இரண்டு மாதங்களுக்குமுன்பு, ஒரு சனிக்கிழமை தனது குழந்தைகளைத் தமிழ்வகுப்புக்கு அழைத்துச் சென்ற நண்பனோடு நானும் தொத்திக்கொண்டேன். வயதிற் பரந்து நான்கிலிருந்து பன்னிரண்டு வரை எண்ணிகையிலே இருபது பிள்ளைகள்; ஆகச் சிறிய பிள்ளைகளிலே சிற்றுண்டி தின்னும் ஆர்வமும் சக பேச்சொத்த நண்பர்களைச் சந்தித்த சந்தோஷமும் மின்ன, கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளின் கண்களிலே மிரட்சி, வெறுப்பு, நக்கல் எல்லாம் கலந்து பெற்றோரின் கட்டாயத்துக்கு வந்து நாற்காலிகளின் நுனிகளிலே எப்போதும் முடிந்தோடுவோமென்று குந்தியிருக்கும் நிலை தெரிந்தது; பெற்றோர்கள் மிகவும் உற்சாகமாகத் தமிழ்மொழியின் பண்பாட்டின் எதிர்காலத்தினைக் காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சியோடு, இலங்கை அரசியலையும் அமெரிக்க உதைபந்தாட்டத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஓங்கி உதைத்தடித்துக்கொண்டிருந்தார்கள்.
not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Sunday, December 19, 2004
புலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment