அடிப்படைப்படம்: ''07 ஏப்ரல் 30 திங்கள் 13:10 கிநிநே
not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Monday, April 30, 2007
Sunday, April 29, 2007
Saturday, April 28, 2007
கணம் - 491
அடிப்படைப்படம்: '06 டிசெம்பர்
1600X1200
1600X1200
சுவரின் சுண்ணாம்புச்சிதிலத்தோடு மோதும்
ஒரு குருட்டுக்கடுவன் பூனையினது விடிகாலை.
சொடுக்கிச் செய்தி சூப்பிக் கக்கின சக்கையுட்
சொட்டின குருதியைக் குட்டிக்குச் சுட்டும்
பெருவிரல் தள்ளி ஊட்டும் அவம், நிகழ் படலம்.
கால் அவிழ்ந்தலையும் குட்டிக்கு,
பாலின் தவனம்; பருக்கையில் கவனம்.
சொந்த நிழலைக் கௌவிச் சீறலும் பிராண்டலும்.
சாம்பலாய்க் கழியும் முதுமயிரைக் கிளைந்து
சாளரக்கண்ணாடி விரியும் நாளழியா எச்சத்துவீரம் .
ஒரு கிழட்டுப்பூனையின் உலகம் புழுத்துப் போன
ஒரு பழைய சொற்புரட்சிக்காரனின் பாலைத்தறை.
எழுத்தும் கருத்தும் நெம்ப முடிவதெல்லாம்
வெடிக்கப் பூனையும் நெளிபுழு என்பதைத்தான்.
களமோ காகிதமோ அடி வெம்பிச் சூம்ப
புரட்சி பெயரலையும் மினுங்கு துகளெதுவும்
தவழும் குட்டிகளின் குறளும் விரல்களின்
பாற்றவனத்திலும் பருக்கைக்கவனத்திலும்
நுழைந்து ஒளிந்து கொள்ளும் காலவனமாகிறது.
போக்குகிறகாலத்தில்
அவரவர் புரட்சியை அவரவரும்,
போகிறகாலத்தில்
போசனபாசனத்தை போவார் வருவாரும்
தத்தெடுத்துக் கொள்கிறார்கள்.
சுற்றிச்சுட்டியோடும்
பெட்டித்தளத்துள்ளே
அளைந்து உதிர்முடி
அலைந்து கொண்டிருக்கும்
பூனைக்கால்கள்
எட்டு
உடைத்தது என் குச்சு;
பெரியன நான்கு;
பிஞ்சுகள் நான்கு.
மேலே பூனை நட
பின்னே நீ தொடர்.
கீழே குட்டி நகர்
பின்னே நான் தொடர.....
ஒரு சரிந்த தொப்பிக்காரன்
இன்னும் சாட்டுக்கேனும்
விரட்டிக்கொண்டிருக்கிறான்
என்னை,
ஒரு சாந்தமுனி
பின்னும் ஆட்கவிந்து
முடக்கிக்கொண்டிருப்பதைப்போலவே.
சுவரின் சுண்ணாம்புச்சிதிலத்தோடு மோதும்
ஒரு குருட்டுக்கடுவன் பூனையினது
காலையைப் போன்றவைதான்,
கழிக்கும் மதியமும்
கருங்கும் மாலையும்.
சித்தக்குறி சற்றுச்சிதறிய
எட்டுக்காற்பூச்சியின் வட்டக்கண்கள்
எத்திசைப்பட்டவை?
'07 ஏப்ரல் 28 சனி 09:00 கிநிநே
கணம்~
-/சித்தார்த்த 'சே' குவேரா.
Friday, April 27, 2007
கூழ் - 5
ஆற்றிலே போட்டது அள்ளிப்போட ஆளிருந்தால், குளத்திலேயும் வந்து மிதக்கும் என்பதற்கு உதாரணம் இது.
