைப்பதிவராமா? எப்போ 2002ல வலைப்பதிவு தொடங்கினாராமா? சுட்டியெல்லாம் போட்டு அமர்க்களப்படுத்தினீங்களே அண்ணனும் தம்பியும். முழுப்பூசணியைச் சோத்துல போட்டு முழுங்குறவங்களாச்சே ரெண்டுபேரும். நீங்க ரெண்டு பேரும் என்னமாதிரி முடிச்சவிக்கிங்கன்னு இந்த லிங்கைப் பார்த்தா தெரியுதே.

2004 வருசம் மார்ச் மாசம் நாலாந்தேதி வலைப்பதிவு தொடங்கிட்டு இப்ப வந்து அண்ணனும் தம்பியும் காதுல பூ சுத்திட்டிருக்கீங்களே.

நீங்க இப்படி பொய் சொல்லுற ஆளுன்னு தெரியாமப்போயிருச்சுப்பா.

http://web.archive.org/web/*/http://karthikramas.blogdrive.com

http://www.web.archive.org பொய் சொல்லுறாங்களோ? இருக்கும். இருக்கும். இராம இலக்குமணர்களைப் போய் இப்படி பொய்யர்களாக்கிட்டாங்களே. அவனுங்கதான் பொய்பித்தலாட்டம் போடும் கும்பல். சொல்லுங்கண்ணே. சொல்லுங்க.
//

அனனியாக நீங்கள் கொடுத்த தொடுப்புக்கு போய் என்னால் கைவிடப்பட்ட வலைப்பதிவு எப்படி இருக்கிறது என பார்த்தேன்.

2005 இல் பொழுது போகமல் ஆரம்பித்த வலைப்பதிவு.

ஆனால் நீங்கள் தந்த இணைய Archive (சேமிப்பில்) 2006 இல் நான் பதிந்த பதிவுகள் தான் உள்ளன.
2005 இன் எந்த பதிவும் இல்லை.

அதற்கான ஆதாரம் இதோ

http://img402.imageshack.us/my.php?image=kumili1oo2.png

http://img292.imageshack.us/my.php?image=kumili2os3.png

(இப்போது ....yar.net தனது வலைப்பதிவு வழங்கும் சேவையை நிறுத்தியதால் எனது பதிவுகள் எவையும் இயங்கு நிலையில் இல்லை.)

(இங்கு நான் வலைபதிந்ததை சொல்லவரவில்லை. அந்த Archive வலைபதிவின் முழுபதிவுகளையும் உள்ளடக்கவில்லை என்பதை சொல்ல மட்டுமே)

-/பெயரிலி. said...

யோவ் அநாமதேயம்
உங்களுக்கு web.archive இலே கிண்டக்கூட லிங்கு தரவேணும். பொறகு ஏதோ நீங்கதான் கொலம்பஸ் மாதிரி ஏற்கனவே இருக்கிறதைக் கண்டுபிடிச்சு பதக்கம் குத்திக்குங்க.... :-)
கிண்டுங்க கிண்டுங்க
ஒண்ணு, web.archive இலே எல்லாமே வந்துடுமா?
இந்த டுபுக்கு "எங்காளுதான் எங்காத்தான்" தீவிரத்திலே உளறமுன்னாலே, web.archive இலே ஆறிப்போன உப்புமா கிண்டமுன்னாலே, போயி கிண்டுற பதிவை ஏன் ஓரு முறை பார்க்கக்கூடாது?
அட 2003 டிசம்பர் காலத்தைப் போட்டால், நீங்கள் சொன்ன http://karthikramas.blogdrive.com பதிவிலே வருகின்றதை பற்றிமட்டுமல்ல இந்தப்பதிவின் 2003 காலகட்டத்தையே காட்டுவதில்லை web.archive. பிறகு அஃது எப்படி ஒவ்வொரு கணத்திலும் 2003 ஜனவரி 01 இடுகையைக் காட்டப்போகிறது?
உணர்ச்சிவசப்படமுன்னாலே கொஞ்சம் என்னைமாதிரியேனும் (இதுவரை) அகப்படாமல் ரௌத்திரம் பழகுங்கள் :-)

அட அவ்வளவு ஏனுங்கோ? ஓர் உதாரணத்துக்கு, அருணா ஸ்ரீனிவாசனையே எடுத்துக்கொள்ளுங்கள். 2003 இலே முப்பத்தியாறு இடுகைகள் http://aruna52.blogspot.com பதிவிலே இட்டிருக்கின்றார். web.archive இலே http://web.archive.org/web/*/http://aruna52.blogspot.com போட்டுத் தேடினால், அவரும் பொய் சொல்கின்றவர்தான் என்று சொல்லிவிட்டுப்போய்விடும்.

ரெண்டு,சிந்தாநதியின் முதற்பதிவு தொடர்பான பழைய பதிவைப் பார்த்துவிட்டு வந்திருக்கலாம்

மூன்று, ஹரிஸந்ரரே, இராம இலக்குமணர் என்பதிலும்விட இராவணன் கும்பகர்ணன் என்றால் மிக்க மகிழ்ச்சியடைந்திருப்போமே? :-)

விவாதத்திலே / விதண்டாவாதத்திலே/ கூகுலாண்டாண்டர், கிளறுபொறிகளுள்ள இணையத்திலே சொந்தத்திலே சூனியம் வைத்துக்கொள்வது என்பது இதுதான். எம்மைப் போன்ற ஜிமெயல், யாஹு அஞ்சல்களூடாக ரவுடி என்று எம் வலைப்பதிவு இணைப்புகளைக் கொடுத்துப் பிரபல்யப்படுத்தப்படுகின்றவர்களிடமிருந்து தங்களைப் போன்ற அன்பர்கள் உணர்ச்சிவசப்பட்டு தடியைக் கொடுத்து அடியை வாங்கக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து. மீதி உங்கள் இஷ்டம்.
(அடுத்த முறை பரதன், சத்ருக்கனையும் இழுத்துக்கொள்ளுங்கள்; அவங்களுக்குமட்டும் என்ன சும்மா லாஸ்டு சீனிலை குரூப் போட்டோவுக்கு மட்டும் நிக்கிற ராஜபார்ட்டான்னு கோச்சுக்கப்போறானுங்க)

-/பெயரிலி. said...

குழக்காட்டான் நன்றி (கனகாலத்துக்குப் பிறகு.... வாரும் ;-) வாராதிரும் :-))
அநாமதேயத்துக்குப் பிரச்சனையென்னவென்றால், முயலின் நான்காவது மாயக்கால் உங்கள் கண்ணுக்குப் படுவதுதான். ஆத்திரம் கண்ணை மறைக்கிறது என்பது லிட்டரரியாகவே அன்னாருக்குச் செயற்பட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது :-) [என்னிக்குத்தான் ஆத்திரப்படுவதற்கும் ஆத்திரம் பழகுவதற்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு கயித்திலே நடக்கப்போகிறார்களோ? ;-)]

நிற்க, இப்போது, அவரிடம் ஓர் ஆதாரம் கேட்டு (மடக்க) விருப்பம்:

/எப்போ 2002ல வலைப்பதிவு தொடங்கினாராமா?/ என்கிறாரே... எங்கே 2002 இலே கும்பகர்ணன் பதிவு தொடங்கினார் என்று சொன்னார் என்பதையும் இந்த சுக்கிரன் கெடுத்த ஹரிஸந்ர மஹாராஜ் சுட்டியிருக்கலாமே? இப்போதும் குறையவில்லை.... சுட்டிக்.......காட்டுப்பா

-/பெயரிலி. said...

அருணா,
ஒத்தி ஒட்டி விட்டுப்போன கேள்வி...
இன்றைக்கு நான் உங்களுக்கு "தமிழ்ப்பதிவுத்திரட்டியின் முன்னோடி நானே" என்று ஒரு பேட்டி தந்தால், அக்கூற்றுக்காகவே நானே தமிழ்ப்பதிவுத்திரட்டியின் தந்தையாகிவிடுவேனா? (தமிழ்ப்பதிவுத்திரட்டியின் தறுதலை என்ற பட்டத்தைக்கூட, இன்னும் ரெண்டு பேர் ஏகமான வாக்கு வித்தியாசத்திலே எடுத்து முன்னணியிலே நின்று கொன்றிருக்கின்றார்கள் :-()

இரண்டுமுறை நாங்கள் வேற்றுச்செய்தி மூலங்களூடாகவும் சரி பார்ப்பதில்லையா? செய்தித்துறையிலே கற்ற உங்களுக்குத் தெரியாததை நான் சுட்டிவிடவில்லை. ஆனால், இத்தனை குறாண்டிக் குறாண்டித் தேடியும் ஈராக் அழிவாயுதங்கள் வைத்திருக்கின்றன என்று ஐநாவிலே "ஆதாரத்துடன்" நிறுவியிருக்கும் நேரத்திலே, சம்பந்தப்பட்ட மீதிப்பேரைக் கேட்காமல், ஆயாமல், நாகோவின் செவ்வியையும் அவரின் கட்டுரையையும் வைத்துக்கொண்டே தந்தை ஸ்தானம் கொடுப்பது ஒரு தரமான பத்திரிகையாளருக்குத் தகாது என்பது என் தனிப்பட்ட கருத்து.
[நாகோவினை எனக்குத் தெரியாது... மற்றவர்களிலே சிலரை அங்குமிங்கும் சில மணிநேரங்கள் பலரிடையே ஒருவனாகச் சந்தித்தோ அல்லது எப்போது ஓரிரு மின்னஞ்சல் தொழில்நுட்பம் சாரத விடயங்களிலே எழுதிக் கேட்டதோதான் என் அவர்களுடனன தொடர்பு. தமிழ்த்தொழில்நுட்பம் குறித்து அனைத்தும் இணையத்திலே பார்த்ததும் தேடிக்கண்டதுமேதான். அதனாலே, நாகோவிலே எனக்கேதோ காழ்ப்பென்றோ மற்றவர்களோடு அன்பென்றோ எண்ணிவிடக்கூடாது. கல்யாணசுந்தரம் அவர்களிலே அத்தனையைத் தன்னார்வச்செயலாகத் தமிழுக்குச் செய்தபின்னும், எவ்விடத்திலுமே எதற்காகவும் அலட்டிக்கொள்ளாத பெருந்தன்மையையும் அடக்கத்தையும் பார்க்கும்போது, அவர்மீது மற்றெவரையும் விட எனக்கு அதிக மதிப்பு உண்டு என்பது உண்மையானபோதுங்கூட.. ஆனால், அதற்காக, யாராவது ஓர் அநாமதேயர் இங்கே வந்து அவரைச் சுதேசமித்திரன் பாரம்பரியம் என்று இணையத்தமிழைக் குறித்து இழுப்பாரானால், சென்னையிலே தமிழ்நெற் 99 இலே அவரும் கூடவே வெளிநாட்டிலிருந்து பல தன்னார்வ/வர்த்தக இணையத்தமிழ்சார்ந்தோர் முனைந்து தகுதரத்தின் தரப்படுத்தலுக்கான குறியீட்டுத்தரத்தினை முன்வைத்தபோது, அடுத்தநாள் இரு தரங்கள் புனலேறித் தேர்விலே மிதந்ததற்கு அவரும் "பிறநாட்டுப்பாரம்பரியி" ஆனதுதான் காரணம் என்பதாக அந்நேர விவாதங்களை வாசித்தபோது உணர்ந்தேன். ஆதாரமின்றி பார்வையாளனாக வாசித்த அஞ்சல்களின்பின்னான என் புரிந்துணர்வினை மட்டுமே வைத்துக்கொண்டு எதையும் இங்கே இழுத்து நீட்டிச் சொல்லவிரும்பவில்லை, ஆனால், இதற்கான ஆதாரங்கள் கிடைக்காதவிடத்து, அவரைப் போன்ற பிறநாட்டுத்தமிழறிஞர்களோ அல்லது சென்னைக் கணிச்சங்கம் சார் தமிழ்நாட்டுத்தமிழறிஞர்களோ சொல்வதே சிறப்பானதும் சரியான தெளிவானதும் வரலாற்றுப்பார்வையிலே சரியானதாகவுமிருக்குமென்று நினைக்கிறேன்.

ஆனால், சொல்லப்போனால், நாகோதான் தந்தை என்றாலும் நல்லதே... அதைவைத்தே சுதேசமித்திரன் பாரம்பரியத்தை மிக மிக இலகுவாக பலவகைகளிலே உடைத்துவிடலாம். சன் டிவி பாரம்பரியம்போல - தந்தை வழி திராவிடப்பாரம்பரியம் மணவுறவு வழி சுதேசமித்திரன் பாரம்பரியம் என்று நாகோவின் பாரம்பரியம் குழப்பாது :-))

Boston Bala said...

---திசைகளை இதிலே "இணையத்தமிழின் முதல் வலைப்பதிவிதழ்" என்பதற்காக வலைப்பதிவுகளோடு சேர்த்துச் சொன்னதற்கு இதுவா காரணம்?---

கீழே சொன்ன இரண்டைத் தேடிப் பிடித்து விட்டேன்:
1. வலைப்பூக்களில் சென்ற வாரம்:
திசைகாட்டி

2. வாசகன்: பூந்தோட்டத்திற்கு வாருங்கள்


---இணையக்குழுக்களிலே வந்த அஞ்சல்களைச் சேகரித்து முதலாவது இணைய இதழ் நடத்தியது ---

:))

இதுவும் நானும் சொல்ல நினைத்தது!

நீங்கள் சொல்வது போல, இதே போல் பலரும் க்ளெய்ம் செய்யலாம் என்னும் டிஸ்க்ளெய்மரும் போடலாம் ;)

குறிப்பாக DesiPundit » Archives » தமிழ் Dec 13, 2005 தொடங்கியிருக்கிறது.

(ps... உங்கள் வாயைக் கிண்டுவதில், சுவாரசியமான பதில்கள் வருவது கூடுதல் போனஸ் :)

Boston Bala said...

வலை காப்பகத்தில் இருந்து:
Thisaigal - Poonthotam
Thisaigal - Poonthotam
Thisaigal - Poonthotam

-/பெயரிலி. said...

பாபாலாஜி
விடமாட்டீர்களென்று எனக்கும் தெரியும்... தெரியாமலா, திசைகள் செய்ததை, திசைகளின் ஊடாகவே தரவேண்டுமென்றுதானே நண்பர் தந்த திசைகளின் web.archive இனை இங்கே முன்னிட்டேன். இது என்ன டியூக் பல்கலைக்கழக மாணவர்களை மாட்டிவைப்பதற்காக ஆடும் வழக்காட்டமா, எதிரி தரப்பு ஆதாரங்களை ஒளி/ழித்துவைத்தாட? ;-)

திருத்தமாகச் சொன்னால், நிகழ்வுகள் காலவரிசைப்படி, சரியான பெயர்களுடனும் ஆதாரங்களுடனும் - சரியாகப் பதியப்படவேண்டுமென்பதே முக்கியமல்ல, யார் சொல்லும் வரலாறு என்பதல்ல. வரலாறு என்பது எழுதுகிறவரின் பார்வையின் பாற்பட்டது; ஆனால், நிகழ்வுகள் என்பதற்குப் பார்வையில்லை; வெறும் தரவுகள் மட்டுமே.

வரலாற்றைக்கூட தரவுத்தொகுப்பாகவும் எழுதலாம்; புனைகதையாகவும் எழுதலாம்... அதைத்தான் நீலகண்டசாஸ்திரி.எதிர்.கல்கியினைச் சோழர்கள் சொன்னதையிட்டு முரண்காட்சிப்படுத்திச் சொன்னேன். நீலகண்டசாஸ்திரி தரவுப்படுத்தியதும் இடையிலே தொடர்ச்சியினைப் பேணுவதற்கு இட்டு நிரப்பியதுங்கூட, அவர் காலத்திலே இல்லாமல் இப்போது தோண்டியோ துலங்கியோ சுனாமியிலே கடலிலிருந்தோ வெளிவந்த பல்லவக்கற்றூருத்தலாலோ காணப்பட்டிருக்கும் புதிய தரவுகளினாலே, இட்டு நிரப்பியவை நீக்கப்பட்டு செப்புத்தரவுகள் சேர்க்கப்பட்டு, அப்படியான நிகழ்வுகளின் வெளிச்சத்திலே வரலாறு திருத்தப்பட்டக் காணலாம். அதுதான் முக்கியம்... சுதேசமித்திரனுக்கு முந்திய பத்திரிகைகள் என்று நான் போட்டதற்கு முந்தியதாக நீங்கள் சாவித்திரி கண்ணனை வைத்து முன்போட்டது இப்படியான வரலாற்றிலேயான எமது புரிதல்களைத் தெளிவுபடுத்துகின்றன; வரலாறாக நிகழ்வுகளை எழுதியவர்களின் நோக்கங்களின் வரலாற்றினையுங்கூடப் பார்க்கச்செய்கின்றன. தென்னிந்தியாவின் களப்பிரர், ஐரோப்பாவின் பாபேரியன்கள் இவர்களின் வரலாற்று என்று எமக்குச் சொல்லப்பட்டத்தை இப்போது ஆதாரங்களுடனும் விரிந்த பார்வையுடனும் சகிப்புணர்வோடும் திரும்பி மீள்பார்வை பார்க்கும்போது, ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் வேறொரு காரணத்துக்காக எழுதப்பட்ட 'Waiting for the Barbarians' இனை நாம் புரிந்துகொண்டதைக்கூடத் திருத்திக்கொள்ளவேண்டியிருக்கின்றது. ஆனால், பொதுப்படையாக எழுதும்போது, எழுதுமிடங்களுக்கேற்ப, பெயர்களைத் தூதுவதும் சொல்கின்றவர்களின் பிம்பங்கள் காவும் பிரகாசமும் முதலிலே வாசிக்கின்றவனுக்கு நிகழ்வுகள் குறித்த சொல்கின்றவரின் பார்வையையே ஒற்றை வரலாறாக, நிகழ்வாக்கிவிடுகின்றது; ஊடகங்களின் திறமை அது; 300 படத்திலே கிரீக்காரர்களை வெள்ளைத்தோலர்களாகவும் பாரசீகர்களை மண்ணிறத்தோலர்களாவும் காட்டும் அநியாயத்திலும் அநியாய வரலாற்றுத்திரிபினை இந்த கிறிஸ்துவமேற்கு.எதிர்.இஸ்லாமியமத்தியகிழக்கு பண்பாடுகளிடையேயான போராகப் பார்க்கும் ஜாக்கிற்கோ ஜெனட்டுக்கோ ஹொலிவுட்டின் பிரமாண்டமே வரலாறு. (அதுபோலவே புத்தகப்புழுவிலே டாலர்தேசத்து வரலாற்றின் முதலாவது அத்தியாயத்தை இட்ட பாரா, பிபி பாலாஜியும் நானும் சொன்ன கருத்துகளோடு புத்தகப்புழுவினை மூடுகுழுவாக்கியதையும் எண்ணிப்பாருங்கள். அமெரிக்க உள்நாட்டுப்போரிலே இலட்ச இலட்சமாக இறந்தார்கள் என்று எழுதுவதல்ல வரலாறு; பிறரை ஒத்தியெடுத்து எழுதினாலும் செத்துப்போன ஸ்ரிபன் அம்ரோஸோ, இடக்லஸ் பிரிங்கிலியோ அல்லது விவரணத்து கென் பேர்ன்ஸோ, வரலாற்றிலே தவறியும் ஒரு தரவுப்பிழை விடப்போவதில்லை. நேற்றுத்தான் பார்த்திருப்பீர்களே, சிஎன்என் இலே மைக்கல்மூரின் sicko இலே தரவுப்பிழை என்று CNN இன் Sanjay Gupta சொல்லப்போக, அதுவே, ஒவ்வொரு தரவையும் இழுத்துக்காட்டிச் சரியாக்கும் (ஊடகத்திரிபுகளை விடுவோம்; குறைந்தது, பகிரங்கமாக, நீல்சனிலே இடம்பெறவேனும் பரபரப்பாக, விளம்பரத்துக்காகச் செய்கின்றார்கள்). இணையவரலாற்றினை தரவுகளிலே பொருக்காகத் தெரியும் வாணர்குல வந்தியத்தேவனை இத்தனை விரித்து கல்கி எழுதிய பொன்னியின் செல்வனாகவோ ஜேம்ஸ் மிச்சினரின் மெக்ஸிக்கோவாகவோ எழுதமுடியாது; மேலும், பாடப்புத்தகங்களிலே(யும் பிரபலங்களாலும்) சொல்லப்படும் ஒவ்வொரு (அரசங்கீகரித்த, பெரும்பான்மை கற்ற) வரலாற்றுக்கும் மாற்றாக நிழலாகிப்போன நிகழ்வுகளை "The People's History of United States" கள் வரலாறாக்கி ஏதாவதொரு காலத்திலே சொல்லாமற்போகாது. பதிப்பூடகங்களும் தொல்லைக்காட்சிவீடூடுபுகுதங்களும் எல்லோருக்கும் தராத வெளியைத் தரும் இணையம் கைவசப்பட்ட பொழுதிலே இப்படியான சுதேசமித்திரன் பாரம்பரியங்கள் உடைந்து போது மிகவும் எளிதாகிவிடுகின்றது. இதற்கெல்லாம் 1984, Fahrenheit 451, Metropolis கட்டுப்படுத்துச்சமூகங்களின் வழியூடாகத்தான் திரட்டி தயாரித்து எதைக் கக்குவது எதைக் கசக்குவதென்று எவரும் இனிமேல் தீர்மானித்து வரலாறு சொல்லமுடியாது; இது சன் செய்தியோ ஜெயா செய்தியோ இல்லை; ஆதாரங்களுடன் வந்தால், எல்லாமே அனல்தாண்டிப் புனலேறுமிங்கே.

நிற்க, இப்போது உங்களின் தரவுகளுக்கு வருவோம் (திசைகள்.எதிர்.பூங்கா பற்றி விபரமாக எழுதுகின்றேன் என்றேன்; நீங்கள் அவசரப்படுகின்றீர்கள் ;-)). உங்கள் தரவுகளையே பாருங்கள் திசைகளிலே "இதையொட்டி தமிழ் வலைப்பூக்களிலிருந்து தேர்ந்தெடுத்த சில சுவையான செறிவான, சூடான பகுதிகளளைஇந்த மார்ச் மாதத்திலிருந்து வாரந்தோறும்.. ஒவ்வொரு திங்கள் கிழமையும் வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம் என பிப்ரவரி மற்றும் மார்ச் இதழ்களில் அறிவித்திருந்தோம். இன்று முதல் பூந்தோட்டம் என்ற பெயரில் அந்தப் பகுதி திசைகள் இதழில் ஆரம்பம் ஆகியுள்ளது. இன்று வெளியாகியுள்ள பகுதியில் மார்ச் 1 முதல் மார்ச் 5 வரையிலான பதிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை வாசிக்கலாம்" என்று சொல்லியிப்பதற்கும் பூங்காவின் முதலாவது தொகுப்பாளரின் மேசையிலே "வலையிதழ் இணையத்தமிழின் முதலாவது தானியங்கித்திரட்டி என்ற ஆரம்பநிலையைக் கடந்து, அடுத்தபடியிலே தன்னிற் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் ‘பூங்கா’ வலையிதழூடாக தொகுப்பது பயனானதெனத் தமிழ்மணம் நோக்குகிறது" என்பதுக்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன். திசைகளிலே (மேலே பாருங்கள்; சுட்டி நீங்கள் தரமுதலே நான் என் முன்னைய பின்னூட்டத்திலே சுட்டியிருக்கின்றேன்) வலைப்பதிவுகளிலே வருகின்றவற்றினை, (திசைகள் ஆசிரியரே/உதவியாளர்களே ??) தேர்ந்தெடுத்து, ஒரு பகுதியாகத் தந்திருக்கின்றார்கள். பூங்கா, முழுவதற்கும் கிட்டமுட்ட, (தமிழ்மணத்திலே திரட்டப்பட்டு) வலைப்பதிவுகளிலேயிருந்து வரும் படைப்புகளினை, வலைப்பதிவுகளினை முன்னிலைப்படுத்துவதையே முதன் நோக்காக்கி வெளிவருகின்றது. திருவிளையாடலிலே நாகேஷ் இருப்பதற்கும் சர்வர் சுந்தரத்திலே நாகேஷ் இருப்பதற்கும் (பழசென்று மக்கள் உதைத்தால், சந்திரமுகியிலே வடிவேல் வந்ததற்கும் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியிலே வடிவேல் வருவதற்கும்) என்ன வித்தியாசமோ, அப்படங்களிடையே என்ன வித்தியாசமோ அதுவேதான் இங்கும். சினிமா செய்தியும் வரும் ஆனந்தவிடகன், கல்கியினைக் 'குடும்ப(!) சஞ்சிகை' என்பவர்கள் 'பிலிமாலயா', 'பொம்மை' & 'பேசும்படம்' இவற்றை சினிமா சஞ்சிகை என்பதுக்குமான வித்தியாசம் அதுதான். கறிவேப்பிலை கறியாகாது :-)

தேசி பண்டிட்டின் 2005 இணைப்புக்கு நன்றி. tamil net digest வெளிவந்தது, 1998 இலே :-) ... ஒரேயோர் இதழ் மட்டுமே..

நிற்க, உங்கள் snapjudge இற்கும் வேட்டு இருக்கின்றது. என் 1999 இன் Ramani's e-notes & Linked வலைக்குழு & இணையப்பக்கத்தின் இணைப்புகளைத் தேடிக்கொண்டிருக்கின்ரேன். அகப்பட்டால், இடம் காலியாக்க ஆயத்தமாகவிருங்கள் :-))

-/பெயரிலி. said...

