Tuesday, July 25, 2006

கணம் - 485




பரிக்ஷித்துக்குப் பழத்துள்ளே வந்துபின்
என் நினைப்புள்ளே நெளிகிறது

~~

முறிந்து கிடக்கிற வானவில்மேலாய்
நடந்து போகிறவன் பாதம்
நோகக் குத்தும் மேகம்.

~~

ஆண்டுக்கொரு முறை அயர் உரித்துப்
பார்க்கவும் நீங்காது கிடக்கிறது
ஓரிரு பழநேரம்.

~~

---> வந்த தடங்களை மூடத் திரும்பிச்
செல்ல வந்த தடங்களை மூடத்
திரும்பிச் செல்ல வந்த தடங்களை
மூடத் திரும்பிச் செல்ல வந்த
தடங்களை மூடத் திரும்பிச் செல்ல --->

~~

வட்டத்தைக் கீறினோம்; அதைத் தொடச்
சிறு உள்வட்டங்கள் கீறினோம்; உள்
விட்டங்கள் நிரப்ப, சின்னஞ்சிறு ஆழ்
வட்டங்கள் கீறினோம்; ஆழ்வட்டங்களை
நிரப்பிக் குவிக்கும் நுண்வட்டப்புள்ளி
ஒன்று நான்; மற்றவை மற்றோரெல்லாம்.

'06 ஜூலை 25 செவ். 11:26 கிநிநே.

கணம் - 484



தான் தோன்றி
நெடுக்கப் போடுகிறேன் கிடைக்கோடு
குறுக்காய்
செங்குத்தி உன் நிலைக்கோடு
அடி இரண்டு பக்கம் நகர்ந்து
போடுகிறேன் இன்னோர் நெடுங்கிடை
உயர்ந்து நிலை இரண்டடியாய்
கிளைக்கிறது உன் குறுக்குநிலை.
அடுத்து எழுந்து உயர்ந்து நான்
அடி போடும் கோடு,
எனக்குக் குறுக்கு, உனக்கு இணை
என்ற பின்னால், சடக்கென
எதுக்குச் சரிகிறது கிடையில்
உன் நெடுக்கு?

'06 ஜூலை 25 செவ். 09:44 கிநிநே.

Monday, July 17, 2006

சிதறல் - 121


Sand Festival














'06 யூலை 16 மாலை


இரெவரி கடற்கரை
மசாசூசெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.