தமிழ்நெற்றோ, உலகத்தமிழ்க்குழுமத்திலேயோ கொஞ்சக்காலம் உள்ளிவாயன் பெருங்காயடப்பா என்று 2002 இலே போட்டதிலே சிலவற்றைக் கிளப்பி ராயர்காபிகிளப்பிலே ரங்கபாஷ்யம்/சாந்தசொரூபன் தகரடப்பா/அண்ணாமலை என்று இன்னோரன்ன பெயர்களிலே எழுதியவர் பற்ற வைக்கப் போட்டிருந்தார். அண்மையிலே இகாரஸ் பிரகாஷ் பதிவிலே எதேச்சையாக மாட்டின. பெருங்காயடப்பாவுக்கும் தகரடப்பாவுக்கும் சம்பந்தமேயில்லை என்று சொன்னதை அன்றும் இன்றும் நம்பாத ஒருவர் பதிவுலகிலும் இருக்கின்றார். வலைப்பதிவுக்கு முக்கியமானது "பதிவா? பின்னூட்டமா?", "பதிவு எண்ணிக்கையா? பதிவிற்கான காரணமா?" என்று பட்டி(தமிழ்ப்பட்டிதான்)மன்றங்களே வைக்கலாமா என்ற நிலையிலே எண்ணிக்கையின் சார்பிலே இந்த இடுகை.
ரங்கபாஷ்யம் ராயர்காபிகிளப்பிலே எடுத்துப்போட்ட அஞ்சற்சுட்டிகளும் "இந்த டப்பா அந்த டப்பா இல்லை" என்று எழுதின கூற்றுச்சுட்டியும் இவை
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/2839
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/2840
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/2842
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/2843
இவற்றை நகைச்சுவை/நையாண்டி வகைக்குள்ளே எடுத்துப்போட நம்பிக்கை தந்த நகைச்சு வை(த்)தமிழ் வலைப்பதிவர் சிலருக்கு உளம் நிறைந்த நன்றி.
======================================================================================
உலகமாதா வாத்து (டெடிகேட்டட் டு ஆல் திண்ணை ரைட்டர்ஸ்)
யுகம் புரண்ட புருஷன் அவம் திரண்ட கருடன்
சூக்மதாரி அடங்காப்பிடாரி இயமம் நியமம்
சோதிடம் சொல்லா நித்ய ஞான கோவணதாரி
காட்டாரி மலையாளபகவதி வேதசகாயி
சின்னக்கருப்பி மஞ்சுள நாட்சி
சரணவ மால ராஜநாயகி அம்மா நரநர
பாவி கந்த சிவம் இடப்பாகி ஜிலேபி
குலேபகாவலி ஆதரி நீயெனை
அம்மா படிந்தேன் சரணம்
ஹரி போல் ராம் ராம்
கோவண்ணப்பால் ராம நமோ நமோ
மலமறு ராட்ஸசி சூத்திரதாரிதன்
சூல்தரு மோகி சரவணத்தாயே
ஜெய ஜெய ஜெய ஜெய
உலகம் வாழ அருள்பொழி மாதா!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலேசான ரிப்போட்டர்
லாசரா நம்மாளு
ஆசாரமானவரு
கீசடா மீதியெல்லாம்
கீசக அவதாரம் பாரு.
சொல்லுடா கிஷ்டா,
வாங்கித்தாரேன் நாஷ்டா
பாரா யாருடா?
பொட்னு பூட்டாரே - அந்த
கேரளா கவுனரா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மறக்கமுடியுமா?*
மூணாம்வகுப்பிலே
மூக்குத்தோண்டியதை
மறக்கமுடியுமா?
வீடுபெருக்கும்
முனியம்மாவைப் பார்த்து
விஸில் அடித்ததை
மறக்கமுடியுமா?
ஆத்தங்கரையிலே
அல்வா அவுக் அவுக்கின்னு தின்னு
பேதியாகி கோரைப்புல்லு பின்னாடி
குந்தினதை மறக்கமுடியுமா?