விட்டுப்போனது, பூங்காவென்பதும் பூந்தோட்டத்திலிருந்து வந்தென்று சொல்லிவிடமுன்னாலே... திரும்பத் திரும்ப, பூங்கா சம்பந்தப்பட்டதெல்லாம் என் பின்னூட்டத்திலேயே வந்துவிழுவதால், விரும்பாதபோதுங்கூட, அநாவசியத்துக்கு தொழில்சார்நெறினை உடைத்துச் சொல்லவேண்டிய அவலம்... பூங்கா என்று வலையிதழ்த்தலைப்பினை முன்வைத்தது நான்தான். தமிழ்மணம் என்பதோடு பொருந்தியிருக்கட்டுமென்றே வலைப்பதிவுகளின் தொகுப்பாக மிகவும் சாதாரணமாக அப்பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டது.... (வேண்டுமானால், விபீஷணையே சாட்சி) திசைகளில் பூந்தோட்டம் என்ற தலைப்பிலேதான் ஆசிரியர்(கள்) தேர்ந்த பதிவுகள் இருந்தது எனக்கு நினைவிலில்லை. பூந்தோடம் என்பது நினைவிலிருந்தால், பூங்கா என்பதை யாராவது முன்வைத்திருந்தாலும் அடித்து மறுத்து ஒதுக்கியிருப்பதிலே முதலாமாளாக இருந்திருப்பேன். தேங்கா என்று வைத்திருந்தாலும் ஆட்சேபித்திருக்கமாட்டேன். பூங்கா என்பது பூந்தோட்டம் என்பதைப்போல ஒலிக்கின்றதே என்பதற்காகவல்ல; அது வெளியான திசைகளின் ஆசிரியர் மாலன் என்பதற்காக (என்பதை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்வதிலே எனக்கேதும் தயக்கமில்லை). எவ்விடத்திலும் அவரைப்போன்றவர்கள் வரலாற்றினை நிகழ்வுகளைப் பெரிதுபடுத்திக் கட்டியெழுப்ப இடம் கொடுக்க நான் அனுமதிப்பதில்லை என்பதிலே மிகவும் கவனமாகவிருக்கின்றேன். [மாலன் அவர்களுக்கு எவ்விதமான சம்பந்தமும் இல்லாதபோதுங்கூட, 'அன்னமிட்ட கையையே கடித்த நாய்கள்" என்று ஈழப்பிரச்சனைகளிலே இணையத்திலே பதின்மூன்றாண்டுகளாக வரும்போகும் அநாமதேயங்கள் எல்லாம் சொரிந்த திட்டுகள் தந்த எச்சரிக்கையுணர்வு இது] இவ்வகையிலே பூங்கா என்ற பெயரை இவ்விதழ்த்தலைப்பாகக் கொடுத்ததற்கு, தமிழ்மணத்தின் பூங்கா ஆசிரியர் குழுவிடம் நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

Boston Bala said...

---சுவாரசியமான பதில்கள் வருவது கூடுதல் போனஸ் ---

சுவாரசியமான & செறிவான என்று சொல்லியிருந்திருக்க வேண்டும். நன்றி!

-/பெயரிலி. said...

நல்ல ஆளுதான் நீரு...
பொண்ணு பார்க்கப் போயிருந்தப்ப, காரபஜ்ஜி சாப்பிட மின்னாடி தேன் பாட்டிலைக் காமிக்கச் சொல்லிருப்பீரே
:-))))

-/பெயரிலி. said...

அருணா ஸ்ரீனிவாசன் மிகவும் நல்ல காரியம் செய்திருக்கின்றார். அவரது நாகோ, அருண்மகிழ்நன், கல்யாணசுந்தரம் & முத்துநெடுமாறன் குறித்த செவ்விகளை அப்படியே மேலே தந்த தன் பதிலையும் சுட்டி அதனூடாக ஆங்கிப்பதிவிலே இணைத்திருக்கின்றார். அதற்கு மிக்க நன்றி. இவை ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளிலே முக்கியமான ஆவணங்கள்.

அதே நேரத்திலே என்னை மனமிருந்தால் வாசித்துப் பார்க்கும்படி அவர் சுட்டியிருக்கும் இரு இணைப்புகளை நானே இங்கே தந்திருப்பதைப் பார்க்கும்போது, நான் எழுதியதை, சுட்டியதை என்னைத் தவிர எவரேனும் வாசிக்கின்றார்களா (அல்லது வாசித்துப் புரிந்துகொள்ளமுயல்கின்றார்களா :-)) என்பதே எனக்குச் சந்தேகமாகிப் போய்விட்டது :-)

அவரின் ஆவணங்களை வாசித்தபின்னால் முழுமையாக அவை தொடர்பாகப் பின்னே பேசலாம்.

ஆனால், போக முன் ஆங்கே ஒரு செவ்வியிலே கொஞ்சம் இடறிய விடயங்களைச் சுட்ட விருப்பம்.

அதாவது, கல்யாணசுந்தரம், அருண்மகிழ்நன் ஆகியோருடனான செவ்வியுள்ள கட்டுரையிலே குமுதம் (எழுத்துரு இல்லாவிடினும்) படவுருவிலே இணையமேறியிருப்பது குறித்து அப்போதைய ஆசிரியர் மாலன் சொன்னதைப் பார்ப்போம் (அந்தக்காலகட்டத்திலே ஒரு நடிகையின் கதை குமுதத்திலே வரப்பார்த்து, பண்பாட்டுக்காவலர்கள் நிறுத்து என்றெல்லாம் அலறினார்கள்?? இஃது எள்ளலுக்கல்ல... இணையத்திலே எது வரவேண்டும் எதுவரக்கூடாதென்று திரட்டிகளின் கழுத்தைத் திருகிப்பார்த்துத்தான் விடவேண்டும் என்று தீர்மானிப்பவர்கள், அக்காலத்திலே ஒரு நடிகையின் திறந்த மனதுக்கதை இணையம் ஏற்றியிருப்பார்களா, இல்லையா என்று யோசித்துப்பார்த்தேன். அவ்வளவே. சரி அதைவிடுவோம்).

அதிலே சொல்லப்பட்டிருப்பதிலே ஒரு பகுதி: செவ்வி வெளியான நாள் 25 மே 1997
"......says Maalan, editor of the popular magazine Kumucam(தேவுடா! தாமரைக்குக் கமுகமாகும் இந்தக்கதியா? பாக்கு போட்டுக்கொண்டா பேட்டி கொடுத்தார்கள்? ;-))), the first Tamil Weekly to go on-line.....'Kumudam' (நன்றி; அது குமுதமேதான்) circumvented the problem (ஒரே குறியீட்டுத்தரப்படுல் இல்லாத பிரச்சனை: விளக்கமாகவிருக்கின்றது: இணைப்பினைச் சொடுக்கிப் படம் காண்க) by giving it its on-line version in the graphic mode.." மேலே தடித்த எழுத்து என் தெருவிளையாடல்.

இரண்டு விடயங்கள்
1. குமுதமா முதன்முதலிலே இணையம் ஏறிய தமிழிலே அச்சிலே வரும் சஞ்சிகை என்ற கேள்வி
(பூங்கா, திசைகள், தமிழோவியம், திண்ணை மாதிரியான இணைய சஞ்சிகைகளைச் சொல்லவில்லை... அச்சிலே வந்து பின்னர் இணையமேறிய சஞ்சிகைகள்)

குமுதம் எப்போது இணையத்திலே ஏறியது? இப்போதிருப்பது பிந்தி வந்த இன்னொரு முகவரி. ஆனால், ஆரம்பத்திலே குமுதம் எப்போது இணையத்திலே ஏறியது? இந்தப்படவடிவிலே ஏறியது நினைவிருக்கின்றது. ஆனால், குமுதமா முதலிலே இணையம் ஏறியது என்பதை அறிய பயனர்குழுக்களிலே (usernet) google groups பகுதியூடாகப் போய்த்தேடிப்பார்த்தேன். soc.culture.tamil
1. குமுதம், விகடன் இணையத்திலே
2. குமுதம் தொழிற்படவில்லை

குமுதம் இணையம் ஏறிய சரியான திகதி கிட்டவில்லை. ஆனந்தவிகடனா அதுவா முதலிலே ஏறியது என்பதுகூட. ஆனால், 1997 பெப்ருவரி 25 இலேயே இலே குமுதம் படவடிவிலே இருந்தது உண்மை.
கணையாழி: http://www.pcsadvt.com/kanaiyazhi/index.htm என்ற முகவரியிலே
நக்கீரன்: http://www.pcsadvt.com/nakkheeran என்ற முகவரியிலே
இவை கல்யாணசுந்தரத்தின் மயிலை எழுத்துருக்களிலே இருந்தன. இவை குறித்த அடையாளமாக மிஞ்சியிருப்பது கல்யாணசுந்தரத்தின் 25 பெப்ருவரி 1997 இலே soc.culture.tamil இடுகை.
விகடன் முரசு அஞ்சல் எழுத்துருவிலேயிருக்கும்வரை தமிழ்நெற்றின் முன் பக்கத்திலேயே இருந்தன.

அகப்படும் இத்தகவல்களை மட்டும் வைத்து எவ்வகையிலும் குமுதமா (அல்லது அதற்குமுதல் விகடனா) அல்லது நக்கீரன் & கணையாழியா முதன்முதல் இணையத்திலே ஏறியதென்பதைச் சொல்லமுடியாதென்று அறிவேன். ஆனால், இங்கே தொடரும் நிகழ்வுகளைப் பதியும் வரலாற்று விளையாட்டிலே இந்த முதலாவது இணையத்திலே ஏறிய பதிப்புச்சஞ்சிகை என்பதையும் ஆய்ந்து உறுதிப்படுத்திக்கொள்ளும் தேவையிருக்கின்றது.


சம்பந்தமில்லாமல்.... பயனர்வலையைக் கிண்டினால், பதிவு வைத்திருப்பவர்கள் சிலரின் 1993 காலத்து இடுகைகளும் அகப்படும் :-) (நமக்கு அப்போது இணைப்பே இல்லையென்பதாலே, நானே கூஜா என்றெல்லாம் சொல்லவரவில்லையென்பதாலே, சண்டை சிண்டு ஏதுமில்லையெனப் படிக்கலாம்; போங்கள் :-))


2. படவடிவிலே ஏற்றுவது தீர்வா அல்லது வர்த்தகப்பார்வையிலேயான அணுகுமுறையா? இயங்குரு (dynamic) எழுத்துருக்கள் வந்தபோது ஏன் பலரும் எதிர்த்தார்கள் என்பதை இந்நேரத்திலே காணவேண்டும் - குறிப்பாக, வெங்கட். அவரது ஆரம்பகாலப்பதிவுளைப் போய்ப் பாருங்கள். தன்னார்வமுயற்சியாளர்கள் இயங்குருவை வெறுத்து ஒதுக்கியதற்கான காரணமே [(இதற்குள் நான் அதற்குள் அடங்கேன் :-) நெஸ்கேப் இயங்குரு தமிழுக்கு அனுமதிக்க மாட்டோம் என்ற பின்னாலேதான் தமிழுணர்வு மிக்கி, தனியுடமையைத் தழுவிக்கொண்டு மைக்ரோஃஸொப்டுடன் சமரசம் செய்துகொண்டு ஐஈ அஞ்சுக்குப்பின்னேதான் ஐஈக்குள்ளே நுழைந்தேன். பதிவுகள்.கொம் கிரி, இப்போதும் அக்காலத்திலே வைத்திருந்த தகுதர இயங்குருவுடனேயே ஓடிக்கொண்டிருக்கின்றார் :-) ] இப்படியான இயங்குருக்களே தகுதரமொன்றைக் கொள்ளாமல் வைத்திருக்கக் காரணமென்பது. இதை ஏன் சுட்டுகின்றேன் என்றால், ஒருபோதும் தொழில்ரீதியான செயற்பாடுகளைத் தன்னார்வமுயற்சிகளாக முழுக்கவுமே நாம் புரிந்துகொள்ளக்கூடாது. நான் ஆற்றைச் சுத்தப்படுத்துகிறதில் ஆர்வம் கொண்டதாகக் காட்டினால், அது நீர்நிலைமாசடைதலிலே எனக்கு மிகவும் கவலையென்பதல்ல... தொழில் :-) சொல்லப்போனால், மாசடைந்தாலேதான் தொழில். ஹி! ஹி!! இதைக் குறித்து விரிவாகப் பின்னர். மைக்ரோஃஸொப்ட் சார்ந்த கணிச்சொற்களைக் குறித்தான வாதத்துக்குத்தான் இந்த இரண்டாம் காரணத்தினைக் கோடு போடுகிறேன்.... பிறகு வந்து ரோட்டைப் போடலாமா என்று பார்ப்போம்.

Anonymous said...

//(வேண்டுமானால், விபீஷணையே சாட்சி)//

இதென்ன விளையாட்டு, புது இராமாயணம் எழுதுறீங்களோ, நான் இராவணனின் தங்கையா வேறொரு பேரையில்ல கேள்விப்பட்டிருந்தேன்.

அப்புறம் இந்த விளையாட்டில் எங்கயுமே திண்ணையைச் சேர்க்கலையே அதென்ன பாலிடிக்ஸ். (இல்லை திண்ணையெல்லாம் இந்த விளையாட்டுக்கு உள்ளவே வராதா)

தமிழ் வலையுலக பாலிடிக்ஸ்கு அப்பார்ப்பட்டவன் ;)

-/பெயரிலி. said...

கீழே காணப்படுவது நேர்கோட்டு வாதமல்ல; சுற்றிவளைத்த ஏரணவாதம். அதனைக் கருத்திலே கொண்டு நிறுவலைக் காண்க

மீண்டும் http://web.archive.org இற்குப் போவோம்.
kumudam.net : http://web.archive.org/web/*/http://www.kumudam.net
kumudam.com : http://web.archive.org/web/*/http://www.kumudam.com
ஆகிய இரண்டினையும் பார்ப்போம்

kumudam.com இலே 1997 இலே Jun 01, 1997 என்ற சுவடியின் இணைப்பும் பிறகு 1999 இலே இரு இணைப்புகளும் பின்னால், தொடர்ந்து வரும் ஆண்டுகளிலே மேலதிக இணைப்புகளும் உள்ளன.
Jun 01, 1997 இனைச் சொடுக்கினால், http://web.archive.org/web/19970601033950/http://www.kumudam.com/, குமுதம் May 29, 2007 இனையும் அதன் முன்னான குமுதங்களின் அட்டைகளையும் அணுகலாம். இதற்குப் பின்னால், வருவோம்.
இப்போது, 1999 ஆண்டுகளுக்கான இணைப்புகளைச் சொடுக்க, அவை "mcgrawtech.com Please visit this site later; under construction. copyright @1999" என்று மட்டும் சொல்கின்றன.

இப்போது, kumudam.net இற்குப் போகமுன்னால், soc.culture.tamil இலே google groups ஊடாக kumudam எனத் தேடுவோம்.
அதிலே வரும் Sep 18, 1998 இலே தொடங்கும் இந்தச்சரத்தைத் தொடர்ந்து பார்ப்போம்
kumudam
kumudam.com வேலை செய்வதில்லை என்று ஒருவர் தெரிவிக்க, இன்னொருவர் Sep 20, 1998 அன்று, http://www.kumudam.net இனை அனுபவிக்கச்சொல்கிறார்.
சரியென வெளியே வந்து ஒரு சுருக்கநடை இப்போது kumudam.net இன் பக்கம் போவோம்

http://web.archive.org/web/*/http://www.kumudam.net இனைத் தேடுவோம்.
1999 இலிருந்து ஆரம்பிக்கிறது.
அதிலே 1999 இலே 1999-10-19 இலே அழுத்தி
http://web.archive.org/web/19991009170717/www.kumudam.net இனைத் தேடுவோம்
அதனூடாக, உள்நுழைந்து பழைய இதழ்களுக்குப் போவோம்
http://web.archive.org/web/19991009170717/www.kumudam.net/backissues.html
October 1998 இலிருந்து July 1999 - Current Issue வரை சுவடிகளாகக் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக்ச் சொல்கிறது.

சரி, அப்படியானால், 1997 இலே kumudam.com மட்டுமே குமுதம் செயற்பட்டுக்கொண்டிருந்ததெனக் கருதிக்கொள்கிறோம்.

இப்போது kumudam.com இனை மீண்டும் web.archive ஊடாக அணுகி, Jun 01, 1997 இனூடாக, குமுதம் May 29, 1997 இனைக் கண்டுகொள்கிறோம்.
http://web.archive.org/web/19970601033950/http://www.kumudam.com/
அங்கே இடதுபக்கச்சட்டத்தின் மேலேயுள்ள குமுதத்தையும் மதியையும் இலைகளையும் கொண்ட சின்னத்தை அமுக்க, வலதுபுறம் குமுத ஆசிரியர்குழுவின் விபரம் வருகின்றது
http://web.archive.org/web/19970601033950/http://www.kumudam.com/
கண்டுகொள்கிறோம்.
இனி இடதுச்சட்டத்தின் கீழே, பழைய குமுத அட்டைகளிலே பொன்ஸ் & லக்ஸ் வதனங்கள் மந்தஹாசித்துக்கொண்டிருக்கும் அழகிகளைப் (இடைத்தலைவர் படத்தை அதேகணக்கிலே எடுக்கவா? கோர்க்கவா?) பார்த்துக்கொண்டே அப்படியே அடியிலே போய் மார்ச் 6, 1997 அட்டையிலே ஒட்டிப்போன ஒட்டிப்போகாத மீனாவைக் கிளுக்குகின்றீர்கள்.
இப்போது இடதுப்பக்கத்திலே மேலே படமாக வந்த மீனாவை ஒரு கணம் பார்த்துவிட்டு, மீனா-மார்ச் 6, 1997, அடியிலே அதற்கும் முன்னைய குமுத இதழ்ச்சுவடி கிடைக்கிறதா என்று பார்க்கிறீர்கள் ('குமுத இதழிலே சுவடிதான் பார்ப்பதா? சுவை பார்க்கக்கூடாதா?' போன்ற அனாட்டமி, பிசியோலஜி, உடற்கூற்றியல், உடலியங்கியல் ஆய்வையெல்லாம் வேறு சந்தர்ப்பத்துக்கு வைத்துக்கொள்ளலாம். வேண்டுமானால், முத்து போஸ்ரரிலேயே பார்த்துக்கொள்ளலாம். இப்போது, விஷயத்துக்கு மேலேயோ கீழேயோ நகரலாமென்று பார்க்கிறீர்கள்)
....................... பழையகுமுதச்சுவடியொன்றையும் காணவில்லை.

இப்போது முன்னைய குமுதக்கன்னியர் வதனம் இல்லாத எரிச்சல் குமுதத்தின் மீது உங்களுக்குத் திரும்புகின்றது..... "பழைய குமுதமெல்லாம், ஏற்றவில்லையா? மார்ச் 6, 1997 குமுதம்தான் (நல்லகாலம் முதலிலே 'மு'வை விட்டு அடித்துவிட்டு, திரும்ப வந்து திருத்திச் சேர்த்துக்கொண்டிருக்கிறேன். விட்டிருந்தேன், ப்ரய்டியன்வழுக்கலா என்று என்னை குமுதமுகமது சந்ரபிம்பமே என்று கிடைக்காதிருக்கின்ற எரிச்சலிலே தின்றிருப்பீர்கள்) முதன்முதலாக இணையத்திலே ஏறிய குமுதமா என்று ஆத்திரத்துடனும் ஏமாற்றத்துடனும் உங்கள் ராசிபலனையும் 3000 மைல்களுக்கப்பால் உங்கள் வீட்டுச்சுவரிலே ஓடும் பல்லி சொல்லும் திசையையும் திட்டி விட்டுப் போக எண்ணும் உங்களை நான் சமாதானப்படுத்துகிறேன்....
"இல்லை, குமுதம் பத்து பத்தாகத்தான் பழையதைக் களஞ்சிப்படுத்துவது; அதனாலேதான், மே 27, 1997 இலே நுழைந்தால், மார், 06, 1997 வரையுமே காட்டமுடிந்திருக்கும்" - இது நான்.
"அப்படியென்றால், மார்ச் 06, 1997 இற்கான முற்பத்து எங்கே? வயிற்றைப் பத்துகிறது" - இது நீங்கள்.
நான் திரு திருவென விழிக்கிறேன். பின்னர், உங்களைச் சமாதானப்படுத்த, "சரி வாரும்.... நாம் கூகுலாண்டர் குழுவிடம் காண்டம் ஓலை எடுத்துப்பார்ப்பம்" என்று கூட்டிப் போகிறேன்.
குமுதம் ஏற்கனவே போட்டுக் காண்டம் தேடிவிட்டதால் kanaiyazhi magazine என்று கூகுலாண்டவர் குழுக்குரு போட்டுத் தேட, மேலே மிதந்து வரும் ஓலைகளிலே இரண்டாம் ஓலையைத் தூக்கித் தருகிறார் கூகுலாண்டவர்; அது தனி ஓலையல்ல... எட்டாய்க் கட்டிய மின்னோலைக்கட்டு..
Tamil Magazines "kaNaiyAzhi" and "nakkiiran" now available on-line என்று தலைப்பிட்ட மின்னோலைக்கட்டின் முதலுரையை எழுதியிருக்கும் க. கல்யாணசுந்தரர் Feb 25, 1997 4:00 am சுபமுகூர்த்ததிலே சொல்வதாவது இது
-------
Electronic/On-line versions of Chennai-based Tamil Magazines
Recently I learnt that the Chennai-based Tamil Weekly
Magazines "kaNaiyAzhi" and "n^akkiiran" are now available
on-line in the internet under the following URL:
kaNaiyAzhi:
http://www.pcsadvt.com/kanaiyazhi/index.htm
nakkiiran:
http://www.pcsadvt.com/nakkheeran/
The online versions in Tamil are based on the Tamilfont
Mylai/Mylai - a copy of which can be obtained free for
use on Windows PCs (3.x, 95, NT), Macintosh and UNIX
platforms - from many sites, including
http://www.geocities.com/Athens/5180/mylai1.html
There is still a lot of scepticism on the part of tamil
magazine publishers on potential internet audience and the
advantages of putting their papers on line.
One way we can hope to see more and more tamil
magazines appear on line is by encouraging these pioneering
efforts. So do visit these sites and enjoy browsing these
popular tamil magazines.
Kalyan
------


இப்போது, அடுத்துவரும் ஓலையெல்லாம் பார்க்கின்றீர்கள்... Mar 19, 1997 4:00 am சுபமுகூர்த்தத்திலே RajeshVR சொல்வதாவது
---
> >It is high time that all the net-based Tamil publishers agree
> >upon a common format. This will highly encourage the publisher
> >as well as the reader.

I think the fonts used by Vikatan are OK as they are faster and look
pretty
neat compared to the post script "Xerox" copy of Kumudam.
Also if UNICODE becomes popular and mainstream, the problem
should be solved I guess.
Rajesh
---


பெப்ருவரி 25 ஒருவர் அதற்கு முன்னமே வந்ததை இப்போதுதான் அறிந்து "பிறையைக் கண்டுவிட்டேன்.. அதுவும் ஒன்றல்ல இரண்டு; கணையாழிப்பிறை, நக்கீரப்பிறை" என்று ஓலை முறிக்கிறார்... அதன் பிறகுதான் நடிகைவதனம் கண்கிட்டாமல் தன்வதனம் வதமாகினவனும் நீங்களும் கூடிப் பார்த்த இணையத்தின் முதலாவது மார்ச் 06, 1997 குமுதப்பிறையே கிடக்கிறது. "(ஆனந்தவிகடப்பிறை எப்ப வந்துச்சு என்றதை, மலேசிய, சிங்கப்பூர்ப்பிறைகள் இருந்தனவா என்பதெல்லாம் கணக்கிலே விட்டாலுங்கூட) பெப்ருவரி 25 இற்கும் மார்ச் 06 இற்கும் இடையிலேயே கிட்டத்தட்ட ஏழெட்டு நாளாச்சே..... பிறகு குமுதப்பிறைதான் தமிழ்இணையத்தின் முதல் சஞ்சிகைப்பிறை என்பதை மற்றோருக்கு எப்படீ எடுத்துரைப்பேன்? பேன் பேன்.." அரற்றுகிறீர்கள். வதனம் வதங்கியவனே மெள்ளத் தெளிந்து காற்றாடியை விசுக்கவுங்கூட, நீங்கள் தொடர்ந்து, "எடுத்துரைப் பேன் பேன் பேன்" என்று தலையைச் சொறிகின்றீர்கள்..

இப்போது அவன் சமாதனம் சொல்ல முயல்கிறான்:
"இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
1. குமுதம் சரியாகச் web.archieve இலே பத்துக்குமேல் சுவடி இப்போதைக்கு வேண்டாம் என்று காட்டாதிருந்திருக்கலாம்
2. காட்டியது தோற்றாதிருந்திருக்கலாம்
3. web.archive கச்சையிலிருந்துதான் நடிகநடிகைமுகம் தேர்ந்தெடுத்துக் காட்டுகிறதென்றால், May 29, 1997 இலே ஆவணப்படுத்திய குமுதக்கச்சையிலிருந்து முன்னையதையும் எடுத்துக்காட்டும்..." ... இந்த இடத்திலே நீங்கள் முறைக்கின்றீர்கள்... பிறகு எப்படி மீனா மூஞ்சி தோன்றிய குமுதத்தின் இரப்பர் நூறு ரூவா மெகா ஜோக் மட்டும் தனக்குத்தானே சிரிச்சுக்கிட்டு ஆடுது? எனக்கு வேணுமெண்டால் முழுவிசரன்பட்டம் கட்டி வாலும் குஞ்சமும் போடு; பேசாமல் குந்தியிருந்து கேக்கிறன்; ஆனா, உந்த %$#பேப்பட்டம் மட்டும் கட்டாதை "
4. கணணியிற் காண்பதும் பொய்; கடிதத்திற் பார்ப்பதும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய்
5. தெய்வக்குத்தம் ஏதோ நடந்துபோச்சுதெண்டு நினைக்கிறன் அண்ணை
6. எங்களுகுத் தெரியாத விசயம் ஆயிரத்தெட்டிருக்கு; அதில ஒண்டில இந்த விசயம் பூராய்ஞ்சு பாரெண்டு மாட்டியிருக்கு"

ஆனா, எனக்கெண்டால் என்னவோ மாசப்பேரெல்லாத்தையும் எனக்குச் சொல்லாமல் ஆரோ பின்பக்கமா குத்துக்கரணம்போட்டு மாத்திப்போட்டாங்களெண்டுதான் படுகுது.
உதைத்தான் இங்கிலீஸிலை நொன் லீனியர் லோசிக்கு எண்டு சொல்லிறது.