ஏழாம் கிளாசு வாத்தியாரு
இங்கிபிலீஸ¤ கத்துத்தந்தப்போ,
எலந்தைப்பழம் தின்னதை
மறக்கமுடியுமா?
சினிமா போய்
இரவிலே சைக்கிளிலே
நிலவிலே திரும்பி வந்ததை
மறக்கமுடியுமா?
இப்போது,
எட்டாத தொலைவிலே
ரிச்மண்டிலே
மண்டிபோட்டு
கம்பியூட்டரிலே
மாங்குமாங்கு
தேங்கா ஸைஸிலே
ஜாவா எழுதினாலும்
இஸ்மயில் பாவா
மூணாம் வகுப்பிலே
மூக்கணாம்ப்பட்டி முனிசிபல் ஸ்கோலிலே
மூக்குத் தோண்டியதையும்
முனியம்மாவையும்
மறக்கமுடியுமா?
அதனால், தீர்மானத்துக்கு வந்தாச்சு.
லே ஆப்போ லேத் வர்க்கோ
ரிச் மண்டு ஜாப்பை விட்டுவிட்டு
மூன்றாம் வகுப்பிலே எலந்தைப்பழம் தின்னு
திரும்ப இங்கிபிலீசு படிக்க
பாபாக்கு ஹாயா விஸில் அடிக்க
கோரைப்புல் கிராமத்துக்குக்
கோவணம் கட்டப் போகிறேன்.
முனுசாமி! முனியம்மா!!
வட் எவர் யு டூ, கிவ் இட் அப்.
பிளீஸ் ரிட்டர்ன் பக் டு
யுவோர் பழைய பாத்திரம்.
ஜாவாவே உன் உப்பு வாய்க்கு
ஒரு மூட்டை அல்வா.
கண்டினியூட்டி ஸாட்!
டேக் டென் டு த பவர் இன்பினிட்டி!
ஆக்ஸன் பிளீஸ்!!
------------------------
* இதற்கும் இப்பதிவுக்கும் சம்பந்தமில்லை; இந்தக் கடிவதைக்குக் காரணமான அடிப்படைகவிதை இது, ரங்கபாஷ்யம் சொல்லிய இதுவல்ல.
2002
கூழ்~
கணம் - 490
1. இவை பற்றி ஏழு கருத்துகள் எனக்குண்டு.
2. இவை பற்றி ஏழு கருத்துகள் உனக்குண்டு.
3. இவை பற்றிச் சொல்லாத கருத்திரண்டும் இவற்றுள் அடக்கம்.
4. இவை பற்றி ஒளிந்து, இன்னும் கிடைக்கலாம் கருத்திரண்டு.
5. என் ஏழு கருத்துகளும் என் சொந்தக்கருத்துகள் என்பதற்கில்லை.
6. உன் ஏழு கருத்துகளும் உன் சொந்தக்கருத்துகள் என்பதற்கில்லை.
7. எதைப் பற்றியும் ஏழு கருத்துகள் எவர்க்குமுண்டு
- சொல்லாத இரண்டு, ஒளியும் இரண்டு, சொந்தமில்லாதவை ஏழு உள்ளடங்க, அடங்காதிருக்க.
'07 ஏப்ரல் 27, வெள்ளி 13:40 கிநிநே.
கணம்~
-/சித்தார்த்த 'சே' குவேரா.