துஷ்யந்தன் மட்டுமேன் முதல்மோதிரத்தை மறந்தான்?

-/பெயரிலி. said...

தம்பிளாஸ்டிக்குழப்பி
பிழைதான். அதை அர்த் தப்புப்படுத்திச் சொல்லிப்போட்டியள். இராவணனுக்கு ரெண்டு தங்கச்சிமாரெல்லே? மறந்து போட்டன்; விபீஷணைகள் எண்டு திருத்திக்கொள்ளுறன். வருங்காலத்தில வலைச்சண்டைமுன்னோடிக்குப் பின்னோடி ஊடிப் பிழைதிருத்திய பாடி குழப்பியெண்டு இந்தக்குழப்பியை நாளை சரித்திரம் கொல்லும். வாள்க வரள்க

-/பெயரிலி. said...

குழப்பி,
வடிவாய்ப் பாரும்.
திண்ணையைத் தொட்டிருக்கிறன். பிறகு விட்டாலும், ஆரம்பத்தில ஒரு கவிதய ஆதரிச்ச ராஜபுரவலராச்சே... ஆதலால், ஸ்வாமி மறந்தாலும் அடியான் குஸேலஸ்நேகம் மறப்பேனோ?

ஆனால், முந்தின ஆறாந்திணையைத்தான் தொடயில்லை. ஏனெண்டால், அதுக்குள்ளைதான் சுவாமிநாதய்யர் தன் சரித்திரத்தை ஒளிச்சி வச்சிருக்கிறார்.ஒரு நாளைக்கு எடுத்துவிடுவார். அப்ப சுட்டுவம்.... சீச்சீ சுடுவம் இல்லை சுட்டுவம்... தாத்தாவை எல்லாம் என் கவுண்டரிலை சுடுறதில்லை... அது ஐபி தெரிய வர்ற தாதாவையும் மாதாவையுந்தான்...

Anonymous said...

//(கனகாலத்துக்குப் பிறகு.... வாரும் ;-) வாராதிரும் :-))//

ம் ம் கனகாலத்துக்கு பிறகு தான் :-)

வாரும் எண்டா வாறதுமில்லை, வாராதிரும் எண்டா வராதிருப்பதுமில்லை :-)

Chandravathanaa said...

பெயரிலி

இவ்வளவையும் வாசிக்க நேரம் இப்போது இல்லை என்று உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டே இருக்கவும், வாசித்து முடித்து விட்டேன்.

நிறைய விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. மறந்தவை போல இருந்தவையும் மீண்டும் மனதில் ஓடின.

நன்றி

-/பெயரிலி. said...

அருணா ஸ்ரீனிவாசன் பதிவிலே ஒரு இங்கிலீஸ்காரரின் பின்னூட்டம்
/Anonymous said...
Yes How come you can say govindasamy as "Tamil Inaya Pidha". That title only belongs to Kasi and/or Peyarili.

-/ U.S. Indian
10:31 AM/



ஏனப்பா, இங்கிலீசு யூஎஸ்லஸ் இந்திஜீ,
நா.கோவிந்தசாமிதானா பிதா என்று கேட்டவுடன் பெயரிலிக்குப் பிதா பதவியை அடுத்த கணத்திலே பிடுங்கி, இலகுவாகத் தூக்கிக்கொண்டுமளவுக்கு, தமிழ் அத்துணை கேவலநிலையிலா அநாதையாக வளர்ப்புத்தந்தை தேடி நடுத்தெருவிலே நிற்கிறது? இல்லாவிடின், என்ன Jerry Springer Show, Maury நிகழ்ச்சிகளிலா, தமிழ் வந்து "தந்தையை அடையாளம் கண்டு தா" என்று கேட்கிறது, டிஎன்ஏ சோதனை செய்ய? இதெல்லாம் கொஞ்சம் மேம்பால ஓவரா தெரியவில்லையா? :-(

பரமபிதா, பிஸ்தா, பாதத்தொண்டர் இதெல்லாம் தமிழுக்குத் தேவையில்லையே. "விரும்பினால், செய்; விரும்பாவிட்டால், நகர்; அடுத்தவன் தட்டிலிருந்து எடுத்து உன் தட்டுக்குப் போட்டுக்கொள்ளாதே; உன் தட்டிலிருப்பதையும் அளந்து தானம் பண்ணு" அவ்வளவுதான் அடிப்படை ரூல். அதை வைச்சு எட்டு எட்டாக அளந்தாலும் சரிதான், வாமனனாய் எட்டாமல் அளந்தாலுஞ் சரிதான், ஆட்டத்திலே கோட்டை ஆளுக்கேற்ப மாற்றாதிருந்தால் சரிதான்.

மீதிக்கு, இத்தனைநாளிலே எங்கேயாவது பிதா வேண்டாம், பிலாக்கொட்டையாச்சும் தமிழ்பேரிலே தரச்சொல்லி விண்ணப்பம், மின்சீட்டுக்கவி யாருக்கேனும் விட்டிருக்கிறேனா? (லபோ! லபோ!!) இப்படி, "தமிழ்ச்சூரியனே! வலைச்சந்திரனே!!" இந்த டயலாட்லாக்கு, டபாய்ப்பு, டப்பாங்க்குத்து ஆட்டம் எதிலேயாச்சும் ராஜபார்ட்டோ, கள்ளபார்ட்டோ, ஸ்தீரிபார்ட்டோ போட்டு ஆடிருக்கேனா? (லபோ!்லபோ!!) மிஞ்சி மிஞ்சி அப்படி ரெண்டு துரும்பு வெச்சு சீட்டாடினவுங்களுக்குமட்டும் அப்பப்ப எரிச்சல் தாளாம ஆப்படிச்சிட்டிருக்கேன் (லபோ!்லபோ!!). மிச்சப்படி, மகுடம், மண்குடம், கொலுசு, தூசு, ராஜமுடி, செங்கோல்ன்னு ஆளுக்காள் கிறிஸ்மஸ் க்ப்ட் பரிமாறிக்கிட்டே இருக்கிறாப்ப உள்ளாற நொழைஞ்சு "Yo I told U, can't touch this"ன்னு MC Hammer ஐ ஆராச்சும் மண்டைல நொங்குண்ணு வலிக்கப் போட்ருக்கண்னா? (லபோ! லபோ!!) ஏதாசும் புடிக்கல்லன்னா, எது புடிக்கல்லன்னே தெளிவா சொல்லிட்டுப்போயேம்பா. (லபோ!்லபோ!!) அதவுட்டுட்டு, தமிழத் தடாரென்று தூக்கித் தந்தா, ஒத்தயா நா எப்படி வளைப்பேன்? வாளை வைப்பேன்? (லபோ!்லபோ!)

இந்தா நாக. இளங்கோவனும் சொல்லிருக்காரு பாரு. அவருக்கும் ஒரு பிதா போஸ்டு போட்டுக் குடுப்பா (அவரு அந்தக்காலத்திலே தமிழெழுத்துகளைக் குறிப்படுத்தும்போது, கிரந்த எழுத்துக்களுக்கு இடம் தேவையில்லை என்று படுத்தி ஆட்டம் ஆட்டின ஆளு. அவரே மாதிரித்தான் ங், ஞ் இதுங்களோட உயிர்மெய் யூஸ் பண்றது ரொம்ப கொறைச்சல், நெளிவு சுழிவுக்குத்தான் சும்மா எடம் குட்திட்டிருக்கோம் அதுங்களோட மடில கைய வையின்னு பெரியாரு ரேஞ்சில பென்ஸில்வேனியா Harold Schiffman சொன்னாரு. அப்போ, நானு ரொம்ப எமோசனல் ஆயி, அவரைப் பார்த்து, "வெள்ளைக்கார மான் மான், ப்ளீஸ் மான் , ஞ், ங் குட்டிங்க பாவம் மான், சுட்றாதீங்க மான் பிளீஸ் பிளீஸ் ஸ்கிப் மான்" அப்டீன்னு கவுண்டமணி ட்யூன், டோன்ல அயுதேன். அவரு எவண்டா தெருநாயின்னுகூட கண்டுக்கல. லூசு அயுதுட்டே கெடன்னுகூட சொல்லல்ல. அவருக்கு வேற பிதா பட்டம் கட்டீ, புள்ளைய கொல்ல முயற்சி பண்ணாருன்னு உள்ளாற தள்ளிடுவமா?)

ஒண்ணு பண்ணிடட்டுமா? நாக. இளங்கோவ நயனரு, மேலே நீயி தேமேன்னு கெடக்க சும்மா ஒதச்சிருக்கிற காசி ரெண்டு பேத்தயும் சேத்துக்கிட்டு, மூணு பேரா "Three Men & Tamil Baby" (அய்யோ! இது வேற பேபிங்க வுட மாட்டீங்களே!! இத மட்டும் தலப்புல வெச்சு ஒரு போஸ்டு போட்ருந்தேன்.. சும்மா பிச்சுட்டு கமல்-கௌதமி போஸ்ட கடந்துபோயி எந்த ரேஞ்சிலயோ தமிழு நின்னிருக்கும்) அப்டீன்னு வளத்திடட்டுமா?

வந்துட்டானுங்க. த்தா, யூஎஸ் இந்திஜீ, இப்பிடியே அடுத்த வாட்டியும் தம்பி தமாசு பண்ணினீரு, "தமிழ்ப்பிதாக்களை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் (மாதாக்களையும் சேர்த்துத்தான் வைத்துக்கொள்ளச் சொல்லப்பார்த்தேன்; அது பிறகு தமிழ்விவ காரம் ஆகிவிடுமாதலால் விட்டுவிடுகிறேன்); தமிழை நாங்கள் வைத்துக்கொள்கிறோம்" என்று வைகோ ரேஞ்சில அறிக்கை விட்ருவேன். ஆமா.... சாக்கிரதை :-)

theevu said...

அண்ணை இதையும் கவனியுங்கோ..

-/பெயரிலி. said...

தீவார், (உப்பிடிச்சொன்னால் பின்னிப்போடுவினம் எண்டதாலை,) தீவு,
உப்பிடி முதன்முதலாக இணையத்தில் இணையம் எண்டுகூட அட்வடிஸ்மெண்டல் வரும். உதையேன் தொடயில்லையெண்டால், நாங்கள் இங்க முதல் இணையத்தில பறந்து இறங்கிய தமிழ் ஈ சஞ்சிகை எண்ட வட்டத்தின் மையத்தின் அடி முடி மட்டும் தேடிக்கொண்டிருக்கிறதால. முதல் தமிழ் ஈ தாளிகை எதெண்டு தேடப்போனால், அது தமிழ் ஈ சஞ்சிகையிலும்விடச் சிக்கல். தமிழ்நாட்டில தினபூமி தானெண்டும். [ஆனால், 1997-1998 இலை தினபூமிப்பக்கம் போறது, ஓடியோ ஏத்தமா கிழமைக்கொருக்கால் அறுத்தறுத்து அனவுன்சிங் செய்தாலும், கொஞ்சம் பழைய பாட்டுப்போடுவாங்கள் எண்டதால. பிறகு, CTBC நேர இழுக்க விட்டுப்போட்டன்... அதுவும் இளையபாரதியின்ரை அறுவைதான் எண்டது வேறை :-)] ஆனால், சிங்கப்பூரிலையும் மலேசியாவிலையும் இணையமும் தமிழும் விடுவிடுவெண்டு வளர்ந்ததால அங்கத்தைய தமிழ்முரசெல்லாம் எப்ப நெற்றிலை கொட்டினதெண்டும் பாக்கோணும். உந்த விளையாட்டு நல்லாத்தேடவேண்டிய விசயம். அதால அந்தப்பக்கமே போகேல்லை.

இண்டைக்குத்தான், கோவிந்தசாமியின்ரை பழைய கணியன் செய்தி இணையம் ஏறின முதல் நாளையே அங்கை இங்கை தேடிப்பிடிச்சிருக்கிறன். நல்லாக் கவனிச்சுக் கேளுங்கோ; பிறகு சண்டைக்கு வரக்கூடாது; அவற்றை தமிழ்நெற்/கணியன் எழுத்துரு இணையம் ஏறின நாளெண்டு சொல்லேலை... அவற்றை கணியன் செய்தி (வாரமடல்) வரத்தொடங்கின நாளெதெண்டு... 14/04/1997

அருணா ஸ்ரீனிவாசன் சொல்லுற 1995 ஆம் ஆண்டுக்கணக்கு வந்தது... தமிழ்வெப் எண்டு கோவிந்தசாமி சம்பந்தப்பட்ட "the First Singapore Tamil WWW archive" - சிங்கப்பூர் நஷனல் யூனிவசிற்றியிலையிருந்தது.
http://irdu.nus.edu.sg/tamilweb/

அவர் அதிலை முன் பக்கத்திலை போட்டிருக்க்கிறார்:

This is a Tamil-English bilingual font system Internet Information Resource Archive. The purpose of this project is to create a publicly accessible Tamil-English Bilingual Information Resource Archive. Both Tamil and English can be viewed simultaneously on the WEB.
First-test on PoemWeb on 27 Oct 95______ Initiated on Sep 1995______ First Preview on 1 Dec 95______ Launched on 2 Feb 96
We are THREE year-old as of Sep 1998!


கோவிந்தசாமி சொல்கிற இணையத்தமிழின் முதலாவது கவிதைப்பக்கத்தினைப் பார்க்க...
இங்கே

கவிதை -1
கவிதை -2

இப்ப, அருணா ஸ்ரீனிவாசனுக்குத் தேவையான 1995 ஆம் ஆண்டு இணைப்பு இதுவென்றே நினனக்க்கிறேன். அதைக் கொண்டுவந்தாலே ஆச்சு என்றில்லாமல் நானே எடுத்துக் கொடுத்துவிட்டதால், அவருக்கும் மாலனுக்குமான என் பதிலைத் தனித்தனிப்பதிவாகத் தொடரலாம் என எண்ணம் (வாரக்கடைசிகள் நேரநெருக்கடி மிகுந்தவை என்பதால், என் பதில்கள் சற்றே முந்தும் பிந்தும்)

-/பெயரிலி. said...

மறந்து போன முக்கிய குறிப்பு: உந்த லிங்கெல்லாம் நான்தான் என் நேர, சக்தி, மூளை விரயத்தின்பின்னாலே தன்னார்வத்தோட கண்டுபிடிச்சிருக்கிறன். அதனால், வாற காலத்தில ஆருக்கேனும், "வலையில முதல் பலிசோசியிக் யுக தமிழ்மீனைத்தேடிக்கண்டுபிடித்தபிதா" எண்டு பட்டம் குடுக்கிறதெண்டால், எனக்குத்தான் தரவேணும். இந்தப்பதிவில முதல் பின்னூட்டம் டிஜே போட்டிருக்கிறதால, அவருக்குக் குடுக்கக்கூடாதென்று ஆண்டைகளின் சமூகத்திலே தெண்டனிட்டு விண்ணப்பிக்கின்றேன்.

theevu said...

http://theevu.blogspot.com/2007/07/blog-post.html

இளங்கோ-டிசே said...

/முதல் பின்னூட்டம் டிஜே போட்டிருக்கிறதால, அவருக்குக் குடுக்கக்கூடாதென்று ஆண்டைகளின் சமூகத்திலே தெண்டனிட்டு விண்ணப்பிக்கின்றேன்./
அவ்வாறு எனது பெயர் மறைக்கப்பட்டால், இதுவரை போடாத எட்டைப்போட்டு அனைத்து எட்டிலும் உங்களைத் திட்டுவேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
.....
2ல் ஆட்டமிழ்ந்து 82ல் மீண்டும் இரண்டாம் ஆட்டத்திற்கு வந்தற்கு காரணம்... இப்படித் தோண்டியெடுத்து பின்னூட்டங்களில் போட்ட தகவல்களை ஒன்றிரண்டு தனிப்பதிவுகளாகப் போடவேண்டுமென்று கேட்டுக்கொள்ளவே. நன்றி.

-/பெயரிலி. said...

டிசே
வியாபாரம் பாரமானால் வியாபித்துக் கிளைக்கடை(கள்) போடத்தான் வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்ததுதான். திறக்கவே பஞ்சிப்படுகுது... சனி ஞாயிறு திங்கள் ஓயப்பார்ப்போம்.
====
நோர்வே ஜெயச்சந்திரன் கோபிநாத்தின் அன்றைய Oviya Research இன் 27 Dec 1995 அன்று மேம்படுத்தப்பட்ட பக்கங்கள் சிலவற்றை இதனூடாக அணுக
அப்பக்கத்திலே சொல்லியிருப்பது:
/Introduction
It is possible to set up web sites and communicate on the net using Tamil script. We have successfully designed a system that enables Macintosh and Windows based Netscape clients to view web pages set up on a Unix, PC or Mac server.
Before launching the final release through ftp, we would like to hear other Tamil users' opinions about the solution that is being designed.
We are of opinion that such a system must evolve from the internet community freely without being launched as a commercial software package. We are sure that there are many programmers and font designers who are interested in developing Tamil communication software in the internet community and we hope that they will be interested in cooperating with us in this project.
Let us be interactive and non-commercial in this project!
We ask you all to read the section 'project overview' and suggest any requirement that you think is of importance. We will update the requirements catalogue as new requirements are identified.
See the current achievement section for more details if you are only interested in using the system!
/

/Current achievement:
We have set up an experimental Tamil web site using TamilComm beta version on a Unix server. This site is being viewed successfully by Netscape Navigator 1.1 from MS-Windows and Macintosh platforms. Requirements that are met until are 1.1, 1.2, 1.3 and 1.4.
Our site is now being experimented with Unix based Netscape browser.
/
இத்தகவல் ஜெயச்சந்திரன் கோபிநாத் கோவிந்தசாமிக்கு முன்னால், தமிழிலே இணையப்பக்கம் ஏற்றினார் என்று நிரூபிக்கவில்லை. ஆனால், இது 27 டிசம்பர் 1995 மேம்படுத்தப்பட்ட பக்கமெனக் குறிப்பிடப்படுவதால், மூலப்பக்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, அதிலேயிருந்த உள்ளடக்கங்கள் எவை என்பதை அறிந்தபின்னரே, தமிழின் முதல் இணையப்பக்கம் குறித்து மேலதிகமாக அருணா ஸ்ரீனிவாசன், மாலன் ஆகியோருக்குப் பதில் தருவது திருத்தமாகவும் ஆதாரமாகவுமிருக்குமென நினைக்கிறேன் என்றாலும் பதிவின் தலைப்புக்கேள்விக்கு வேறு பதில் இருக்கவும் கூடும் என்ற மாற்றுநிலையை இங்கே வாலிலையாவது கட்டிவிடுகிறன். புலம்பெயர்ந்த பெரும்பான்மை ஈழத்தவர் பயன்படுத்திய தமிழ் எழுத்துருக்களுக்கும் ஏனையவர் பயன்படுத்திய தமிழ் எழுத்துருக்களுக்கும் இணையச்சம்பந்தமின்மை யூனிக்கோட் வருவரையும் ஓரளவு இருந்ததுதான் புலம்பெயர்ந்த ஈழத்தவர்களின் எழுத்துருக்களை அடித்தெழுதித் தமிழில் இணையப்பக்க முயற்சி எப்போது ஆரம்பமாகின்றதென்பதைத் தேடச் சொல்கின்றது. ஜெயச்சந்திரன் கோபிநாத்தினைத் தெரிந்த ஒரு வலைப்பதிவு நண்பரிடம் அவரிடம் இது பற்றிக் கேட்கமுடியுமா என்று கேட்டிருக்கின்றேன். நானாகத் தேடி எழுதுவதிலும் அவரே சொல்வது நல்லதல்லவா? அப்படியாக அவர் சொன்னால், நா.கோ தொடங்கிய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஆச்சு.

முடிவு எதுவாயிருப்பினும் சம்மதமே :-) நிகழ்வுகளின் காலவரிசைப்படி வரலாறு எழுதப்பட்டால், சரி மார்க்கோனி-போஸ், நைலோன் கதைகளாகவிருந்தாலுஞ் சரி.
இதுபோலவே, TamilNet '99 விசைப்பலகை பற்றியும் ஜெயச்சந்திரன் கோபிநாத்திற்கு மேலதிகமாக ஏதும் தெரியுமா என்பதைப் பற்றியும் விபரம் சொன்ன அதே நண்பர் (வாசிக்கின்றீர்களா?) கேட்டுச்சொன்னால் நல்லது.

மிகுதியை என் புது இடுகையிலே அருணா ஸ்ரீனிவாசனுக்கான பதிலோடு இரண்டு மூன்று நாட்களிலே பார்ப்போம்.

-/பெயரிலி. said...

/புலம்பெயர்ந்த பெரும்பான்மை ஈழத்தவர் பயன்படுத்திய தமிழ் எழுத்துருக்களுக்கும் ஏனையவர் பயன்படுத்திய தமிழ் எழுத்துருக்களுக்கும் இணையச்சம்பந்தமின்மை யூனிக்கோட் வருவரையும் ஓரளவு இருந்ததுதான் /

அப்படியாகச் சொல்வது திருத்தமானதோ தெரியாது... வேண்டுமானால், பாமினி போன்ற எழுத்துருக்களினை உள்ளிட்ட அதே விசைப்பலகை உள்ளிடுதல் முறையிலே மற்றைய எழுத்துருக்களையும் தட்டச்சும் வகை செய்ததும் எழுத்துரு மாற்றிகள் வந்ததும் (சுரதாவின் மாற்றிகள், மணி. மு. மணிவண்ணனின் tsc convertor, முரசு அஞ்சலில் பின்னைய முறைகள், ஈ-கலப்பை என்பன இவ்வகை செய்தன எனப்படுகிறது)

-/பெயரிலி. said...

Though not related to this subject, it is just a coincidence
this post got floated in googling:-)

2000 Tamil.Net
[tamil] Beware the Norwegians Talking Peace

ரோஹான் குணரட்ணவைப் பற்றி அன்று சொன்னது தவறென்பதை சில வாரங்களுக்கு முன்னால், C SPAN இலே பார்த்தபோதும் ஞாபகம் வந்தது. எல்லாம் செப் 11 தந்த வாழ்வு!! செப் 11 உடன் வாழ்க்கை கிடைத்து வைத்துப்பிழைப்பவர்களிலே முக்கியமானவராகப் போனார் :-(

-/பெயரிலி. said...

ezilnila.com 10 years old on July 14, 2007

-/பெயரிலி. said...

From TSCII List
14 May, 2007

TSCII HAS BEEN OFFICIALLY RECOGNISED AS FONT ENCODING STANDARD !!!
- K. Kalyanasundaram
"...TSCII in addition to being the first Indic language encoding to be
developed through open mailing list discussions is also the first
font encoding standard for any indic language formally registered
in international charset registeries of IETF/ICANN/IANA....."

கொழுவி said...

அண்ணை வலைப்பதிவில முதன்முதல் குரல் பதிவு (இசையும் கதையும்) போட்டது நான்தான். இந்த வரலாற்றையும் எங்கேயும் பதியலாமோ..? எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத் தான்..

மாலன் said...

அன்புள்ள ரமணீதரன், பெயரிலி, அலைஞன் எனப் பல பெயர்களால் அறியப்படும் பெயரிலி என்ற நண்பருக்கு,

என் பதிவில் வந்து பின்னூட்டமிடுவது தனது தகுதிக்குக் குறைவு எனக் கருதி உங்கள் பதிவில்- மன்னிக்கவும்

உங்கள் ஈகோ இன்ஜினில்- எனக்குச் சில கேள்விகளை நீங்கள் வீசியிருந்தாலும், உங்கள் பதிவில் அவற்றுக்குப்

பதிலளிப்பதைப் பெறும் பேறாகக் கருதி இதனை எழுதுகிறேன்.

முதலில் உங்களுக்கு நன்றி.என்னிடமிருந்து நீங்கள் அறிய விரும்பிய விளக்கங்களுக்கான கேள்விகளை,

எனக்கு அனுப்பாமல் உங்கள் பதிவிலேயே இட்டுக் கொண்டது நீங்கள் என் மீது வைத்திருக்கும்

நம்பிக்கையைக் காட்டுகிறது. என்னை விமர்சிக்கும் பதிவுகளையும் கூட நானே தேடிச் சென்று வாசிப்பேன்,

வாசித்து விட்டு அவற்றை அலட்சியம் செய்யாது விளக்கமும் அளிப்பேன் என்ற நம்பிக்கையை

வெளிப்படுத்தியிருக்கிறீர்களே,. அதற்காக நன்றி.

நீங்கள் மெய்யாகவே விளக்கங்களை வேண்டி அந்தக் கேள்விகளைத் தொடுத்திருந்தால்,அதை என் பதிவிலோ

அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்பியோ கேட்டிருப்பீர்கள். ஆனால் உங்களின் உண்மையான அக்கறை

அவற்றுக்கான பதில் அல்ல. வெறுமனே அலை எழுப்புவது. அலைஞன் அல்லவா நீங்கள்?

என்றாலும் விளக்கங்கள் கொடுப்பதில் எனக்கு ஏதும் சிரமம் இல்லை. நேரப் பற்றாக்குறை தவிர.

முதலில் சில கருத்துக்கள்:

1.இந்த எட்டுப் போடுகிற விளையாட்டு என்பதே ஒருவர் தன்னைப் பற்றிய விவரங்களை தன்

கோணத்திலிருந்து எழுதுவதுதான். (உங்கள் வார்த்தைகளிலேயே சொல்வதானால், "மிகத்தீவிரமாக

இணையத்திலே எட்டுக்குனியா பரவும் இக்காலகட்டத்திலே 'sexed up self claims' நோய்க்குறி").வரலாறு

எழுதுவ்து விளையாட்டான விஷயம் அல்ல என்றே நான் கருதுகிறேன். அப்படியிருக்க நீங்கள் ஏன் நான் ஏதோ

வரலாற்றைத் திரித்துவிட்டதாக அல்லது வரலாற்றை மறைத்து விட்டதாக அல்லது வரலாற்றுப் பிழை

செய்துவிட்டதாக ஆவேசப்படுகிறீர்கள்?

2.நான் அந்தப் பதிவில் நான் என் Formative years, எனக்கு கவியுலகோடு ஏற்பட்ட அறிமுகம்,எழுத்துலகோடு

ஏற்பட்ட அறிமுகம், பத்திரிகை உலகோடு ஏற்பட்ட் அறிமுகம், அரசியல் உலகோடு ஏற்பட்ட அறிமுகம், என

என் பல துவக்கங்களைக் குறிப்பிட்டு எழுதியிருப்பதைப் போல,கணினியுடனும் இணையத்தோடும்,

வலைப்பதிவுலகோடும் ஏற்பட்ட அனுபவங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன்.அதில் எந்த இடத்திலும் நான்

இணைய அறிஞர் என்றோ, இணைய முன்னோடி என்றோ குறிப்பிட்டுக்கொள்ளவில்லை.அப்படியிருக்க நீ என்ன

பெரிய..... என்ற கேள்விக்கோ, கேலிக்கோ அவசியம் என்ன?

"கோவிந்தசாமிதான் முதலிலே இணையத்திலே தமிழேற்றியிருக்கின்றார் என்கின்றீர்கள். அதிலே எத்துணை

உண்மையிருக்கின்றது?" என்று கேட்டிருக்கிறீர்கள். வரலாற்றைத் திரிப்பவனாக நீங்கள் கருதும் என் கருத்தை

விட்டுத் தள்ளுங்கள். ஆனால் இந்தத் தரவுகளைப் பாருங்கள்:

தரவு-1

"முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி. "1995ம் ஆண்டு

அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words,

Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக்

கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது"

மேலே உள்ளது தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து பெறப்படது. " கணினியில் தமிழ் என்ற பக்கத்தில் இணையத்

தமிழ் முன்னோடி - நா. கோவிந்தசாமி என்ற துணைப்பிரிவில் இந்தத் தகவல் காணப்படுகிறது.

தரவு-2

"Naa Govindaswamy passed away in Singapore, on 26 May 1999 at the relatively young age of 52. He

was one of the pioneers of the Tamil digital renaissance of the 20th century. Tamils living in many lands

have lost an enthusiastic and gifted worker who had contributed much to nurture their growing

togetherness.

The print revolution brought Tamil from the ola leaves to paper, from the select few literati to the many. The

digital revolution is bringing Tamil from paper to the computer and the internet. U.V.Swaminatha Iyer and

Thamotherampillai heralded the Tamil renaissance in the 19th century. Both Naa Govindasamy and

Kuppuswamy Kalyanasundaram have made important contributions to the Tamil digital renaissance of the

20th century."

இது தமிழ்நேஷன் என்ற வலைப்பக்கத்தில் காணப்படும் குறிப்பு: காண்க

http://www.tamilnation.org/hundredtamils/naag.htm

தரவு-3

"உலகில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்மொழியில் தான் அதிக அளவில் இணையத் தளங்கள். மனம்

குதூகலிக்கிறது. இணையத்தில் முதலில் தமிழை வலம் வரச் செய்த பெருமை யாருக்குரியது தெரியுமா?

தமிழை இணையத்தில் உதிக்க வைத்த பெருமை, சிங்கப்பூருக்குரியது. தமிழர்கள் வாழும் பல நாடுகளுக்குக்

கிடைக்காத பெருமை சிங்கப்பூருக்குக் கிடைக்கக் காரணமாயிருந்தவரை இணைய உலகில் வலம் வரும்

எவரும் மறந்துவிட முடியாது. அவர்- அமரர். நா.கோவிந்தசாமி!

1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த

Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய

மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.

இந்த வலையகத்திற்கான தமிழ்ப் பகுதியை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர் அமரர்

நா.கோவிந்தசாமி.நன்யான் தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு அந்த நாட்டைப் பற்றிய பல தகவல்களை இணையத்தில் இடம்

பெறச் செய்ய நினைத்தபோது, தமிழிலும் அவற்றை வெளியிட முடிவு செய்தது. அந்தப் பணிகளை இவரிடம்

ஒப்படைத்தது. இவரும் அதைத் திறம்படச் செய்து சிங்கப்பூர் அரசின் பாராட்டுக்குரியவரானார்."

இது 2004ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற இணையத் தமிழ்மாநாட்டில் ஆலபர்ட் என்பவரால் அளிக்கப்பட்ட

நா.கோவிந்தசாமி என்ற முன்னோடி என்பவ்ரின் கட்டுரையிலிருந்து.

தரவு-4

"Tamnet formerly known as Tamil Network Publishing House, was established in 1996 by Mr Naa

Govindasamy (1946 - 1999), who is more fondly remembered as the Father of
Tamil internet."
-இது கணியன் தளத்திலிருந்து (http://www.kanian.com/profile.htm)

தரவு-5

"தமிழ் இணையத்திற்கு முன்பாகவே தமிழ் எழுத்துரு முயற்சிகள் சிங்கப்பூர் நா.கோ மற்றும் இன்ன பிற

ஆர்வலர்களால் சிறப்பாகச் செய்யப்பட்டது..."

இது சகவலைப்பதிவர் அலெக்ஸ் பாண்டியன் ஜீன் 14, 2005ல் எழுதியது.இங்கு அவர் தமிழ் இணையம்

எனக்க்குறிப்பிடுவது தமிழ்,நெட் டைத்தான்.தமிழ்.நெட் பற்றி நன்கு அறிந்தவர் அதைக் குறித்து விரிவாக தனது

பதிவில் மூன்று பகுதிகளாக எழுத்யிருக்கிறார். அலெக்ஸ் பாண்டியன் 97 அல்லது 98லிருந்து இணையத்தில்

உலவி வருபவர் எனச் சொல்ல முடியும். காண்க: http://alexpandian.blogspot.com/2005/06/1.html

என்னுடைய கேள்வி எல்லாம், மேலே உள்ள எல்லாத் தரவுகளும், என் வலைப்பதிவு எழுதப்படுவதற்கு

முன்னரே இனையத்தில் இடம் பெற்றிருந்தவை. இந்த இடங்களுக்குச் சென்று இதற்கு முன்னர்,

"கோவிந்தசாமிதான் முதலிலே இணையத்திலே தமிழேற்றியிருக்கின்றார் என்கின்றீர்கள். அதிலே எத்துணை

உண்மையிருக்கின்றது?" என்று கேட்டிருக்கிறீர்களா என்பதுதான். உங்களுக்கு உண்மையை அறிந்து கொள்ளும்

அலலது நிலைநாட்டும் ஆர்வம் மெய்யாகவே இருந்திருக்குமானால் நீங்கள் அதைச் செய்திருப்பீர்கள். ஆனால்

உங்கள் நோக்கம் அதுவல்ல. உங்கள் ஆர்வம் அலை எழுப்புவதில்;ஆறுமுக நாவலர் குறித்து நான்

வெளியுட்டுள்ள சில கருத்துக்கள் காரணமாக என் மீது ஏற்பட்டுள்ள மனச்சாய்வின் காரணமாக, காழ்ப்பின்

காரண்மாக என் மீது சாணி எறிவது.

சரி ஏன் நா.கோ.முதலில் தமிழை இணையத்தில் ஏற்றியவராகக் கருதப்படுகிற்ர்?

நா.கோவே தனது முயற்சி என்ன என்பதை விளக்குகிறார்:

" Singapore is a multilingual and a multiracial country. English, Chinese, Malay and Tamil are the official

languages. Most of the government and public documents are published in these four official languages.

However, until recently, it was not possible for the Chinese and Tamil languages to be disseminated

through the World Wide Web on the Internet.

In 1994 Dr Tan Tin Wee, my research collaborator initiated work in this area while he was the head of

Technet Unit, the first Internet service provider for Research and Educational Institutions in Singapore.

Technet Unit was directly under the supervision of the Computer Centre of the National University of

Singapore. (Technet Unit has since been commercialised to become Pacific Internet, one of the three

ISPs for Singapore. The others are Singnet and Cyberway.) By mid-1994, Technet Unit initiated the

Singapore INFOMAP project which provided a one-stop WWW home page for Singapore. He wanted the

four official languages to be represented in the INFOMAP.

Since English and Malay are using the Roman script, displaying these two languages on the WEB was not

a problem. By the end of 1994, Technet had successfully implemented an Experimental Chinese WEB

server in Singapore. So the problem of displaying the Chinese script on the Web was solved. However,

displaying Tamil script on the Web, and communicating through Tamil on Internet was a problem. There

was no Tamil Information System on the Internet which provides a display system in Tamil and English

simultaneously on the Text Mode using a Tamil-English single font file. There were a few servers, which

were providing Tamil script using GIF image files.

Tamil Eelam Page (http://www.eelam.com) was and is still very active in this direction. Tamil Nadu Home

Page, and Tamil Electronic Library . (http://www.geocities.com/Athens/5180/index.html) are other popular

Tamil Web Sites on Internet at that time. Tamil Electronic Library was using (and is still using) a mono 7bit

font (Mylai) for the Tamil display on the Web.However, Mylai font cannot support native emailing at that

time.

So there was a need to develop a Tamil Internet System which should go beyond Web display. In May

1995, I met Dr Tan at the Technet Unit, National University of Singapore, soon to become the Internet

Research and Development Unit (IRDU) (now upgraded to Centre for Internet Research). We identified the

potential solutions and agreed for a possible research collaboration between NUS and my institution, NIE,

NTU, the two instititutions of higher learning in Singapore at that time.

At that time, on my own, I was in the process of developing True Type fonts and a Tamil software for

Windows Applications (Kanianப)�ப Tamil Software). As the service provider arm of the Technet was sold

to a private consortium and renamed Pacific Internet in September 1995, the nascentTamil Internet

Research was inherited by the newly formed Internet Research and Development Unit (IRDU). This

Research Unit was funded by the National Science and Technology Board (NSTB )

(http://www.nstb.gov.sg) of Singapore. Mr Leong Kok Yong, just graduated from the Nanyang

Technological University, joined IRDU, and became one of the key member for the TamilWEB project.


Objective

During the Technet period, when Dr Tan and I, conceptulised the TamilWEB Project. We had a very clear

objective.That is: to develop a bilingual font system for The Total Internet Communication in the Tamil

language. That means, the system that we intended to develop:

should provide display of Tamil & English Text simultaneously on the Internet Applications. (Web Browsers

& Email sofware packages.)
Tamil and English text should be easily communicated and retrieved in Plain Text.
should work across Platforms. (PC, Mac & Unix)
should be searchable in Tamil
should let the user type Tamil in the Web browser's Forms, and the typed word should be seen in Tamil.
Should allow the user to read Tamil & English in terminal emulation mode (telnet).

Prototype Testing, Preview and Official launch

The prototype of our system was tested during the launch of PoemWEB. PoemWeb is an electronic

selection of representative poems from the four official languages, from the book , Journeys: Words,

Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) which was published by The Centre for

the Arts, National University of Singapore. This book was launched by H.E. Mr Ong Teng Cheong,

President, Republic of Singapore on Friday 27 Oct 1995.

The preview of the first phase of TamilWEB project was shown to the public and to the Press at the Internet

for Everyone 1995 at Suntec City Exibition Hall during 13 December 1995. TamilWeb was officially

launched by the Honourable Member of Parliament, Dr Ong Chit Chung (Chairman, GPC for Education

and MP for Bukit Batok) on 2 February 1996"

இது கோவிந்தசாமி செப்டெம்பர் 14 1998ம் ஆண்டு, புனேவில் நடைபெற்ற SAARC Conference on

Extending the Use of Multilingual & Multimedia Information Technology என்ற மாநாட்டில் அளித்த
Towards a Total Internet Solution for the Tamil Language through Singapore Research என்ற

கட்டுரையிலிருந்து. இதன் பிரதியை http://www.tamilnation.org/digital/tamilnet99/govindasamy.htm என்ற

இடத்தில் காணலாம்

நீங்கள் கணியன் இதழ்களை மனதில் கொண்டு பேசுகிறீர்கள் எனபது, "கணியன் இதழ் தமிழ்நெட்

எழுத்துருவிலே தொடங்கமுன்னரே, மயிலையிலே இணையத்திலே வலைப்பக்கங்கள் இருந்தன " என நீங்கள்

குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்கிறேன். நான் கணியன் இதழ்களை அடிப்படையாகக் கொண்டு என்

கருத்தைப் பதிந்திருக்கவில்லை. நான் குறிப்பிடுவது சிங்கப்பூர் அரசு மேற்கொண்ட முயற்சிகளையும், அதில்

கோவிந்தசாமிக்கு இருந்த பங்களிப்பையும்.

தமிழ் நெட் 1995ல் துவங்கப்பட்டதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது: "இணையப் பாவனையும் தமிழில்

மின்னஞ்சல் சாத்தியமான சூழலும் பல் வேறு நாடுகளிலுமிருந்த பல தமிழர்களைக் கணினியில் தமிழில்

தொடர்பாட வைத்தன. இந் நிலையில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலா பிள்ளை

என்பவர் ஒரு மடலாடற்குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (tamil.net) என்ற

இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார்."

சிங்கை அரசின் முயற்சிகள் 1994ல் துவங்கிவிட்டன. "By mid-1994, Technet Unit initiated the Singapore

INFOMAP project which provided a one-stop WWW home page for Singapore. He wanted the four official

languages to be represented in the INFOMAP." (இதில் he என்பது Dr,டான் டின் வீ யைக் குறிக்கிறது

என்பதை மேலே உள்ள கோவிந்தசாமியின் கட்டுரையைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்)

தமிழ் நெட் எழுத்துரு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் தமிழ் நெட் மடலாடற்குழுவில் எழுதியவர்கள்

முத்து நெடுமாறனின் எழுத்துருவைப் பயன்படுத்தியதாக விக்கி பீடியா குறிப்பிடுகிறது: "முரசு அஞ்சல்

எழுத்துருவை நியமமாகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து

கொண்டிருந்தது."

மயிலை எழுத்துருவில் இணையப்பக்கங்கள் இருந்தன என்பதும் அதை நா.கோ தன் கட்டுரையில்

சுட்டியிருக்கிறார் என்பதும் உண்மைதான்.ஆனால் அவற்றின் limitaionகளையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மயிலை எழுத்துருவை வடிவமைத்தவரும், மதுரைத் திட்டத்தை நிறுவியவருமான டாக்டர். கல்யாணசுந்தரம்,

1999ல் தகுதர எழுத்துக்களுக்கும், பின் 2003ல் யூனிகோடிற்கும் தன் தளத்தை மாற்றிக்கொண்டுவிட்டார்

என்பதுவே அதன் limitationகளைச் சுட்டப் போதுமானது. "மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப

காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்துருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம்

ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான என இணையம்வழி

நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு

தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய

பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2003-ம்

ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகளையும்

வெளியிட்டு வருகிறோம்." என் மதுரைத் திட்டத்தில் காணப்படும் குறிப்பு சொல்கிறது.

தகுதரத்தின் வரைவு முன்வடிவம் டிசம்பர் 1997ல் வெளியிடப்பட்டது. ('TSCII stands for Tamil Standard

Code for Information Interchange. It is a character encoding standard for Tamil on computers. Read the

draft proposal released in December 1997, for a detailed discussion. The current draft is labelled, TSCII

1.7" இந்தக் குறிப்பை http://www.tamil.net/tscii/tscii.html என்ற இடத்தில் காணலாம்) நா.கோ சிங்கப்பூர் அரசின்

உதவியுடன், கணியன் பூங்குன்றன் பாடலுடன் வெளியிட்ட இணையதளம் 1995 அக்டோபரிலேயே

வலையேறிவிட்டது.

?நீங்கள் எப்போது உத்தமத்திலே சேர்ந்துகொண்டீர்கள் என்பதையேனும் காலவரையறைப்படி சரியாக நீங்கள்

சுட்டிக்காட்டவில்லை. .....நீங்கள் சேர்ந்து கொண்டது மிக மிகப் பின்னான காலகட்டத்திலே. அனைத்தும் நடந்து

முடிந்து. " ஆமாம். அதற்கென்ன இப்போது. நான் உத்தமத்தின் ஆரம்பகால உறுப்பினர், நிறுவனர் என்றா

என்பதிவில் சொல்லியிருக்கிறேன்?

ஆனால் நான், உத்தம மாநாடுகளுக்கு முன்னோடியாக அமைந்த, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின்

ஆதரவில் 1997ம் ஆண்டு மே 17-18 தேதிகளில் சிங்கப்பூரில் நடந்த முதல் தமிழ் இணைய மாநாட்டில்

(அப்போது அது Tamilnet 97 என்றழைக்க்ப்பட்டது) அமைப்புக் குழுவினரின் அழைப்பின் பேரில் கலந்து

கொண்டேன். அது குறித்து வெளியிடப்பட்ட சுருக்கமான அறிக்கையில் காணப்படும் வாசகங்கள் இவை:

"The 2 hour-long discussion session on the second day of the symposium came to a fruitful ending. The

discussion panel (a total of 11 members) was led by Sujatha and included N. Anbarasan, S Kuppuswami,

ST Nandasara, Kuppuswamy Kalyanasundaram, Malaan, Harold Schiffman, Vasu Renganathan,

Muthelilan Murasu Nedumaran, Naa Govindasamy and Tan Tin Wee. The topics discussed includes -

Increasing Tamil Content Worldwide

Keyboard Diversity

Encoding Standards

Standardization of Tamil Websites and WebPages

Work to be done/Time Frame

Next Symposium - TamilNet'98

இதனை http://www.tamilnation.org/digital/tamilnet97/Tamilnet97.htm என்ற இடத்தில் பார்க்கலாம்.

இந்த மாநாட்டின் படங்கள் உத்தமம் இணையதளத்தில் இருந்தன.அண்மையில் அந்தத் தளம் சீரமைக்கப்பட்ட

போது அவை நீக்கப்பட்டுவிட்டன.

"உத்தமம் வருவதற்கு முன்னாலே அதற்கு முன்னான ஆரம்பக்குழுக்களும் வெப்மாஸ்ரர் மின்னஞ்சற்பட்டியல்

விவாதங்களிலும் நீங்களிருந்தீர்களா?" என்பது உங்களது மற்றொரு கேள்வி.

பதில்: இல்லை.அப்படி இருந்ததாக இந்தப் பதிவில் மட்டுமல்ல நான் எங்கும் குறிப்பிடவில்லை.முதலில் நான்

இணைய அறிஞர் அல்ல்.இணையப் பயனர்.97ல் நடந்த மாநாட்டிற்குப் பிறகு, எழுத்துருக்களைத் தரப்படுத்துவது

பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்து விட்ட்ன. 1999ல் சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டின்

வரவேற்புரையில் முரசொலி மாறன் குறிப்பிட்டது போல, "இன்று சுமார் 350 மென்பொருள்கள்

கணிப்பொறியில் உலாவந்து கொண்டிருக்கின்றன். இது உண்மையிலேயே பெருமைக்குரிய செய்திதான்.ஆனால்

ஒவ்வொருவரும் ஒரு தமிழ் வடிவக் குறியீட்டு முறையைக் கையாண்டுக் கொண்டிருக்கிறார்கள். (அதாவது -

ஒவ்வொருவரும் தனித்தனி அலைவரிசையில் ஒலி பரப்புவது போல.)விளைவு என்ன? இன்று இண்டர்நெட்

இணையத்தில் 350 "தமிழ்கள்" இடம்பெற்றிருக்கின்றன. அதாவது - ஒரு மென்பொருளில் தயாரிக்கப்பட்ட

தமிழ்ச் சொற்கலை மற்றொன்று ஏற்றுக்கொள்ளாது.இதனால் கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தும்

தமிழர்கள் தனித் தனித் தீவுகளாக தொடர்பின்றி நிற்கிறார்கள்"

நான் மென்பொருள் வல்லுநர் அல்ல. இந்த பிரசினைக்குத் தீர்வை முன்மொழியக் கூடிய தொழில்நுட்ப அறிவு

என்னிடம் இல்லை. எனவே எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்ற மனநிலையில் ஒதுங்கி

இருந்தேன். அதை என் வலையுலக நண்பர்க்ளிடமும் தெரிவித்து விட்டேன். பின்னால் எல்லாம் முடிந்து (99

மாநாட்டிற்குப் பின்னும் சர்ர்ச்சை தொடர்ந்து கொண்டுதானிருந்தது) யூனிக்கோடின் வருகைக்குப் பின்னர்தான்

இணையத்தில் தமிழ் பற்றிய முயற்சிகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். நான் தகவல் பரிமாற்றத்

(Communication) துறையைச் சேர்ந்தவன். ஆளுக்கொரு எழுத்துரு வைத்துக் கொண்டு நான் எழுதுவது

உனக்குப் புரியாது என்று சர்ச்சித்துக் கொண்டிருக்கும் இடத்தில் எனக்கென்ன வேலை?

"மைக்ரோஃஸொப்டின் ஒருகூற்றினைத் தமிழ்ப்படுத்தும் நோக்குடன் இறங்கியபோது (இதைக்கூட

தன்னார்வத்தொண்டெனச் சொல்லிவிடமுடியுமாவெனத் தெரியவில்லை)"

சந்தேகமே வேண்டாம். அந்த முயற்சிக்காக நான் ஒரு பைசா, சதம், சென்ட், டாலர், எதுவும் பெற்றுக்

கொள்ளவில்லை.பொருளாகவும் பெற்றுக் கொள்ள்வில்லை.அவர்கள் ஒரு மென் பொருளை அளிக்க முன்

வந்த போதுகூட அதை விலை கொடுத்துத்தான் வாங்கிக் கொண்டேன். முழுக்க முழுக்க தன்னார்வத்

தொண்டாகத்தான் செய்தேன்.இரவு 10 மணி செய்தி அறிக்கை ஒளிபரப்பான பின் வீடு திரும்பி, இரவு 12 , 1

மணிவரை இதில் கவனம் செலுத்திதான் அந்தப் பணியை செய்து முடித்தேன். தமிழ் ஆர்வம் உங்களுக்கு

மட்டும்தான் உரியதா? இந்த அணில்களும் முதுகில் மண் சுமக்க முடியும்.

கணிச் சொற்களை நான்தான் முதலில் செய்தேன் என்றும் எங்கும் சொல்லவில்லை. நான் மேற்கொண்ட

முயற்சிக்கு முன்னரே. பல அகராதிகள் வழக்கில் இருந்தன என்பதையும் நானறிவேன். நான்

சொல்லியிருப்பதெல்லாம் நான் அந்த முயற்சியில் பங்களித்தேன் என்பதைத்தான்.

இனி 'சுதேசமித்ரன் பாரம்பரியம்' பற்றி:

உலகில் எந்த வரலாறுமே எழுதுபவரின் பக்கச் சார்போடுதான் எழுதப்பட்டு வந்திருக்கிறது என்பதுதான்

உண்மை. 1857ல் நடந்த்து ஆங்கிலேயர்கள் பார்வையில் சிப்பாய் 'கலகம்'. இந்தியர்களுக்கு அது முதல்

சுதந்திரப் போர்.தமிழ் இலக்கிய வரலாறும் இதற்கு விலக்கல்ல. தமிழின் முதல் சிறுகதையை எழுதியவர்

வ்.வே.சு எனவும் இல்லை பாரதி எனவும், வட்டுகோட்டை ஆர்னல்டு என்ற சதாசிவம் என்றும் அதற்கும்

முன்னரே சிங்கப்பூர் மக்தூம் சாய்பு எழுதிவிட்டார் எனவும் வாதங்கள் உண்டு.தமிழின் முதல் நாவல் பிரதாப

முதலியார் இல்லை, அது ஆதியோ அவதானி என்ற கவிதை வடிவில் எழுதப்பட்ட நாவல்தான் எனச் சிட்டியும்

சிவபாத சுந்தரமும் பிரிட்டீஷ் மியூசியத்திலிருந்த பிரதி ஒன்றைத் தூசி தட்டி எடுத்து நிறுவினார்கள். ஆனால்

அண்மையில் கூட இதை ஏற்க மறுத்த கி.ராஜநாராயணனுக்கும் எனக்குமிடையே மேடை ஒன்றிலேயே

பகிரங்க மோதல் நடந்தது.
சுதேசமிதரனுக்கு முன்பாக இலங்கையில் மட்டுமல்ல, மலேசியாவிலும் தமிழ்ப் பத்திரிகைகள்

இருந்திருக்கலாம். "மலேசியாவில் கட்டுரை இலக்கியங்கள் பற்றி எழுதும் முல்லை இராமையா இப்படிக்

கூறுகிறார்: "(கடந்த 130 ஆண்டுகளில்) மலேசியாவின் பல நகரங்களில் 200-க்கு மேற்பட்ட பத்திரிகைகள்

(நாள், வார, மாத இதழ்கள் பதிப்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகைகளையெல்லாம் சிறிது

காலமோ நீண்ட காலமோ வாழவைக்கக் கட்டுரைகள் பெரும்பங்குற்றியிருக்க வேண்டும்" என் இராமையாவை

மேற்கோள் காட்டி மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம், என்ற கட்டுரையில் ரெ. கார்த்திகேசு எழுதுகிறார்.