Thursday, April 26, 2007
நெகிழ்வு -- 2
Wednesday, April 25, 2007
துளிர் - 76
Tuesday, April 24, 2007
துளிர்- 75
Thursday, April 19, 2007
Thursday, April 12, 2007
கூழ் - 4
Harley Davidson
போன ஒரு வாரமாகவே இணைய நண்பர்கள் ஏதாவது பேசி என் காதில் சரியாக விழாமல், அல்லது சரியாக விளங்கிக் கொள்ளப்படாமற் போயிருந்தால், இப்போது காரணம் புரிந்திருக்கும். ஓர் இலட்சம் அமைதிப்படுத்தி (silencer) என்ற சாமானே இல்லையோ என்ற வகை இந்த இயந்திர ஊர்திகள் இரக்கமின்றி ஊரை உறுமி வெருட்டிப்போனால் மனிதனுக்கு காது கேட்பதேது? நித்திரை ஏது? ஏதோ வைகாசி முதல்நாள் தொழிலாளர்தினஊர்வலம் போகிறமாதிரி, ஆளுக்காள் அமெரிக்ககொடியும் தவிர, இல்லாத பொல்லாத மண்டையோடு தொடங்கி மண்வெட்டிப்பிடிவரை போட்ட கொடியெல்லாம் இணைத்துக்கொண்டு ஊரை ஐந்து பத்தோ ஒற்றைப்படையோ இரட்டைப்படையோ எண்ணிக்கை வைத்து பால் மோர் தயிர் பேதமின்றி வயதுக்கு வந்தது வெந்தது பாராமல் சாகடித்து விட்டார்கள். ஏதோ கட்சிப்பேரணி நடத்துவதற்கு ஊராய்ச்சி ஒன்றியம், வட்டம், மாவட்டம், பலாச்சதுரம், வாழைமுக்கோணம் என்று வந்துகூடியது கணக்கில், இண்டியானா, அலபாமா, புளோரிடா, கிழக்கு, மேற்கு, மலை, மத்தியமேற்கு என்று கூட்டம்கூட்டமாக. சரியென்று நேற்று ஏரிக்கரையில், கண்காட்சி பார்க்கப்போனால், கண்கொள்ளாக்காட்சி. அத்தனை வாகனங்களும் அடுக்கி ஓர் ஒழுங்கில் (ஓர் இலட்சம்) கொஞ்ச நேரம் வைத்திருந்தார்கள். முன்னமே தெரிந்திருந்தால், ஜீன்ஸ் பட வெளியீட்டைக் கொஞ்சம் பிற்போட்டு, "கண்ணாலே காண்பதெல்லாம் தலைவா, கைகளுக்குச் சொந்தமில்லை" என்று நாலைந்து டலாஸ் கறுப்புக்கண்ணாடி, தோல்மேற்சட்டை, ஜாஸ், வெள்ளை அவித்த நண்டுத்தோல் பச்சைக்குத்தல் ஆசாமிகளுடன் ஐஸை ஆடவிட்டிருக்கலாம் ஷங்கர். ஏரிக்கரை ஒரு மாலை நேரத்து மதி/மது/மாது மயக்கத்திற் கிடந்தது.