(காண்க:http://www.yarl.com/forum3/index.php?showtopic=25961&mode=linear)
ரெ.காவின் கட்டுரை 2007ல் எழுதப்பட்டதாக வைத்துக் கொண்டால், மலேசியாவின் இதழியல் வரலாறு 1877ல்

துவங்குவதாக ஆகிறது. முல்லை இராமையா இதை எழுதியது எப்போது எனத் தெரியவில்லை. அது நிச்சியம்

ரெ.கா எழுதியதற்கு முன்னர்தான். அப்படியான்ல் மலேசியாவின் இதழியல் வரலாறு 1877க்கு முன்பு கூடத்

துவங்கியிருக்கக்கூடும்..

நெடிய பாரம்பரியம் கொண்ட ஒரு மொழியில் இதெல்லாம் இயல்பானது. அதே போல வரலாறு

எழுதுகிறவர்கள் அவர்களுக்குரிய சார்புகளோடுதான் எழுதுகிறார்கள். அவரவர் சார்பு அவரவர்களுக்கு;

நீங்கள் கொடுத்துள்ள முத்தையாவின் மேற்கோளையே எடுத்துக் கொள்வோம்:

முத்தையாவின் கட்டுரையில் உள்ள் ராஜவிருத்தி போதினி, தினவர்த்தமானி, சேலம் தேசாபிமமனி பற்றீய

வாக்கியத்தை தடித்த எழுத்துக்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.(Emaphasis முத்தையாவினுடையது அல்ல,

என்று கூட நீங்கள் குறிப்பிடவில்லை) அதே முத்தையா அதே கட்டுரையில் எழுதியுள்ள வரிகளை

வாசிப்பவனின் கவனத்திலிருந்து ம்றைத்துவிட்டீர்கள் அவை இவை:

When Subramania Aiyer quit The Hindu 1898, feeling so fettered by his partner that he could not wage his

impassioned campaigns for social reforms, he made the Swadesamitran his full-time business. Operating

from premises at the rear of Whiteaway's, he made it a thrice-weekly paper, then, in 1899, the first Tamil

daily. It was to enjoy this status for 17 years - and even thereafter did not meet any real challenge till

Swararajya started in 1925, Tamil Nadu in 1927 and Dinamani in 1934, but they too were unable to shake

the Swadesamitran's primacy till the 1950s. (இதில் தடித்த எழுத்துக்களில் அடிக்கோடிட்டுள்ள பகுதி

என்னால் இடப்பட்டது)

எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள முத்தையாவிற்குமே சுதேசமித்திரன்தான் முதல் தமிழ் நாளிதழ். அதை ஏன்

நீங்கள் மறைத்துவிட்டீர்கள்? இது என்ன பாரம்பரியம்?

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்தக் குறிப்பை நீங்கள் 'நம்பிக்கைக்குரியது' அல்ல எனக்

க்ருதும் இந்து நாளிதழிலிருந்தே எடுத்திருக்கிறீர்கள்!நம்பிக்கைக்குரியதாக இல்லாத ஒரு நாளிதழில்

வெளியாகும் ஒரு நறுக்கை நம்பி நீங்கள் விவாதத்தைக் கட்டமைப்பது விநோதமாக இருக்கிறது. அதை

நம்பித்தானே அதை இங்கு பயன்படுத்துகிறீர்க்ள்?

உங்களது இந்த ஒரு செயலே இந்து நாளிதழ் நம்பிக்கைக்குரியது என நிரூபிக்கும். விடுதலைப் புலிகளின்

பிரசுரங்கள் மீது உலகில் எத்த்கைய நம்பிக்கை நிலவுகிறது என்பதை அவை எத்தனை நாடுக்ளில் தடை

செய்யப்பட்டிருக்கின்றன என்று கணக்கிட்டாலே போதுமானது.


பின்னூட்டங்களில் (உங்களுக்கு அவை பொன்னூட்டமாக இருக்கலாம்) மட்டையடித்துக் கொண்டிருக்காமல்,

ஆக்கபூர்வமாக ஏதாவ்து செய்யலாமே?

நீங்கள் ஏன் ஒரு வரலாறு- உங்கள் சார்புடனேயே இருக்கட்டும்- எழுதக்கூடாது?

RamaniKandiah said...

கொழுவி,
அது வசையும் வதையும் என்ற வகைப்பாட்டுக்குள் உள்ளே அல்லவோ முதலாமிடமெடுக்கின்றதென்று நினைத்திருந்தேன் :-). சரி, எதுவும் புத்திசாலித்தனமாகத்தான் வலைப்பதிவிலே முதல்முதலிலே இசையும் கதையும் என்று அமெரிக்காவிலே தேர்தல்வட்டாரங்கள் மாதிரியாக உமக்காட வசதிப்படுகிற களமாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றீர்கள். இல்லையென்றால், தமிழ்நாதம் பக்கத்தை முன்னுக்குக் கொண்டுவந்து நிறுத்திப்போடுவேன் என்றுமக்குத் தெரியும். இப்பவும் எதுக்கும், சந்திரவதனா, நளாயினி ஆக்களிட்டை ஒருதரத்துக்கு ரெண்டு தரமா ஒருக்கால் கேட்டுப்பாத்திட்டு பதிவுகளில் முதலிடமென்பதாகப் போடுவது நல்லது. ஏனென்றால், பிறகு வலைப்பதிவுகளிலேயென்ன blogspot இலே வரும் பதிவுகளிலே முதல் முறையெனப் போடவே இடம் கதிரையிலே ஆளிருக்கவுங்கூடும்

---

அன்பின் மாலன்
உங்கள் நேரம் செலவழித்து, பதிலிட்டதற்கு மிகவும் நன்றியெனக் கூறி அதற்கான பதில் செவ்வாயின் - (செவ்வாய்க்கிழமை)- பின்னாலே குறைந்தது இரண்டு தனி இடுகைகளாக - தமிழ்க்கலையிலக்கியவரலாறு, தமிழிணைய வரலாறு, புலி-ராம் பொருமல் மீது-, த் தருவேன் என்றெழுதியும் இணையவரலாறு குறித்து ஏற்கனவே நிகழ்வுகளை, அவற்றினை நிகழ்த்தியவர்களின் மூலமாகவும் அதன் பின்னால் தொகுப்பாகவும் தர சென்றாண்டே நண்பர்கள் சிலர் திட்டமிட்டு, இப்போது ஆரம்பகட்டமாகச் செயற்படுத்தவும் தொடங்கிவிட்டதையும் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் சொல்ல முன்னாலேயே நான் என் பதிவின் நெற்றியிலே "not a weblog, but an optimized ego-engine" போட்டு விட்டேன் (ஒரேயோர்"உண்மைமனிதனின் கதை" ;-)) என்பதையும் விளக்கி நான்கு பந்திகளிலே எழுதின பின்னூட்டத்தை புளொக்கரின் பின்னூட்டப்பெட்டி முன்பக்கத்துக்கு எதேச்சையான தட்டுதலே ஓடித் தின்று விட்டதால், இப்போதைக்கு இந்த ஒரு பந்தி-ஒரு வசனப்பின்னோட்டம்.

Anonymous said...

//கொழுவி,
அது வசையும் வதையும் என்ற வகைப்பாட்டுக்குள் உள்ளே அல்லவோ முதலாமிடமெடுக்கின்றதென்று நினைத்திருந்தேன் :-). சரி, எதுவும் புத்திசாலித்தனமாகத்தான் வலைப்பதிவிலே முதல்முதலிலே இசையும் கதையும் என்று அமெரிக்காவிலே தேர்தல்வட்டாரங்கள் மாதிரியாக உமக்காட வசதிப்படுகிற களமாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றீர்கள். இல்லையென்றால், தமிழ்நாதம் பக்கத்தை முன்னுக்குக் கொண்டுவந்து நிறுத்திப்போடுவேன் என்றுமக்குத் தெரியும். இப்பவும் எதுக்கும், சந்திரவதனா, நளாயினி ஆக்களிட்டை ஒருதரத்துக்கு ரெண்டு தரமா ஒருக்கால் கேட்டுப்பாத்திட்டு பதிவுகளில் முதலிடமென்பதாகப் போடுவது நல்லது. ஏனென்றால், பிறகு வலைப்பதிவுகளிலேயென்ன blogspot இலே வரும் பதிவுகளிலே முதல் முறையெனப் போடவே இடம் கதிரையிலே ஆளிருக்கவுங்கூடும்//

கொழுவி திட்டமிட்டு உண்மையை தொடர்ந்து மறைத்துவருகிறார் என இங்கு சொல்லிகொள்ள விரும்புகிறேன். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.


வலைப்பதிவில் முதன் முதலாக இசையும் கதையும் இட்டது கனடாவில் இருந்து வலைப்பதிந்த கவிதன். அவரது yarl.net வலைப்பதிவு சேவை வழங்கல் நிறுத்தப்பட்டதால் இணைய பரப்பில் காணமுடியாதுள்ளது. இனி எங்கும் இணைய Archive இல் அவரது வலைப்பதிவு முகவரியை போட்டு கிண்டினால் தான் உண்டு.

சொல்ல போனால் கொழுவியின் இசையும் கதையும்,கவிதனின் குறிப்பிட்ட ஒரு இசையும் கதையும் நிகச்சிக்கு எதிர்வினையாகவே வைக்கப்பட்டது.


(எப்பவும் சீரியசாவே போய்கொண்டிருக்கும் பின்னூட்டத்துக்க சிரியஸ் இல்லாமலும் சிலது இருக்கட்டுமன்.)

RamaniKandiah said...

மாலனின் பதிவிலே இட்டிருக்கும் பின்னூட்டம் தொடர்ச்சிக்காக இங்கும்:
-----
அன்புள்ள மாலன்:
முதலிலே சுருக்கமாக நீங்கள் இங்கு மேலேயும் என் இடுகையின்பின்னும் எழுதியிருப்பதன் மீது:

உங்கள் நேரம் செலவழித்து, பதிலிட்டதற்கு மிகவும் நன்றியெனக் கூறி அதற்கான பதில் செவ்வாயின் - (செவ்வாய்க்கிழமை)- பின்னாலே குறைந்தது இரண்டு தனி இடுகைகளாக - தமிழ்க்கலையிலக்கியவரலாறு, தமிழிணைய வரலாறு, புலி-ராம் பொருமல் மீது-, த் தருவேன் என்றெழுதியும் இணையவரலாறு குறித்து ஏற்கனவே நிகழ்வுகளை, அவற்றினை நிகழ்த்தியவர்களின் மூலமாகவும் அதன் பின்னால் தொகுப்பாகவும் தர சென்றாண்டே நண்பர்கள் சிலர் திட்டமிட்டு, இப்போது ஆரம்பகட்டமாகச் செயற்படுத்தவும் தொடங்கிவிட்டதையும் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் சொல்ல முன்னாலேயே நான் என் பதிவின் நெற்றியிலே "not a weblog, but an optimized ego-engine" போட்டு விட்டேன் (ஒரேயோர்"உண்மைமனிதனின் கதை" ;-)) என்பதையும் விளக்கி நான்கு பந்திகளிலே எழுதின பின்னூட்டத்தை புளொக்கரின் பின்னூட்டப்பெட்டி முன்பக்கத்துக்கு எதேச்சையான தட்டுதலே ஓடித் தின்று விட்டதால், இப்போதைக்கு இந்த ஒரு பந்தி-ஒரு வசனப்பின்னோட்டம்.


இரண்டாவது, பின்னூட்டம் இடுகை தோன்றிய பதிவிலேயே இடுவதைக் குறித்து -

பொதுவாக, சில பதிவுகளிலே நான் பின்னூட்டமிடுவதில்லை. அதற்குப் பதிவினையிட்டவர் மட்டும் காரணமில்லை. பின்னூட்டங்களுக்காகப் பின்னாலே வருகின்றவர்களும் முக்கியகாரணமாகிவிடுகின்றது. பின்னாலே வருகின்றவர்கள் முக்கிய காரணமென்றால், அதைவிட முக்கிய காரணம், (நான் பின்னூட்டமிட்டால், அதன் பிறகு) பின்னூட்டமிட வராமற்போகின்றவர்கள். இவன் ஏதோ குதர்க்கமாகப் போட்டிருக்கிறான், ஏதோ சண்டைக்குத்தான் அடிகோலுகின்றான் என்பதாக -நீங்கள் கில்லியிலே வலைப்பதிவுச்சிறப்புபார்வையிலே, சென்ற இடுகையிலே சுட்டியதுபோல - நமக்கேன் வம்பென்று இப்போதைக்கு "வாசித்ததாலே பயன்பெற்றோம்" வாழ்த்தினைச் சொல்லாமல் பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று நகர்ந்துவிடுகின்றவர்களே அதிகம். வம்புக்கென்றே தொடங்கும் இடுகைகளிலே அப்படியான பின்னூட்டங்கள் இடுவதிலே ஏதுவிதமான சிக்கல்களுமில்லை - அதிகம் வாழ்த்து, வருக, கண்டோம்+களிகொண்டோம் பின்னூட்டங்கள் ஆங்கு வரப்போவதில்லை. ஆனால், எட்டு குனியா கொண்டாட்டப்பதிவுகளிலே அது பொருத்தமாகவிராது. கோவிந்தசாமி குறித்து, டாக்டர் என நீங்கள் எழுதியதற்கும் நேரே உங்கள் பதிவிலேயே பதிலைத் தராததற்கு அதுவே காரணம். (அவர் பேராசிரியரா என்பதையும் கேட்டு மொட்டந்தலையிலே மயிர் புடுங்கும் வேலையை நான் சொல்லை வரையறுத்துத் தொடங்கப்போவதில்லை. பெரிய ஆசான்கள் பேராசிரியர்கள் என்றவிதத்திலே பதில் வந்தாலும் அதிலேதும் ஆட்சேபணையில்லை). மறைமுகமாக நின்று இராமன் வாலியைக் கொன்றதுபோலல்ல அத்தாக்குதல். "அசுவத்தாமா (என்ற யானை) இறந்தது" என்று வரும் உத்தமதர்மபுத்ர-நாகரீக வஞ்சப்பதிவுகளுக்குக்கூட அவற்றுக்கு கொண்டாட்டப்பின்னூட்டங்கள் வருமானால், பின்னூட்டமிட்டு வந்துண்டு போகும் பிறர்மகிழ்வைக் கெடுத்துக்கொள்ள விருப்பமில்லை. வேண்டுமானால், இந்த இடுகைக்கு இதன் பின்னால் வரும் பின்னூட்டங்களினையும் (சொல்லியிருக்கிறேனே என்று அசாதரணத்தனம் அம்மணிகள், தம்பிகள் பண்ணாவிட்டால் :-)) முன்னைய உங்கள் இடுகைகளுக்கான பின்னூட்டங்களையும் தொகை எண்ணி ஒத்துப்பார்த்துக்கொள்ளுங்கள். அதற்காக, சொல்வதை மறுத்துச் சொல்ல வேண்டியிருக்கும் தேவையிருப்பின், சொல்லாமலிருப்பதுமில்லை. சொந்தப்பதிவிலேயே சொல்லிக்கொள்ளலாம். இது கருத்தை முன்வைத்தவருக்குப் பதிலுக்குப் பதில் தாரதிருக்கும் வாய்ப்பினைத் தராமல் தப்பித்துக்கொள்ளும் உத்தியென்று கருதவிடமில்லை. இந்தப்பதிவர் பூவுலகிலே எந்த இடத்தில் எந்தப்பெண்ணைக் கடிமணம் செய்தார் என்பதுகூட புதுப்பதிவர்களுக்குத் தெரிந்திருக்கும் அளவுக்கு வலைப்பதிவு வலிது வலிது; அதை விட வலிது வலைப்பதிவு பின்னான, வலைப்பின்னல்தன் வண்ணம். பதில் போட்டவர் தன் கணணியை மூடமுன்னால், அவர் 'பதில்' போட்ட விடயத்தைக் கொஞ்சமும் அட்சரம் குறைக்காமல் (கூட்டக்கூடும் :-)) ஒத்திக்கொண்டு பதிவு போட்டவர் பதிவுக்குப் பறந்து அமர்ந்து பரப்பும் காவிகள் வனைந்து கொண்டதாம் இவ்வலையுலகு. :-) ["இவனல்லாம் கண்டுக்கிட்டு, ரெஸ்பான்ஸ் பண்ணி பெரிய ஆளாக்கிடாதீங்க சார். அதுக்குத்தான் அலையறான்" என்று ஒரு போன் கால், ஈ-மயில்கூட பறந்து வந்திருக்காவிட்டால், எங்கேயோ உங்கள் பிரபலத்துக்குக் கொஞ்சப்பேர் சத்தம்போடாமல் வேட்டு வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று அர்த்தம்.

ஆனால், சில பிரபல / முன்னிலை / பிரபலமில்லாத / கடை (இந்த வகைபிரிப்பெல்லாம் எதற்கென்பது எனக்குத் தெரியவில்லை) பதிவர்களின் பதிவுகளிலே எப்போதுமே மிகுந்த உயிர்போக மருந்துவேண்டுமென்பது மாதிரியான அவசியம் இல்லையென்றால், அநாமதேயமாகக்கூடப் பின்னூட்டமிடுவதில்லை; எளிமையான காரணம்: அவர்கள்கூட எவரினது பதிவுகளிலும் பின்னூட்டமிடுவதில்லை. இதனால், இருவருக்குமே எச்சேதமுமில்லை.

மீண்டும், நேரமும் பொறுமையும் எடுத்துப் பதில் தந்ததற்கு நன்றி. எத்துணை முரண்பாடுகளும் வெறுப்புகளுமிருப்பினுங்கூட, உங்களிலும் ஜெயமோகனிலும் இந்தப்பண்பு பிடித்துக்கொண்டிருக்கின்றது.

RamaniKandiah said...

குழக்காடன்,
/(எப்பவும் சீரியசாவே போய்கொண்டிருக்கும் பின்னூட்டத்துக்க சிரியஸ் இல்லாமலும் சிலது இருக்கட்டுமன்.) /

சொல்லப்போனால், உது சிரியஸான பின்னூட்டமில்லை. சீரியஸான பின்னூட்டமேதான்

-/பெயரிலி. said...

யூ எஸ் தமிழர் இடுகைக்கான என் பின்னூட்டம் - ஆள்மாறாட்டக்குழப்பங்களைக் குறைப்பதற்கு (அல்லது கூட்டுவதற்கு??)

யூ எஸ் தமிழரே
நீர் யாராக இருப்பினும், உமது தலைகீழ்ச்சிலுவையையும் காவும் சாத்தானின் ஊழியராக என்னை மாற்றிவிடும் நிலை இவ்விடுகை ஈந்திருப்பதாகத் தோன்றுவதால், தண்ணீரோ வெந்நீரோ நீர் நானில்லையென்பதையும், நீரின் பின்னால் ஓடுவது யாரென்று (ஓர் ஊகம் இருக்கின்றபோதுங்கூட) எனக்குத் தெரியாதென்பதையும் இங்கே சுட்டிவிடுவது நல்லதென்று படுகின்றது. பல பதிவர்களுக்கு அது தெளிந்தபோதுங்கூட, அடிக்கடி வராதவர்கள், என்/மாலனின் பதிவுகளிலே மாலனுக்குப் பதில் தருவேனெனப் பின்னூட்டம் இட்ட கையுடனேயே வேறொரு பெயரிலே தாக்குவதாகவும் எண்ணிவிடக்கூடும். பதில் தருவேன் என்று அந்தப்புறம் சொல்லிவிட்டு, இந்தப்புறம் யூ எஸ் தமிழன் என்று தாக்குகின்றான் என்பவர்களுக்கு இல்லை என்று நிரூபிக்க வசதியில்லை. அப்படித்தான் சொல்லப்போகின்றார்களென்றால், ஆமென் & ததாஸ்து. வேறென்ன செய்வது?
இப்பின்னூட்டத்தை விட விரும்பினால், விடும். இல்லாவிட்டால், விடாதிரும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//இதன் பின்னாலான அரசியல்களைப் புரிந்துகொள்ளாமல், பலரின் செயற்பாடுகளினாலான தொடர்ச்சியின் பயன்களைச் சிலர் எட்டில் ஒன்றாக எழுதிவிட்டும் அதனைப்படிக்கும் வாசகர்கள் எழுதியவரின் ஏனைய துறைகள் தந்த பிரபலத்திலே "அறியத்தந்ததற்கு நன்றி" என்றும் எழுதிப் போவதன் வினை இப்போது தெரியாது......//

பிரபலங்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்களின் சொற்கள் அதிகம் கேள்விக்குள்ளாக்கப்படாமல் பரப்பப்பட்டு விடுகின்றன என்பதையும் இதனால் உண்மையில் அதற்காக உழைத்தவர்கள் அடையும் கோபத்தையும் இதைக் குறித்து நீங்கள் சொல்வதில் உள்ள நியாயத்தை ஒப்புக் கொள்கிறேன்.

எடுத்துக்காட்டுக்கு, 1. தமிழா! மற்றும் பல தன்னார்வலக்குழுவினரின் உழைப்பை தங்கள் சாதனையாக CDAC-மத்திய அரசு வெளிக்காட்டிக் கொண்டது.

2. எழுத்தாளர் சுஜாதா தமிழ் லினக்ஸுக்குப் பெரும் பங்காற்றி இருப்பதாக ஒரு பிம்பம் நிலவுவது. இது குறித்து தமிழ் லினக்ஸுக்கு உண்மையில் உழைத்தவர்களுக்கே உண்மை தெரியும்.

சராசரி வாசகரிடையே இந்தப் பொய்ப்பிம்பங்களைப் பரப்பியதில் வெகுமக்கள் ஊடகங்கள், பிரபலங்களுக்கு நிறைய பங்குண்டு. அந்த வகையில் இது போன்ற தன்னார்வலப் பணிகளில் ஈடுபடுவோர் கவனமாக ஆவணப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்கிறேன்.

தமிழிணைய வரலாறு குறித்த குழப்பமான புரிதலுக்கு அது முறையாக ஆவணப்படுத்தப்படாததே காரணம். இந்த இடுகையைத் தொடர்ந்து அதற்கான முயற்சி எடுக்கப்படும் என்று நம்புகிறேன். அல்லது, அத்தகைய முயற்சி எடுப்பவருக்கு இந்த இடுகை உரையாடல்களும் உசாத்துணையாக உதவும்.

வலைப்பதிவில் முதலில் தமிழில் எழுதியது யார் என்ற உரையாடல் எல்லாம் தேவையற்ற அலட்டலாகவே படுகிறது. வலைப்பதிவை என்னும் வடிவத்தில் உலகிலேயே முதலில் எழுதியவர் என்ற விவாதம் வந்தால் புரிந்து கொள்ளலாம். ஆனால், உலகெங்கும் வலைப்பதிவுகள் வந்து பல மொழிகளிலும் எழுதப்பட்ட பின், தமிழிலும் இணையத்தில், மடற்குழுக்களில், மின்மடல்களில் தமிழில் எழுதும் நுட்பம் கைவரப்பெற்ற பின் அதைக் கொண்டு யார் வேண்டுமானாலும் புதிதாக அப்போது வந்த வலைப்பதிவு போன்ற ஊடகங்களிலும் எழுதிப் பார்த்திருக்க முடியும். இதை முதலில் செய்து பார்ப்பதை ஏதோ சாதனையாகவோ வரலாற்றுப் பூர்வமாக நிறுவி பெருமை கொள்ளத்தக்க ஒன்றாகவோ நான் கருதவில்லை. இந்த ரீதியில் போனால் முதலில் MS-Paintல் தமிழில் எழுதியவர் என்று கூட பேசிக் கொண்டு இருக்கலாம்.

விக்கிபீடியாவைப் பொறுத்த வரை, அதன் mediawiki software system காரணமாக யார் யார் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பது துல்லியமாகத் தெரியும். அதனால், வருங்காலத்தில் அதன் வரலாறு குறித்த பொய்த்தோற்றங்கள் வந்தாலும் அவற்றை ஆதாரப்பூர்வமாகக் களைய இயலும்.

-/பெயரிலி. said...

இரவிசங்கர்,
நீங்கள் குறைந்தது இரண்டு முக்கியமான விடயங்களைத் தொட்டிருக்கின்றீர்கள்
1. வரலாற்றினைப் பதிதல்
2. பிரபலங்களின் செயற்பாடுகளும் ஊடகங்களின் உருப்பெருப்பித்தலும் (சுஜாதாவின் எலெக்ரோனிக் வாக்குப்பெட்டி சம்பந்தமாகவோ அப்படியான தொழில்நுட்பம் தொடர்பான புத்தகம் காரணமாகவோ பங்களிப்பின் அளவிலே ராஜாராம் என்பவர் 1979-1981 காலப்பகுதியிலே சுஜாதாவுடன் முரண்பட்டு வந்த செய்தியையும் வாசித்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க ஞாபகத்திலிருந்து சொல்வது. திருத்தமாகச் சொல்லமுடியவில்லை என்பதையும் சொல்லவேண்டும்)
3. யார், எது என்பதல்ல முக்கியது; யாரில்லை, எவரில்லை என்பதுதான் முக்கியம். அந்தளவிலேயே நிகழ்வுகள் கால,ஆள் ஒழுங்குகளிலே பதியப்படவேண்டியிருக்கின்றன. மார்க்கோனி இத்தனை நாள் வைத்திருந்த இடம் போஸுக்கு எதற்காக்க IEEE இத்தனை தசாப்தங்களின்பின்னே எடுத்துக்கொடுக்கவேண்டும்

தமிழ்விக்கிபீடியாவினை ஆதாரம் சுட்டுவது எத்துணை சரி என்பதை அதிலே பங்குபெறும் நீங்கள் மேலே விட்ட ஒரு பின்னூட்டம் கேள்விக்க்குறியாக்குகின்றது.
"இந்த உரையாடலைத் தொடர்ந்து கணிணியில் தமிழ் என்ற தமிழ் விக்கிபீடியா கட்டுரையை தகுந்த ஆதாரங்கள், வெளி இணைப்புகளுடன் மேம்படுத்தித் தந்தால் நன்றாக இருக்கும்"

அதற்குப் பிறகு, அந்த விக்கிப்பீடியா தகவலை அப்படியே அப்பினாற்போல எங்கே எடுத்திருக்கின்றதோ அந்த -தகவலோடு சம்பந்தப்பட்டவர் தரும் - செய்தியையே இரண்டாம் உசாத்துணை ஆதாரமாகத் தரும் கொடுமையும் நிகழ்ந்திருக்கின்றது. இவை பற்றித் தனிப்பதிவிலே பின்னே.