என்னைப்போல, கிராமத்து அப்பாவி வாலிப (யோவ்! கதாநாயகன் இடைவேளைக்கு முதல் அப்படித்தான் காணும் இருக்கவேணும்) கொஞ்சம் குழம்பித்தான் போவான், இது மோட்டார் சைக்கிளுக்கு ஒன்று கூடலா, இல்லை victoria secret இற்கோ இல்லை Milwaukee Millers இற்கோ விளம்பரமா என்று; ஆங்காங்கே Millers பெரிய (பெரீஈஈஈஈஈஈஈஇய ஈய என்று வாசிக்கவும்) கலங்களில் (கடற்புறா கணக்கிற்குப் பாரவண்டிகளைக் கவனத்திற் கருத்தெடுக்க) புளித்த பானங்கள் வழங்கி (சும்மாயில்லை காணும், துட்டுக்குத்தானோய்) அப்பூதியடிகளின் அடிச்சுவட்டில் தாகசாந்தி தண்ணிப்பந்தல் நடத்திக் கொண்டிருக்க, ஆறேழு ஒற்றை இருக்கை ரெட்டை இறக்கை குட்டிவிமானங்கள் வெளவால் பட்டத்திற்கு வால் கட்டியது கணக்காக "ஹார்லி 95 வாழ்க! வளர்க!!" என்று சிவப்பும் பச்சையும் மஞ்சளும் அந்திச்செம்மஞ்சள் வானத்தில் மில்வோக்கி விண்ணுரசு கட்டிடங்களில் (சும்மா ஒரு கதைக்குத்தான் ஐயா! மில்வோக்கி கட்டிடங்களாவது, 30, 35 மாடிகளைத் தாண்டுவதாவது?) இருந்து எட்டிப்பார்த்த குட்டிப்பெண்களின் கன்னங்களில் முத்தமிட்டுப் போவோம் என்று சுற்றிச் சுற்றி வந்தபடி. என்ன பிரயோசனம்? என்ன, ரோஜாப்பூ இதழ்கள் கீழே கட்டிடங்களுக்கு நிகராகத் திடீரென எழுந்து நின்ற வெப்பத்தினால் விரிந்து கிடந்த கழுகுபலூனில் போடவில்லை. ஆக, கழுகு மட்டும் ஏரியையும் கட்டிடங்களையும் கீழே குட்டியாய்ப்புகைப்படத்துக்கு மில்வோக்கி மாதொரு பாகமும் மில்லர்ஸ் மது மறுபாகமுமாய் நின்ற குட்டைத்தாடி இளைஞர்களையும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டதுதான் மிச்சம். பிறகென்ன வீதியில் ஆட்சிக்கு வந்து 95வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வைபவமோ நான் அறியேன்; குறைந்தபட்சம் ஒருவரும் வாழ்த்துப்பா கூடப்பா(டி)டவில்லை, "இத்தனை நாள் இரைச்சலிட்டாய்; இதுபோல என்றைக்கும் இட்டிருப்பாய்" என்பதுபோல. ஆக, ஏழெட்டு இசைக்குழுவினர் (காதில் கடுக்கனும் இல்லை; தலைமுடியில் "கலர்களும்" இல்லை; காற்சராய்கள் கிழியவும் இல்லை; இவனுகள் எல்லாம் இசைக்குழு நடத்துகிறான்கள்; அமெரிக்க இசைக்கு வந்த சோதனை :(விதி) நாலைந்து "ஹொலிவுட் திரைப்பட வீதிக்குண்டர்குழுக்கள்" மாதிரி கண்ணிற்பட்ட குழுக்கள் அத்தனை கேளிக்கை விளையாட்டுக்களும் இயந்திரத்துவிச்சக்கரவண்டிகளிற் காட்டினார்கள்; மக்கள் அமெரிக்க கரியாக்கி (kariyoki) (கறியாக்கிச் சாப்பிடப்பிடிக்கவில்லை :() சாப்பிட கயிறு கட்டிய வழிக்குள் 'லைனாக கியூவரிசையாக' நின்றார்கள்.