நிற்க, நீங்கள் சொல்லியிருக்கும் சுஜாதா தொடர்பாக ஒரு பின்னூட்டத்தினை மூன்று நாட்களின் முன்னாலே இட்டு மூன்று தடவைகள் அழித்து அட்டுத்த தடவை அவர் பற்றிய குறிப்புக்களை வலைப்பதிவர்கள் பெயர்களைச் சம்பந்தப்பக்கூடாதென விட்டுவிட்டேன்<. சிலர் பார்த்திருக்கலாம்.

அதிலே ஓர் இடுகை இது

===
Date: Wed, 11 Jul 2007 08:05:20 -0700 (PDT)
From: "-/???????." noreply-comment@blogger.com Add to Address Book Add Mobile Alert
To: peyarili1000@yahoo.com
Subject: [அலைஞனின் அ லைகள்: குவிய ம்] New comment on விட ்டதனின் பின ்னாலான தொட்ட தைப் பின் தொ டரும் நிழல்.
-/பெயரிலி. has left a new comment on your post "விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்":

இதற்கு முன்னர் எழுதிய என் பின்னூட்டங்கள் இரண்டு தவறான கோணத்திலும் புரிந்துகொள்ளப்படலாமென்பதாலும் தரப்பட்ட சுட்டியின் தகவல் சம்பந்தமாக திருத்தம் வேண்டியதாலும் விலக்கப்பட்டு மீண்டும் அதன் சாரத்தை இங்கே தந்திருக்கின்றேன்
---
பாலாஜி, வாசிக்கவில்லை. முடிந்தால், இடுங்கள். பயனாகவிருக்கும்.

தமிழ்க்கணிவரலாறு பற்றிக் காலச்சுவட்டிலும் அங்குமிங்கும் கட்டு உரைகள் காணப்படுகின்றன. ஆனால் இவற்றிலான சிக்கலென்னவென்றால், எழுதுகின்றவர்களின் பக்கச்சார்பின் வெளிப்பாடு வரலாற்றுக்கு வர்ணம் தீட்டிவிடுகின்றது. (இணையத்திலே தேடினாலும் சில கட்டுரைகள் கிட்டுகின்றன - எழுதியவர் எச்சார்பு என்பதைக் கட்டுரையே வெளிப்படுத்திவிடும் :-))

தவிர, இவற்றிலே ரசிகர்மன்றத்தின் அடாவடித்தனமும் வரலாறும் செயற்பாடும் புரிகையிலே ஆங்காங்கே விளையாடும். சரி இங்கே மாலனுடன் என் தொனியும் எள்ளலோதான் அமைந்திருந்ததால், இருப்பதால் விட்டுவிடுவோம். வெங்கட்(ரமணன்) எழுத்தாளர் சுஜாதாவை கணனிசார்ந்த கருத்தொன்றிலே அம்பலத்துக்குக் (இது சுஜாதா சார்ந்த சுட்டுப்பெயர் அம்பலம் அல்ல, பொதுப்பெயர்:-)) கொண்டுவந்தபோது, வெங்கட் எதிர்கொண்ட சுஜாதாவின் சார்பானவர்களின் எதிர்வினைகள் குறிப்பிடத்தக்கவை... (முதன்முறை இது சுஜாதா ஆனந்தவிகடன் "கற்றதும் பெற்றதிலும்" பகுதியிலே எழுதியதிலே வெங்கட் நக்கீர்ந்ததால், வந்த வினை :-))
அடுத்த சந்தர்ப்பத்திலே tamilinix தொடர்பாக:
வெங்கட் நடந்தது என்னவென்பதையும் சுஜாதாவையும் அவரது ஆதரவாளர்களையும் தன் பக்க நியாயத்துடன் எப்படி எதிர்கொண்டார் என்பதை வரலாற்றுப்பதிவுக்காக அவரே மீளப்பதியவேண்டும் (மாற்றுக்கருத்தினைச் சொன்னவர்களிலே மா.சிவக்குமாரும் இருந்ததாக ஞாபகம்); அல்லது வேண்டினோர் tamilinix குழுமத்திலும் சிலவற்றினை பார்க்கலாம் (மா. சிவக்குமாரின் இடுகைகள் உட்பட). ஃபோரம்ஹப்பிலேயும் இது விவாதிக்கப்பட்டதாக ஞாபகம். அவ்விணைப்பினைத் (?) தேடுகிறேன்; அகப்படவில்லை. நுட்பம் சார்ந்து linix பற்றி எதுவும் எனக்குத் தெரியாததால், என்ன நடந்ததென விளக்கம் சொல்ல ஒரு வரியும் எனக்கில்லை. அவர்கள் கருத்துக்களை ஆங்கே அறிந்தவர்களே வாசித்துப் புரிந்துகொள்க



Posted by -/பெயரிலி. to அலைஞனின் அலைகள்: குவியம் at Wed Jul 11, 10:05:00 AM 2007
===

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//தமிழ்விக்கிபீடியாவினை ஆதாரம் சுட்டுவது எத்துணை சரி என்பதை அதிலே பங்குபெறும் நீங்கள் மேலே விட்ட ஒரு பின்னூட்டம் கேள்விக்க்குறியாக்குகின்றது.//

விக்கிபீடியாவின் எந்தக் கட்டுரையும் மேம்பாட்டுக்கு உகந்ததே. அந்த வகையில் உங்கள் பங்களிப்பை வேண்டியே அழைத்தேன். விக்கிபீடியா மேற்கோள் காட்டத்தக்கதா என்று கேள்வி எழுப்புவதை விட அதை மேற்கோள் காட்டத் தக்கதாக மாற்ற முனைவதே நல்ல செயற்பாடாக இருக்கும். ஏனெனில், இது நாம் நமக்காக உருவாக்கும் கலைக்களஞ்சியம். விலகி நின்று குறை கூறுவதால் இந்தத் திட்டமும் மேம்படாது. இன்னொரு நல்ல திட்டமும் வந்து விடாது.

Anonymous said...

//தமிழ்விக்கிபீடியாவினை ஆதாரம் சுட்டுவது எத்துணை சரி என்பதை அதிலே பங்குபெறும் நீங்கள் மேலே விட்ட ஒரு பின்னூட்டம் கேள்விக்க்குறியாக்குகின்றது//

எனக்கென்னமோ பெயரிலி கேட்டதில் தவறிருப்பதாக தோன்றவில்லை.

//விக்கிபீடியா மேற்கோள் காட்டத்தக்கதா என்று கேள்வி எழுப்புவதை விட அதை மேற்கோள் காட்டத் தக்கதாக மாற்ற முனைவதே நல்ல செயற்பாடாக இருக்கும்.//

இதைப்பற்றிய மறுபேச்சு இல்லை. ஆனால் தற்சமயம் தான் வளமையாக தமிழ்விக்கிபீடியா போன்ற தளங்கள் வளர்ந்துவரும் பொழுது அதை உதாரணமாகக்காட்ட முடியாதென்றும். அப்படி மாலன் செய்வது எவ்வளவு சரியென்று தெரியவில்லை.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//ஆனால் தற்சமயம் தான் வளமையாக தமிழ்விக்கிபீடியா போன்ற தளங்கள் வளர்ந்துவரும் பொழுது அதை உதாரணமாகக்காட்ட முடியாதென்றும். அப்படி மாலன் செய்வது எவ்வளவு சரியென்று தெரியவில்லை.//

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கேற்ப, விக்கிபீடியா மட்டுமல்ல நூல்களில் இணையத்தில் ஏன் encyclopedia britanniccaவில் உள்ள கட்டுரைகளாக இருந்தாலும் கூட அவை எவற்றை அடிப்படையாக, உசாத்துணையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து அதன் உண்மையை அவரவர் தெளிய வேண்டியது அவசியம்.

விக்கிபீடியாவைப் பொறுத்தவரை, தகுந்த ஆதாரங்கள், உசாத்துணைகள் இல்லாமல் மேலெழுந்தவாரியாக எதையும் புனைந்து எழுத முடியாது. அதை விக்கிபீடியர் சமூகம் அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு கட்டுரையையும் யார் எழுதினார், என்ன எழுதினார் என்பதும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு கட்டுரையின் நம்பகத்தன்மையையும் தனித்தனியாக நீங்கள் உறுதி செய்யலாம்.

-/பெயரிலி. said...

/விக்கிபீடியாவின் எந்தக் கட்டுரையும் மேம்பாட்டுக்கு உகந்ததே. அந்த வகையில் உங்கள் பங்களிப்பை வேண்டியே அழைத்தேன். விக்கிபீடியா மேற்கோள் காட்டத்தக்கதா என்று கேள்வி எழுப்புவதை விட அதை மேற்கோள் காட்டத் தக்கதாக மாற்ற முனைவதே நல்ல செயற்பாடாக இருக்கும். ஏனெனில், இது நாம் நமக்காக உருவாக்கும் கலைக்களஞ்சியம். விலகி நின்று குறை கூறுவதால் இந்தத் திட்டமும் மேம்படாது. இன்னொரு நல்ல திட்டமும் வந்து விடாது. /

இரவிசங்கர் தவறாகப் புரிந்துகொண்டீர்கள். தன்னார்வத்தொண்டான விக்கிபீடியாவினைக் குறை சொல்லவில்லை. தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ஆனால், விக்கிபீடியாவினை முதல்நிலை ஆதாரமாகக் காட்டமுடியாது. அடிப்படையிலே ஒரு தேடுதலுக்கான ஆரம்பமாக மட்டுமே அதனைக் கொள்ளலாம். இங்கே பேசிக்கொண்டிருப்பதுபோன்ற வரலாற்றுத்தேடுதலுடன் சம்பந்தப்பட்டவற்றுக்கு, இன்னார்தான் இக்காலப்பகுதியிலே செய்திருக்கின்றார், செய்திருக்கக்கூடும் என்று முன்வைக்கும் மூல ஆதாரங்களிலிருந்தோ, சம்பந்தப்பட்டவர்களுடனான உரையாடல்களிலிருந்தோதான் நாங்கள் காலவரையறைப்படி நிறுவவேண்டும். அப்படியான ஆதாரங்கள், உரையாடல்கள்கூட ஆதாரம் குறித்த விமர்சன மீள்பார்வையில்லாமல், வெறுமனே இணையப்பக்கத்தின் இணைப்பினை எடுத்துப்போடுதலாலோ உரையாடலிலே ஒருவர் நான் செய்தேன் என்பதை அப்படியே எடுத்துப்போடுவதாலோ ஆகப்போவதில்லை. ஆராய்ச்சிமாணவரான நீங்கள் இதனை நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள். Nature அல்லது Science இற்குக் ஆய்வுக்கட்டுரை ஒன்று அனுப்பும்போது, விக்கிபீடியாவினை உசாத்துணையாகக் காட்டிப்பாருங்கள்; உங்களின் நண்பரான ஆய்வாளர் ஒருவர், "பூமி வெப்பமடைவது உண்மையே; இதனை நான் 1995 செப்ரெம்பர் 2 ஆம் நாளே சொல்லியிருக்கின்றேன்" என்று சொல்வதைப் போட்டுப் பாருங்கள். அவை எப்படியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவா என்பதைச் சொல்லுங்கள். நிச்சயமாக, சம்பந்தப்பட்டவரின் கருத்து முக்கியமாகும். ஆனால், அதனை நான் விமர்சன ரீதியிலே 'தகுமா? தகாதா?' என்று ஆய்வுக்கண்ணோட்டத்தில், கால,பொருள், இடப்பார்வைகளிலே பொருந்துகின்றதா என்பதைப் பார்த்துவிட்டுத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நீங்கள் ஓர் ஆய்விதழிலே வேறோர் ஆதாரமுமின்றி அப்படியான சம்பந்தப்பட்டவரின் மேற்கோளினையிடுகின்றீர்களென்றால், அதனைக் கட்டுரையின் உள்ளே தர்க்கரீதியாகவோ விமர்சனரீதியாவோ தன்னைத் தானே தாங்கி நிற்கும்படி நியாயப்படுத்தவேண்டும். இதனாலேயே, பெரும்பாலான முன்னிலை ஆய்விதழ்கள், விமர்சனமற்ற மேற்கோள் காட்டுவதையோ, நிலை, முகவரி மாறும் இணையப்பக்கங்களினை மேற்கோள் காட்டுவதையோ பெருமளவிலே விரும்புவதில்லை. வேண்டுமானால், அறிவியல் அல்லாத கலை, இலக்கியம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளிலே பாருங்கள்; எதற்கு, பெரிய தொழில்முறை ஆய்வுகளைப் பதிப்பிக்கும் இதழ்களுக்குப் போகவேண்டும். வேண்டுமானால், உதாரணத்துக்கு, வெகுமக்கள் இடைநிலை இதழான காலச்சுவட்டிலேயே அண்மைக்காலத்திலே பெருமாள் முருகன் தமிழிலக்கியங்களின் வரலாற்றினைப் பற்றி எழுதும் பத்திகளைக் கவனியுங்கள். என்ன வகையிலே யார் ஓர் இலக்கியப்படைப்போடு சம்பந்தப்படுகின்றார்கள் என்று ஆராய்வதை. குறிப்பாக, ஏட்டியிருந்து எடுக்கப்படும் பழந்தமிழ் நூல் இன்றைக்குக் கையிலே கிட்டும்போதுவரை, எத்தனை பேரின் கைகளிலே என்னென்ன நிலை படுகின்றதென்பதைக் காணுங்கள்; ஒரு நூலாகி வரும்வரை எத்தனை இடைச்செருகல்கள், அந்நூலினைப் பதிப்பித்தவர்களிடையேயான திருத்தல்களும் மறைத்தல்களும் உருப்பெருப்பித்தல்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதை ஆய்வாளன் காண்பதாகப் பாருங்கள். எதற்காக, ஒரு நூலின் செம்பதிப்பு என்பதை ஒவ்வோர் ஆதாரமாகத் தேடித் தேடி மூல நூலிருந்து பின் வந்த நூலெல்லாம் தேடி, ஒத்து சரிபிழை பார்த்து வெளியிடுகின்றார்கள் என்று பாருங்கள். அப்படியான செம்பதிப்பிலே விக்கிபீடியாவினை ஆதாரம் காட்டமுடியாது. அதிகம் வேண்டாம், பாரதியாரின் பாடல்களையே வெவ்வேறு பதிப்பகங்கள் வெவ்வேறு காலத்திலே எடுத்துப் பதித்ததைப் பாருங்கள். பாடல்களிலே இடைப்பூசாரிகளின் கைங்கர்யசேவை தெட்டத்தெளிவெனப் புரியும். அதுவும் பூம்புகார் பதிப்பகம்.. மிச்சம் திறம்!! வெகுசுத்தம்!!

மாலன் மேலே வைத்திருக்கும் வாதங்கள் தம்மைத்தாமே பொடிபடுத்திக்கொள்கின்றவை. இன்னமும் நா. கோவிந்தசாமி குறித்து அவர் தந்திருக்கும் உசாத்துணை ஆதாரங்களின் ஆரம்பக்காலப்பகுதியினைவிட, முந்திய காலத்திலேயே கோவிந்தசாமி ஏற்றிவிட்டார் என்பதற்கு நானே மூல இணையப்பக்க ஆதாரத்தினை சில நாட்களின் முன்னாலே எடுத்துத் தந்திருக்கின்றேன். (மேலே பாருங்கள்; எனக்கு ஓட்டப்பந்தய வரலாறுதான் முக்கியமேயொழிய, எவரது பந்தயக்குதிரை என்பதல்ல). அவரின் ஒவ்வோர் ஆதாரம் பற்றியும் வரும் வாரம் போடப்போகும் இடுகைகளிலே விபரமாக அலசுகிறேன். இப்போதைக்கு, விக்கிபீடியாவை அவர் இங்கே தரவு - 1 என முன்னிலை உதாரணம் காட்டுவதைத்தான் தவறு என்பதைச் சுட்ட உங்கள் முன்னைய பின்னூட்டத்தினை எடுத்துக் காட்டினேன். தன்னார்வர்கள் தமக்குத் தெரிந்த விபரங்களைப் பொருத்தமான இடங்களிலே காலமுறைப்படி எடுத்துப்போடுவதிலேதான் விக்கிபீடியா அமைந்து வளர்கின்றது. இது மிக மிக அவசியமான தேவை. ஆனால், என்ன காரணங்களை முன்வைத்து என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா நிறுவனத்தார் விக்கிபீடியாவோடு முறைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் காணுங்கள் - விபரங்களை மூல ஆதாரங்களோடு தொழில்முறையாகத் தேடி ஆய்ந்து ஒத்துச் சரி பார்த்துத்தான் தாம் வெளியிடுவதாகவும் விக்கிபீடியாவிலே முழுக்கமுழுக்க அப்படியாக இருக்க வாய்ப்பில்லாதலால் தவறுகள் நேரலாமென்றும் கூறி. தன்னார்வலர்களான உங்களைப் போன்றவர்கள் உங்கள் நேரத்தினைச் செலவு செய்து விக்கிபீடியாவினை உருவாக்குவது மேன்மையே. ஆனால், ஓர் உதாரணத்துக்கு, கட்டமைப்பியல், சொல்லமைப்பியல் என்பவை குறித்து நான் கொஞ்சம் திருத்தமான விளக்கம் பெறவேண்டுமானால், அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதைக் காணமட்டுமே விக்கிபீடியாவைக் காணுவேன்; பிறகு, அவை குறித்து வரும் திருத்தமான கட்டுரைகளைத் தேடிப் போய்விடுவேன். விக்கிபீடியா தரும் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ளமாட்டேன். இலங்கை வரலாறு, இஸ்ரேல் வரலாறு, காஷ்மீர் வரலாறு என்பவற்றினைக் குறித்து விக்கிபீடியாவினைப் பார்த்தால், இன்னமும் "dispute" இலே இருப்பதாகவேயிருக்கும். அந்நிலையிலே விக்கிபீடியாவினை முன்னுதாரணம் காட்ட முடியுமா? இன்றைக்கு நான் ஜெயச்சந்திரன் கோபிநாத்தின் 1995 ஆண்டின் இணையப்பக்கத்தினை முன்வைத்து, கோவிந்தசாமியின் முதன்மை இடத்தினைத் தர்க்கரீதியிலே கேள்விக்குறியாக்க முடியுமானால், நீங்கள் சொல்வதன்படி, நானோ இன்னொருவரோ விக்கிபீடியாவிலே போய், 'முதலாவது தமிழில் இணையம்' வரலாற்றினை 'முரண்'பட்டு கேள்விக்குறியாக்க முடியுமானால், விக்கிபீடியாவினை இப்பிரச்சனையிலே ஆதாரம் காட்டுவது தானே வளைந்து தன்னைக் குத்தி முறிந்துபோய்விடுகின்றது.
எல்லாவற்றினையும் விட, இந்த மாலனின் முதலாவது ஆதாரமான விக்கிபீடியாவின் ""முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி. "1995ம் ஆண்டு
அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக்கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது" எங்கேயிருந்து பெறப்பட்டதெனப் பார்க்க, மாலனின் மூன்றாம் ஆதாரத்திலே ஆல்பேர்ட் 2004 இலே சிங்கப்பூர்த்தமிழிணைய மகாநாட்டிலே வாசித்த கட்டுரையான, "அவர்- அமரர். நா.கோவிந்தசாமி! 1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது. இந்த வலையகத்திற்கான தமிழ்ப் பகுதியை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர் அமரர் நா.கோவிந்தசாமி.நன்யான் தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்" என்பதைப் பார்த்தாலே போதுமானது. இனி, ஆல்பேர்ட் எங்கேயிருந்து எடுத்து இதைப் போட்டார் என்பதைக் கீழே முடிந்தவரை தர்க்கபூர்வமாகச் சுட்டிக்காட்டுகிறேன்.

[எனது வெறும் ஊகம் என்னவென்றால், மாலன், விக்கிபீடியா, உத்தமத்தின் ஆரம்பகால உறுப்பினர் இலண்டன் நடேசன் சத்தியேந்திராவின் விரியும் தமிழ்க்களஞ்சிமான தமிழ்நேசன் ஆகியவற்றிலிருந்து புறப்பட்ட கட்டுரைகளிலேயிருந்துமட்டும் மீதித்தேடல்களை நடத்தியிருக்கின்றார் என்பதுதான். அவருடைய தொழில்சார்ந்த நேரச்சிக்கலிடையே எனக்குப் பதிலிட்டதனை வரவேற்று நன்று சொல்லும் அதேநேரத்திலே என் ஊகம் சரியானால், அது மிகவும் தவறான திசையிலே தமிழ்க்கணிமை வரலாற்றினை இட்டுச்செல்ல உதவும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்]. தவிர, ஆல்பேர்ட் என்பவரின் கட்டுரை உத்தமம் தளத்திலே இதுவரை கிட்டவில்லை. (TI Conferences - தமிழிணையம் கருத்தரங்குகளுக்கு அனுப்பப்பட்ட, ஆங்கே வாசிக்கப்பட்ட கட்டுரைகளைக்கூடத் தரவேண்டாம், குறைந்தது முழுக்கட்டுரைகளின் பட்டியலையேனும் எல்லா ஆண்டுகளுக்கும் உத்தமம் தரலாமே :-( ) அதைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். வைத்தியர். விஸ்கொன்ஸின் ஆல்பேர்ட் என்பவர் தமிழ்நெற், (உலகத்தமிழ்க்குழுமம்) ஆகியவற்றிலே பங்குபற்றியவர் (மாலன் தன் சுட்டியிலே சுட்டப்பட்டதை இங்கே தன் ஆதாரம் -5 ஆக சுட்டுப்போட வசதி செய்த நண்பர் அலெக்ஸ் பாண்டியன் என்று இப்போது அறியப்படும் நண்பர் போலவே - AnionMass எ. அனோனிமாசு :-)). ஆல்பேர்ட்டின் அவரின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்திருக்கின்றேன்; வாசன், இராமகி, ஆசிப் மீரான், நாக.இளங்கோவன் போன்ற தமிழ்நெற், உலகத்தமிழ்க்குழுமத்திலேயிருந்த நண்பர்களும் அவரின் கட்டுரைகளினை வாசித்திருக்கின்றார்கள். கட்டுரை எழுதும்போது, ஆல்பேர்ட் எப்படியாக எழுதுவார் என்பதை ஊகிக்கமுடிகின்றது. ஆல்பேர்ட் எழுதிய கட்டுரையை ஆய்வுக்கட்டுரையா, நீத்தார்பெருமை இரங்கற்குறிப்பா என்பதைக் கொஞ்சம் நாம் வாசிக்கப்பட்ட இடத்தைக் கருதாமலும், கொஞ்சம் மூன்றாம் மனிதராக நின்று ஆய்ந்து பார்த்துக் குறிக்கவேண்டும். இவருடைய கோவிந்தசாமி பற்றிய கட்டுரைக்கு எங்கே ஆதாரம் என்பதை tamilnation இலே கிடைக்கும் அவரது கட்டுரையைமட்டும் வைத்து எதையும் சொல்ல முடியவில்லை. ஆல்பேர்ட் கோவிந்தசாமியினைப் பற்றிச் சொல்வதைவிட, கோவிந்தசாமியுடன் நெருங்கி, அவரின் குழுமத்தினைச் செயற்படுத்திய சிங்கப்பூர் மணியம் விபரமான தகவல்களைத் தரக்கூடும். இப்படியான மாலன் மூன்றாவது ஆதாரமாகத் தரும் ஆல்பேர்ட்டின் குறிப்பினை அள்ளிமுடிந்துகொண்ட மாலனின் முதலாவது ஆதாரமான விக்கிபீடியா_குறிப்பினை என்ன செய்வது? என்ன சொல்வது? விக்கிபீடியாவினை ஆதாரமாக ஏன் தரக்கூடாதென்பதற்கு இதுதான் உதாரணம். அவருக்கு ஆதாரம் யார் என்பதைப் பார்க்கவேண்டும். இதன் ஆதாரத்தை நாமாக விழுந்தடித்துத் தேடினால், அதே தமிழ்நேசன் தளத்திலே TI 1997 கருத்தரங்கின் திறப்புவிழாவிலே சிங்கப்பூர் அமைச்சர் ஜெயக்குமார் "I understand that a prototype of Tamil Internet technology was tested when an electronic selection of representative poems from our official languages from the anthology Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984 - 1995) was launched by the President of Singapore, HE Mr. Ong Teng Cheong in October 1995" என்று சொல்வதிலே கண்டு கொள்ளலாம். இப்போதுகூட, இங்கே அவர் மிகவும் எச்சரிக்கையாகச் சொல்வது, "I understand....."

'Crown Prince' பிறந்திருக்கின்றான் என்று சொன்னது, 'Clown Prince', 'Crow Prince" ஆகி, கடைசியிலே அரசருக்கு காகமே பிறந்திருப்பதாக நாட்டுமக்கள் பேசிக்கொள்ளும் கதையாக, 97 இலே சிங்கப்பூர் அமைச்சர் ஒருவர் திறப்புவிழாவிலே சம்பிரதாயபூர்வமாகச் சொன்னது, கடைசியிலே 2007 இலே விக்கிபீடியாவிலே ஆதாரமாக எடுத்து வாதத்துக்கு முன்வைப்பதிலே நிற்கின்றது. இதுதான் எமது தமிழாய்ச்சிமகாநாடுகள், கட்டுரைகள் சிலவற்றின் அவலம் - எல்லாம் அல்ல/ தொழில்நுட்பக்கட்டுரைகள் மிகவும் முன்னோக்கி எடுத்துச்செல்பவை. ஆனால், அவை தவிர்ந்த பக்கவாட்டு தமிழிணைய வரலாறு, கணிச்சொல், கணித்தமிழ் கற்பிக்கும்முறை,இதழியலிலே தமிழ் பற்றிய கட்டுரைகள் மிகவும் மேலோட்டமாவையும் வழுக்கள் நிரம்பியவையாகவும் இருப்பதை வாசிக்கின்றவர்கள் உணரலாம்.
இப்படியான நூற்கண்டுபோல, சுற்றிச்சுற்றி, ஹெர்குலேயின் பென்சீன் பாம்புபோல, ஆதாரம் தோன்றிய இடங்களிலேயே ஆதாரத்துக்கு மூலம் காட்டிவிடக்கூடிய வட்ட, அறுகோண ஆதாரத்தொகுதியாகவேதான் தமிழ் இணைய வரலாறு நிற்கின்றது. அதுவும் சுட்டுகின்ற 'அ' வினை ஆதாரம் காட்டி, 'ஆ' உம் அவரை ஆதாரம் காட்டியோ பெயர் சொல்லாமல் மேம்போக்காக, 'இ' உம்...... இப்படியாகப் போய் கடைசியிலே ஔவிலே வந்து இணையக்கர்ணபரம்பரைக்கதை நிற்கும்போது, "கோவிந்தா கோவிந்தா" என்று கையெடுத்துச் சேவிப்பதிலேமட்டும் முடிந்துவிடுகிற மாதிரி, நிரூபிக்க வேண்டிய ஆதாரம் தேவையில்லாத 'உண்மை' தோன்றிவிடுகின்றது. அதன் காரணமாகவேதான், எப்போதும் இணையத்திலே வரலாற்ற்றினை எவர் சுட்டும்போதும், சிந்தாநதியோ, இ(L)ளாவோ, இரவிசங்கரோ, மாலனோ சுட்டும்போதும் 'குறை' கண்டுபிடிக்கின்றவனாகின்றேன். மதி கந்தசாமியா அருணா ஸ்ரீனிவாசனா முதற்பெண்பதிவாளர் என்பது குறித்து, திருத்தம் தேவை என்று சுட்டினால் அதுதான் காரணம். அருணா ஸ்ரீனிவாசன் இல்லாமல் மதி கந்தசாமி என்றால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே; அங்கும் சுதேசமித்திரன் பாரம்பரியம் மிக எளிதாகப் பொலபொலத்துபோய்விடுகின்றது. [சந்திரவதனாவின் யாழ்.கொம் பதிவு 12/31/2002 காட்டினாலுங்கூட வேறோர் இரண்டாம்நிலை ஆதாரத்தினை, சரிபார்ப்பினைத் தேடியபோது, யாழ்.கொம்மிலே வலைப்பதிவுகள் பற்றி அறிவித்தவர், நவன் உடைய பதிவினைப் பார்த்துவிட்டே அறிவித்தார் என்றும் அதன் பின்னரே யாழ்.கொம்மிலே பதிவுவசதி தொடக்கப்பட்டிருந்திருக்கலாமென்றும் விபரம் கிட்டியது. அதனால், சந்திரவதனாவின் முதல் பதிவின் திகதி நான் முன்னர் இடுகையிலே சுட்டியதுபோலவே யாழ்.கொம் தரவுத்தளத்தின் அமைப்பிலான விளைவென்றே கருதுகின்றேன்]. அப்படியாக, நான் ஒரு சுட்டியைத் தரும்போது, அது தவறு என்று இன்னொருவர் ஆதாரத்துடன் சுட்டி(க்) காட்டினால், அத்தவற்றைக் களைந்து கொண்டு முன்னே திருத்தி நகர்வதே முக்கியம். தவிர, "நான் சொல்வது சரியா? மற்றவர் சொன்னது சரியா?" என்பதல்ல; இது தான் எனும் இயந்திரத்தின் முடுக்கலிலே வருவதல்ல; ego-engine இனை இதற்கெல்லாம் முடுக்கமாட்டேன் :-) I have my own Achilles' heels to ignite my ego engine to let the hybernating Jinnne out of the bottle, but Internet Tamil History is not one of them; may be Sudesamitran & Navalar issues are:-)

நாளைக்கு ஆதாரத்துடன் கோவிந்தசாமி, ஜெயச்சந்திரன், கல்யாணசுந்தரம் இவர்களுக்கு முன்னமே, எங்கோ தனியனாக, கோவிந்தசந்தரசுந்தரம் என்பவர் இணையத்திலே தமிழினை ஏற்றிவிட்டார் என்பது வரக்கூடும். அப்போது வரலாற்றை நீலகண்ட சாத்திரிகளின் சோழர் வரலாற்றைத் திருத்துவதுபோலத் திருத்திக்கொள்ளலாம். இயன்றவரை, பரணவித்தாரனவின் இலங்கைவரலாறு, நவரத்தின ராஜாராமின் சிந்துவெளிநாகரீகவிலங்குவரலாறு போன்ற வரலாற்றை வரவழைக்கும் நிலைகளைக் களைந்து கொள்/ல்வோம். நான் சொல்வதெல்லாம், கேட்பதெல்லாம் மிகவும் எளிதானதே: "மிகவும் சந்தர்ப்பத்துக்கு அவசியமென்று பட்டாலொழிய, "தமிழின் முதல்..." என்பதுபோன்ற அடைமொழிகளைச் சேர்த்துக்கொண்டு கட்டுரைகளைச் இணையவாசகர்களுக்கோ அச்சுப்படிவாசிப்பவர்களுக்கோ சொல்லத்தொடங்காதீர்கள். அப்படியாகத் தொடங்கத்தான் வேண்டுமென்றால், (சிங்கப்பூர் அமைச்சர் தொடங்கியதுபோலவே), "எனக்குத் தெரிந்தவரை..." என்ற இன்னோர் அடைமொழியினையும் "தமிழின் முதல்..." என்பதற்கு முன்னாலே சேர்த்துக்கொள்ளுங்கள்." அதுதான் முக்கியம்; நான் தந்திருக்கும் மேம்பட்ட கோவிந்தசாமிக்கு ஆதரவான, ஜெயச்சந்திரனின் ஆய்வுக்கு ஆதரவான ஆதாரங்களின் இப்போதைக்குக் கிடைக்கும் நாட்களை மட்டும் வைத்துப்பார்த்தால், கோவிந்தசாமி இரு மாதங்களினாலே முன்னே இப்போதைக்கு நிற்கின்றார். அதிலே எனக்கேதும் வருத்தமில்லை - ஏனென்றால், இது ஓட்டப்பந்தயப்போட்டியல்ல. தமிழ்வரலாறு என்பது எனதும் மாலனினதும் பொதுவானதுதான். சிலவேளை இவர்களின் செயற்பாடு இன்னொரு மொழிக்கான இணையச்செயற்பாட்டுக்குப் பிந்தினாலே நான் வருத்தப்படக்கூடும். ஆனால், அதேநேரத்திலே, இப்போது அரைகுறையாக இருக்கும் இந்த ஆதாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு எவர் & எப்போது என்பதைச் சொல்லமுடியாது. அதைத்தான் இப்போதைக்குச் சுட்டுகின்றேன். விபரமாக வரும் இடுகைகளிலே மாலனின் மீதி ஆதாரங்கள், விடயங்கள் தொட்டும் எழுதுவேன்.

சொல்ல வந்ததிலிருந்து அலைந்ததிலிருந்து மீண்டு விக்கிபீடியா பற்றி மீண்டும்; ஆயினுங்கூட, இம்மாதிரியான 'Dr. Naa Govindasamy' வழுக்களுக்கு முழுக்கமுழுக்க விக்கிபீடியாவினை ஆதாரம் காட்டுவதே காரணம் என்று சொல்லமாட்டேன். தமிழ்.இணையம் 2000 மகாநாட்டிலே ஒரு காலகட்டத்திலே உத்தமம் போன்ற அமைப்பிலே மிகவும் முக்கியமான பதவியிலிருந்த அனந்தகிருஷ்ணனே வாசிக்கும் ஆய்வுக்கட்டுரையான "Tamil Fonts, Keyboards and Beyond" இனை வாசித்துப்பாருங்கள் (இதுவும் AnswerOk.com: Computers & Internet Questions and Answers போன்ற விக்கிபீடியாவின் வழியொற்றி நடக்கும் விபரத்தளம்); அதே 'Dr. Naa Govindasamy'தான். ஆய்வுக்கட்டுரை என்பது ஒரு முன்னைய பல்கலைக்கழகத்துணைவேந்தர், TamilNet 2001 (TI2001) இன் தலைவர், தொழில்முறைக்கல்வியியலாளர், ஆய்வாளரிடமிருந்து இப்படியான வெளிப்படையான வழுக்களுடன் குமுதத்திலே இலங்கையின் இனப்பிரச்சனையிலே இந்தியாவின் தன்னலமற்ற பங்கு என்பதுபோல எழுதப்படும் கட்டுரைகள் மாதிரியாக வருமானால், அப்படியான கட்டுரைகளை ஒத்தி ஒட்டும் விக்கிபீடியாவைப் பிழை சொல்லி என்ன செய்வது?! இக்கட்டுரையே, தமிழ்க்கணியமை தொடர்பான உத்தியோகபூர்வ infitt / உத்தமம் தளத்திலும் இருக்கின்றதென்று வைத்துக்கொள்வோம். அதனால், அதன் சரிபிழை ஆயாது, டாக்டர். கோவிந்தசாமி என்று எல்லாவிடத்திலும் இணையத்தளத்தையும் ஆனந்தக்கிருஷ்ணனயும் எண்ணிக்கொண்டு எழுதிவிட்டுப்போகமுடியாது. இத்தவறு இவற்றினை வைத்துப் பின்னாலே கட்டுரை எழுதும் கட்டுரையாளரின் தலையிலே பொறியாதிருக்கவே, உசாத்துணைகளைக் கட்டுரைகளின் பின்னே சேர்த்துக்கொள்வதன் நோக்கம். அப்படியாகச் சேர்க்கும்போது, ஏற்படும் வழுக்களை இயன்றவரை குறைப்பதற்காகத்தான், வழுக்கள் ஏற்படும் என்ற சாத்தியமோ நம்பிக்கையோ குறைந்த உசாத்துணைகளை, தனிப்பட்ட உரையாடல் ஆதாரங்களை நல்ல ஆய்வுக்கட்டுரைகள் ஆரம்பத்திலேயே இயன்றவரை தவிர்த்துக்கொள்வதன் நோக்கம்.

சம்பந்தப்படாமல்: மாலனின் பின்னூட்டத்தின் (அவர் தன் பதிவிலே இடுகையாக இட்டது) அபத்தத்தனங்களைப் பற்றித் தனித்தனியே எடுத்து சில எதிர்வினைச்சிற்றிடுகைகளை வரும் வாரங்களிலே தருவேன். தமிழ் இணைய வரலாற்றின் பகுதிகளைக் குறிப்பிடுவதற்குச் சென்ற ஆண்டிலே சில நண்பர்கள் தீர்மானித்து ஓரளவுக்கு முதற்காலடி (எங்களுடையதுதான், தமிழிலே இணையவரலாற்றினை எழுதுவதிலே நாமே என்றல்ல :-)) வைத்துவிட்டபோதிலும், சில ஆண்டுகளின் பின்னால், இருந்து சீர்படுத்தி, இனி வரப்போகும் பதிவுகளையெழுத ஊட்டம் தந்த மாலனின் "விட்டுப்போன எட்டு" இடுகைக்கு இத்தால் நன்றி. இப்பதிவினையும் சீர்படுத்தி மீள இடுவேன்.

பிகு 1: உத்தமம் இணையத்தளம் உள்ளடக்கம், மொழிவழு இவை அனைத்திலுமே அதன் நோக்குக்கும் தேவைக்கும் (இருக்கவேண்டிய) தரத்துக்கு மாறாக மிகவும் மோசமான நிலையிலேயிருக்கின்றது. தேடுபொறி வேலை செய்வதில்லை; படைக்கப்பட்ட கட்டுரைகள் குறித்த தலைப்புகளிலோ அங்குலத்துக்கொரு தட்டான் தவறு . முன்னொரு காலத்திலே infitt ஆ uniftt ஆ என்று பகிடிவிட்டு வாங்கிக்கொண்டது நினைவுக்கு வந்தாலுங்கூட, இதைச் சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதில்லையா? :-(

பிகு 2:பின்னால், இப்பின்னூட்டத்தின் நீளமும் தேவையும் கருதி, விரித்து, ஒழுங்குபடுத்தித் திருத்தி ஒரு தனி இடுகையாக இடுவேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

விக்கிபீடியா எந்த அளவு நம்பத்தகுந்தது?

அரசியல், வரலாறு குறித்த விக்கிபீடியா கட்டுரைகளில் சர்ச்சைகள் நிலவினாலும் அக்கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்கள் மூலம் அக்கட்டுரைத் தகவல்கள் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களைக் கண்டு உண்மை நிலையைத் தெளியலாம். சர்ச்சை அறிவிப்புகள் காணப்படாத விக்கிபீடியா கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் கூட அதன் பேச்சுப் பக்கங்களில் தகுந்த விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்ட பிறகே கட்டுரைப் பக்கத்தில் இடம்பெறுகின்றன.

சென்ற ஆண்டு Nature இதழ் நடத்திய ஆய்வில் ஆங்கில விக்கிபீடியாவில் அறிவியல் தலைப்பில் அமைந்துள்ள கட்டுரைகள் encyclopedia britannicaவின் தரத்துக்கு மிக நெருங்கி அமைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

விக்கிபீடியா setupக்கு உள்பட்டு நம்பகமான கட்டுரைகளை உருவாக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.

விக்கிபீடியா கட்டுரையை முதன்மை ஆதாரமாகப் பல்கலைக்கழகங்கள் ஏற்குமா?

விக்கிபீடியா கட்டுரைகள் மட்டுமல்ல britannica கட்டுரைகளைக் கூட முதன்மை ஆதாரமாக ஆய்வு அறிக்கைகளில் காட்ட இயலாது. இதற்கு இவற்றின் நம்பகத்தன்மை குறைவு காரணமில்லை. மாறாக, இவற்றின் nature of authorshipஏ காரணம். Britannicaவில் இடம்பெற்ற ஒரு அறிவியல் அறிஞரின் தனி நூலை ஆதாரம் காட்ட வல்ல அளவுக்கு Britannica மொத்தத்தையும் ஆதாரமாகக் காட்டுவது வராது. நீங்கள் சுட்டிக்காட்டியபடி, wikipedia, britannica முதலியவை எல்லாமே மாணவர் நிலையில் உள்ளவர்களின் ஒரு தலைப்பு குறித்த தேடலுக்கான முதல் வாயிலாகவே அமைய இயலும். அறிஞர்கள் தங்கள் கருதுகோள்களை நிறுவ இவற்றை மேற்கோள் காட்ட இயலாது. மூல ஆதாரங்களையே உசாத்துணையாகக் காட்ட வேண்டும். academic acceptance கிடைக்க வேண்டிய வரலாறு, அறிவியல், அல்லது கலை-இலக்கிய-மொழி-அறிவியல் வரலாறு குறித்த ஆய்வுகளுக்கு அந்தந்த துறைகளில் வெளி வந்துள்ள peer-reviewed journal publicationகளையே முதன்மை ஆதாரமாகக் காட்ட முடியும்.

விக்கிபீடியா கட்டுரையோ எதுவோ 100% நம்பகத்தன்மை உடையதாக இருந்தாலும், ஒரு ஆய்வுக்கட்டுரையில் context, review இல்லாமல் வெறும் சாதகமான மேற்கோள்களை மட்டும் வரிசையாக அடுக்கி ஒரு கருதுகோளை நிறுவ முடியாது என்று நீங்கள் சுட்டிக் காட்டி இருப்பதை ஒப்புக் கொள்கிறேன்.

கணினியில் தமிழ் வரலாறு குறித்த peer reviewed journal ஏதும் இல்லாத நிலையில் ;), ஆதாரங்கள் முழுக்க இணையத்திலும் சரி பார்க்கப்படாமலும் சார்புநிலைகள், ஒளிவு மறைவுகளுடன் இருக்கும் நிலையில் தத்தம் ஆய்வு முடிவுகளுக்கு எந்தெந்த ஆதாரங்களை முன்வைக்கிறீர்கள், அதில் எந்தெந்த ஆதாரங்கள், argumentகள் ஏற்புடையவை என்பதை உங்களின் ஆய்வு வழிகாட்டி தான் மதிப்பிட வேண்டும் :)

கணினியில் தமிழ் குறித்த வரலாற்றுக் கட்டுரையை நீங்களோ யாருமோ எழுதினாலும் ஒரு வேண்டுகோள் - அதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எவருக்கான மறுமொழியாகவும் இல்லாமலும் உள்குத்துகள், எள்ளல்கள் இல்லாமலும் வலுவான ஆதாரங்கள், பின்னணியுடன் ஒரு நேர்த்தியான academic ஆய்வுக் கட்டுரையின் அமைப்பில் தந்தீர்கள் என்றால் பெரும் உதவியாக இருக்கும். அதையும் விக்கிபீடியாவில் ஆதாரமாக இணைக்க நன்றாக இருக்கும் தானே ;)?

உங்கள் கேள்விகளுக்கு இயன்றவரை நேரடியாகவும் விரிவாகவும் பதில் தந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பணிச்சுமை காரணமாகத் தொடர்ந்து இவ்வுரையாடலில் பங்குபெற இயலாமல் போகலாம். நன்றி

-/பெயரிலி. said...

எண்ணங்களின் குரல் இவ்விடுகை தொடர்பாக வெறும் விவாதங்கள் தரும் அயர்ச்சி என்று எழுதியிருப்பதிலே இட்ட என் பின்னூட்டம்:


===========
எண்ணங்களின் குரல்,

மாலனுக்கு எதிர்வினையான என் இடுகையைப் பற்றிய உங்கள் கருத்து இதுவென்பதால், இங்கே எனது குறிப்பு
நீங்கள் சொல்லியிருக்கும் தமிழிலே இணையம், கணணி சம்பந்தமான தொழில்நுட்பத்தேவை குறித்து நூறுசதவீதம் ஒப்புக்கொள்கிறேன்.
நானும் தெளிவாக எழுதி, நீங்களும் இன்னும் பொறுமையாகப் படித்திருந்தால், நான் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்; நீங்கள் தேவையென்று சொல்வதுதான் முக்கியம் என்பதையும் வலியுறுத்துக்கின்றேன் என்பதைப் புரிந்திருப்பீர்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களிருந்தாலுங்கூட, எனது பதிவின் தமிழ்-கணிமை-இணையம் தொடர்பான நோக்கத்தினைச் சொல்லிவிடுகிறேன்
1. இந்த மாதா, பிதா, குரு, தெய்வம் போன்ற பீடப்படுத்தற்சங்கதிகள் குமட்டிக்கொண்டு வந்ததாலேதான் இடுகையையே இடவேண்டியதாயிற்று
2. ஆனால், வரலாறு என்பது "யார் எப்போது என்ன செய்தார்" என்பதற்காக இல்லாவிட்டாலுங்கூட, "யார் எப்போது என்ன செய்யவில்லை" என்பதைக் குறிப்பதற்காகவும் எமது தொடர்ச்சிகளையும் வளர்ச்சிகளையும் பார்த்துக்கொள்ளவும் அவசியம்; அது தமிழ்க்கணிமை & தமிழிணையம் இவற்றுக்கும் இத்தேவையுண்டு. அனாச்சிஸ்டாக இருந்தாலொழிய பசாம் பாகம் பாகமாக எழுதிய இந்திய வரலாற்று தொடக்கம் கோசாம்பி குறித்தது முதலாக பல வரலாற்றுக்கான தேவையில்லை. வரலாற்றுத்தேவையென்று ஒன்றுண்டு.
3. "முதற்குரங்கு நம் குரங்கு" என்ற குமுகப்பாரம்பரியத்தோடும் ஆதாரமில்லாமல் பேசுவது தவறு மட்டுமல்ல, நீங்கள் சொல்வதுபோலவே பல சந்தர்ப்பங்களிலே அநாவசியமானதுங்கூட
4. வரலாற்றைப் பேசுவதென்பது தொழில்நுட்பத்தின் அவசியத்தை மறுத்தலாகாது.
5. பசியோடு பழத்தை முதலிலே கண்ட ஆதாமுக்குக் கடிக்கத் தோன்றியதென்றால், 1985/1986 இலேயே தமிழ் எழுத்துருவைச் செய்தவனும் 1990 ஆரம்பங்களிலே இணையத்தினைக் கண்டவனும் இரண்டையும் ஒன்றாகக் கண்டெடுத்துப் போட எண்ணுவது இயல்பாகவே வருவதுதான். எந்தளவு வேகமாகப் போய் பழத்தைப் பறித்தான் என்பதை எண்ணிப் பார்க்கச்சொல்கிறேன்


நிற்க, /நான் கூறுவது, உ-ம்,
வலை://வவவ.விருபா.வணிகம் என்று பயனர் உள்ளிட்டால் அது
http://www.viruba.com என ஏற்றுக் கொண்டு சரியான முகவரிக்குச் செல்லும் வகையில் மொழிபெயர்த்தல். இதை எளிதாகச் செய்து விடலாம். ஆனாலும் இது தேவையான ஒன்று என்பதைக் குறிப்பிடவே எனது இடுகையில் இதையும் பட்டியலிட்டேன். /
என்றிருக்கின்றீர்கள்.
மெய்யாகவே இல்லையா? சிங்கை மணியம் சில ஆண்டுகளுக்கு முன்னரே இது சம்பந்தமாகக் கட்டுரை எழுதியும் இணையம் பதிவு செய்து அமைத்தும் காட்டியிருக்கின்றார் என்பதாக ஞாபகம். இப்போதைக்கு இச்சுட்டியைப் (warning: Pwer Point Presentation)பாருங்கள். ஒழுங்கான அவரது கட்டுரை/இடுகை/அஞ்சல் சேர்த்த சுட்டி கிடைத்தால், பின்னர் இணைக்கிறேன்.


உங்களின் இவ்விடுகையை வாசித்து "Good One" சொன்ன பின்னால், நாமக்கல் சிபி மொக்கைப்பதிவு இனியேதும் எழுத மாட்டாரென்ற நம்பிக்கையோடு :-)
-/பெயரிலி (எ) இரமணிதரன், க.

பிகு: வலையுலகப்பெருந்தலை என்று என்னைத்தான் குறித்திருந்தால், நன்றி! நன்றி! நன்றி!!!நமக்கெல்லாம் 'தமிழிணைய வேந்தர்கள்', 'செந்தமிழ்க் கணிமைப் புரவலர்கள்' என்ற பயனற்ற பட்டங்கள் எவரும் தருவதற்கான வாய்ப்பில்லாததால், நீங்கள் தந்திருக்கும் "வலையுலகப்பெருந்தலை" என்பதையே இனி வரும் வாதங்களிலே என் செங்கோல் ஆதாரமாகக் கொண்டு சுட்டிக் காட்டிச் செயற்படுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன் :-)
=======

-/பெயரிலி. said...

/கணினியில் தமிழ் குறித்த வரலாற்றுக் கட்டுரையை நீங்களோ யாருமோ எழுதினாலும் ஒரு வேண்டுகோள் - அதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எவருக்கான மறுமொழியாகவும் இல்லாமலும் உள்குத்துகள், எள்ளல்கள் இல்லாமலும் வலுவான ஆதாரங்கள், பின்னணியுடன் ஒரு நேர்த்தியான academic ஆய்வுக் கட்டுரையின் அமைப்பில் தந்தீர்கள் என்றால் பெரும் உதவியாக இருக்கும். அதையும் விக்கிபீடியாவில் ஆதாரமாக இணைக்க நன்றாக இருக்கும் தானே ;)?/

கவலைப்படாதீர்கள். அதுதான் திருத்திய பதிப்பினைத்தான் இடுவேன் என்றேன்.

உரோமிலே உரோமராகவே இருப்போம்; உரோமம் சிலிர்க்கோம். அப்படி சிலிர்த்திருந்தால், தொழில்சம்பந்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் ஆய்வுப்பேராசிரியர்களையும் கூட ஆய்வு பண்ணிய, வழி நடத்திய மாணவர்களைத் திட்டுதலாகவுமே முடிந்திருக்கும். அப்படியாக ஏதும் நடக்கவில்லை... (சத்தியமாக இப்பதில் உட்குத்துத்தான்) :-))

Anonymous said...

கடந்த 14 மணி நேரத்துக்கு முன் மாலனின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம், இதுவரை அவர் அதைப் பிரசுரிக்காததால் இங்கே தருகின்றேன்.