ஏதோ ஒரு WM FM X.XX வானொலி நிலையம் ஒரு பந்தல், இல்லாத 2060ம் ஆண்டு மோட்டார் வாகனம் என்று பெயர்போட்டு அமைத்து அதற்குள் அவர்களின் பாடற்பதிவு ஒலி செறிதகடு (CD) வாங்கியவர்கள், அட்லாண்டிஸினைக் கண்டுபிடிக்கும் போட்டியில் வென்று பரிஸோ லண்டனோ ரோமோ போகலாம் என்று கூவிக்கொண்டிருந்தார்கள்; சில மக்கள் மாக்களுக்கு மூக்கணாம் கயிறு இலாடம் அடித்தது கணக்கில் ஏதென்று இடம் இல்லாமல் செல்லச்சந்தி, கதிர்காமம் முருகனுக்குச் செதிற்காவடி எடுத்தது கணக்கில், எல்லாவிடங்களிலும் வளையம், கம்மல், வேறு வகைப்பட்ட பெயர்தெரியா ஆபரணங்கள், பெயர்தெரியா வகைகளில், பெயர் தெரியா உலோகங்களினால் மந்திரித்துப்போட்டு, ஒரு கையில் சிகிரெட்டும் மறு கையில் சுருட்டும் வைத்தபடி, சிகிரெட் பிடிப்பதற்கும் சுருட்டு புகைப்படத்திற்கும் என்று உலாவிக்கொண்டு நிமிடத்துக் கொரு முறை சின்ன முத்தங்கள். குழந்தைகள் சறுக்கி விளையாட, தாயும் தந்தையும் ஹேர்லி-டேவிஸன் நினைவுச்சின்னங்களில் எதை வாங்குவது என்று சண்டை போட்டுக் கொண்டார்கள்; இளம்பெண்கள் கட்டைக்காற்சட்டை மானத்தை வாங்குகிறதே என்ற கவலையிற் போலும், மேற்சட்டையை அவிழ்த்து காற்சட்டைக்கு மேலே சுற்றிக் கொண்டார்கள்; போதாக்குறைக்கு ஓடிப்பிடித்து விளையாட்டு வேறு. உருப்பெருத்த கிழவிகளும் கிழவர்களும் தற்காலிகக் கழிப்பிடங்கள் முன்னே காவல் நின்றனர்.
மொத்தத்தில் ஹேர்லி-டேவிஸனுக்கும் மில்லர் விக்டோரியா சிகிரட்டுக்கும் நல்ல விற்பனை உத்தி. 49'ம் ஆண்டு செய்தது என்று ஒருவர் மூன்றாம் முறை கைமாறிய வண்டி ஒன்றை 25,000$ என்று விற்பனைக்கு வைத்திருக்க இழுபடக்கூடிய நாடாவிலான 'பந்தனா' அணிந்த 'Treasure Island' கொள்ளைக்காரி வேடத்திலிருந்த கறுப்புக்கண்ணாடி பெண்ணொருத்தி, 20,000$ இற்குத் தருகிறாயா இல்லையா என்று கெஞ்சலும் மிஞ்சலும் கொஞ்சிக்குலாவப் பேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் கணவரின் முகம் ஆனந்தவிகடனின் நகைச்சுவைத்துணுக்குகளில் வரும் புடவைக்கடைக்குள் போன பெண்களின் கணவன்மார் என்று கூறி வாணி, சாரதி, கணேஷ் வரையும் படங்களை ஞாபகப்படுத்தியது. இன்னொருபுறம், தொலைவிருந்து நெறிப்படுத்தி (remote controller) பயன்படுத்தி, ஒரு கூட்டம் பொம்மை மோட்டார்வாகனங்களிற் போட்டி வைத்துக் கொண்டிருந்தது.
மாட்டுவண்டிகளுக்கும் இப்படி ஒரு பத்தாண்டு மீள்கூடல் எங்கள் ஊரில் வைத்தால் வியாபாரம் செழிக்கும் என்று, மீள ஐசு பாட பிரசாந்த் ஓடியிருக்கவேண்டிய 1,00,000 மோட்டார்வண்டிகளினை, காலிற் தடக்குப்பட்ட வாண்டுகளினைத் தாண்டிக் காதுக்குள் விரலை விட்டுக்கொண்டு வீட்டுக்குள் நடக்கையிற் தோன்றியது.
நூறாவது வருடம் மில்வோக்கி என்னாவாகக் கலங்கபோகிறதோ?
சொல்லாமல் விட்டது: நற்குணசீலரான தெற்காசியப்பையர்களின் (வழமையான) நடத்தைகள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இணையத்துடனான என் ஊடாடல் பற்றி நிறைய உந்தும் மகிழ்ச்சியும் நிறைய விடாத வருத்தமும் உண்டு. இன்றைக்கு முதன்மையாக உறுத்துவது, எழுதிக்கொண்ட பலவற்றின் படிகளை எனக்கென்றும் வைத்துக்கொள்ளாமல்விட்டது. வலைப்பக்கங்கள், குழுக்களின் நிரந்திர இருத்தல் என்பதும் பொய்யே என்பது கலாநிதிப்பட்ட ஆய்வின்போது வலைசார் உசாத்துணைச்சுட்டிகளின் நிரந்திரத்தினை நம்பிக் குறித்துக்கொண்டதன் மடமை, ஆண்டுகளின் பின்னால் ஆய்வினை எழுதும்போதுதான் உறைத்தது & உதைத்தது. அமெரிக்க மத்திய, மாநில அரசுகள்சார் சூழலியல், நீர்வளப்பொறியியல் குறித்த தளங்களே நாளொரு தரவும் பொழுதொரு சுட்டியுமாக சட்டை மாற்றிக்கொண்டிருந்தால், மற்றைய பக்கங்களைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை. குறைந்தது, பட்டறிவின்பின்னாவது, இவ்வரசுத்தளங்கள், அதற்குச் சரியான மாற்றுகளைக் காலப்போக்கிலே தரத்தொடங்கின; பயனர்களும் சேகரித்து வைத்துக்கொள்ளத்தொடங்கினார்கள்.
ஆனால், வலைத்தளங்களும் பக்கங்களும் குழுக்களும் எனப் பதிவு செய்துகொண்டவை அழிந்தே போய்விட்டன. இந்நிலை எனக்கு மட்டுமல்ல, பலருக்கு, குறிப்பாக, தமிழ்நெற்றினை (http://www.tamil.net/list) இன் நிரந்திரத்தினை நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கும் ஓரளவுக்கு பயனர்குழுவிலே அடித்துக்கொட்டியவர்களுக்கும் வந்துசேர்ந்ததே. புளொக்கர் தரும் இலவசத்தினை நம்பியிருக்கமுடியாதென்பதும் அதேயளவு உண்மையே. ஆனால், இந்நிலையை அறிந்து ஓரளவுக்குச் சுதாகரித்துக்கொண்ட இக்காலப்பகுதியிலே எழுதுவதென்பது இயலாமலோ ஈடுபாடின்றியோ போயிருக்கிறது.
இருந்தபோதும், எதேச்சையாகப் பழையன அகப்படும்போது, அவை உள்ளடக்கத்திலே எத்துணை தரமற்றிருப்பினுங்கூட, இழந்துபோன காலத்தினை மீட்டெடுத்த உணர்வினைத் தருவதாலே தமக்கெனப் பெறுதியைக் கொள்கிறன.
மேலேயிருப்பது 1997 இலோ 1998 இலோ தமிழ்நெற்றில், மில்வோக்கியின் ஹார்லி-டேவிஸன் வண்டிகளின் தொண்ணூற்றைந்தாம் ஆண்டு ஒன்றுகூடலினைக் கண்டபோது எழுதியது.
.
'07 ஏப்ரல் 12 வியா 22:25 கிநிநே
கூழ்~
-/சித்தார்த்த 'சே' குவேரா.
Wednesday, April 11, 2007
Monday, April 09, 2007
வரையம் - 6
Monday, April 02, 2007
வரையம் - 5
Garbage Garden
ஒட்டோவியம்
'07 ஏப்ரல் 02, திங்கள் 01:00 கிநிநே.
நன்றி: 1, 2, 3, 4, 5
ஒட்டுப்படத்தினை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட அனைத்துப்படங்களும் இணையத்திலிருந்து இறக்கப்பட்டவையே. அதனால், இவ்வொட்டுப்படத்தின் உரிமம் எனக்கானதல்ல. ஒருபடத்தின் உரிமையாளரேனும் படத்தினை அகற்றக்கேட்குமிடத்து, இவ்வொட்டுப்படம் நீக்கப்படும்.
Subscribe to:
Posts (Atom)