...................................
//விடுதலைப் புலிகளை விமர்சித்து பதிவுகளிலேயே கூட எழுதும் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள்.அமிர்தலிங்கம் பத்மநாபா தொடங்கி, கருணா வரைக்கும் விடுதலைப்புலிகளின் செயலை, தலைமையை ஏற்காத பல இலங்கைத் தமிழர்கள் உண்டு.//
ஐயா பெரியவர
நீங்கள் குறிப்பிடும் பெரியவர்கள் தான் எமது இன அடிவருடிகளுக்குத் தோழர்களாக இருந்து செயற்பட்டத்தை நீங்கள் அறியமாட்டீர்களோ அல்லது தெரிந்தும் காட்டிக்கொள்ள மாட்டீர்களோ?
மிகச் சமீபத்திய உதாரணம் கருணா குழுவை மேற்குலகம் தடை செய்யக்கேட்டிருந்ததை மறந்துவிட்டீர்களா? அவர்கள் தமிழ்த் தொழிலதிபர்களைக் கப்பம் கேட்டு கடத்திக் கொன்று குவித்ததை அறியமாட்டீர்களோ?
உங்களைக் கும்பிட்டுக் கேட்கின்றோம், எஞ்சியிருக்கும் எம் உறவுகளையாவது காப்பற்ற உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் பேசாமல் இருந்தாலே போதும். புலிகளைப் புனித புருஷர்களாக நாம் எல்லாரும் ஏற்கா விட்டாலும், அவர்கள் மட்டும் இன்று இல்லையென்றால் எமது உறவுகளுக்கு கோவணம் கூட மிஞ்சாது.
உங்களைப் போன்றவர்களுக்கு எமது பிரச்சனை ஒரு விளையாட்டாக இருக்கிறது. எமக்கோ அது உயிர்ப்போராட்டம்.
- பாதிக்கப்பட்ட ஒரு ஈழத்தமிழன் -

-/பெயரிலி. said...

அநாமதேய நண்பருக்கு,
உங்கள் பதிலினை மாலன் எதற்கு விடவில்லையென அறியேன். ஏதேனும் தகுந்த காரணமிருப்பின், அவர் தரக்கூடும்.

நிற்க, இவ்விடுகை இப்புள்ளியிலே இணையத்தமிழ்பற்றி மட்டுமே வந்து நிற்கின்றது (அகதிகள், புலிகள், இந்து, நாவலர் போன்றவற்றினை ஆரம்பத்திலே தொட்டிருந்தாலுங்கூட). அதனால், அப்படியே தொடர எண்ணம்.

நிச்சயமாக, மாலனின் ஈழம்-இந்தியா - ஸ்ரீலங்கா - புலிகள் - மற்றவர்கள் - இந்து போன்றவற்றின் மீதான கருத்துகளை வரும் இரு வாரங்களிலே இடவிருக்கும் இடுகைகள் மூலமாக எதிர்கொள்ளலாமென நினைக்கின்றேன். அந்நேரத்திலே, உங்கள் பின்னூட்டங்கள் செஔழுமை சேர்க்குமென்று எண்ணுகிறேன். இப்போது, இங்கே வேண்டாமே? நடைபெறும் வாதம் திசைமாறிவிடும். ஒன்றுக்கு ஓரளவுக்கு எம் பக்க நியாயத்தைச் சொல்லி முடித்து அடுத்ததைத் தொடுவோமே?


நிற்க: சுருக்கமாக, நீங்கள் காட்டும் மாலனின் குறிப்பிலும் அதற்கான பதில்மீதும் என் ஓரிரு பந்திகள்:

அவர் தரவு போலப் பண்ணியதற்கு நீங்கள் உணர்வாகப் பதில் தந்திருக்கின்றீர்கள். உங்களின் அதிர்ஷ்டம் அவர் அதை வெளியிடாதது.

(அவருடைய குறிப்பு சரியான புள்ளிவிபரமுள்ள தரவு அல்ல; ஆனால், இரண்டு மூன்று பெயர்களை உதிர்த்திவிடுவதும் ஓரளவு உணர்ச்சியைக் கட்டிவிட்டு வெறும் வசனமாக எழுதுவதும் நிதானமாக தகவல்களுடன் கருத்துகளை முன்வைத்திருப்பதாகத் தோற்றத்தினைத் தருகின்றது. இதுதான் தேவையான அளவு வெட்டி ஒட்டும் வாதத்திறன்.

1. மூன்று புலி எதிர் பிரபல பெயர்களைச் சொல்லிவிட்டு இதைப் போலப் பல இலங்கைத்தமிழர்கள் இருக்கின்றார்கள் என்கிறார் (அவர் சொன்ன பெயர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவையே. மறுக்கமுடியாது. ஆனால், பல என்பது, பத்தா, ஆயிரமா, இலச்சமா என்பது எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது, எவருக்கும் தெரியாது, புலிகளுக்கான ஆதரவு, புலிகளுக்கு எதிர்ப்பு இவை குறித்து, ஸொக்பியோ, கல்ப் போலோ, நீல்சனோ, எவரும், இடைவிலகல் சொல்லக்கூடிய, அறிவியல்பூர்வமாகச் சரியெனச் சொல்லக்கூடிய கருத்துக்கணிப்புகூட வேண்டாம், வானொலி, தொலைக்காட்சி, தினகரன் பாணி கருத்துக்கணிப்பினைக்கூட நடத்தியதில்லை. ஆனாலும், இங்கே கருத்துநிலைப்புள்ளி விபரம்போலத் தோற்றும் 'பல' உணர்வுநிலையிலே தட்டமட்டுமே சொல்லப்படுவது)

2. வலையிலே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கைத்தமிழர்ப்பதிவர்கள் இருப்பதாகச் சொல்கிறார். (நீங்கள், நான், அவர், அவர் உங்களுக்குச் சொல்வதுபோல சொல்லும் அவரைப்போல கருத்துக்கொண்டிருக்கும் பதிவர்கள் எல்லோரும் இப்படியான பதிவர்களைப் பார்க்கின்றோம். அதை மறுக்கமுடியாது. ஆனால், காந்திக்கு எதிரானவர்கள் இருந்ததில்லையா? காங்கிரஸ் தலைமையிலே ஜவர்கலால் நேருவைப் புறக்கணித்துக்கொண்டு " போ(ஸ்)யா, நீயும் உன் காங்கிரஸும்" என்று போனவர்களில்லையா? ஹமாஸ் வரும்வரைக்கும் பி எல் ஓவுக்கு எதிரானவர்கள் எழுதுபதுகளிலே அபு நிடால் பாலஸ்தீனத்திலே இருந்ததில்லையா? மென்ஸ்விக் இருந்தால் போல்ஷ்விக் இருந்துதான் தீருவார்கள். ஆனால், அதையே வைத்துக்கொண்டு வாதத்துக்காக மட்டும் குழிவில்லையை ஒரு புறமும் குவிவில்லையை ஒரு புறமும் பிடித்துவைத்துக்கொண்டு, யானையைவிடப் பூனை பெரிதாகவிருக்கின்றது என்று நிறுவ முயல்கின்றவைச் சின்னப்பிள்ளை நம்பலாம்; முதிர்ச்சியானவர்கள் பகுத்தறியத் தெரியவேண்டும். அதற்கு நீங்கள் கத்திச் சொல்லவோ கத்தி கொண்டு சொல்லவோ முயன்றால், கேட்காது)

இப்போது பார்த்தீர்களானால், அவரின் கூற்று மூலம் வாசிப்பவர்கள் உணர்மனதிலே அவரின் ''தர்க்கரீதியான புள்ளிவிபரம்" (மேற்கோள் குறியிணை மறக்காமல் இட்டிருக்கிறேன்; அது முக்கியம்) எழுப்பும் நாதம் அவர் ஏற்படுத்த விரும்பியதை ஏற்படுத்திவிட்டது.

பதிலுக்கு நீங்கள் செய்வதென்ன? உணர்வினை வெளிப்படையாக விட்டு ஒப்பாரியாக (மன்னிக்கவேண்டும்; அதுதான் உண்மை) "புரிந்துகொள்ளமாட்டாயா?" என்று எழுத்திலே குரலெடுத்து விசைத்தறிப்பறைதட்டி அரற்றுகின்றீர்கள். உங்கள் உணர்நிலையலைவரிசையிலே பரிகின்றவர்கள் அந்த ஓலத்தின் உள் துடிக்கும் நாதத்தைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், மற்றவர்களுக்கு வெறும் ஓலம் மட்டுமே. இத்தனைக்கும் நீங்கள் உணர்வுமயப்பட்ட ஓலமாக வைத்திருக்கும் அப்பதிலிலே அவர் தரவுபோலப் பண்ணித்தந்திருப்பதிலும்விட அதிகம் திருத்தமான குறிபார்த்துச் சொல்லும் தகவல்கள் கேள்விகளாக எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆயினும், என்ன நிதானமான தரவுபோல மயக்கும் அவருடைய வெற்றுவரிகள், உங்களின் குறித்த தரவினை முன்வைக்கும் பதிலினை உணர்வு வெளிப்பாட்டினாலே வாசிக்கின்றவர்களின் முன்னாலே அடித்து நொருக்கிவிட்டுப்போய்விடுகின்றது. மனிதர் எவ்வளவு நிதானமாக உண்மையை முன் வைக்கின்றார் என்று ஒருவர் வந்து பின்னூட்டம் இட்டுவிட்டுப்போவார். காய்த்தமரம் என்று இன்னொருவர் வாழ்த்துவார். நீங்கள் ஆற்றாமையிலே நிற்பீர்கள்.

இதுதான் மாலனைப் போன்றவர்கள் இயங்குதளம். அவரைவிட நிச்சயமாக உங்களுக்கு இலங்கைப்பிரச்சனை பற்றிச் சொல்லத் தகவல்கள் இருக்கக்கூடும். ஆனால், உணர்விலே தொலைத்துவிடுகின்றீர்கள். ஆனால், அவரோ தனக்குத் தெரிந்திலும் தெரிந்தெடுத்துத் தனக்குச் சார்பானவையை மட்டும் தன் வாசகர்களின் உணர்வுத்தளத்தைத் "தரவுபோற் செய்யும் கருத்து"" முன்வைப்பினாலே நுணுக்கமாக அதிரவைத்துத் தனக்கு வேண்டியதைச் சாதித்துவிட்டுப்போகின்றார்.

அதனால், நீங்களோ நானோ, "மலம் கழுவும் அகதி" என்று உணர்வுபூர்வமாகத் திட்டுகின்றவனை அதே உணர்வுபூர்வ எதிர்வினை உத்தியாலும் "கருத்துப்போல்மை" செய்யும் மாலனை அதே கருத்துத்தளத்திலே ஆனால், எம்மிடமிருக்கும் திருத்தமான தரவுகளாலும் எதிர்கொள்ளவேண்டும்.

இதுதான் முக்கியம். பாருங்கள், இப்போது இங்கே நானிட்ட பதிலுக்கு எவ்விதத்திலே மாலனின் கருத்தோடு ஒன்றியவர்கள் எதிர்கொள்வார்களென்று.... "பெயரிலி புலி ஆதரவாளன்." இறுதியான இந்தப் ப்ரமாஸ்திரத்தை ஏவி வாலையும் வரியையும் அவர்கள் விருப்பப்படி எனக்குக் கட்டிவிட்டால், இவர்களின் வாதம் அவர்களின் இலக்கான கேட்போர்கூடத்து மாந்தரிடம் ஆவியேற்றத்தின் பீதியை இலகுவிலே உட்செல்லும். உஃல்பா முதல் ராஜீவ் ஊடாக கடைசியாக மீனவர் "கடத்தப்பட்டது"வரை கணத்திலே பொதிகொண்டு கனமாகத் தலையிறங்கும். பிறகென்ன, நினைத்தது நடந்தது. அதனால், இடத்துக்கும் வாதம் செய்கின்றவரின் போக்குக்குமேற்ப நாமும் உத்தியினைப் பயன்படுத்தவேண்டும். மாலனின் வாதத்துக்கு தெளிவான விளக்கம் பதில் கொடுத்திருக்கின்றவர்களும் இருக்கின்றார்கள் என்பதை மறக்கக்கூடாது. :-)

எம்மிலே பல தரவுத்தளங்களிருக்கினோம்; ஆனால், எமக்கு வேண்டியதெல்லாம் மார்க்கியவல்லியும் கௌடில்யனும் கான்ப்யூசியசுமே. அப்படியாக வராவிடின், "தோற்றுத்தான் போவோமா?" என்று அரற்றிக்கொள்வதுதான் மிஞ்சும்

Anonymous said...

மீண்டும் திசை திருப்புவதற்கு மன்னிக்க

வாசிப்பவர்களுக்கோ அல்லது மாலனுக்கோ கூட என் பதில் ஒப்பாரியாக இருக்கலாம். அது முக்கியமல்ல, இவர்கள் போன்றவர்களுக்கு திரும்ப திரும்ப நாம் புள்ளிவிபரங்களையோ ஆதாரங்களையோ அள்ளிவிடுவதில் அர்த்தமில்லையென்று நினைக்கின்றேன், இவர்கள் தூங்குவது போல் நடிக்கும் பூனைகள்.

தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட உணர்வுகளே என் தட்டச்சில் வெளிப்பட்டன, மீண்டும் மீண்டும் தர்க்கவாதம் புரிய வைக்க இவர்களுக்கு நாம் சொல்லும் விடயங்கள் புதிதல்ல.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...

அநாமதேய நண்பர் 1: அது புரிகின்றது; ஆனால், நான் சொல்ல வந்த நோக்கினையும் புரிந்துகொண்டிருப்பீர்களென எண்ணுகிறேன்

அநாமதேய நண்பர் 2: மாலனுக்கான வயது குறித்த அனுதாப அலை பற்றி சிறிது உண்மையிருப்பினுங்கூட, இங்கு அவருடைய பத்திரி கையாளான் என்ற முப்பதாண்டு அனுபவமும் பெயரும் கொண்டுவரும் அது பதிவர்களிடையே பெரிய பாதிப்போடு ஒப்பிடும்போது, வயதின் தாக்கம் புறக்கணிக்கத்தக்கது என்றே கருதுகிறேன். ஆனால், தரவுகளைப் புரிந்துகொள்ள முயல்கிறவர்களுக்கு இஃதொரு தடையல்ல.

இரவிசங்கர் குறித்து; நீங்கள் அவர் குறித்துச் சொன்னதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அவர் காமலோகம் பற்றி வலைச்சரத்திலே எழுதியதை(யும் பின்னான பின்னூட்டங்களையும்) வாசித்திருக்கின்றேன். அவர் காமலோகம் பற்றிச் சொன்ன நோக்குடன் உடன்படுகின்றேன். இங்கும் அவர் தன் கருத்தினை முன்வைத்திருப்பதிலே எத்தவறுமில்லையேன்றே கருதுகின்றேன். அவர் ஒரு தேவையான விவாதத்தினை (முறையாக)) எழுப்ப முயல்கிறாரென்றே நினைக்கிறேன். அவரை முறிக்காதீர்கள். விக்கிபீடியாவின் தேவையும் எல்லைகளும் குறித்த என் புரிதலிலே இதுவரை மாற்றமில்லை.

ஆரம்பகாலச்செயற்பாடுகளுக்கு ஆதாரம் எங்கே என்று அவர் கேட்டிருப்பதை grandpa/grandma staus & clause ஊடாக நியாயப்படுத்துவோமா என்று பார்க்கலாம் :-)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...
This comment has been removed by the author.
-/பெயரிலி. said...

அநாமதேய நண்பர்:
இரவிசங்கரின் கருத்துப்பத்தியினை ஏற்கனவே வலைச்சரத்திலே படித்திருந்தேன் என்று சொல்லியிருந்தேன். நீங்கள் மீண்டும் அவரது அக்குறிப்பிட்ட இடுகையையும் எடுத்துப்போட்டிருக்கின்றீர்கள்.

அவை இங்கே தொடர்பற்றதால், நீக்கியிருக்கின்றேன்.

தயவு செய்து மேலேயும் தொடர்ந்தும் அவர் பற்றிய உங்கள் கருத்துகளை இங்கே இட்டால்,அவற்றினை நிறுத்தவேண்டியிருக்கும்.

புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன் :-)

Mookku Sundar said...

//எம்மிலே பல தரவுத்தளங்களிருக்கினோம்; ஆனால், எமக்கு வேண்டியதெல்லாம் மார்க்கியவல்லியும் கௌடில்யனும் கான்ப்யூசியசுமே//

நன்று. இத் சரியான, மிகச் சரியான புரிதல். ஒரு தரப்பில் எத்த்னை நியாயங்கள் இருந்தாலும், உணர்வு வயப்படுவதில் ஆற்றாமையும், ஆதங்கமும் கண்ணை மறைத்து விடுகிறது. பெரிய பெரிய இயக்கங்கள் கூட இந்த தவறை செய்து விடுகின்றன.;-)
தமிழன் நாசுக்காய் ஊசி போடும் வித்தையைக் கைக் கொள்ள வேண்டும்...!!

கொழுவி said...

//கொழுவி திட்டமிட்டு உண்மையை தொடர்ந்து மறைத்துவருகிறார் என இங்கு சொல்லிகொள்ள விரும்புகிறேன். இதை வன்மையாக கண்டிக்கிறேன்//

குழக்காட்டான்.. இதனை இத்தனை பப்ளிக்காக நீங்கள் சொல்லியிருக்கத் தேவையில்லை. எனது பதிவில் பின்னூட்டமாகவோ அல்லது எனக்கொரு தனிமடலாகவோ இட்டிருந்தால் நாமொரு சமரசத்திற்கு வந்திருக்கலாம். அதை விட்டு விட்டு இப்படி பின்னூட்டியது வெறும் காற்றடிக்கத் தானே.. எண்டாலும் blogspot இல் இசையும் கதையும் போட்டது நான்தான் என சொல்லுகிறேன்..

மற்றது.. இங்கே குழப்பி என எழுதுபவர் சில காலங்களுக்கு முன்னால் கொழுவியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் உறுப்பினரா..

-/பெயரிலி. said...

செல்வநாயகியின் "அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும்" இடுகையிலே மாலனின் பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக எழுதியது..

===
செல்வநாயகி,
மாலன் சந்திப்புக்கான என் பதிலிலே இந்து ராம் ஐயங்காரின் மகள் குறித்து எதற்காகச் சுட்டியிருக்கின்றேன் என்பதைக் கவனிக்கவில்லை (என்றே இப்போதைக்குக் கருதிக்கொள்கிறேன்). அது சீனச்சார்பு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு, சீன அரசின் விருந்தினராக திபெத் போய் வந்து கட்டுரை எழுதியவர், மகளைமட்டும் முதலாளித்துவத்தினை முன்வைக்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய முரணைச் சுட்டுவதற்கு. மாலன் வசதியாக இதனைத் தவிர்த்துவிட்டுத் தன் வாதத்தினை வைக்கின்றார். இதே தனிப்பட்டவர்களின் வாழ்க்கைமீதான எள்ளல் (வசை?/அவதூறு) இனை சன் தொலைக்காட்சியின் செய்திகள் எதிர்க்கட்சிகளிலோ, குமுதம் நடிகைகள் வாழ்க்கை பற்றி எழுதும்போதோ பயன்படுத்தாதிருப்பினுங்கூட, நான் இங்கே முரணையும் ராமின் பொய்த்தன்மையையும்சுட்டச் சொன்னதைத் தவறென்று வைத்துக்கொண்டு விமர்சித்திருக்கலாம்.

டெல்கியிலிருந்து மாலன் சுட்ட வரும் பத்திரிகைகளின் ஆசிரியர்களெல்லாம், யாழ்ப்பாணத்தினைப் புலிகள் கைப்பற்றப்போகப்போகின்றார்கள் என்றவுடன் ஆயுதத்துக்கு இந்தியா ஓடிவரும் இலங்கை அமைச்சு, இராணுவப்பெருந்தலைகளை, சாயிபாபா, இந்திய அமைச்சர்கள், (பின்னால் தம்மைப் பெங்களூருக்கு துரத்தப்போகும்) தமிழ்நாட்டு முதலமைச்சர்களிடம் அழைத்துப்போவதில்லை. தனது தென்னாசியப்பத்திரிகைக்கல்விநிறுவனங்களிலே விசேட விருந்துரையாற்ற அழைப்பதில்லை. டெல்கியிலே ஈழத்தமிழர்களின் ஆதரவில்லாத ஆனந்தசங்கரி, மஹிந்த ராஜபக்ஸவுடன் விஜயம் செய்யும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களினை அழைத்து இந்தியத்தமிழரின் ஆதரவில்லாத சுப்பிரமணியசுவாமிகளோடு சேர்ந்துகொண்டு ஈழத்தமிழருக்கு என்ன வேண்டும் என்ற மகாநாடு நடத்திக் "காட்டுவதில்லை.' எல்லாவற்றுக்கும் மேலாக, லங்கா ரத்னா பெற்றதில்லை.

இவை பற்றி மேலும் இங்கே இனிமேல் வரப்போகும் எப்பின்னூட்டம் மீதும் எழுதப்போவதில்லை. விபரமாக, இந்த "தேர்ந்தெடுத்துச்சுட்டும் எள்ளல்" என்ற குற்றச்சாட்டு ஆயுதத்தைப் பற்றி, "இந்து - ராம் ஐயங்கார்" என்ற தனிமனிதரும் இலங்கை அரசியலும் பற்றி என் பதிவிலே எழுதுகிறேன்.
===

Anonymous said...

கொழுவி,
mustdo என்ற பெயரில் இயங்கியபோது உங்களால் துரத்தப்பட்டவர் இங்கு குழப்பியாக வரவில்லை. இந்த குழப்பி வேறு. நான்தான் உங்களால் துரத்தப்பட்ட (அப்)பாவி.

-/பெயரிலியும் குழப்பியைத் தவறாக அடையாளம் கண்டுகொண்டார் என்றே நினைக்கிறேன். குழப்பியின் முதலாவது பின்னூட்டத்துக்கான பெயரிலியின் பதில்,அவர் குறிப்பிட்ட ஒருவரை நினைத்து எழுதியதாகப் படுகிறது. (ஆனைக்கும் அடிசறுக்கிவிட்டது). 'நான் அவனில்லை'.

** பெயரிலி, இது பொழுதுபோக்குப் பின்னூட்டமன்று. உண்மையிலேயே குழப்பி குறித்துத் தெளிவுபடுத்தும் பின்னூட்டமே. இப்போதைய குழப்பி ஈழத்தவராகக் கூட இல்லாமலிருக்கலாம்.

** முதன்முதலாக நூறு பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்து! (கள் சேர்க்க மாட்டோம்).

Anonymous said...

பெயரிலி,
அதுசரி, குழைக்காட்டானை ஏன் தவறாக அழைக்கிறீர்கள்?
அவர் தனதுபெயரை தமிழில் தெரியத் தக்கதாகத்தானே விட்டிருக்கிறார்?

-/பெயரிலி. said...

குழப்பி யாரென்று தெரியும் .... ஏனென்றால், குழப்பி என்ற பின்னூட்டம் அனுப்பியபின்னால், தானே குழப்பி என்று தனியஞ்சலும் அனுப்பியதால் :-)

குழைக்காட்டானைத் தவறாகத்தான் அழைத்துவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.

இந்த பின்னூடியோடு நூறுக்கெல்லாம் வாத்து, தாரா தேவையா? :-)

Anonymous said...

முதன்முதல் குரற்பதிவு போட்டவர் என்பதிலிருந்து கொழுவி தவறிவிட்டார். ஆனால் வலைப்பதிவில் இன்னொரு 'முதன்முதல்' அவருக்கு இருக்கிறது. இதை யாரும் தட்டிப்பறிக்க முடியாதென்று நினைக்கிறேன்.

திரட்டியொன்றிலிருந்து முதன்முதல் விரட்டப்பட்ட வலைப்பதிவர் கொழுவியாகத்தான் (அப்போது Mustdo) இருப்பார். அதன்பிறகுதான் தற்போது அவர் வைத்திருக்கும் வலைப்பதிவை ஏற்படுத்தி கொழுவியாக திரட்டியில் இணைந்துகொண்டார்.

பெயரிலி எழுதிக்கொண்டிருப்பது 'வலையில் தமிழ்' என்பதால் இத்தரவு முக்கியமற்றது. ஆனால் தமிழ் வலைப்பதிவுகள் பற்றி யாராவது வரலாறு எழுதினால் அதில் இந்த விடயமும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

** வலைப்பதிவுகளில் குரற்பதிவுகள் பற்றியும் யாராவது தொகுக்க வேண்டும். இல்லாவி்ட்டால் கொழுவிமாதிரி யாராவது முதலிடத்தில் குந்திக்கொண்டதை பார்க்கும் அவலநிலை எங்களுக்கு ஏற்பட்டுவிடும். கவிதனின் படைப்புக்கான இணைப்பு இப்போதே இல்லாமற் போய்விட்ட நிலையில் இன்னும் கொஞ்சக்காலத்தின் பின்னர் வரலாறு திரிந்துதான் போகும். சிலவேளை கொழுவிகூட பின்தள்ளப்பட்டு, அதன்பின் வந்த ஒருவர் குந்திக்கொள்ளும் நிலைவரலாம்.

இப்போதைக்கு 'வலைப்பதிவில் குரற்பதிவு' பிதா கவிதன், மாதா கொழுவி (இதனால் கொழுவி பெண் எனக் கொள்ளாதீர்; ஆதாமின் விலாவிலிருந்து ஏவாள் வந்ததைப்போல், கவிதனின் படைப்பை நக்கலடித்து கொழுவி எழுதியதால் மாதா எனும் பட்டம் கொண்டார். ஆணுக்குப் பிறகா பெண் என யாராவது வந்தால் விவிலியத்தைச் சுட்டி ஆதாரம் தருவேன்.)

-முன்னாள் குழப்பி-

-/பெயரிலி. said...

Wikipedia 'shows CIA page edits'

Boston Bala said...

Savithri Kannan Article: "சுதந்திரத்திற்கு முந்திய தமிழ் இதழியல் சூழல்"